FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 06, 2023, 01:52:48 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 307
Post by: Forum on March 06, 2023, 01:52:48 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 307

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/307.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 307
Post by: தமிழினி on March 06, 2023, 03:39:39 PM
மாதரினம்...

வார்த்தைகள் போததடி உன்னை வர்ணிக்க...!

நித்தம் புது வண்ணம் காட்டிடும் உன் வாசல் வர்ணங்கள்...!

வாசனை துளைத்திடும் உன் சமையல் அறை கைப்பக்குவங்கள்...!

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிடும்
அன்பின் விளம்பியே...!!

பட்டங்கள் ஆள்வதும்..!சட்டங்கள் செய்வதும்..
 பாரினில் பெண்கள் நடத்த வந்தனர் என்ற பாரதியின் கூற்றுக்கினேங்க...!!

திரும்பும் திசை எல்லாம் மங்கையர் தன் மகத்துவமே ..!!

ஆணுக்கு பெண் சரிநிகர் ஆ ???
என்ற காலங்கள்
கடந்து...!
ஆணின் வெற்றியில் மட்டுமல்லாது...
தான் தன் குடும்பம், சுற்றுச்சுழல் என தொடங்கி..
இன்று இந்த உலகத்தையே சிறந்த முறையில் ஆளுகின்ற பெண்ணே..!

பாரதபூமி .. பாரதத்தாய்.. என்று தானே அழைக்கின்றனர்..!

எத்தனையோ முறை உன்னை நீ வலிமைமிக்கவள்..!

திறமைமிக்கவள்..!

என்று எத்தனை துறைகளில் நிரூபித்தாலும் ..!!

இன்னும் சில மூடர்கள்.. உன்னை ஒரு போதை பொருளாகவும்..

மனைவி எண்ணும் அடிமைத்தனத்திற்குள்ளையும்...

 குறுகிய வட்டத்திற்குள் வாழவே அனுமதி கொடுத்து விட்டு..

வெளியில் பெருமை பேசிடும் உலகம் இது...!

மங்கையர் தினம் மட்டுமே அலங்கரிக்கப்படும்

ஓர் அலங்கார பொருளாகவே சில இடங்களில் உன் நிலை உள்ளதே...!

வெளிகொண்டு வரப்படாவிட்டலும்..!

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும் என்று ஓர் மானிடமெ சொல்கின்ற வரலாறு..

பெண்ணே நீ பெற்ற பெரிய அடையாளம்...!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 307
Post by: KS Saravanan on March 06, 2023, 09:21:28 PM
ஓய்வறியா பெண்ணே..!

நீரின்றி அமையாது உலகு
பெண்ணே நீ இன்றியும் அமையாது..!
ஊதுகுழலை எடுத்த கையால்
எழுதுகோலையும் எடுத்தாய்..!
பூட்டி வைத்த ஆற்றல்கள்களெல்லாம்
எரிமலையென வெடித்தாய்..!
உனது தீப்பிழம்பில் வெந்து
தணிந்தது ஆணாதிக்கம்..!
பெண்ணே உனது குனிந்ததலை
தன்னடக்கம் இன்றும் பெருமை
போற்றுகிறது கணவனை
காணும் நாணத்தினால்..!
விடியும் சூரியனும்
உனைக்கண்டு எழுகிறது..!
மின்மினி பூச்சிகளும்
உனைப்போற்றி ஒளியெழுப்புகிறது..!
ஈரைந்து மாதங்கள் எனை சுமந்து
பெற்றெடுத்தவள் அம்மாவாக நீ..!
அறிவை அமுதமாய் கொடுக்கும்
ஆசிரியையாய் நீ..!
அம்மாவிற்கு நிகராக எனை
பாதுகாத்து அரவணைத்தவள் அக்காவாக நீ..!
பாசம் என்பதை உணரவைத்து
அதை புரியவைத்தவள் தங்கையாக நீ..!
தோய்ந்து நின்றபோதெல்லாம் என்னை
தோள்கொடுத்து சுமந்தவள் தோழியாக நீ..!
என்னுள் பாதியாக எனக்காக
என்வாழ்வில் தேவதையாக என்னவளாக நீ..!
என்றும் புதியவள்
என் வாழ்வின் இனியவள்
மகிழ்ச்சியின் எல்லையவள்
தந்தை எனும் கம்பீரத்தை கொடுத்தவள்
மகளாக நீ..!
இப்படி எண்ணிலடங்கா
சொந்தங்களாக எல்லோரின்
வாழ்விலும் இருக்கிறாய் பெண்ணே..!
சுற்றும் பூமியும் ஒரு நாள்
நின்று போகலாம் பெண்ணே
நீ ஓய்வெடுப்பது எப்பொழுது..!

மறந்துவிடாதே காலனே
பெண்ணானவள் உனக்கு நிகரானவள்..!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 307
Post by: Sun FloweR on March 06, 2023, 11:46:27 PM
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
இவைகளை அணிகலனாய்
பூண்ட பெண்மை அன்று...
வீரம் உறுதி துணிவு தன்னம்பிக்கை
இவைகளை கவசமாய்
பூண்ட பெண்மை இன்று...

அடுப்பூதிய பெண்கள் அன்று..
ஆகாயம் தாவிய பெண்கள் இன்று..
பிறர் காணா வண்ணம் முகம் மறைத்த மாதர் அன்று...
நிலமெங்கும் முத்திரை பதித்த மாதர் இன்று..

வாசலைக் கூட தாண்டிடாத
வஞ்சியர் அன்று...
விண்வெளியில் தடம் பதித்த வஞ்சியர் இன்று...
வீட்டை மட்டும் பெருக்கிய
கைகள் அன்று...
உலகையே சுத்தமாக்கும்
கரங்கள் இன்று..

அடக்கி வைத்த மானுடர் முன்பு,
எல்லையற்ற சக்தியாய்
எல்லாத் துறைகளிலும்
வியாபித்து,
அவளன்றி ஓர் அணுவும் அசையாது
என அண்டம் போற்றிட வாழ்பவள்...
அவளே அன்னை...
அவளே அகிலம்...
அவளே அனைத்தும்..
அவளே பெண்...!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 307
Post by: அனோத் on March 07, 2023, 02:18:50 AM
*******பெண்  எனும் பேராற்றல்******* 


பெண் இவள் !

தன் சரீரம் சொல்லும் சரித்திரக் கதையை
மென் கருவறையில் சுமந்திங்கு
பொன் - உயிரொன்று பெற்றெடுப்பாள்.......

பெண் இவள் !

தன் சொரூபம் உதிரத்தால் நனைந்தாலும்
சுவர்க்கம் வேண்டா வாழ்வை
விரும்பி ஏற்றுக்  கடந்திடுவாள் ............

பெண் இவள் !

தன் சர்வமும் மென் சதையால் பிறந்தாலும்
பல சோதனைகள் தன் வாழ்வில் வந்தாலும்
புன் சிரிப்பொன்றால் வாழ்வை எதிர்கொள்கிறாள் ........

பெண் இவள் !

தனி மனித சுதந்திரம் வேண்டியோர்
போராட்டம் மண்ணில் அரங்கேறியும்
தன் மன அழுத்தங்களை சொல்லவோர்
முயற்சி எடுக்காமல்  தனித்து விடுகிறாள்  .......

பெண் இவள் !

தரணி எங்கும் சாதனைகள் தொடர்ந்தாலும்
தடம் மாறும் உலகில் - பெண் சோதனைகளை
-நிதம் எதிர்கொண்டுதான்  வருகிறாள்...........

பெண் இவள் !

தன்னுயிர் கொடுத்தேனும் ஓயாத சக்கர
-மான   இவள் ஓயாத அலைகளையே
உழைப்பால் மிஞ்சும் ஆற்றல் ஆகிறாள்  ...........

பெண் இவள் !

உயிர் கொடுத்து உயர்கண்ட இவள்
நிமிர் கொண்டு நடக்கும் காலமதில்
திமிர் கொண்ட மானுடர் அடக்கும்
விதியினில்  சிக்கியும் விடுகிறாள் ..........

பெண் இவள் !

இப்படி பல கேள்விகள் கொண்ட
மங்கையிவள்   - அதன்
விடைகளை ஏனோ அறியாமலே
அமைதி ஆகும் பேதை இவள் ......

மானிட குலம் போற்றும் மங்கையிவர்
மானத்தையும் மனிதத்தையும்
மாணிக்க செல்வமெனக் கொண்டு
சாதனைப் பெண் இவள்,  தினத்தை  - இனி
 தினம் தினம் கொண்டாடுவோம் ........
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 307
Post by: IniYa on March 07, 2023, 10:39:53 AM
பிரபஞ்சம் இதை சுற்றியே நம் வாழ்க்கை , ஆனால்
பிரபஞ்சம் என்பது பெண்மையை
குறியிடலாம், கடவுள் பிரபஞ்சத்தின் தாய்!

அவள் என்ற சொல்லை தாண்டி , வாழ்க்கை பயணத்தில் பல பரிமானங்களின் நம்முடன அவளே !
நம்மை பூமிக்கு அறிமுகப்படுத்தும் ஓர் அழகி அவளே !
குடும்பத்தின் ஆதாரம் தாய், நமது  லட்சியமும் அவளே!

வேதங்களில் ஒரு கோட்பாட அமைத்தது ஒரு பெண் அவளே!
தனி தன்மைகளும் ஒவ்வொரு சமூகத்திற்கும், நாட்டிற்கும் ஒரு அடையாளம் அவளே!


இழப்புகளின் வலியோடு, இடை செருகும் பழிகளோடு , என்று நேர் நோக்கு பார்வையோடு அவளே !
பல வடிவமாக நம்மிடம் தோன்றி
ஒரு சேர நிற்பதுவும் அவளே !

பண் முகம் கொண்ட திறமைகள், தியாகங்கள் எல்லாம் அவளே!
உன் பாதை மீதான முட்களை கூட
பூவாக மாற்றுபவள் அவளே!

நீ போகாத இடம் கால் பதிக்காத தடம் எவ்வுலகிலும் இல்லை,
அவளே உன்னை இப்பிறவியில் காண கண்கோடி இல்லை!!
நீ மகள் தங்கை தாய் மனைவி தோழி முதியவள் என்று பல வார்த்தைக்குள் அடங்காத பிரபஞ்சத்தின் சக்தி அவளே!!

வேறென்று மண்ணைப் பிடித்து குடும்ப பாரம் வேலை பழு சுமக்க மட்டுமே அவளே!
பிற்போக்கு வாத ஏகாதிபத்தியின்
வித்துகளை கற்றுக் கொடுக்க
பாரதியாக பெரியாராக கண்ணதாசனாக காந்தியாக இருப்பதும் அவளே!

முகம் மாறும் நிறம் மாறும் மோகம் மாறும் ஆசை மாறும் ஆனால் அன்பிற்கும் உண்டோ அடைகும் தாழ் அவளே!
பெண்மை பற்றி ஓர் வரியில் எழுதி விடலாம் , ஒரு வரியில் எழுத அவள் வெறும் கவிதை இல்லை ஒரு மாகாவியத்தின் முத்து, என்றும் அலையாத அழிக்க முடியாத பிறப்பிடம் அவளே!
எதற்கும் யாருக்கும் எங்கும் அஞ்சோம் அவளே!

பெருமை கொள்கிறேன் மாதராய் பிறந்திடவே!!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 307
Post by: VenMaThI on March 07, 2023, 07:03:40 PM


நீரின்றி அமையாது உலகு
பெண்ணே நீ இன்றியும் இயங்காது உலகு

பிறந்த வீட்டின் இளவரசியே
புகுந்த வீட்டின் இல்லத்து அரசியே
என்றுமே நீ இந்த பூமியின் அரசியே

ஆணுக்கு பெண் நிகரா என கேட்டவர் ஆச்சர்யப்பட்டு நிற்க
அவளின்றி நான் இல்லை,
என்று கூறவைப்பவள் நீ...

வேலைக்கு செல்கிறேன் என்று கூறி
ஒய்யாரமாய் ஓய்வெடுப்பவர்
எத்துணை ஏணிகள் வைத்தாலும
எட்டிப்பிடிக்க முடியாதடி உன் பணிச்சுமையை....

மனதில் கோடி வலி இருந்தாலும்
புன்முருவளை போர்வையாய் போர்த்தி
வலியை மறைத்து சிரிப்பாவளும் நீ
பிறரை மனவேதனை மறந்து சிரிக்க வைப்பவளும் நீ
கோடி கொடுத்தாலும் போதாது பெண்ணே
மனதில் நீ தரும் நிம்மதிக்கு ஈடாக


உலகின் பெரிய வலியாம்
மறுபிறவி எடுக்கும் மகப்பேரு காலம்
பக்குவமாய் பத்து மாதம் கருவில் சுமந்து
பேருகால வலியை பொறுக்கும் உனக்கு உலகில் வேறெந்த வலியும் பெரிதல்லவே..

முடியாது தெரியாது என்ற வார்த்தைகளை
தன் அகராதியில் இருந்து அகற்றிடுவாள்
தேவை என்ற வார்த்தையே
தேவை இல்லை என்று நினைப்பாள் .

எடுத்த காரியமனைத்தும்
அனைவரின் எண்ணத்திலும் நிற்கும்படி
கச்சிதமாய் செய்து முடிப்பாள்
மன்னவன் அவள் உடனிருப்பின் மகிழ்ச்சியாய்
மங்கையவள் தனித்திருப்பின் வீழாது வாழ்வாள் எழுச்சியாய்

மெழுகுவர்த்தியாய் உருகவும் செய்வாள்
தீண்டுபவரை உருக்கவும் செய்வாள்
சுகங்களை சுமையாய் கருத்துவோர் மத்தியில்
சுமையை கூட சுகமாய் தாங்குவாள்

மழலையானாலும் அண்டமே ஆளும் அரசனானாலும்
அம்மாவின் மடி சாய்வதை விட
சொர்கம் எதுவும் உண்டோ

உலக அகராதிகளில் அதிக அர்த்தங்கள் பொருந்தும் ஒரு சொல். பெண்

அன்பின் அரியனையே
ஆற்றலின் ஆதிக்கமே
இணையற்ற இன்பமே
ஈடில்லா ஈகையே
உறவின் உன்னதமே
ஊக்கத்தின் ஊற்றே
எழுட்சிகளின் எரிமலையே
ஏற்றிவிடும் ஏற்றமே
ஐந்திணையும் ஐம்பொறியுமானவளே
ஒப்பில்லா ஒருமையே
ஓங்கும் ஓங்காரமே
என்றுமே பார் போற்றட்டும் நின் பெருமையே......
...



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 307
Post by: SweeTie on March 07, 2023, 09:45:47 PM
ஆணுக்கு  பெண் அடிமையில்லை   
அடுப்படியே   அவள்    தஞ்சமில்லை
உணர்ச்சிகள்  அற்ற  சடலம் இல்லை  அவள்
வாழத் துடிக்கும்   உணர்வுள்ள  மனிதி

துள்ளித் திரியும்   அவள் வயதில்
பள்ளிப் படிப்பின்றி   அலையவிட்டாய் 
அடுக்களையே உன் வீடு
பிள்ளை பெறுவதே உன் வேலை  என 
முடக்கிவைத்தாய்   அவள்   உணர்ச்சிகளை 
 
விந்தை மனிதா  நீ அறிவாய் 
வீட்டுக்குள்ளே   அன்று   பூட்டி வைத்தாய் 
ஒன்றும் அறியாதவள் என்று தீட்டி வைத்தாய்
தன்  நாட்டுக்குள்ளே   மட்டும் இன்றி   அகிலம்
போற்றும்  அவள் தலைமுறை  இன்று

பத்தும்   அறிவாள்  பலதும் தெரிவாள்  அவள்
கரண்டி  பிடிக்கும் கைகள்  கணினி பிடிக்கிறது
பித்துபிடித்த     சமூகம்   அடிமைத்   தளையிட்டு; அவள்
செத்து  மடிந்தாலும்  கூட  கண்மூடி  நின்றது  அன்று
 சட்டம்  தெரிந்தவள்  சம உரிமைப்  போராட்டம்  இன்று 

அவளுக்கென்று  ஒரு தினம்  இன்று     
கள்ளிப்பால்  குடித்தவள்  அறிவுப்பால்  குடிக்கிறாள்
நாளைய  அவள்   சமுதாயம்   நலம்பெறவேண்டுமென
நாமும்  வாழ்த்துவோம்   அவளுடன் கூடவே !

 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 307
Post by: MoGiNi on March 08, 2023, 01:14:05 AM
ஆண்டவன் படைத்திட்ட
அரிய உயிர் எனலாமா ?
ஆக்கமும் அழிவும்
இவள் எனச்சொல்லலாமா?
மண்ணுயிர் கொண்ட
பெண்ணுயிர் எனலாமா?
பூவுலகில் பிறப்பெடுத்த
பெண்தெய்வம் எனலாமா..?

மானம் கெட்ட உலகில்
மாதருக்கு ஒருநாளென
உன்னை மகுடம் சூட்டும்
மடையர்கள் மத்தியில்
மகிழ்ச்சியை தேடாதிருப்பாயானால்
அந்நாளெள்லாம் உனதுநாளே...

கணக்குப் பார்த்து
கழுத்தில் தாலிகட்டும்
காரியக்காரர்களை
கண்டுணர்ந்து மறுத்தாயானால்
அந்நாளெல்லாம் உன் நாளே...

வெறும் போதையென
பார்வையிலே இச்சையுறும்
காதெலெனும்
கண்கட்டி வித்தையை
தவிர்த்துவிடு
எந்நாளும் உன் நாளே...

மார்தட்டி பேசும்
உன் வீரத்தை பாராது
உன் அசையும்
தேகத்தை இச்சையுறும்
காமுகரை
கொச்சையாக திட்டிவிழி
அந்நாளும் உன்நாளே...

பெண்ணாக பிறந்துவிட்டால்
உண்ணாது உழை
உறங்காமல் அசை
மறுக்காமல் கொடு
மயங்காமல் இரு
ஆசைககளைத் துற
இச்சை கொள்ளாதே
ஈதல் மட்டுமே உன் கடமை
ஊருக்கு அடங்கு
எதிர்த்து பேசாதே
ஏனென்று கேட்காதே
ஐயம் கொள்ளாதே
அஃடதமாய் இரு
எனும் அடிமைத்தனத்தின்
விலங்கினை அறுத்துவிடு- பெண்ணே
எந்நாளும் நம்நாளே...