Author Topic: ஸ்வீட் அண்ட் ஹாட் பாப்கார்ன்  (Read 252 times)

Offline kanmani


என்னென்ன தேவை?

பாப்கார்ன் முத்துகள் - 2 கப் (பாப்கார்ன் செய்வதற்கென்றே உள்ள முத்துகள் டிபார்ட்மென்ட்டல் கடைகளிலும், பொரி கடைகளிலும் கிடைக்கும்), சர்க்கரை - ஒரு கப், பட்டைத் தூள் - சிறிது, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

கார மசாலா பாப்கார்னுக்கு...

மஞ்சள் தூள், மிளகுத் தூள் (அ) மிளகாய்த்தூள் - சிறிது, உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

பாப்கார்ன் முத்துகளை சிறிது எண்ணெயில் பிசறி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து, நன்கு சூடானதும் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சிறிது சிறிதாக முத்துகளை போட்டு மூடிவைத்து பொரித்து எடுக்கவும். மூடி கனமாக இருக்க வேண்டும். இது படபடவென்று அழகாக பொரிந்து விடும். மீண்டும் வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு உருக்கி, பழுப்பு நிறமானவுடன் பட்டைத்தூள் சேர்த்து, அதில் பொரித்து வைத்த பாப்கார்னை போட்டுக் கிளறி எடுக்கவும். விருப்பப்பட்டால் உருண்டைகளாகப் பிடிக்கவும்.

காரம்...

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மஞ்சள் தூள், உப்பு, மிளகுத் தூள் அல்லது மிளகாய்த்தூள் சேர்த்து பாப்கார்ன் முத்துகளை போட்டு மூடி வைக்கவும். நன்கு பொரிந்த கார மசாலா பாப்கார்ன் ரெடி.

குறிப்பு:

சோளத்தில் புரதச்சத்து, இரும்பு, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, பி என்று பல சத்துகள் இருக்கின்றன.