Author Topic: தை மகளே வருக  (Read 292 times)

Offline Vijis

தை மகளே வருக
« on: January 16, 2024, 12:45:21 AM »
தை மகளே வருக

 தை முதல் நாள் தமிழர் திருநாள் உழவர்களுக்கு உன்னதமான நாள் உழவர்களை போற்றிட பிறக்குது இந்நாள் நமக்கு உணவு அளித்த இயற்கை அன்னையை வணங்கும் நன்னாளாம்

 வண்ண வண்ண கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்டி புதுஆடையை அணிந்து புது பானையில் பொங்கல் பொங்கி மங்களம் உண்டாக மஞ்சள் கொத்தினையை வைத்து இனிக்கும் செங்கரும்பை வாழைமரம் போல் மாலையிட்டு கதிரவனை வணங்கும் ஓர் இனிய நாள்

 மாட்டுப்பொங்கல் உழவனுக்கு தோள் கொடுக்கும் தோழன் பல குழந்தைகளின் பசியை ஆற்றும் தாய்

இந்நன்னாளில் கோமாதாவை குளிப்பாட்டி மஞ்சள் பூசி கொம்பினை வண்ணம் இட்டு அலங்கரிக்கும் ஓர் இனிய நாள்

வீட்டில் வளர்க்கும் ஆடு கோழி நாய் பூனை கொஞ்சி கொண்டாடும் ஓர் நல்லநாள் நமக்காக உழைக்கும் உயிர்களுக்கு நன்றி காட்டவும் அன்பை பொழியவும் ஓர் உன்னதமான நாள்

 காணும் பொங்கல் பொங்கல் கொண்டாட்டத்தின் திருவிழா பாரம்பரிய விளையாட்டினை நினைவிட்டும் பண்டிகை எல்லா உறவுகளும் ஒன்று கூடி கொண்டாடும் பொங்கல் இதுவே தமிழர்களின் வரலாறு எடுத்துரைக்கும் பண்டிகையும் இதுவே

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்துக்கள்