Author Topic: கிறிஸ்துமஸ் மரம்  (Read 910 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கிறிஸ்துமஸ் மரம்
« on: December 15, 2011, 12:10:44 AM »
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் சமயத்தில், வீடுகளில் கிறிஸ்துமஸ் மரத்தை நிறுவி, விளக்குகளை பொருத்தி அலங்காரம் செய்து வைப்பது வழக்கம். இந்த வகையில் உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம், அமெரிக்காவின் ராக்பெல்லர் சென்டரில் வைக்கப்படுகிறது.1931ம் ஆண்டு முதல், நவம்பர் மாத கடைசியில் அல்லது டிசம்பர் மாத முதல் வாரத்தில் இது பார்வைக்கு வைக்கப்படும். கடந்த 1999ல் நிறுவப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தின் உயரம் 100 அடி. இந்த மரம், வருடா வருடம் அன்பளிப்பு மூலம் புதிதாக பெறப்படுகிறது. அமெரிக்காவின் ஓகியோ, நியூயார்க், நியூ ஜெர்சி, வெர்மாண்ட் மற்றும் கனடாவின் ஒட்டாவா என பல பகுதிகளில் தேடி, பொருத்தமான மரத்தை கண்டுபிடித்து, அறுத்து கிரேனில் தூக்கி, டெலஸ்கோப்பிங் டிரெயிலர் மூலம் எடுத்து வந்து இந்த சென்டரில் வைக்கப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் மரத்தை எடுத்து வரும் பாதையின் அகலம் 110 அடி. அதனால், பத்து அடி குறைத்து, இடிக்காமல் எடுத்து வர, 100 அடி மரமாக தயார் செய்கின்றனர். வருடா வருடம் இதில் 30 ஆயிரம் விளக்குகள் பொருத்தப்பட்டு எரிய விடுகின்றனர். மரத்தின் உச்சியில் உள்ள நட்சத்திரம் (3 மீட்டர் விட்டமும், 249.5 கிலோ எடையும் கொண்டது) 2004ம் ஆண்டு முதல் பொருத்தப்பட்டு வருகிறது. புத்தாண்டு தினத்திற்கு மறுநாள், மரத்தை அகற்றி, துண்டுகளாக்கி, பல்வேறு ஆலய திருப்பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.

* அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் உள்ள கிறிஸ்துமஸ் மரத்திற்கு, "தேசிய கிறிஸ்துமஸ் மரம்' எனப் பெயர். அதை பார்க்கச் செல்லும் இருபுறமும் மற்ற மரங்கள் கொண்ட பாதைக்கு அமைதி பாதை எனப் பெயர்.

* அமெரிக்க ஜனாதிபதி கூல்டிரிட்ஜ் (1923) காலத்தில் தான் முதன் முதலில் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டது. விளக்குகள் பொருத்தப்பட்டு, கிறிஸ்துமஸ் அன்று மாலை அதை ஜனாதிபதி திறந்து வைத்து கூடி நிற்கும் மக்களிடம் சிறிது நேரம் உரையாற்றுவார். 1923ல் இதன் உயரம் 48 அடி. இன்றுள்ள கிறிஸ்துமஸ் மரத்தின் உயரம் 30 அடி. இங்கு அபூர்வமாய்த்தான் மரத்தை மாற்றுகின்றனர். ஆனால், அது வைக்கும் இடம்தான் அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கும்.

* இதனுள் ரகசிய ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டு 1932ல் கரோல் பாடல்கள் இசைக்கப்பட்டன. இதனால், மக்கள், "பாடும் மரம்' என இதை அழைக்கத் துவங்கினர்.

* அதிக மின்சக்தியை செலவழிக்காமல் மாலைகளாலும், பந்துகளாலும் இந்த மரம் 1973ல், அலங்கரிக்கபட்டது.

* 1995ம் ஆண்டு முதல் சூரிய ஒளியை பயன்படுத்தி இங்கு விளக்குகள் எரிய ஆரம்பித்தன.

* 2007ம் ஆண்டு முதல், "லெட்' எனப்படும் விளக்குகள் பொருத்தப்பட்டன.

* உலகின் மிகப் பெரிய கிறிஸ்துமஸ் மரத்தை தரிசிக்க இத்தாலிக்கு செல்ல வேண்டும்.
உம்பிரியாவின் குபியோவின் பகுதியில் உள்ள மாண்டோ இங்கினோ மலைச் சரிவில் அபூர்வ கிறிஸ்துமஸ் மரத்தை வருடா வருடம் அமைக்கின்றனர். 40 ஆயிரம் அடி மின் ஒயர்கள் மூலம்
500 விளக்குகளை பொருத்தி இந்த மரத்தை அலங்கரிக்கின்றனர். இதன் உயரத்தை கணக்கிட்டால்
இதுவே உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரமாக இருக்கும்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: கிறிஸ்துமஸ் மரம்
« Reply #1 on: December 15, 2011, 01:38:16 PM »
// * 1995ம் ஆண்டு முதல் சூரிய ஒளியை பயன்படுத்தி இங்கு விளக்குகள் எரிய ஆரம்பித்தன.//

எல்லோரும் இப்படி பயன்படுத்தினா நல்லாருக்கும்