தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 009

(1/1)

Global Angel:
                  நிழல் படம் எண் : 009

இந்த களத்தின்  நிழல் படத்தை gab  கொடுத்துள்ளார் .....  உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

                       

Global Angel:
கரு விழிகளில் ஏக்கம்
காணும் கனவினில் ஒரு தேக்கம்
புத்தக பைகளை ஏந்தி
புத்தி வளர்க்கும்
புனிதமான இடமாம்
கல்வி சாலை செல்லே வேண்டிய
கதிர்கள் ....
இங்கு பிச்சை பார்த்திரம் ஏந்தி
அன்னம் இடுவோர் அகத்திணை
முகத்தினில் காண ஏங்கி
தவமாய் தவம் இருகின்றன ...

என்ன தவறு செய்தன இக்கதிர்கள்
போசாகின்றியே  புதைந்து போக ...
வருடம் ஒன்றில் கேளிக்கை நிகழ்வுக்காக
எத்தனை கோடியை அரசு செலவு செய்கிறது ..
அதை இந்த பிள்ளைகளுக்கு கொடுத்தால்
கஜானாதான் வற்றிவிடுமா ....
இல்லை கணக்குதான் இடித்து விடுமா ...

உண்டி சாலை தனில்
உணவருந்த சென்றேன்
அங்கே ...
கொண்டுவந்த பர்கரை தள்ளி விட்டு
பிசா கேக்கும் குழந்தைக்கு
அதை மறுப்பேதும் சொல்லாமல்
வாங்கிக் கொடுக்கும் பெற்றோரை பார்த்தேன்
ஏனோ எனக்கு இந்த புகைப்படம்
ஞாபகத்திற்கு வந்தது ...

பிறந்த நாள் ஒன்றுக்கு
பல ஆயிரங்களை செலவு செய்யும் பெற்றவர்களே
உங்கள் குழந்தைகள் போல்
பலர் உணவேதும் இன்றி
ஒரு வேளை உணவுக்காய்
வேகாத வெயிலிலும்
தட்டு ஏந்தி நிக்கின்றார்கள் ...
அவர்கள் பசிக்கு ஒரு சில
ஆயிரம் அளித்து
புகையும் வயிற்றினை நிரப்பி
புண்ணியம் கட்டிக் கொள்ளுங்கள்
சிறுவர் மனது இறைவன் வாழும் ஆலயம் ...
சிறுவர் வாழ்த்து உங்கள் குடும்பம் சிறக்கும் கேட்டு .

ஸ்ருதி:
ஓவியம் எனது பார்வையில்



வெட்ட வெளியில் கஞ்சிக்கு
கையேந்தும் பிஞ்சுகள்
சொந்த நாட்டில் அகதியோ??
தாய்முகம் காண துயரமோ??

நேற்று வரை ஓடி
திரிந்த கால்கள்
இன்று இரும்பு
முள்வேலிக்குள்

கஞ்சிக்கும் தண்ணிக்கும்
மணிகணக்கில் காத்திருப்பு
செல்லடித்து
தரைமட்டமானது
வாழிடம் மட்டுமா
வாழ்க்கையும் தானே??

நிலா சோறு
சாப்பிட வேண்டிய தளிர்கள்
இன்று ஒரு பிடி சோறுக்காக
வரிசையில்..

ஆலமர ஊஞ்சல்
குதித்து தாவி
குளித்த குளக்கரை
ஓடியாடிய பள்ளிக்கூடம்
பள்ளி சீருடை
பகல் நேர பகிரும் உணவு

அம்மாவின் ஆசை முத்தம்
அப்பாவின் கண்டிப்பு
அக்காவின் அரவணைப்பு
சகோதரனிடம் குறும்பு சண்டை

வீதி கடையில் மிட்டாய்
தோள் சாய தோழனின் தோள்
பண்டிகை கொண்டாட்டம்
மஞ்சள் பூசிய புது சட்டை

இனி ஒருமுறை காணும் வரம்
உனக்கு கிடைக்குமோ??

Navigation

[0] Message Index

Go to full version