கடையேழு வள்ளல்கள் எனப் போற்றப்படுபவர்கள் பாரி, பேகன், காரி, ஓரி, அதியமான், ஆய், நல்லி ஆகியோரே. இவர்களது கொடைத்தன்மையும், பிறருக்கு உதவும் மனப்பான்மையுமே இவர்களை சிறப்புறச் செய்கின்றன.
பாரி:
இவர் முல்லைக்குத் தேர் அளித்த வள்ளல் எனப் போற்றப்படுகிறார்.
பேகன்:
இவர் யானை மீது செல்லும் பழக்கம் கொண்டவர். மயில் போர்த்திக்கொள்ளாது என்பதை தெரிந்தும் தன் போர்வையை மயிலுக்குப் போர்த்திவிட்டான்.
காரி:
இவர் திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர்.
ஓரி:
இவர் கொல்லிமலையை ஆண்டவர். தன் குறும்பொறை நாடு முழுவதையும் கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) அளித்தவன்.
அதியமான்:
இவர் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் உதவி செய்தவர்.
ஆய்:
இவர் பெண் யானைகளை வாகனமாகப் பயன் படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் பழக்கச் செய்தவர்.
நல்லி:
இவர் தன்னை அண்டி வந்தவர்க்கு தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் உதவி செய்தவர்.
அடுத்து
🪷 கடையெழு வள்ளல்கள் ஆட்சி செய்த பகுதி எது? 🪷