Author Topic: யோகா  (Read 1595 times)

Offline Anu

யோகா
« on: March 13, 2012, 02:16:08 PM »
இப்போதைய சமுதாயத்தில் பரபரப்பு, மனஅழுத்தம் என்று எத்தனையோ விடயங்களை அன்றாடம் சந்திக்க வேண்டியிருக்கிறது. இவற்றிற்கான தீர்வு என்ன
என்பது பற்றி சிந்தித்தால் விடாத இறை சிந்தனை மட்டுமே என்று ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு தொடர்ந்து இறைசிந்தனையில் திளைப்பதால் நம்முடன் ஒரு சக்தி உடன் இருப்பது போன்ற உணர்வை பெறுகிறோம். மனது கடினமான நிலையிலிருந்து விடுபடுகிறது.

உடலும், மனமும் ஒன்றுக்கொன்று மிகநெருங்கிய தொடர்பில் இருக்கிறது. மனதில் குழப்பமும், நெருக்கடியான எண்ணங்களும் சூழ்ந்து கொள்ளும் போது உடலானது இயற்கையாகவே சோர்ந்து போகிறது. தொடர்ந்து இது போன்ற நிலை எழும் போது ஒருகட்டத்தில் அது நோயாகவே மாறிப்போகிறது.

இப்போதும் கூட ஒரு நிகழ்வை காணமுடியும். மனப்பிறழ்ச்சி உள்ளவர்கள் என்று கூறப்படும் சாலையில் திரியும் நோயாளர்களை கவனிக்க யாரும் இருப்பதில்லை. அவர்களுக்கு நேரத்திற்கு தகுந்த உணவும் இருப்பதில்லை. ஆனாலும் அவர்கள் பெரிதாக நோயால் பாதிக்கப்படாதவர்கள் போல் தான் இருக்கின்றனர். இதற்கு காரணம், அவர்கள் மனதிற்கு பெரிதாக சிந்திக்கும் திறன் இருப்பதில்லை என்பதால் தான் அவர்கள் அவ்வாறு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அனைத்து திறனும் படைத்த சாதாரண வாழ்க்கையில் ஈடுபடும் சராசரி மனிதன் எப்போதும் இயல்பான அமைதியான மனநிலையிலும், நோயற்ற உடலை பெறுவதற்கும் ஒரே வழி யோகசானங்களை பயில்வதும், மனதை செம்மைப்படுத்தும் தியானங்களை கற்றுக் கொள்வதும் தான் என்பதே எப்போதும் தீர்வாக இருக்கிறது.

யோகாசனம் என்பது ஒரு அற்புதப் பயிற்சி. மனோதத்துவப்பயிற்சி என்றும் சொல்லலாம். மனநிம்மதியை இழந்து விடாமல் வாழ்க்கையை அமைதியாகவும், ஒரு ஒழுங்குடனும் சீரான மனநிலையில் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. தவிர்க்க முடியாத நிலையில் உடலில் தோன்றும் நோய்களை அகற்றும் அற்புத மருத்துவ விஞ்ஞானமாகவும் இது இருக்கிறது. கூடவே மனதில் எழும் கெட்ட எண்ணங்களை அகற்றி, மனதை ஒரு நிலைப்படுத்தும் தன்மையும் யோகாசனத்திற்கு உண்டு.

யோகம் என்ற சொல்லுக்கு தமிழில் சரியான பொருள் ஒருங்கிணைத்தல் என்பது. ஆசனம் என்றால் உடலை அமர்த்தும் நிலை. மனிதன் தன்னுள் நிறைந்து கிடக்கும் சக்தியை ஆற்றலை திறனுடன் கண்டு கொள்ளவும், அந்த ஆற்றலை அடக்கியாளக் கற்றுக் கொள்வதும் தான் யோகப்பயிற்சிகளின் மூல நோக்கம். இதே வேளையில் இந்த பயிற்சிகளை செய்யும் போது மனதையும் ஒரு நிலைப்படுத்த முடிகிறது. மூன்றாவதாக, இந்த பயிற்சிகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய்களை வராமல் தடுத்து விடுகின்றன. யோகசனக்கலை என்பது இந்திய நாட்டில் தான் முதலில் தோன்றியது. முனிவர்களும், சித்தர்களும் தங்களது தியான நிலையில் உறுதியுடனும், உடல் நோய்வாய்ப்படாமலும் இருக்க இந்த கலையை கண்டறிந்தனர்.

தமிழ்மருத்துவமான சித்தமருத்துவத்தின் அடிப்படையில் முக்கிய பங்கை யோகக்கலை வகிக்கிறது. சித்தர்கள் ஆயிரக்கணக்கில் இந்த உலகில் சூட்சுமாக இன்றும் இருந்து வருகின்றனர் என்று சொல்லப்பட்டு வருகிறது. இவர்களில் திருமூலர், ராமதேவர், கும்பமுனி, இடைக்காடர், தன்வந்திரி, வான்மீகி, கமலமுனி, லோகநாதர், மச்சமுனி, கொங்கணர், பதஞ்சலி, நந்திதேவர், போதரு, பாம்பாட்டி சித்தர், சட்டை முனி, சுந்தாரனந்த தேவர், குதம்பைச்சித்தர், கோரக்கர் ஆகிய பதிணென் சித்தர்கள் தமிழ் மருத்துவத்திற்கு பெரும்பங்கை அளித்திருக்கிறார்கள்.

இவர்கள் தான் யோகாசனம் மற்றும் நாடிசுத்தி பிராணயாமம் ஆகியவற்றின் மனித உடலில் தோன்றும் நோயை போக்கவும், நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்று கண்டறிந்து மனித குலத்திற்கு அதற்கான சூட்சுமத்தை சொல்லியும் வைத்தார்கள். பதஞ்சலி முனியின் யோகசூத்திரத்தில், " மனதையும், மனதில் எழும் எண்ணங்களையும் நன்கு கட்டுப்படுத்துவதே யோகம். இந்த பயிற்சியில் ஒருவர் முழுமை பெறும் போது அவர் தமக்குரிய தூய்மை¬யும், பிரகாசமும் பொருந்திய நிலையில் நிறுத்தப்படுகிறார். மற்ற வழிகளை பின்பற்றும் போது மனநிலையில் ஏற்படும் விபரீத உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறார்" என்று சொல்லப்பட்டுள்ளது.

யோகாசனங்கள் உடலை நோயின் பிடியில் விழாமல் தடுத்து நிறுத்துகின்றன. தற்போது உலகம் முழுவதும் யோகசனத்தின் பலன்கள் உணரப்படுவதால் மேற்கத்தியர்களும் இந்த கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். யோகசனத்தை கற்றுக் கொள்ள உடல் நிலை இடம் தராத நிலையில் உள்ளவர்கள் சாதாரண அமர்ந்த நிலையில் இருந்த படி தியானிக்க கற்றுக் கொண்டு உடலையும், மனதையும் சாந்தப்படுத்திக் கொள்கின்றனர். கடுமையாக உடலை வளைத்து பிரயாசைப்பட்டு செய்ய தேவையில்லாத நிலையில் எளிதாக செய்த பத்மாசனம் போன்ற எளிதான உட்காரும் நிலை ஆசனங்களையும், படுத்தபடி தியானிக்க சவாசனத்தையும சொல்லியிருக்கிறார்கள் முன்னோர்.

இது பற்றி இனி இங்கு விரிவாக காணலாம். யோகாசனங்களுக்கு போகும் முன்பாக மனதை ஒழுங்குபடுத்துவது முக்கியமானது. அனைத்து விதமான கெட்ட பழக்கங்களையும் விட்டொழிப்பதும் முக்கியம். தொடக்க நிலையில் தியானத்தை கற்றுக் கொள்வது பற்றி பார்க்கலாம். பிறகு யோகாசனத்தின் சூரியநமஸ்காரம் முதல் நௌலி, ஒட்டியானா வரையிலான ஆசனங்களை கற்கலாம்.

தியானம்

எதிலும் ஒருங்கிணைப்பு உள்ளவர்களுக்கு எதுவுமே தியானம் ஆகி விடுகிறது என்பது தான் யதார்த்தம். இங்கு சுலபமாக தியானம் செய்யும் முறை குறித்து ராமகிருஷ்ண மடத்து துறவியான சுவாமி ஹர்ஷானந்தர் சொல்வது பற்றி பார்க்கலாம்." மதவித்தியாசம் இல்லாமல் எந்த தெய்வத்தையும் தியானிப்பதன் மூலம் இறைக்காட்சியை பெற்று முடிவில் மோட்சத்தை பெற முடியும் என்று பக்தியோகத்தில் கூறப்படுகிறது. எந்த தெய்வத்தை நாம் தியானிக்க விரும்புகிறோமோ அதனை இஷ்ட தெய்வம் என்கிறோம். தியானிக்க நினைக்கும் சாதகன் தனது மனதிற்கு இயைந்த இஷ்ட தெய்வத்தை எண்ணி தியானிக்கலாம். அந்த தெய்வம் என்பது அவனது குலதெய்வமாகவோ அல்லது வேறெந்த தெய்வமாகவோ இருக்கலாம்.

சிலர் தனக்கான குருவை மானசீகமாக எண்ணியிருப்பார்கள். அவர்கள் அந்த குருவிடம் தீட்சை பெற்று தியானத்தை தொடங்கலாம்.

தியானம் செய்யும் முறை

1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குல தெய்வமாகவோ உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.

2. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காலை 5 அல்லது 6 மணி. மாலை 6.30 அல்லது 7.30 மணி) முடிந்தவரை குறிப்பாக அந்த நேரத்திலேயே தியானம் செய்ய முயற்சி செய்யவும்.

3. வீட்டில் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜையறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜையறை இல்லையெனில் இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து மற்றும் முதுகெலும்பு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.

5. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்த உதவும்.

6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்து செல்லவும். அங்கு பன்னிரெண்டு இதழ்கள் கொண்ட சிவப்பு தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அதில் உயிருணர்வுடன் அமர்ந்திருப்பதை எண்ணவும்.

7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகி பிரார்த்திக்கவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.

8. ஐந்து, பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.

9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் "ராம, ராம" என்று தொடர்ந்து ஜெபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 இன் மடங்காக இருக்க வேண்டும்.

10. தியாத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க வேண்டாம். தொடர்ந்து சிறிது நேரம் அமர்ந்து மனதுக்கு அமைதி தரும் ஆன்மீக புத்தகங்களை படியுங்கள்
« Last Edit: March 16, 2012, 01:30:34 PM by Anu »


Offline Anu

Re: யோகா
« Reply #1 on: March 16, 2012, 01:47:32 PM »
யோகா-உடற்பயிற்சி வேற்றுமை:

நோய்-நொடிகள் அணுகாமல் நீண்ட நாட்கள் வாழ நமது முன்னோர்கள் காட்டிய எளியவழியே யோகாசனங்கள். ஆசனங்களை தகுந்த பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் கசடற கற்று தேர்ந்தால், 100 சதவீதம் பலாபலன்கள் கிட்டும். நிறைய பேர் உடற்பயிற்சியையும், யோகாவையும் போட்டு குழப்பிக் கொள்கிறார்கள்.

* உடற்பயிற்சி என்பது உடலை அசைத்து திருகி செய்யவேண்டியது. ஆனால் யோகாசனம், அப்படியல்ல.

* `நோ பெயின், நோ கெயின்' என்கிற உடற்பயிற்சி சித்தாந்தத்துக்கு நேர்மாறாக, வடிவமைக்கப்பட்டதுதான், யோகாசனங்கள். இதற்காக உடலை வருத்த வேண்டிய அவசியமில்லை.

* உடற்பயிற்சியால் உடல் மட்டுமே சீராகும். ஆனால் யோகாவில் உடல், மனம், ஆன்மா  உள்ளிட்ட மூன்றுமே சீராகும்.

* உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ், பியூட்டி பார்லர் எல்லாமே தற்காலிக அழகுக்காக வும், வனப்புக்காகவும் மட்டுமே பயன்படுகிறது. மனதிற்கு ஒரு நன்மையும் செய்வதில்லை.

யோகாவின் பயன்கள்:

 
* தேகத்திற்கு வந்த நோய்களைப் போக்கியும் இனி நோய்கள் வராமல் காத்தும் ஒருவருக்கு உகந்த உன்னத உடலை உருவாக்குகிறது.

* உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் தூய்மைப்படுத்தி அது தன் பணிகளை அருமையாகவும் திறமையாகவும் அயராமல் செயல்படுத்தத் தூண்டுகிறது.

* சாதாரணமாகச் செயல்படும் ஒருவனுடைய செயலாற்றலை மிகுதிப்படுத்துவதுடன் உடல் நலமும், மனவளமும் பெற்று வாழ உற்சாகப்படுத்துகிறது.

* அன்றாடம் உடலில் உண்டாகும் கழிவுப் பொருட்களை வெகு விரைவாக வெளிப்படுத்தவும், உடலைக் கசடற்ற முறையில் வைத்துக் காக்கின்ற சக்தியினையும் உடலுக்குத் தருகின்றது. அதாவது நரம்புகள், மூளை, நுரையீரல், இதயம், ஜீரண உறுப்புகள் திறமையுடன் வேலை செய்கின்ற ஆற்றலை அளிக்கிறது.

* நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்குத் துணை புரிகிறது. மனதாலும், செயலாலும், உயர்ந்த வாழ்வு வாழத் தூண்டுகிறது. இவ்வாறு தேகநலனைப் பற்றியும், சிறந்த ஆரோக்கிய வாழ்வு முறையைப் பற்றியும் யோகமுறை உடற்பயிற்சி முறைகள் நிறைந்து செயல்படுகின்றன.
 
*யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.


   * யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்!

 
  * நாம் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கி செல்லும் ஆற்றலை நமக்கு கொடுக்கிறது யோகா பயிற்சி. தினமும் தவறாமல் பயிற்சி செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும். 
 
* யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள். ஆனால் அது மிகவும் தவறு. உடல் எடை குறைவு மற்றும் உடல் கட்டுக்கோப்புக்கு யோகா மிகவும் அத்தியாவசியமானது. மேலும் செயற்கையை தவிர்த்து, எவ்வித பிரச்சினையும் இல்லாமல், இயற்கையாக உடல் எடை குறைய யோகா மட்டுமே சிறந்த வழி.
 
* உடல் அவயங்கள் எல்லாம் விறைப்பாக இருக்காமல், எளிதில் செயலுக்கு இணங்கும் தன்மையில் இருந்திட வழி அமைகிறது. 
 
* பசி நன்றாக எடுக்கிறது. உடலில் பற்றிக் கொள்கின்ற நோய்கள் தொடக்க நிலையிலேயே முறியடிக்கப்படுகின்றன.
 
* மிகவும் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல்கள் மற்றும் மூளைப்பகுதிகள் செழிப்படைந்து சிறப்புடன் பணியாற்ற முடிகிறது.   
 
* ஆசனங்களை முறையோடு செய்து வந்தால் உடல்வளம் பெறுவதுடன், மிகவும் சுறுசுறுப்போடும் விரைவாகவும் அன்றாட வாழ்வில் இயங்க முடியும். 
 
* முதுகெலும்பு எளிதில் வளைந்து இயங்கும் ஆற்றலைப் பெறுவதால், எதனையும் சிறப்பாகப் பணியாற்றும் வகையில் உடலில் ஒத்துழைப்பு உயர்ந்த அளவில் கிடைக்கிறது.
 
* தங்கு தடை இல்லா இரத்த ஓட்டம் உடலெங்கும் இயல்பாக ஓடி, உடலைப் பூரணப் பொலிவு பெற வைக்கிறது. 
 
யோகாசனம் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டியவை:
 
* நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.   
 * தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்கக்கூடாது. பழக பழக வந்துவிடும்.
 
 *  யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள்ளவும்.
 
 * ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து விட்டு அடுத்த ஆசனத்தை தொடரலாம்.
 
 * தியானம் செய்த பின் எவ்வாறு சாந்தியோகம் முக்கியமோ அதே போல யோகாசனம் செய்த பின் சவாசனம் மிக முக்கியமாக செய்யவும்.
 
 *  யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய்யக்கூடாது. காலை சூரிய ஒளிபட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.
 
 * சில முக்கிய ஆசனங்கள் அதிக நேரம் பயிலக்கூடாது.

 
 
 
 
« Last Edit: March 16, 2012, 02:02:06 PM by Anu »


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: யோகா
« Reply #2 on: March 19, 2012, 11:57:57 PM »
nnru anuma
                    

Offline Anu



Offline Anu

யோகா - சலபாசனம்
« Reply #4 on: May 17, 2012, 02:33:34 PM »
<a href="http://www.youtube.com/v/wBSQIJ2u3fs" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://www.youtube.com/v/wBSQIJ2u3fs</a>


Offline Anu

யோகா - சூரிய நமஸ்காரம்
« Reply #5 on: May 17, 2012, 02:34:54 PM »
<a href="http://www.youtube.com/v/zVrj2bDnddw&amp;feature=relmfu" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://www.youtube.com/v/zVrj2bDnddw&amp;feature=relmfu</a>


Offline Anu

யோகா -முத்திரைகள்
« Reply #6 on: May 17, 2012, 02:38:21 PM »
<a href="http://www.youtube.com/v/ZhPG48y8S5I&amp;feature=player_embedded" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://www.youtube.com/v/ZhPG48y8S5I&amp;feature=player_embedded</a>


Offline Anu

யோகா -திரிகோண ஆசனம்
« Reply #7 on: May 17, 2012, 02:40:20 PM »
<a href="http://www.youtube.com/v/Z2oriFzBmYs&amp;feature=relmfu" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://www.youtube.com/v/Z2oriFzBmYs&amp;feature=relmfu</a>