FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on February 25, 2024, 06:08:35 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 337
Post by: Forum on February 25, 2024, 06:08:35 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 337

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/337.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 337
Post by: Hazel on February 26, 2024, 04:11:16 AM
தொலைவினும் தொலைவிலே ஓர் இருதய ராகம்,
என்னை அழைக்கத் துணிந்தவரும் தான் யாரோ!

மெல்லிய துடிப்பின் ஸ்வரம்,
வல்லிய என் மனதை பிளப்பதும் தான் ஏனோ!

மனிதனுக்கு என்னவாயினும் செவிமடுக்கேன் என இருமாந்திருந்த என் நெஞ்சம்,
இப்பொழுது கனத்து போவதும் தான் ஏனோ!

தேவனின் அழைப்பை மட்டுமே ஏற்ற என் மனம்,
இன்று மனித அழைப்பையும் ஏற்க நினைப்பதும்தான் ஏனோ!

மனம் போன போக்கிலே,
என் இறக்கைகள் கூட செல்ல துடிப்பதும் தான் ஏனோ!

கோடான கோடி தேசங்கள் கடந்திருக்கும்  என்னை, உனக்கு நினைக்க தோன்றியதும் தான் ஏனோ!

உன் முகமறியேன் உன் குரலறியேன்
உன் குணமறியேன்,
ஆயினும் உன் உள்ளமறிந்ததாலோ என்னவோ..
உன்னை நினைத்து, நானே இறகாகிப் போனதாலோ என்னவோ..
நீ இருக்கும் திசை நோக்கி என்னையறியாமல் பறக்கிறேன், மிதக்கிறேன்..!

இதோ! உன் இருப்பிடமும் அடைந்து விட்டேன்! இவ்வளவு அருகில் இருந்தும் உன் பாராமுகம் தான் ஏனோ!

அடடே,
இதென்ன ஒளி! அது உன் முகமல்லவா! இந்நொடியை என்னை தோற்றுவித்த தேவனே வந்து கேட்டாலும் கொடேன்!!!! உன்னையும் தான்!

ஒரு தேவதைக்கும் நேசிக்கும் நெஞ்சமுண்டென்று உணரவைத்த நீ, என்றும் பூரணமாய் என்னோடு!!






Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 337
Post by: Vethanisha on February 26, 2024, 01:35:59 PM
என் தேவனே

அன்று
உனக்குள் தொலைந்தது ஒரு பொற்காலம்
இன்று 
அறிந்தே உன்னை தொலைத்தது  என் நிகழ்காலம்

அங்கு 
நிஜ உலகில் சேர முடியா உனை நான்
இங்கு
கனவுலகில் தேடி வருகிறேன் தேவதையாய்

அங்கு
உறவுகள் உண்டு நமை பிரிக்க
இங்கு
 உறவாய் நீ மட்டும் என் அருகில் இருக்க

அங்கு
 மதம் என்னும் வேற்றுமை நமை தடுக்க
இங்கு
மனதோடு மனம் மட்டும் ஒன்று சேர

அங்கு
கண் காண தூர தேசத்தில் நீ வசிக்க
இங்கு
கை தொடும் தூரத்தில் உன் ஸ்பரிசம் எனை  வருட

அங்கு
கன்னம் வெறும் கண்ணீரையும்
இதயம் வெறும் கவலையையும் சுமந்து நிற்க
இங்கு
உன்  கன்னக்குழி  சிரிப்பில்  என்
மொத்தமும் நாணம் கொள்ள

அங்கு
கூண்டு கிளியாய் சிறைப்பட்டு நான்   தனிமையில்  வாட
இங்கு
சுதந்திரமாய்  இறக்கைகள் சூடிக்கொண்டேன் 
உனை நோக்கி  பறந்தோட

அங்கு
நிறைவேறா ஆசையாய் கானல் நீராய்  நீ இருக்க
இங்கு
நிறைவாய் உன்னுள் என்றென்றும் நான்  இலயிக்க   

பரவசம் அடைகிறேன் நான் 
கனவை கலைக்க மறுக்கிறேன் நான்

கண்களை திறந்தால்
விலகி  விடுவாய் என்றால்
இதோ
என் இமை இனி திறக்காது

தேவனே

என் கரம் பற்றி கொள்
கனவு வாசலில் காத்திருக்கும்
உன் தேவதையை கண்டு கொள்

எங்கே  சென்றாலும் இனி   
எனை!  அழைத்து செல்
அணைத்து செல் 

என்   உறவாய் நீ
உன்   உணர்வாய் நான்

VethaNisha.M
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 337
Post by: VenMaThI on February 26, 2024, 07:26:47 PM


பெண்ணே

கண்ணால் கண்டேன் உன்னை
காதல் கொண்டேன் உன்மேல்
பித்தாய் அலைகிறேன் உன்னால்
அதை உன்னிடம் கூற மட்டும் ஏனோ தயங்குகிறேன்....

என் மனதின் போராட்டம் என்று முடியுமோ
என் மனைவியாக உன்னை மணக்கும் பொழுதா -- இல்லை
மாற்றான் மனைவியாக உன்னை பார்க்கும்போழுதா ?
கடவுளே .. என் காதலை முதலில் அவளிடம் சொல்ல கருணை புரிவாயா?

மயங்கிக்கிடந்த பொழுதினிலே
மனக்கதவும் திறந்தது
ஆங்கே ஒரு மங்கையும் தெரிந்தாள்
காதல் தேவதையோ இவள் ?

அழைத்ததும் வந்த தேவதையே
என் ஆழ் மனதின் காதலை
என்னவளிடம் கூற வழி வகுப்பாயா என்று கேட்டேன் ...
வாயை மூடி ... நான் சொல்வதை கேள் என்று தொடர்ந்தாள் ...


காதலை சொல்ல கருணை கேட்டு
கருத்தில் என்னை நினைத்தவனே
காதலை சொல்லும் முன் .. உனக்கு சில
குறிப்புகள் சொல்கிறேன் கேள் .

ஜாதி மதம் பார்க்காமல்
மங்கையின் நிரமதுவும் பாராமல்
அப்பன் பூட்டன் சொத்தெதுவும் கேளாமல்
பொன் நகை வேண்டாம் உன் புன்னகை போதும் என்றும் .....

பிறந்த வீட்டின் ராணியாம் உன்னை
புகுந்த வீட்டின் மஹாராணியாய் அமர்த்தி...
கணவன் என்ற பெயர் கொண்டு ஊரார் அழைக்க
நின் தந்தையின் மறு உருவாய் இருப்பேன் என்றும் ....

உன் வீடு என் வீடு என்ற பாரபட்சம் பாராமல்
நீயா நானா என்ற போர் என்றும் வாராமல்
நாம் என்று வாழ்வோம் எப்போதும் -- என்று கூற
உன் மனதை பக்குவப்படுத்தி ... பின் உன் காதலை சொல்வாய் என்றாள் ....

என்னவளின் அன்பை மட்டுமே எதிர்பார்த்து
"என்றென்றும் உனக்காய் மட்டுமே நான்
நீ என்றும் நான் என்றும் அல்ல
நாம் என்று வாழ்வோம் வா " -- என்று கூறி ...

என்னை ஏற்று எனக்காய் வரும் என்னவளை
என்றுமே கலங்காமல் காப்பேன் ....
நான் அவளுடன் இருக்கும் வரை அல்ல
என் உடல் கல்லறை சேர்ந்த பிறகும் என்ற சபதத்துடன் .....


இதோ கிளம்பிவிட்டேன்..
என்னவளிடம் என் காதலைக்கூற ....❤️❤️❤️❤️

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 337
Post by: Sun FloweR on February 27, 2024, 12:16:29 AM
உயிரோடு இருந்தாலும்
மண்ணோடு மறைந்தாலும் பூமியில் மிச்சம் ஒன்று இருக்குமானால் அதன் பெயர் காதலாகத்தான் இருக்க முடியும்..

எவர் தடுத்தும் கேளாமல் சுயம்புவாய் செழித்து வளரும் தன்மை ஒன்று இருக்குமானால் அதன் பெயர் காதலாகத்தான் இருக்க முடியும்..

காதலில் உழன்று பிரிவென்ற விஷம் அருந்தி, வாழ்வைத் தொலைத்து, உயிரையும் தொலைத்து பரிதவிக்கும் காதல் தேவதைகள் நாங்கள்..

ஜீவனிருக்கையில் சிலாகித்துக் கூடிய பொழுதுகள், ஜீவனற்றுப் போகையில் இல்லாமல் போய்விடுமா ?
நாங்கள் சுவாசித்த காற்றும்,
எங்கள் மேல் பட்ட மழைத்துளிகளும்,
நாங்கள் நுகர்ந்த பூவின் நறுமணமும் இன்னும் பூமிதனில் வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது..

முதலில் நீ முந்துகிறாயா? அல்லது நான் முந்துகிறேனா என்ற எங்களின் வீழ்தல் போட்டியில் வெற்றியின் பங்கு சரி சமமே எம் இருவருக்கும்..

காதலில் முயங்கி, காதலில் மிதந்து , வாழ்தலை ருசிக்க அவா கொண்டு,ஏக்கமுற்று பெருமூச்சிட்ட காலங்கள் கரைந்து போய் இன்று கைத்தலம் பற்றுகின்றோம் என் உயிரை நான் இழந்தும், அவள் உயிரை அவள் இழந்தும்..

காதலர் வாழ்வில் பிரிவென்ற வார்த்தை காணாமல் போகவும், மனிதர்கள் மனதில் காதலைப் பிரித்தல் என்ற எண்ணம் வீழ்ந்து போகவும் நவீன காதல் தேவதைகள் நாங்கள் இருவரும் கைகோர்த்து பாடுபடுவோம்..

காதல் உலகில் புதுவரவாய்
மலர்ந்த காதல் தேவதைகள் என்று உலகம் இனி எங்கள் இருவர் பெருமை பேசட்டும்..
மரணித்தாலும் மரணமில்லாத காதலர்கள் என்று உலகம் இனி எங்கள் இருவர் அருமை பேசட்டும்..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 337
Post by: SweeTie on February 27, 2024, 10:36:33 PM
இவள்  யாரோ  இவள் யாரோ ?
கனவிலே  வரும் தேவதையா ?   இல்லை
காற்றோடு  கலந்து வரும்  மோகினியா ?
ஐ லவ் யூ  சொல்லவரும்  காதலியா ?

என் பிஞ்சு மனதை கொள்ளை  கொண்டவளா ??
என் வாழ்க்கையை நிற்கதியாகியவளா இவள் ?
பசியை  தொலைத்து  தூக்கத்தை கெடுத்து  என்னை
பித்தனாக  அலையவிட்டவளா

பார்க்கும் இடமெல்லாம் அவள் உருவம்
கேட்கும் குரல்  எல்லாம் அவள் குயிலோசை
என் காதல் சாம்ராஜ்யத்தின் அரசி என்றெல்லாம்
ஆயிரம் கனவு கண்டேனே !!

பிரமன் செதுக்கிய செப்பு சிலையவள்
தரிசனம்  வேண்டியே  தினமும் 
காலேஜ்  செல்வதைக்  கடமையாய் கொண்டேனே
கடைசியில் காற்றிலே பறக்கவிட்ட கடதாசி ஆனேனே!

அந்த ஓரவிழிப் பார்வைக்காக   அன்று
 ஒற்றை காலில் தவம் கிடந்தேனே!
பித்துபிடித்தவன் போல்   என்னையே மறந்த என்னை
செத்து  தொலைந்துபோடா என திட்டி தீர்த்தவளா ?

அம்மாவின்  பையன் என்னை 
அவள் பக்கம் திருப்பி என் அன்னையை
மறக்கடித்த  அந்த  மாயக்காரியா   இவள் ?
வேண்டாமடி  இப் பொழப்பு   போய்விடு   நீ !

திக்கற்றவனுக்கு  தெய்வமே துணை  என்பார்
என் தனிமையே  போதும்  வாழ்ந்திடுவேன் 
உன் நினைவுகள் வேண்டாம்    போய்விடு
இனிமேல் இங்கு இடமில்லை போய்விடு
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 337
Post by: TiNu on February 28, 2024, 12:20:14 AM

தும்பையென மின்னும் வெண்புறாவே..
விரைந்து வா..! என் அன்பே! உனக்காகவே..
காத்துக்கிடக்கின்றது .. என் உயிருமே .....

செவ்விதழ் வழியே.. கசிந்தொழுகும்
உன் மென்மையான புன்னகைக்காக.. 
எதிர்பார்த்துகிடக்கின்றது... என் மனமே...

உன் பிஞ்சுவிரல் தீண்டுதலில்.. ஏனையறியாது..
வெண்பஞ்சு இறகுகள் முளைத்தது..
பறந்திடதுடிக்கின்றது... என் நினைவுகளுமே ..

என் ஆருயிரே..  என் அன்பு. காதலே..
உன் வரவுக்காக.... காத்துக்கிடக்கும்..
எனை.. கனிவுடனே.. காத்திட வாராயோ..
 
படார்! என ஓர் ஓசை.. ஒலிவந்த திசைநோக்கி
திருப்பினேன்.. அங்கே.. ஓர் இரும்பு கதவுகள்..
மெல்ல திறந்தது... கிறீச்..கிறீச்..ஓசையுடனே..

அங்கே! ஏதோ ஒரு வெண்புகை.. மங்கலாக..
ஓ! என் அன்பன்.. அதோ! வந்துவிட்டான்..
ஓடினேன்.. வாயிலை நோக்கி ஏக்கமுடனே.. 

அதோ! என்னவன். . இதோ! வருகின்றேன்..
விரைந்தோடி வாசலை நெருங்குகையில்.. - சூரியகதிரின்
சாயல்(நிழல்).. ஏளனமாய்.. நகைத்தது..எக்காளமுடனே..

சட்டென சுய நினைவுகளுக்கு.. நானும்  வர.. . 
எனைநானே .. செல்லமாக கடிந்து கொண்டேன்...
லூசு பெண்ணே! எல்லாமே.. உன் கற்பனைதானடி

கற்பனைகளும்.. சில கதைகளை.. சித்தரிக்குமே..
கனவுகளும் . புதிய கதைகளை ... அரங்கேற்றுமே.. 
ஆயிரம் கோடிகளில்.. ஆஸ்திகள் இருந்தாலும்..
நூறாயிரம் உறவுகள்..  நம் அருகினில் இருந்தாலுமே..
தன்னிலை மறந்து சாய.. ஓர் தோள் இல்லையெனில்....
கற்பனையான கனவிடம்.. களவுபோகுமே.. நம் மனம்..
 

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 337
Post by: Lonely Warrior on February 29, 2024, 02:51:51 PM
 கரம் பிடித்து கட்டி அணைத்து
கதைகள் பேசிட கனா இருந்தாலும்
விலகி இருப்பதில் வினோத சுகம்
கண்டேன் கண்மணியே…

விடியாத இரவும் கலையாத
கனவும் வேண்டும்
அந்த கனவிலாவது என்னை
பிரியாத நீ வேண்டும்…

இருக்கும் இடங்கள் ஒன்றும் தூரமில்லை
உன் குரல் தரும் நெருக்கத்தில்
கடல்தாண்டிய தூரமும்
என் கைப்பிடிக்குள் அடங்கிவிடுகிறது…

நீ என் அருகாமையில் இல்லை
ஆனால் உன் நினைவுகள்
என்னுள் எழாமல் இல்லை ….

உடலால் தூரத்திலும்
உணர்வால் என் அருகிலும்
நீ இணைந்து இருக்கிறாய்
எப்பொழுதும்…

கலையாத கனவாக
காலத்திற்கும் துணையாக
என்றென்றும் என் வரமாக நீ…. 

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 337
Post by: Vijis on March 01, 2024, 12:43:26 AM
என் மனம் மறைத்தாலும் உன் நினைவு என்னை
உன்  உலகிற்கு அழைத்து வந்தது

 நீ  என் அருகில் இல்லை என்றாலும் என் உயிரினுள்
இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்

இவ்வுலகிலும் அழகான கனவை தந்தது உன் நினைவே

என் காதலுக்காக அனைவரையும் விட்டுவந்துவிட்டேன்
என் கனவை நிஜமாக்கி என்னிடம் கொடுத்து விடுவாயா

 விரும்பி தந்தால் வாழ்கிறது என் மீதமுள்ள என் காதல்

மறந்துவிடாதே உனக்காக காத்துஇருப்பது

 நான் மட்டும் அல்ல என் காதலும் தான்


ஆண்

கதுவு தட்ட திறந்து பார்த்தே

என் தேவதை காற்றை சுவாசிப்பதை விட
உன் நினைவுகளை சுவாசித்து உயிர் வாழ்கிறேன்

 அன்று எனக்கு தைரியம் இல்லை
  நீ இல்லை என்னும் சொல்லை கேட்க

நீ  வேண்டும் என் வாழ்வில் என் தேவதையாக
என் தோழியாக எனக்கு என்றுமே என்னவளாக

 உன் மீது கொண்ட காதலால் வந்துவிடுவேன்
உன்னிடமே இப்பிறவி நமக்காகவே நம் காதலுக்காகவே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 337
Post by: ரித்திகா on March 01, 2024, 10:52:40 AM
மரணப்படுக்கையில்
நான்
படுக்கையின் ஓரத்தில்
நீ
சிரித்து சிரித்து உதடுகள்
களைத்தனவோ
பேசிப் பேசி வார்த்தைகள்
தீர்ந்த்தனவோ
உயிர் ஊசலாட
கருவிழி மட்டும்
உந்தன் அருகாமையை
வேண்டிக் கொண்டிருந்தது...

விழிகளின் பாஷை
அறிந்தாயோ..
முன்னே செல் கிளவி
பின்னே வந்து விடுகிறேன்
என்றாய்..
இதழ் சற்றே மலர
விழியோரம் ஒரு சொட்டு
துளிர...
நிரந்தர நித்திரை கொண்டேன்....

மூடிய விழிகளில்
ஏதோ கூச
கேளா செவிகளில்
யாரோ பேச
இமைகள் தானே
திறந்தது...
பஞ்சுமிட்டாய்களை
வானில் மிதக்கவிட்டதுபோல்
பஞ்சு மேகங்களாய்
உலவுகிறது...

வண்ண மலர் தோட்டமோ
பிரம்மன் வரைந்த
ஓவியமோ..
பார்க்கும் திசையெல்லாம்
பூத்துக்குலுங்கும்
மலர்களும் செடிகளும்
ரம்மியமாக
கொள்ளை கொள்கின்றது
மனதை..

சின்னஞ்சிறு குருவிகள்
கிசு கிசுக்க
சற்றேத் தள்ளி இருந்த
அருவியில் நீரோடை
சல சலக்க
மென்மேலும்
விழி மயக்கம் தளர்த்தி
என் மேனியை பார்க்க...
முதுமை மறைந்து
இளமை திரும்பியதோ...

சொப்பன சிம்மாசனத்தின்
அருகில் உள்ள
நிழற்கண்ணாடி
என் தோற்றத்தினைப் படம்
போட்டுக் காட்ட
சொக்கித்தான் போனேன்
சொர்கலோகத்தில்...
இது சாத்தியமா
என சந்தேகம் கொண்டேன்..
பின்பு சொர்க்கத்தில்
எதுவும் சாத்தியம்தான்
என எண்ணிக் கொண்டேன்...
ஆனால்  நான் எப்படி
சொர்கத்தில்
என்ற சாந்தேகம்
மட்டும் விடையறியா
புதிராய்...

ரம்பையும் ஊர்வசியும்
தோற்றார்களோ
வெண்ணிற ஆடையில்
அவள் தேவதையோ..(நான்தான்)
என்னவன் கண்டிருந்தால்
திகைத்திருப்பான்...
ஆம் என்னவன்...
அவனை எண்ணுகையில்
அகம் கனிந்து
முகம் நாணத்தில்
சிவக்கத்தான் செய்கிறது...
சிவந்தது கன்னங்கள்
மட்டுமல்ல
அவனைக் காண விழிகளும் தான்..

அவனைப் பிரிந்த நொடிகள்..
இருப்பது சொர்கமாயினும்
நரகமாய்த் தோன்றியது...
பட்டாம்பூச்சியாக மாறி
இருக்கக்கூடாதா...
ஒரு மூச்சில்
 பறந்து
அவன் முகத்தினை
இரு விழிகளில்
நிரப்பிக் கொண்டிருப்பேன்...

அவனால்
அவன்தாள் நான் கொண்ட
நேசம்
என்பால் அவன் கொண்ட
காதல் ...
காலம் அறிந்தது
அதனை...
சண்டைகளும்
சந்தோஷங்களும்
ஒருங்கிணைந்ததுதான்
எங்கள் காதல்...
திமிரு பிடித்தவள்
என்று தினமும்
திட்டித் தீர்த்தவன்...
இந்த திமிரைத்தான்
நித்தம் நித்தம்
நேசித்தான்...

எமன்
 எனக்கு
அநியாயம் இழைத்தானே..
என்னவனை முன்னே
அனுப்பி உடனே
என்னை பின்னே
அனுப்பியிருக்கலாமே.‌..
என்ன‌ வஞ்சனையோ...
அவனைப் பிரிந்த என்
மனமானது
கொத்துப் புரோட்டாவைப் போல்
கொத்திக்
கிழிந்த காகிதமாய்‌..


இவ்வளவு நேசித்து
விட்டானே...
என்னைப் புலம்ப
விட்டானே என
கண்ணீர்
அலை கடலாகப்
பொங்க
அசிரீரியாக
அவன் குரல்....
ஆரம்பித்துவிட்டாயா
என்றான்..

தேகம் சிலிர்க்க...
பொங்கிய கண்ணீர்
கன்னத்தில் உருண்டோட ...
தாமரை இதழ்களைபோல்
உதடானது
மலர்ந்த தருணம்
மனதிற்கு உரைத்தது
வந்து விட்டான்
மீண்டும் மீண்டும்
என்னிடம் வந்து
விட்டானென்று...

கால்கள் பர பரக்க
அவனெதிரே
ஓடி நின்றேன்...
செல்ல பொறுக்கி
பற்கள் பளபளக்க
சிரித்துக் கொண்டிருந்தான்
கரங்களை நீட்டியவாரு...
தவிக்க விட்டு விட்டு
சிரிக்கின்றானே
என்று செல்லமாக கோவித்து
கொண்டு
ஒரே தாவில் அவன் கரங்களை
இருகப்பற்றினேன்...

உணர்ந்தேன் அத்தருணம்
என்னை வெல்வதில்லை அவனின்
காதல்...
என்னுள் சரணடைவதே
அவனின் காதல்...
அக்காதலினால்
புண்ணியனானேன்...
சொர்கத்தை வந்தடைந்தேன்..
முழுமைபெற்றேன்...
என் தேவனின் கரம்
கோர்த்தபின்
வானில் மிதக்கச்சொல்லி
சிறகுகளும் தானே
முளைத்தன...

என்னவனில் ஓருயிராய்
கலந்திட..
வா
யாருமில்லா தூரத்
தேசத்தில்
எலையில்லா விரிந்த
வானத்தில்
இரவின் மடியில்
நட்சத்திரப் பாளம்
அமைத்து
வெண்ணிலவைக் கொஞ்சமாய்
குளிரச் செய்து
வெண்ணிலா ஐஸ்கிரீம் (பனி‌கூழ்)
சாப்பிடலாம்...

தீர்ந்த மோகத்துடன்
தீராக் காதலுடன்
மீண்டும் தொடங்கட்டும்
நம் அன்பின் பயணம்
இவ்விண்ணுலகினில்...