Author Topic: வாசற்படிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது பற்றி?  (Read 3316 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

உடல் என்றால் தலையை பிரதானம் என்று சொல்கிறோம். அதுபோலத்தான் வீடு என்றால் தலைவாசல் தான் பிரதானம்.

webdunia photo   WD
நல்லது கெட்டது என்றால் எதுவாக இருந்தால் நுழைந்து வரக்கூடியது தலைவாசல். அது ரொம்ப முக்கியம். அதற்கடுத்து ஒட்டுமொத்த மனை இருக்கிறதல்லவா, அந்த ஒட்டுமொத்த மனையின் உயிர் மூச்சு இருப்பதும் தலைவாசலில்தான். அதனால்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அதனால் அந்த தலைவாசலை சரியான அளவில் அமைக்க வேண்டும்.

கட்டப்பட வேண்டிய மனையை 9 பாகமாக்கி, அதில் 3வது பாகம், 4வது பாகம், 5வது பாகத்தில்தான் தலைவாசல் அமைய வேண்டும்.

27 அடி மனையில் கட்டியிருந்தால் அதில் 3, 3 பாகமாக பிரித்து 4வது அல்லது 5வது பாகத்தில்தான் தலைவாசல் அமைக்க வேண்டும்.

மேலும் மனைக்குரியவரின் ஜாதகத்தின் அடிப்படையில் இது வேறுபடும். அவரது ஜாதக அடிப்படையில் 4, 5, 6வது பாகத்தில் வைக்க வேண்டுமா என்பது வேறுபடும்.

ஒருவேளை அப்பாக்குரிய மனையை, மகன் கட்டி வாழ வேண்டுமானால், இருவரது ஜாதகத்தையும் பார்த்துத்தான் தலைவாசலை அமைக்க வேண்டும்.

கோயிலுக்கு மூலஸ்தானம் எப்படியோ அதுபோலத்தான் வீட்டிற்கு தலைவாசலும். அதனால்தான் ஒரு நல்ல நாள் பார்த்து தலைவாசல் வைக்கிறார்கள்.

அன்றைய தினம் அதிகாலையில் நீராடி, சுமங்கலிப் பெண்கள் அதாவது 9, 7 என்ற எண்ணிக்கையில் வந்து அந்த வாசற்காலைத் தூக்கி வைப்பார்கள். வாசற்கால் வைக்கும் இடத்தில் நவதானியங்கள், ரத்தினங்கள், நமது ஜாதகத்திற்கு ஏற்ற ரத்தினங்கள் போன்றவற்றை வைத்த பின் வாசற்காலை வைப்பார்கள்.


அதுபோல வைக்கும்போதுதான் நம்முடைய ஜாதக அமைப்புக்கு ஏற்றவாறு அந்த மனையின் ஆற்றல் இருக்கும். மேலும், அதில் மச்ச எந்திரம், வாஸ்து எந்திரம் போன்ற எந்திரங்களையும் வாசற்நிலையில் வைப்பதும் நல்லது.

மச்சம் என்பது மீன். மீன் அழுக்கை உண்டு நீரை சுத்தப்படுத்துவது போல மச்ச எந்திரத்தை வாசற் நிலையில் வைக்கும்போது கெட்டவைகளை உள்ளே விடாது. மேலும் அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் மீன் விளங்குகிறது.

அதனால்தான் வாசற் நிலையில் மச்ச எந்திரம், வாஸ்து எந்திரம், மேலும் கூர்ம சக்கரங்கள் எல்லாம் உண்டு, அதனை வைப்பார்கள்.

சக்கரம் என்பது டிகிரி. முழுவதும் கணக்குத் தொடர்பானது. கோணங்கள் அடங்கியது. முக்கோணம், விரிகோணம் போன்றவற்றில் ஓம், வராகி போன்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும்.

ஒரு குறிப்பிட்ட டிகிரி இடைவெளியில் ஒரு குறிப்பிட்ட சொல்லை எழுதும்போது அது உயிர்பெறுகிறது. அதில் இருக்கும் சக்தி அந்த வீட்டை தொடர்ந்து நல்ல நிலையில் வைத்திருக்கும்.

நிறைய வீடுகளை அப்படி பார்த்திருக்கிறோம். சண்டை போட வேண்டும் என்று கிளம்பி வருவார்கள். ஆனால் அந்த வீட்டிற்கு வந்ததும் அப்படியே சமாதானம் ஆகிவிடுவார்கள். பிரச்சினையைத் தடுக்கும். அமைதியைக் கொடுக்கும்.

வாசற்படி வைக்கும் அன்று குடும்பத் தலைவிக்கு வீட்டு விலக்கு தேதி இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டில் உள்ள பெரியவர்கள், மற்றும் குடும்பத் தலைவிதான் வாசற்படியை தொட்டு வைக்க வேண்டும். எனவே அதனை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேல் நோக்கு நாட்கள் என்று உள்ளது. அதாவது சில நட்சத்திரங்கள் மேல் நோக்கு நாட்கள் ஆகும். அதாவது ரோகிணி, பூசம், உத்திரம் நட்சத்திரம் மேல் நோக்கு நாளாகும்.

குடும்பத் தலைவனுக்கோ, தலைவிக்கோ சந்திராஷ்டமம் நாள் இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வாறு எல்லாம் பார்த்து வாசற்படி வைக்கும்போது அது சகல செளபாக்கியங்களையும் கொடுக்கும்.