FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: Augustin on August 27, 2023, 11:42:09 AM

Title: முருங்கைகீரை தோசை
Post by: Augustin on August 27, 2023, 11:42:09 AM
முருங்கைகீரை தோசை 😇

தேவையான பொருட்கள் :
தோசை மாவு, முருங்கைகீரை, வெங்காயம், மிளகு தூள் .

செய்முறை :
முதலில் நம்மிடம் உள்ள முருங்கைகீரையை முடிந்த வரை சிறிது சிறிதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும் , உங்களுக்கு தேவையான அளவு பொடிதாக நறுக்கிய வெங்காயத்தையும் அதனுடன் சேர்க்க வேண்டும் பின்பு சிறிது மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து Mix செய்ய வேண்டும் 👍

நாம் அன்றாடம் செய்யும்
தோசையை போலவே மாவினை ஊற்றி விட்டு அதன் மேலே நாம் வைத்திருக்கும் (முருங்கைக்கீரை+வெங்காயம்+மிளகுதூள்) கலவையை தோசையின் மேலே அடர்த்தியாக தூவி விட வேண்டும் ,சிறிது நேரம் கழித்து தோசையை திருப்பாமல் புத்தகம் மடிப்பது போன்று மடித்து நான்கு,ஐந்து முறை புரட்டி எடுத்தால் முருங்கைகீரை தோசை ரெடி 👍 இப்படி சாப்பிடுவதால்
முருங்கைகீரையின் சத்துகள் முழுவதும் நமக்கு கிடைக்கும், இதற்கு சட்னியோ,சாம்பாரோ எதுவும் தேவைப்படாது 😊