Author Topic: உத்தியோகம் புருஷ லட்சணம்  (Read 4046 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உத்தியோகம் புருஷ லட்சணம்



ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் இடம் உத்தியோகம் தொழிலைக் குறிக்கும் இடம் ஆகும். இன்றைய காலக் கட்டத்தில் உத்தியோகம் புருஷ லட்சணம் ஆகும். யார் யாருக்கு அரசாங்க உத்தியோகம் அமையும் அல்லது சொந்தத் தொழிலா என்பதைப்பற்றி பார்ப்போம்.
 
பத்துக்கு உடையவனைச் சூரியனும், சந்திரனும் பார்த்தால் அரசாங்க உத்தி யோகம் பார்ப்பான்.
 
பத்தாம் அதிபனோடு சூரியனும், சந்திரனும் கூடினாலும் அரசாங்கம் உத்தியோகம் பார்ப்பான்.
 
பத்தாம் அதிபன் சூரியன் வீட்டில் அல்லது சந்திரன் வீட்டில் நின்றால் அர சாங்கம் உத்தியோகம் பார்ப்பான்.
 
பத்தாம் அதிபன் செவ்வாயோடு சேர்ந்தால் ராணுவத்தில் உத்தியோகம் பார்ப்பான்.
 
பத்தாம் அதிபன் புதனோடு சேர்ந்தால் ஜாதகன் தன் மனைவியின் சம்;பாத்தியத்தினாலோ, புதல்வியின் சம்பாத்தியத்தினாலோ வாழ்க்கை நடத்துவான். அல்லது கணக்குப் பிள்ளையாக இருப்பான்.
 
பத்தாம் அதிபன்; குருவோடு சேர்ந்தால் சாஸ்திரபுராணங்களை உப தேசிப்பவனாகவோ அல்லது ஒரு பெரிய ஆசிரியனாகவோ இருப்பான்.
 
பத்தாம் அதிபன் சுக்கிரனோடு சேர்ந்தால் கிட்டத்தட்ட மேலே உள்ள பலன் கள்தான் நடைபெறும்.
 
பத்தாம் அதிபன் சனியோடு சேர்ந்தால் திருடனாய் இருப்பான். பத்தாம் அதிபனுடன் செவ்வாய், இராகு கேதுக்களும் கூடி ஆறில் நின்றால் தன் மனைவியின் சம்பாத்தியங்களைக் கொண்டு வயிறு வளர்ப்பவனாய் இருப்பான்.
 
சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி இவ்வைந்து கிரகங்களும் ஒன்றுகூடி நின்றால் மரம் வெட்டி விற்பான்.
 
செவ்வாய், குரு, சுக்கிரன் இம்மூவரும் ஒன்றுகூடி நின்றால் கணக்கு எழுதிப் பிழைப்பான். துக்கம் உள்ளவனாய் இருப்பான்.
 
செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு இவ்வைந்து கிரகங்களும் ஒன்று கூடி நின்றால் மந்திர வித்தைகளைச் செய்து வயிறு வளர்ப்பான்.
 
இரண்டு அல்லது ஒன்பது அல்லது பதினோராம் அதிபதி குருவாக இருந்தால் சகல பாக்கியங்களும் உடையவனாக இருப்பான்.
 
இரண்டு அல்லது ஒன்பது அல்லது பதினோராம் அதிபதி சுக்கிரனாக இருந் தால் நிலபுலன்களை மிகுதியாக உடையவனாக இருப்பான்.
 
இரண்டு, ஒன்பது அல்லது பதி னொன்றின் அதிபதி சனியாய் இருந்தால் அல்லது இந்த இடங்களில் ராகு நின்றால் திருடியோ அல்லது மோசமான தொழிலைச் செய்தோ வயிறு வளர்ப்பான்.
 
சூரியன், சந்திரன், ராகு, கேது இந்நால்வரைத் தவிர மற்ற கிரகங்கள் ஒன்று கூடினால்தானே வெட்கப்படக்கூடிய தொழில்களைச் செய்து வாழ்க்கை நடத்துவான்.
 
கேந்திரத் திரிகோணங்களில் அல்லது எட்டாம் இடத்தில் சந்திரனும், சுக்கிரனும் கூடி நின்றால்தான் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்க்கை நடத்துவான். அதேபோல் ஒன்பதாம் பாவம் பற்றி பார்ப்போம்.
 
ஒன்பதாம் இடத்திற்கு பாக்கியஸ் தானம், பிதுர்ஸ்தானம், தர்மஸ்தானம் என்ற பெயர்களும் உண்டு.
 
லக்னத்திற்கு ஐந்து ஒன்பதாம் இடங்களில் சூரியன், செவ்வாய், சனி இவர் களில் யாரேனும் ஒருவர் இருந்தாலும் ஜாதகனுடைய தந்தைக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.
 
லக்னத்தில் செவ்வாயும், ஏழில் சூரியனும் இருந்தால் தந்தை பிழைப்பது சந்தேகம். இவர்களில் ஒரு வருடன் குருவும் கூடியிருந்தால் தந்தை ஒரு சில ஆண்டுகள் உயிர் வாழ்வார். ஒன்பதில் சனியும், கேந்திரத்தில் செவ்வாயும் இருந்தால் தந்தைக்கு அதிர்ஷ்டம்.
 
சூரியனுக்கு ஏழில் சனியும், செவ்வாயும் இருந்து சுபக் கிரகங்களால் பார்க்கப்பட்டால் தந்தைக்கு அதிர்ஷ்டம். லக்னத்தில் செவ்வாயும், ஒன்பதில் சனியும் இருந்தால் தந்தைக்கு அதிர்ஷ்டம்.
 
சூரியனுக்கு முன்னும் பின்னும் பாவிகள் இருந்தாலும், பார்த்தாலும் ஜாதகன் பிறப்பதற்கு முன்னமேயே அவன் தந்தை இறந்து விடுவான். ஒன்பதாம் அதிபனுடனும் குருவும் பாவிகளும்கூடி நின்றால் பிச்சை எடுத்து உண்பான்.