FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on June 25, 2017, 12:37:35 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 152
Post by: MysteRy on June 25, 2017, 12:37:35 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 152
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/152.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 152
Post by: thamilan on June 25, 2017, 01:02:32 AM
ஓடிக் கொண்டிருப்பவனே
எங்கே ஓடுகிறாய் 
எதற்காக ஓடுகிறாய்
வாழ்க்கையை பிடிக்க ஓடுகிறாய்
ஆனால் அந்த வாழ்க்கையை
வாழ மறந்து ஓடிக் ஓடிக்கொண்டிருக்கிறாய்
 

சுள்ளிப் பொருக்குகிறவன் கதை தான்
நம் கதையும்
குளிர் காய
சுள்ளிப் பொருக்குகிறவன்
சுள்ளிப் பொறுக்குவதிலேயே
காலத்தைக் செலவிடுகிறான் - அவன்
குளிர் காய்வதே இல்லை

உன்னை சுற்றியே உலகம்
ஆனால் நீயோ
உலகத்தை சுற்றி தேடிக் கொண்டிருக்கிறாய்

உன் மனைவியின் கொலுசில்
உன் குழந்தையின் சிரிப்பில்
உன் அண்டை வீட்டாரின்
கை அசைப்பில்
வாழ்க்கையின் சங்கீதமே அடங்கி இருக்கிறது
உனக்கு அது கேட்பதே  இல்லை

கடிகார முள்ளாக
சுற்றி சுழல்பவனே
வட்டமடிப்பது வாழ்க்கை அல்ல
என்று எப்போது
உணரப் போகிறாய்

வயிற்றில் இருந்து தான்
நாம் வந்தோம்- ஆனால்
வாழ்க்கை வயிற்றுடன் மட்டும் இல்லை
வயிற்றை விட்டு
இதயத்துக்கு ஏறு-அங்கே
உனக்காக உனது
ராஜாங்கம் காத்துக்கிடக்கிறது
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 152
Post by: NiYa on June 25, 2017, 03:46:50 PM
பணம் என்பது சுயநலமே
நாம் எமது சுயநலத்திற்காக
தான் ஓடிக்கொண்டிருக்கிறோம்
இந்த பணத்தை தேடி

ஒரு இலக்கை எண்ணி  ஓடும் பொது
அந்த இலக்கு எமக்கு ஒரு போதை
அதே போல் தான் பணமும்
ஒரு அலாதியான போதையே

பணம் பணம் என்று
ஓடும் நீ எதைக்கண்டாய் உன் வாழ்வில்
பணம் என்பது வாழ்வதற்கு மட்டுமே
வாழ்க்கையே அதுவல்ல

பணம் என்று நீ
இழந்திருப்பது உன் சொந்தத்தை
உன் நம்பிக்கையை உன் சுயத்தை
எல்லாவற்றையும்தான்

எல்லாவற்றையும் இழந்த பின்
பணம் இருந்தும் நீ பிணம் தான்
பணம் உன்னை வாழ்க்கையின் 
உச்சிக்கு கொண்டு செல்லவில்லை
யாரும் இல்ல தனிமைக்கும்
நரக பாதாளத்துக்குமே கொண்டு செல்கிறது

இதை அறிவாயோ மனிதா
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 152
Post by: MyNa on June 25, 2017, 04:10:20 PM
பணம் பணம் பணம் ..
எத்தனை கோடி சேர்த்து வைப்பினும்
இறுதியில் நெற்றி காசு கூட
சுடுகாடு வரைதானே மானிடா ??

மண்ணில் புதைந்த பின்னரும்
தீயில் எரிந்த  பின்னரும்
எஞ்சி இருப்பது நீ வாழ்ந்த பொழுது
சம்பாதித்த நற்பெயர் தானே மானிடா ??

ஏழை மாண்டாலும் அதே ஆறு அடிதான்
பணக்காரன் மாண்டாலும் அதே ஆறு அடிதான்
பணம்  இருந்தாலும் இல்லாவிடினும்
இறுதியில் சுமப்பது உறவுகள் தானே மானிடா ??

அந்த உறவுகளை வாழும் பொழுது
பணத்திற்காக உதாசீனப்படுத்துவதும்
தான் என்ற ஆணவம் கொண்டு பணத்தினால்
ஆட்டி படைப்பதும் சரிதானா மானிடா ??

உயிர் கொடுத்த தாய் தந்தையர்
உயிருள்ளவரை உடன் வரும் இல்லற துணை
நீ பெற்ற குழந்தை செல்வங்கள் என அனைத்தையும் காட்டிலும்
பொருள் செல்வத்தின் மேல் நாட்டம் கொண்டது ஏன்  மானிடா ?

பணமே வாழ்க்கை என்றெண்ணி
மீண்டும் பெற இயலா இளமையை இழந்தாய்..
விலைமதிப்பற்ற நிம்மதியை இழந்தாய் ..
உன்னதமான உறவுகளை இழந்தாயே மானிடா ?

பணம் சேர்ப்பதை மட்டுமே இலக்காய் கொண்ட நீ
குணத்தை சேர்க்க மறந்துவிட்டாய் ..
அந்த பணமே உனக்கான சவக்குழியினை
தோண்டியதை அறிய தவறியது தான் ஏனோ மானிடா  ??

இப்பொழுதும் விழித்திடாது
பேராசை கொண்டு இனியும்
பண மயக்கத்திலேயே நீ உலாவினால்
நீ மறையும் நாள் தூரமில்லை மானிடா !!

வாழ்க்கைக்கு பணம் தேவைதான் ..
அந்த பணமே வாழ்க்கையானால் ??
உறவுகளோடு நேரத்தை செலவிடுங்கள் ..
இறுதிவரை  வருவது உறவுகளே .. பணமல்ல..

~ மைனா தமிழ் பிரியை ~
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 152
Post by: VipurThi on June 25, 2017, 06:35:31 PM
பிறக்கும் போதே உன்
இறப்பின் தேதி
குறிக்கிறான்
மேலே ஒருவன்

ஆனால் அவனோ
எழுதித்தந்தான்
வாழ்க்கையை வாழும்
உரிமையை உனக்காக அன்று

மனிதனோ அன்பெனும் வழியில்
ஏறவேண்டிய மலையை
பணமெனும் வழி கொண்டு
தோண்டுகின்றான் குழியாய்

குவித்தவற்றை பகிர்ந்து
வாழும் காக்கையின்
பழக்கம் எமக்கு இல்லை 
அதை ஏற்று கொள்ளா
மனித மனதில் ஏனோ
பக்குவமில்லை
 
குவித்த எதையும் மரிக்கும் போது
எடுத்துச் செல்லும் உரிமையில்லை
அதனை உணர்ந்தவன்
உயர்ந்திடுவான் உலகில்
உத்தமன் எனும் பெயர் கொண்டு


போதுமென்ற மனமே பொன்
செய்யும் மருந்து


              **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 152
Post by: பொய்கை on June 26, 2017, 05:34:06 PM
பொய்யும் புரட்டும் செய்தேன் - பணம்
பெய்யும் மழையென கொட்ட கண்டேன் !
பணம் தேடி ஓடக்கண்டேன் - சாத்தான்
பிணம் தேடி வருதல் கண்டேன் !

தேவைக்கு அதிகம் சேர்க்க கண்டேன்!
பாவைக்கு அதிகம் செலவிட கண்டேன்!
மோகம் மூளைக்குள் ஓங்கிட கண்டேன்!
தேகம் தாகத்தால் பற்றிட கண்டேன்!

பணத்தால் மக்களை அளவிடல் கண்டேன்!
குணத்தால் அளவிடல் குறைய கண்டேன்!
பணம் பணம் எனும் மாயையில் வீழ்ந்தோர்
தினம் தினம் செத்திட கண்டேன் !

அன்பும் அறனும் பொய்த்திட கண்டேன்!
அழகிய மானுடம் வீழ்ந்திட கண்டேன்!
பணம் எனும் பேயை அடைந்திட்ட போது
பிணமாய் பேழையில் கிடத்திட கண்டேன் !

ஆன்மா வெளியேறி  அலற கண்டேன்!
அன்பை தேடி அது ஓட கண்டேன் !
அற்ப பணமே ! உன்னை.. தேடி ..தேடி ..
சொற்ப வாழ்வில் இழந்தது.. கோடி .. கோடி ..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 152
Post by: ChuMMa on June 26, 2017, 05:49:07 PM
உன்னை தேடியே இங்கு பலரின் பயணம்

நீ மட்டும் இல்லை என்றால் பலருக்கு
போராடும் குணம் கூட இல்லாமல் போயிருப்பான்

உனக்கு எல்லாரையும் பிடிக்கும் தான்
ஆனால் உன்னை மட்டும் பிடித்தவருக்கு தான்
யாரையும் பிடிக்காமல் போகிறது

குற்றம் செய்தவன் நீ என்று ஊர் பழி  சொல்லும் உன்மேல்
குற்றமற்றவனாய் நடப்பான் மனிதன் பழி உன் மேல் போட்டு

உனக்கு நண்பன் யார் தெரியாது உனக்கு உறவு யார் தெரியாது
ஆனால் நீ உடன் இருந்தால் தான் இவை இருப்பது அவனுக்கு
தெரிகிறது

இவ்வுலகில்
உன்னால் வாழ்ந்தவர் சொல்லும் கதைகள் ஏராளம்
உன்னால் வீழ்ந்தவர் சொல்லும் கதைகள் தாராளம்

உறவுகள் தொலைத்து நண்பர்கள் தொலைத்து
உணவை தொலைத்து வாழ்வை தொலைத்து
உன்னை தேடி ஒடி சேர்த்தேன் உனை என்னிடம் ...

உடன் வந்தது அழையா விருந்தாளியாய் நீரிழிவு ,
ரத்த அழுத்தம் , நிம்மதியின்மை , தூக்கம் இல்லா இரவுகள்
இருந்தும்

கடைசியில் மரணம் அழைக்கையில் புதைக்கவோ
எரிக்கவோ நீ அருகில் இல்லையெனில்
அநாதை பிணமாய் சவ அறையில் மூலையில்
ஈக்கள்  மொய்க்க படுத்திருப்பேன் ...

அளவோடு இல்லையெனில் அமிர்தமும் நஞ்சு தான்

அளவோடு உன்னை அணைக்க ஓடுகிறேன்
வா பணமே !!


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 152
Post by: SunRisE on July 05, 2017, 01:31:23 PM
பாட்டன் தகப்பன்
சேர்த்து வைத்த
பணமுல்ல வாரிசுகள்
அரிந்திருக்க நியாயமில்லை
பணத்தின் அருமையை

கேட்டதும் கிடைக்காத
அன்பு பாசம் நேசம்
இதை பற்றி
கவலை இல்லை
கேட்காமல் கிடைக்கும்
பணமும் பாரம்பரியமும்
தேடி வரும் போது

தூன்டிலின் ஆட்காட்டி
அசைவினை
ஆவலுடன்
ஏதிர் நோக்கும்
மீனவர் போல
அன்றாடம்
தேவைகளுக்கு
ஏங்கு உழைத்தால்
இன்பம் தேடலாம்
என உழைப்பவன்
கைகளில்
பணம் வருவதில்லை

நித்தம் நித்தம்
தேடும் இவனுக்கு
பணம் பார முகம்
காட்டலாம்
பந்தமும் சொந்தமும்
பற்றி வாழும்
பன்மையை தருகின்றாய்
பாசம் நேசம்
இங்கே கேட்காமல்
கிடைக்கும்

ஏன்ன? பணம்
இதற்காக மட்டும்
தினம் தினம்
உபழைப்பு எனும்
தூண்டில் இட்டு
காத்திருக்க வேன்டும்.