Author Topic: ~ பப்பாளி - இஞ்சி சூப் ~  (Read 1411 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218399
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பப்பாளி - இஞ்சி சூப் ~
« on: September 27, 2013, 01:58:07 PM »
பப்பாளி - இஞ்சி சூப்




தேவையான பொருட்கள்வை:
பப்பாளி பழம்- சிறியது (பாதி), 
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
வெங்காயம் - ஒன்று
காய்கறி வேக வைத்த தண்ணீர் - 3 கப்,
மிளகுத்தூள் - காரத்துக்கேற்ப,
நறுக்கிய கொத்தமல்லி தழை,  கிரீம் - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

• வெங்காயம், பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• இஞ்சியை தோல் சீவி கொள்ளவும்.

• கடாயில் எண்ணெயை சூடாக்கி வெங்காயம், இஞ்சி, மிளகுத்தூள், பப்பாளி சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்தெடுக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் காய்கறி வேக வைத்த தண்ணீருடன் இந்தக் கலவையை சேர்த்து கொதிக்க வைத்து, உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி சூப் கப்பில் ஊற்றவும்.

• கடைசியாக அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.