தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 006

(1/2) > >>

Global Angel:
                    நிழல் படம் எண் : 006

இந்த களத்தின் நிழல் படத்தை தோழி சுருதி கொடுத்துள்ளார் ..... இந்த அழகிய படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....

fernando:

உன் விழி பார்வை பார்ப்பது
அந்த ரோஜாவைய ,
அல்லாது அதன் பிம்பயாதிய ,
உனகுளே சக்தி இருக்கு ,
அதை வைத்து வேண்டிடு இந்த
உலக   , ரோஜாவை முட்களால் காக்கும் கடவுள் 
உனயூம் காப்பன்
வேண்ட்டு வாழ்வை வாழ்த்திடு
இந்த பூமயில் மனிதனாய்
இப்படிக்கு ,
  அன்பன்
பெர்னாண்டோ

maha:
நீ உறங்கினாலும் ,உறங்காமல்
துடிக்கிறேன் அன்பே!!
உன் நினைவில் நான்!!

எனக்கு பதிலாக நான்  எழுதிய புத்தகம்
 உன் அருகில்!!
உன் ஸ்பரிஷம் பட அந்த புத்தகம்
எத்தனை நாள் ஏங்கியதோ
என்னை போல்!!

நீயும் நானும் சேர்ந்து படிக்க
வேண்டிய பக்கமடி  அது!!
அதை துயில் கொண்டு
தனியே கனவில் படிகின்றாய்!!

என்னை நிஜத்தில் கொள்கின்றாய்!!
என்று அறிவாய் எனது
மனதை!!

இந்த புத்தகத்தை போல்
உன் மனதையும் சற்று
திறந்து வை- அன்பே!!

காத்திருக்கிறேன் அன்பே!!
அதை நான்  படிக்க!!

Yousuf:
பெண் போகப்பொருளாய் அடிமையாய்
கருதிய காலம் மலையேறி...
பெண்ணும் சாதிக்க பிறந்தவள் தான்
என்று சாதித்து காண்பிக்கும் காலம் இது...

அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு
என்று கூறிய காலம் மலையேறி...
பெண்ணாலும் சாதிக்க முடியும் என்று
நிருபித்து காண்பித்த காலம் இது...

கல்வியை வளர்ப்பது கடமை என்று
கல்விக்காய் வாழ்க்கையை அர்ப்பணித்த...
கண்ணியமிக்க பெண்களும் புவியிலே
புகழ் பெற்று வாழ்ந்திட்ட காலம் இது...

படிப்பே எனக்கு குறிக்கோள் என்று
புத்தகத்தை அணைத்து உறங்கும் பெண்ணே...
நீயும் புவியில் புகழ் பெற்றிட
உன் கல்வியை தரமாய் கற்றுக்கொள்!!!

ஸ்ருதி:

உனக்காக கவி எழுதி
கண் அயர்ந்த பொழுதில்
கனவில் நுழைந்து
தூக்கத்தை கலைக்கும்
கள்வன் நீ ...

உயிராய் உன்னை நினைத்து
உன்னை என்னுள் சிறை வைத்து

நிஜமாய் நீ இருக்க
நிழலைப் போல
உன்னுள் என்னை புதைத்துக்கொண்டு

சிலிர்த்து போகும் என் கனவுகளில்
புல்லரித்து போகின்ற ரோமங்களும்
துடித் துடித்து தவிக்கின்ற இதயமும்
அமைதியாய் இருந்திட
அன்பாய் ஒரு வார்த்தை சொல்வாயா??

இரவுகள் எல்லாம் உன் கனவால்
தூக்கத்தை விரட்ட
பகல்கள் எல்லாம் உன் நினைவில்
துக்கத்தை தாங்கி செல்ல
மௌனமாய் நீ...

ஒவ்வொரு கனவிலும்
அருகே நீ இருக்க
முத்தம் கேட்டு இம்சிக்கும்
என்னை
சலிக்காமல்
கொஞ்சும் உன்னை

அணைத்து துடித்து
நேசத்தை காட்டும் தருணத்தில்

கலைந்து போகும் கனவை
கொல்ல துடிக்கிறேன்
முற்று பெறாத கனவாய்
என் காதல்...

உனக்காக
எழுதிய கவிதைகள் எல்லாம்
என் அருகே புத்தகமாய்..

பிழைத்திருத்தம்
செய்ய  வாசித்தபொழுது
கவிதையின் வரிகளில்
மயங்கி கனவுலகில்
மிதக்க

உன் கவியை
நீ படிக்கும் தருணத்தில்
நீயும் உணருவாய்
என் வரிகளின் வலிமையை..

வா கனவுலகில் கை கோர்த்து
காதல் கவிதை
நிஜமாய் வரைவோம்

ஆயிரம் வார்த்தைகள் கொண்டு
கவி எழுதினாலும்
நீ தரும்  "உம்மா" என்ற
வார்த்தைக்கு ஈடாக
என் கவிதை வரி
அமைக்க முடியாமல்
வெக்கத்தில் நான்...

என் கனவுக் காதலனே

இனிக்கும் உன் நினைவுகள்
சிலிர்க்கும் என் கனவுகள்
கவியை படிக்க வந்துவிடு

கண்விழிக்கும் பொழுது
என் அருகில் நீ இருக்கும்
அந்நொடியில்
என்னை மறந்து
காலம் முழுவதும்
உன் கையில்
கவிதை புத்தகமாய்
நான் இருக்க
தினம் ஒரு கவி படை(டி)த்திடு
தினம் ஒரு கவி படித்திடு

என் காதலைச் சொல்ல...
உனக்காக மட்டும்
என் "கவி"தைகள் காத்திருக்கும்...

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version