Author Topic: மாற்றை நோக்கிய பயணம்  (Read 1860 times)

Offline blackguard

மாற்றை நோக்கிய பயணம்
« on: January 17, 2013, 10:23:30 PM »
மனம் என்னும் மாமருந்து

    -ஹீலர்.அ.உமர் பாரூக்-

1981 ஆம் ஆண்டில் அமெரிக்க விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த மோரீஸ் விபத்தில் சிக்கிக்கொண்டார். விமானம் வெடித்ததில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளில் பலர் மரணமடைந்தனர். கடும் காயங்களுடன் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்ட பைலட் மோரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய முதுகெலும்பு, கழுத்தெழும்புகள் முறிந்திருந்தன. உதரவிதானம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் சுவாசிக்க முடியவில்லை. தொண்டை கடுமையான காயங்களுக்கு ஆளானதால் தண்ணீர் குடிக்கவும், விழுங்கவும் முடியவில்லை. உடல்முழுதும் எழும்புகள் முறிந்தும், தசைகள் செயல் இழந்தும் இருந்தன. சுயமாக கண் விழிகளை இமைக்க மட்டுமே முடிந்த அவருடைய உடல் இனி உயிர் வாழத் தகுதியற்றது என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். ஏராளமான கருவிகள் அவர் உடல் முழுவதும் பொருத்தப்பட்டு ”இப்படியே தொடரலாம்; ஆனால் இமைப்பதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய முடியாது” என்று கூறி மருத்துவம் அவரைக் கைவிட்டது.

இப்போது எல்லோரையும் போல ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மோரீஸின் பெயர் மோரீஸ் குட்மேன். மரணத்திலிருந்து மருத்துவத்தின் உதவியின்றி தப்பிவந்த அதிசய மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இப்போது அவருடைய முழுநேர வேலை தான் உணர்ந்த மனதின் ரகசியங்களை அனைவருக்கும் கற்றுத்தருவதுதான். உடலை இயக்குவதில் மனம் பெரும் பங்கு வகிப்பதை உணர்ந்து கொண்ட மோரீஸ் குட்மேன் தன் மன இயக்கத்தை உணர்ந்து கொண்டதன் மூலம் உடல் இயக்கத்தை சீராக்க உதவினார். மருத்துவர்களால் தேற்ற முடியாது என்று கூறப்பட்ட சில மாதங்களிலேயே முழு ஆரோக்கியத்திற்குத் திரும்பினார். ”என்னை மருத்துவர்கள் கைவிட்டார்கள். ஆனால் மனம் என் வசம் இருந்தது. என்னால் சிந்திக்க முடிந்தது. என்னைப்பற்றி மருத்துவம் என்ன நினைத்தது என்பதை விட என்னைப் பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதுதான் முக்கியமானது. உங்கள் மனம் உங்கள் கைவசம் இருந்தால் நீங்கள் செய்ய முடியாதது எதுவுமில்லை.” என்று கூறும் மோரீஸ் குட்மேன் இப்போது உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கை உரையாளர்களில் ஒருவர்.

இதே போன்ற அற்புத மனிதர்தான் அயர்லாந்தில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த டாக்டர்.ஜோசப் மர்பி. உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த மர்பி தன் இளம் வயதில் தெற்காசிய நாடுகளின் மதங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். உளவியல் சார்ந்த புதிய கருத்துக்களை நோக்கி அவர் நகர்ந்து கொண்டிருந்த காலத்தில் அவர் தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். உடலைப் பற்றிய கவனமின்றி அவர் தொடர்ந்து கொண்டிருந்த ஆராய்ச்சியின் இறுதியில் டாக்டர்.மர்பி கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளில் ஒருவராக மாறினார். அவர் தன்னுடைய உடலை கவனிக்கத்துவங்கிய போது தோல் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

புற்றுநோய் படிபடிப்படியாக மோசமான நிலையில் பாதிரியார் ஒருவரைச் சந்தித்தார் மர்பி. அவர் கூறினார் “ ஒரு கைக்கடிகாரத்தை ஒருவர் உருவாக்குகிறார் என்றால் அது உருவாக்கப்படுவதற்கு முன்பு அதைப்பற்றிய தெளிவான எண்ணம் அவருக்கு இருந்திருக்கும். அதே கடிகாரம் பின்னால் பழுதடைந்தாலும் அந்த தெளிவான எண்ணத்தால் அதை அவரால் சரியாக்கிவிட முடியும் அல்லவா?” இந்த உவமை மர்பிக்கு மனதைப் பற்றிய தெளிவைக் கொடுத்தது. மனது உடலின் இயக்கத்தில் பெரும் பங்காற்றுகிறது என்றால் மனதின் தெளிவு உடலின் தெளிவாக மாறும் என்பதை டாக்டர்.மர்பி உணர்ந்தார். மூன்றே மாதங்களில் எவ்விதமான மருத்துவத்தின் உதவியும் இன்றி தோல் புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் மர்பி. ”புற்றுநோய் எப்படி குணமானது என்பது என் மருத்துவருக்கு வேண்டுமானால் அற்புதமாக இருக்கலாம். ஆனால் என் மனதைப் பொறுத்த வரை குணமாதல் என்பது இயல்புதான்” என்கிறார் டாக்டர்.மர்பி. அவருடைய முப்பதிற்கும் மேற்பட்ட உளவியல் நூல்கள் இன்றைய நவீன உளவியலின் போக்கையே திசை மாற்றியிருக்கின்றன. இப்போது நவீன உளவியல் கொள்கையை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கிறார் மர்பி.

என்னதான் நடக்கிறது நம் உடலில்? உடலுக்கும் மனதுக்கும் அப்படி என்ன தொடர்பு?

உடல் என்பது தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் ஒரு அற்புத உயிரமைப்பு. அதிலும் மனித உடல் உலகில் உள்ள எல்லா உயிரினங்களை விடவும் பரிணாம வளர்ச்சியின் உச்ச கட்டமாகத் தோன்றிய உயிரினம். டார்வினின் பரிணாமக் கொள்கை பேசும் மிக முக்கிய விஷயங்களில் ஒன்று தகவமைப்பு. புறச் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு நம் உடல் தன்னைத் தானே தகவமைத்துக் கொள்கிறது. புற மாற்றங்களின் போதும், நம் நடவடிக்கைகளின் போதும் உடலில் உருவாகின்ற கழிவுகளையும் உடலே வெளியேற்றுகிறது. இப்படி வெளியேற்றும் போது உடல் உள்ளுறுப்புகளில் தோன்றும் பலவீனத்தையும் உடலே சரிசெய்து கொள்கிறது. அது மட்டுமல்ல. தனக்குத் தேவையான ஒவ்வொன்றையும் (வைட்டமின், மினரல், கால்சியம்..இன்ன பிற சத்துக்கள்) தனக்கு கிடைக்கிற சாதாரண உணவுகளில் இருந்தே உருவாக்கிக் கொள்கிறது. நாம் வெளியில் இருந்து உடலுக்கு கொடுக்கும் செயற்கை சத்துக்களுக்கும் உடலே உருவாக்கிக் கொள்ளும் இயற்கை சத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரசாயனத்தால் செய்யப்பட்ட செயற்கை சத்துக்களை உடல் கழிவுகளாக மட்டுமே பார்க்கிறது.

இதையெல்லாம் கடந்து உடலுடைய நிறைவான வேலை உள்ளுறுப்புகளை மறு உருவாக்கம் செய்வது. உடலின் ஒவ்வொரு செல்லையும் அதனுடைய ஆயுள் முடிந்தவுடன் புதிய செல்களாக மாற்றுகிறது நம் உடல். உடலின் ஒவ்வொரு உள்ளுறுப்பும் குறிப்பிட்ட காலத்தில் முழுமையாக புதிதாக்கப் படுகிறது. சரி. அப்படி உடல் புதிதாக்கப்பட்டால் குறிப்பிட்ட காலத்தில் உடலில் உள்ள எல்லா நோய்களும் மறைந்து விட வேண்டும் அல்லவா? அப்படியென்றால் உலகில் எல்லோருக்குமே நோய்கள் சரியாகிவிட வேண்டுமே? இங்கேதான் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உடலுடைய புதுப்பிப்பு பணி என்பது இயல்பாக நடந்து கொண்டேயிருக்கும். உடலுடைய இயல்பான இயற்கையான புதுப்பிப்பு இயக்கத்தில் யாரெல்லாம் குறுக்கிட வில்லையோ அவர்களுக்கெல்லாம் நோய் தானாக சரியாகிவிடும். இயக்கத்தில் குறுக்கிடுவது என்றால் என்ன? உடலின் கழிவு வெளியேற்றத்தை தடை செய்வது. ரசாயன மருந்துகளை சாப்பிடுவது. செயற்கை சத்துக்களை உண்பது போன்றவைதான் நம் குறுக்கீடுகளாகும். அது மட்டுமல்ல; உடலின் இயல்பான தேவைகளான பசி, தாகம், தூக்கம், ஓய்வு போன்றவற்றை புறக்கணித்து நம் இஷ்டம்போல் செய்வதும் குறுக்கீடுதான். பசிக்கிற போது சாப்பிடாமல் பசியில்லாத போது சப்பிடுவது, பசிக்கிற அளவை விட அதிகமாகச் சாப்பிடுவது, தாகமில்லாமல் லிட்டர் லிட்டராக தண்ணீர் அருந்துவது, தாகமிருக்கும் போது தண்ணீர் அருந்தாமல் இருப்பது அல்லது தண்ணீருக்குப் பதிலாக சுவையூட்டப்பட்ட பானங்களை அருந்துவது, இரவுகளில் தூக்கத்தை புறக்கணிப்பது, ஓய்வு தேவைப்படும் போது உடல் உழைப்பை அதிகப்படுத்துவது போன்றவை எல்லாம் நம்முடைய தினசரி நடவடிக்கைகளாக உள்ளன. இப்படி இயற்கைக்கு மாறான நடவடிக்கைகள் உடலின் இயல்பான இயக்கத்தை பாதிக்கின்றன. ஆரோக்கியமாக உருவாக வேண்டிய செல்கள் பலவீனமாக, பழைய நோய்க்கூறுகளுடன் உருவாகின்றன. ஆக நம்முடைய எல்லா தொந்தரவுகளுமே உடலுடைய இயல்பான இயக்கத்துக்கு கட்டுப்பட்டவை. அவை புறச்சூழல்களுக்கு ஏற்றாற்போல் தானாகத் தோன்றி தானாக மறைபவை. நம்முடைய பொறுப்பான குறுக்கீடுகளால் நோய்களாக உடலில் தங்கி விடுகின்றன.

மனதில் ஏற்படும் எல்லா உணர்ச்சிகளும் புறச்சூழல்களை தகவமைப்பதற்காக தானாகவே ஏற்படுபவை. அவற்றை நாம் சரிசெய்ய வேண்டியதில்லை. அப்படி சரிசெய்கிறோம் என்ற போர்வையில் மனதின் இயக்கத்தில் நாம் குறுக்கிடுகிற போது உணர்ச்சிகள் தங்கிவிடுகின்றன. கால நீட்சியடைகின்றன. ஆக மனதும், உடலும் வெவ்வேறானவை அல்ல. இரண்டின் இயங்கு முறைகளும் ஒரே மாதிரியானவைதான். நாம் உடலின், மனதின் மாறுதல்களை வெறுமனே புரிந்து கொள்வது மட்டுமே அதனுடைய தீர்வாக அமையும். மனதைப் பொறுத்த வரை அமைதியடைகிறது. உடல் தன் ஆரோக்கியத்தை அடைகிறது.

அதெல்லாம் சரி. இப்படி இயற்கையான முறையில் வாழ்வதால் நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே வந்து விட்ட நோய்களை என்ன செய்வது? ஏற்கனவே இருக்கின்ற தொந்தரவுகள் என்பவையும் உடலால் செய்யப்படுகின்ற தகவமைப்பு வேலைதான். அதற்காக புதிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. உடலை அதன் போக்கில் அனுமதிப்பதோடு, இயற்கையான வாழ்வியல் முறைக்குத் திரும்புவதுதான் ஆரோக்கியம் பெற ஒரே வழி.

இந்த முறைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் முன்பு நாம் பார்த்த மோரீஸ் குட்மேனைப் போலவோ, மர்பியைப் போலவோ அற்புத குணங்களைப் பெற முடியுமா? அப்படி பெற வேண்டுமானால் மேற்கண்ட விஷயங்களை கடை பிடிப்பது மட்டுமின்றி மனதின் இயக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். மனதின் இயல்பை புரிந்து கொள்வதன் மூலம் உடலின் முழு சக்தியையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனை அமெரிக்க மரபியல் விஞ்ஞானி டாக்டர்.புரூஸ் லிப்டனின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் நிரூபித்து வருகின்றன. நம் உடலின் செல்கள் மட்டுமல்ல அதற்குள் உருவாகும் ஜீன்களும் கூட நம் மன இயல்புக்கு கட்டுப்பட்டவை என்பதுதான் மரபியலின் இன்றைய கண்டுபிடிப்பாகும்.

நம் உடலுடைய முழு சக்தியையும் தொந்தரவுகளின் பக்கம் திருப்பி எவ்வாறு நாம் ஆரோக்கியத்தைப் பெறுவது என்பதைப் பார்ப்போம்.

நம் உடலின் ஆரோக்கியத்தை நிலைப்படுத்துகிற வேலையை பராமரிப்பு சக்தி

(இதைத்தான் மருத்துவர்கள் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறார்கள்) செய்து வருகிறது. நம் உடல் செல்களில் புறச்சூழல் காரணமாக ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளை பராமரிப்பு சக்தி சமநிலைப் படுத்துகிறது. இந்த பராமரிப்பு சக்தியின் ஒரே வேலை சமநிலைப் படுத்துவதுதான். சமநிலைப் படுத்துவது என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; மனம் சார்ந்ததும் தான். நம் உடலின் பராமரிப்பு சக்தி மனச் சமநிலை தவறினாலும், உடல் சமநிலை தவறினாலும் அதை சமப்படுத்துகிறது.

உடல் சமநிலை தவறுவது என்பது தகவமைப்பு வேலை நடைபெறும் போது நமக்கு ஏற்படும் தொந்தரவுகள் தான் என்பது புரிகிறது. ஆனால் மனச் சமநிலை தவறுவது என்றால் என்ன?

மனச்சமநிலை தவறுதல் என்பது உணர்ச்சிவசப் படுவதைத்தான் குறிக்கிறது. உணர்ச்சிகள் என்பவை புறச் சூழல்களால் தானாகத் தோன்றி தானாக மறைபவை. அதாவது மனதுடைய தகவமைப்பு. அப்படி தானாகத் தோன்றுகிற உணர்ச்சிகளை சரிசெய்கிறோம் பேர்வழி என்று நாம் பொறுப்பெடுத்துக் கொள்ளும் போது அந்த உணர்ச்சிகள் நிலைத்து விடுகின்றன. இதைத்தான் கிராமங்களில் உணர்ச்சி வசப்படுதல் அல்லது ”உணர்ச்சியின் வசம் நாம் போய்விடுவது” என்று கூறுவார்கள்.

ஒரு தொந்தரவு ஏற்படுகிற போது பராமரிப்பு சக்தி உடலை சமநிலைப்படுத்த தயாராகிறது. நம் உடலில் தொந்தரவுகள் ஏற்படுகிற போது நம் மனநிலை என்னவாக இருக்கும்? இது கேன்சராக இருக்குமோ? இது சர்க்கரையாக இருக்குமோ? என்ற பயம் ஏற்பட்டு மனப்பதட்டம் வந்து விடுகிறது. இந்த பய உணர்ச்சியை நாம் நொடிக்கு நொடி புதுப்பித்துக் கொள்கிறோம். இப்போது மனச்சமநிலையும் குலைந்து விடுகிறது. உடலில் ஏற்படும் ஒரு தொந்தரவு அதைப்பற்றிய நம் புரிதல் இன்மையால் மனச் சமநிலையையும் பாதிக்கிறது. இப்போது பராமரிப்பு சக்தி என்ன செய்யும்?
<a href="http://lh4.ggpht.com/-mNOJmZX983A/Tv-7mJ-AgMI/AAAAAAAAAcU/6NTTTqZ8YbI/clip_image001_thumb%25255B3%25255D.gif?imgmax=800" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://lh4.ggpht.com/-mNOJmZX983A/Tv-7mJ-AgMI/AAAAAAAAAcU/6NTTTqZ8YbI/clip_image001_thumb%25255B3%25255D.gif?imgmax=800</a>

இப்படி பராமரிப்பு சக்தி உடலையும், மனதையும் சமப்படுத்த இரண்டாகப் பிரிகிறது. பொதுவாக பராமரிப்பு சக்தி உடலை விட மனதிற்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. உடல் பாதிப்பு எந்த அளவில் இருந்தாலும், மனபாதிப்பின் தன்மையைப் பொறுத்துத்தான் பராமரிப்பு சக்தி வேலை செய்கிறது. மனச்சமநிலை தீவிரமான அளவு பாதிக்கப்பட்டிருந்தால் உடல் ஆரோக்கியத்தை இரண்டாம் பட்சமாகக் கருதி மனதை நிதானப் படுத்தும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது பராமரிப்பு சக்தி.

இந்த பராமரிப்பு சக்தியை நாம் உடலை நோக்கி முழுமையாகத் திருப்பி விட்டால் என்ன நடக்கும்? உடல் உள்ளுறுப்புக்களின் தகவமைப்பு மிக வேகமாக நடக்கும். உடல் ஆரோக்கியத்திற்குத் திரும்பும். ஆனால் அப்படி எவ்வாறு உடலை நோக்கித் திருப்பி விடுவது?

மிகச் சுலபம்தான். உடலுடைய சமநிலக்குலைவு என்பது இயற்கையானது. அதனை நம் முயற்சியால் மாற்ற இயலாது. மாறாக அது உடலின் தகவமைப்பு தான். கழிவுகளின் வெளியேற்றம் தான் என்பதை நாம் அறிவுப்பூர்வமாக புரிந்து கொண்டால் என்ன நடக்கும்? உடல் சமநிலைக்காக புரிதலோடு காத்திருப்போம். இப்போது மனநிலையின் தன்மை என்னவாக இருக்கும்? உடல் மாறுதல்கள் இயற்கையானவை என்று புரியும் போது மனம் சமநிலை தவறுவதில்லை. அதைப்பற்றிய பயம் ஏற்படுவதில்லை. ”என்னுடைய உடல் என்னை சரி செய்து கொண்டிருக்கிறது” என்பதை நம்மால் உணர முடியும். இப்போது பராமரிப்பு சக்தி நூறு சதமும் உடலை நோக்கி திருப்பிவிடப்படுகிறது. உடல் மிக வேகமாக தன்னைத் தகவமைத்துக் கொண்டு, புதுப்பித்துக் கொள்கிறது. மோரீஸ் குட்மேனைப் போலவும், டாக்டர்.மர்பியைப் போலவும் எல்லோராலும் புரிதலால் நோய்களை வெல்ல முடியும்.

உடல் ஆரோக்கியத்தில் நம்முடைய பங்கு என்பது அதனைப் புரிந்து கொள்வதுதான். அதனுடைய இயக்கங்களில் குறுக்கிடுவது அல்ல. இயற்கையான பழக்கவழக்கங்கள், உடலைப் பற்றிய புரிதல் ஆகியவை மனிதகுல ஆரோக்கியத்தின் மிக முக்கியமான அம்சங்கள். இவற்றைத் தவற விடுகிற மருத்துவங்களால் உடல் நலத்தை மீட்க முடியாது.

---------- --------
« Last Edit: January 31, 2013, 01:01:06 PM by blackguard »

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மனம் என்னும் மாமருந்து
« Reply #1 on: January 17, 2013, 11:38:50 PM »

உண்மைதான் ... ஆனாலும் ஒரு துணை தேவைபடுகிறது வலியை மிஞ்சிய மனிதனை மாற்றி அமைக்க கூடிய சக்தி எதுமே இல்லை .. அதை நீக்குபவன் கடவுளாக தென் படுகின்றான் .. அவன் கொடுப்பது அமிர்தமாக தோற்றம் பெறுகிறது .. எனவே மனிதன் சுய சிந்தனை இழந்து விடுகின்றான் ... நமக்கு அன்ஹ நேரம் இருக்கும் உபாதை நீங்கினால் போதும்  அவ்ளோதான் ... இதனாலே தான் பல சிக்கல் உருவாகுகின்றது ... நன்று நீங்கள் பகிர்ந்த தகவல் ...
                    

Offline blackguard

Re: மாற்றை நோக்கிய பயணம்
« Reply #2 on: January 21, 2013, 05:01:46 PM »
உணவின்றி அமையாது உலகு

மருத்துவர்.அ.உமர் பாரூக்,M.Acu, D.Ed (Acu)

உணவு – நம் ஆரோக்கியத்தின் அடிப்படை அம்சமாக இருக்கிறது. ஆரோக்கியம் – நம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் காரணியாக அமைந்துள்ளது. நம் ஒவ்வொருவருக்கும் ஏற்ற உணவுகளை நாம் சரியாகப் புரிந்து பயன்படுத்தத் துவங்குவோமானால் ஆரோக்கியக்கேடும், பொருளாதாரச் சீர்குலைவும் ஏற்படாத ஒரு வாழ்க்கைமுறையை கண்டடையலாம்.

இன்றைய வியாபார உலகத்தில் நம் தலையில் கட்டப்படுகிற ஒவ்வொரு பொருளும் ஆரோக்கியத்தின் பலனைச்சொல்லியே விற்கப்படுகிறது. ”நீண்ட காலம் வாழ இந்த டானிக்கைப் பயன்படுத்துங்கள்” என்ற பழைய கால விளம்பரங்கள் எல்லாம் அழிந்து புதிய உத்திகள் இப்போது படையெடுக்கத் துவங்கியுள்ளன. குட்டையாக உள்ள குழந்தை உயரமாக வளரவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற நினைவாற்றலை பெருக்கிக்கொள்ளவும், இதய நோய் வந்துவிடாமல் இருக்கவுமான விளம்பரங்கள் நம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நம் மீது பீதி விதைகளைத் தூவிய வண்ணம் இருக்கின்றன.

உண்மையில் நாம் பொறுமையாக யோசித்துப்பார்த்தால் இந்த வகை விளம்பரங்களின் அடிப்படையை நாம் புரிந்துகொள்ளலாம். குட்டையாக உள்ளவரை உயரமாக வளர வைக்கும் சத்துணவை ஏன் இந்தியக் குழந்தைகளிடம் மட்டும் பரிந்துரைக்கிறார்கள்? பெரியவர்களிடமோ அல்லது சராசரி உயரம் குறைவான சீன, ஜப்பான் நாட்டு குழந்தைகளிடமோ இந்த சத்துணவை பரீட்சித்துப் பார்க்க வேண்டியது தானே? இன்னொரு விளம்பரம் நாம் பல் துலக்கப் பயன்படுத்தும் பேஸ்ட்டில் கால்சியம் இருப்பதாகச் சொல்லி விற்கிறது. கால்சியம் என்ற சத்துப்பொருளை ஆங்கில மருத்துவ அடிப்படையில் பார்த்தால் கூட அக்குறிப்பிட்ட சத்தை சாப்பிடுவதால் அது உடலில் சேருமா அல்லது துப்புவதால் உடலில் சேருமா? ஆரோக்கியம் பற்றி வெளியிடப்படும் விளம்பரங்களில் அடிப்படை அறிவிற்கும், அறிவியலுக்கும் பொருத்தமற்ற பொய்கள் மறுபடி, மறுபடி சொல்லப்படுகின்றன. இவ்வகயான பொய்கள் அனைத்தும் நம் தினசரி உணவுகளில் தான் தங்கள் வியாபாரத்தை அரங்கேற்றுகின்றன.

இப்படி போலியான அறிவிப்புகளோடு நம் தலையில் கட்டப்படும் பொருட்களை வாங்கி ஏமாறுவது நம் உணவு பற்றிய அறியாமையால் தான். ஒவ்வொருவரும் தன் உடலுக்கு எவ்வகையான உணவு ஏற்றது என்பதைப் புரிந்து கொள்வோமானால் ஆரோக்கியமும், பொருளாதாரமும் நம் கையிலேயே இருக்கும்.

முதலில், உணவை - யாருக்காக, அல்லது எதற்காக நாம் எடுத்துக் கொள்கிறோம்? நம் உடலிற்காக. அப்படியானால், உடலின் தேவையறிந்து உணவு தருவது நல்லதா? அல்லது நம் இஷ்டத்திற்கு நாம் தேர்வு செய்யும் நேரத்தில் உணவு தருவது நல்லதா? உணவுத் தேவை ஏற்படும் போது உடல் கேட்குமா? அல்லது கேட்காதா? உடல் தன்னுடைய உணவுத் தேவையை பசியுணர்வு மூலமும், தண்ணீர் தேவையை தாகம் மூலமும் நமக்கு அறிவிக்கிறது. இது தான் உணவிற்கான நேரம். நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட வேலை நேரம் போக மிச்ச நேரத்தில் தான் உணவு சாப்பிட முடியும் என்றால் அந்நேரத்தை உடல் அங்கீகரிக்க வேண்டுமே? நாம் பசியற்றுச் சாப்பிடும் உணவு உடலின் உண்மையான தேவையைத் தீர்க்காது. மாறாக, கழிவுகளாக மாறி உடலிற்கு தொந்தரவுகளையே தரும். ஆக, உணவு முறை என்பது உணவுகளின் வகைகளால் ஆனது இல்லை. உடலின் தேவையின் அடிப்படையிலானது.

உடலின் தேவைக்குத் தகுந்தாற்போல் தேவையான அளவிற்கு உணவை எடுத்துக் கொள்வோமானால் உடல் ஆரோக்கியத்தை நிலைப்படுத்திக்கொள்ளும். இதைத்தான் நம்மவர்கள் ”பசித்துப்புசி” என்றும், “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்றும் உடல் தேவையை வலியுறுத்தினார்கள். உணவு முறையின் அடிப்படை அம்சமே உடலின் தேவையறிந்து கொடுப்பதுதான். பசியற்று இருக்கும் போது சாப்பிடாமல் இருப்பதும், பசியோடு இருக்கும் போது தேவையான அளவு சாப்பிடுவதும் நோய்கள் உருவாகாமல் தடுக்கும் உபாயங்கள். சித்தர் பாடல்களில் “ உற்ற சுரத்திற்கும் உறுதியாம் வாய்வுக்கும் அற்றே வருமட்டும் அன்னத்தைக் காட்டாதே” என்று வந்த நோய்களில் இருந்து விடுபடவும் பசி வரும் வரை காத்திருத்தலையே சிகிச்சையாகக் கூறுகிறார்கள்.

சரி. பசித்துச் சாப்பிட வேண்டும். எதைச் சாப்பிட வேண்டும்?

நாம் உணவு வகைகளை சத்துக்களின் அடிப்படையில் பிரித்து மிகப் பெரிய பட்டியல் ஒன்றை வைத்திருக்கிறோம். அதில் எதைச் சாப்பிடுவது என்பதுதான் நம் குழப்பமே.

இயல்பாக நம் உடல் இயங்குவதற்கு 100 கிராம் குளுக்கோசும், 50 கிராம் புரோட்டீனும், 20 கிராம் வைட்டமின்களும், 10 கால்சியம் போன்ற இன்னபிற சத்துக்களும் தேவை என்று (சும்மா ஒரு கணக்கிற்கு) வைத்துக்கொள்வோம். இன்றைய நவீன உணவியல் கூறுகிறது இந்தச் சத்துக்கள் அடங்கிய கலவையான சமச்சீர் உணவைச் சாப்பிடுவதே ஆரோக்கியம் என்று. இது சரியானதாக இருக்கிறதா? நாம் உடலை ஒரு உயிரற்ற இயந்திரமாகவே பார்த்துப் பழகியிருக்கிறோம். மோட்டார் பைக்கிற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் 60 கிலோமீட்டர் ஓடும் என்பது போல, நம் உடலில் இந்தச் சத்துக்களைப் போட்டால் ஆரோக்கியம் என்று புரிந்து வைத்திருக்கிறோம். அப்படியானால் நம் உடலிற்கு இந்த குறிப்பிட்ட சத்துக்களை அளிப்பதற்காகவே தினசரி உணவை உண்கிறோம். அதற்குப் பதிலாக குளுக்கோசும், கால்சியமும், புரோட்டீனும், பிற சத்துக்களும் அடங்கிய மாத்திரைகளையோ அல்லது செயற்கைத் தயாரிப்புக்களையோ உணவிற்குப் பதிலாக எடுத்துக்கொண்டால் போதுமல்லவா?

இவ்வாறு உணவிற்குப் பதிலாக செயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட / பிரித்தெடுக்கப்பட்ட சத்துக்களை நாம் சாப்பிட்டு வந்தால் நோய் வாய்ப்படுவோமே தவிர ஆரோக்கியமாக இருக்கமுடியாது என்பது நம் ஒவ்வொருவருக்கும் தெரியும். ஆனால் இதே சத்துக்களை உணவு மூலம் எடுத்துக்கொள்ளலாம் என்று உடலை இயந்திரமாக யோசிக்கும் அதே தன்மையில் பட்டியலை வைத்திருக்கிறோம்.

அப்படியானால், தேவைக்குத் தகுந்த சத்தான உணவுகளை எப்படித் தேர்வு செய்வது? இதைப்புரிந்து கொள்ள கால்சியத்தை எடுத்துக் கொள்வோம். நம் உடலில் கால்சியம் உள்ள பகுதிகள் எவை? பற்கள், எலும்புகள் இன்னும் பல. இந்த எலும்புகள் நமக்கு முதன்முதலில் எவ்வாறு தோன்றின? தாயின் வயிற்றில் சிசுவாக இருந்தபோது ஸ்கேன் மூலமாக எலும்பு வளர்வதைக் கண்டுபிடித்து கிலோக் கணக்கில் கால்சியம் கொடுத்தோமா? தசை வளர்வதற்கு புரோட்டீனும், உடல் சக்திக்கு குளுக்கோசும் அளந்து அளந்து கொடுத்துக் கொண்டிருந்தோமா? அப்படி நாம் கொடுத்துத்தான் சிசுவை வளர்க்க வேண்டும் என்று இருந்தால் கால்சியத்தை கண்டுபிடிக்காத நூறு வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் எல்லாம் எலும்புகள் இல்லாமலா பிறந்தன?

உடல் தன்னுடைய தேவைகளை தானே உருவாக்கிக் கொள்கிறது. அப்படி உருவாக்கிக் கொள்வதற்காக உணவு அவசியம். உணவில் இருக்கும் சத்துக்களை நாமே தீர்மானித்துக் கொண்டு உடலுக்குத் தரவேண்டிய அவசியமில்லை. உடலின் தேவைக்குத் தகுந்தாற்போல் உணவை உண்டு வந்தால் – உடல் அதன் தேவைகளை தானே உருவாக்கிக் கொள்ளும். உதாரணமாக நாம் கால்சியம் சத்துத் தேவைக்காக என்ன வகையான உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்கிறோம்? பால் , முட்டை போன்றவற்றைத்தான் நாம் கால்சியத்திற்காக உண்டுவருகிறோம். பாலில் கால்சியம் இருப்பது உண்மைதான். ஆனால் அந்தப் பாலை நமக்குத் தந்த மாட்டிற்கு யார் கால்சியம் தந்தது? தினசரி மாட்டின் உணவுகளில் கால்சியம் சத்துள்ள உணவை கொடுத்துத்தான் நாம் கால்சியம் உள்ள பாலைப் பெறுகிறோமா? மாடு அதிகமாக உண்ணும் புல்லில் மெக்னீசியம் தான் இருக்கிறது. மெக்னீசியத்தை மாட்டின் உடல் தன் தேவைக்கு கால்சியமாக மாற்றிக்கொள்கிறது. அதே போல முட்டையில் கால்சியம் இருப்பது உண்மைதான். ஆனால் முட்டையிடும் கோழிக்கு நாம் கால்சியம் தந்தோமா? இல்லை. தன்னுடைய அன்றாட உணவுகளில் இருந்து கால்சியத்தை உற்பத்தி செய்துகொள்கிறது கோழியின் உடல். தாவரங்கள் தங்களுடைய தேவைகளுக்காக சூரிய ஒளியில் இருந்து ஸ்டார்ச்சை தயாரித்துக் கொள்ளும் என்பதை பள்ளிப் பாடங்களில் படித்திருக்கிறோம். அப்படியானால், கால்சியத்தை தானே தயாரித்துக் கொள்ளும் மாட்டின், கோழியின் உடல் அறிவை விடவும், ஸ்டார்ச்சை தானே தயாரித்துக் கொள்ளும் தாவரத்தின் அறிவை விடவும் மனித உடல் அறிவு குறைவானதா? 1959 ஆம் ஆண்டு இவற்றை ஆய்வு செய்த உயிரியல் விஞ்ஞானி டாக்டர். லூயி கேர்வரான் மனித உடலுக்கு தனக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ளும் ஆற்றல் உண்டு என்பதை தன் ஆய்வுகள் மூலம் நிரூபித்தார்.

உணவுகளில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதை நாம் ஆய்வுக்கூடங்களில் ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் வேதியியலை விட, உடல் தேவைகளை தானே உருவாக்கிக்கொள்ளும் உயிர் வேதியியல் இயற்கையானது. உடலின் தேவை கருதி, தேவையான அளவிற்கு நமக்குப் பிடித்த உணவுகளை உண்டு வந்தால் போதும். உடல் தனக்குத் தேவையான எல்லா சத்துக்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ளும். ஒவ்வொருவரும் அவரவருடைய உடலின் தேவையைப் பின்பற்ற வேண்டுமே தவிர பொதுவான உணவுகளை நாமே ஏற்படுத்திக்கொண்டு அவற்றைப் பின்பற்றுவது ஆரோக்கியத்தப் பெற வழிவகுக்காது.
« Last Edit: January 30, 2013, 01:25:55 PM by blackguard »

Offline blackguard

Re: மாற்றை நோக்கிய பயணம்
« Reply #3 on: January 24, 2013, 06:13:35 PM »
வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...?

- ஹீலர்.R.கார்த்திகேயன்.,M.Acu.

மேல் உள்ள கேள்விகளுக்கு, வலி நல்லது... என்ற பதிலை சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும் [இத சொல்லவா கூப்பிட்ட என்று மனசுக்குள்ள திட்டாதிங்க], ஆம். ஆனால் இது உண்மை இதற்கான விளக்கத்தை கட்டுரையின் இடையில் பார்போம்.

<a href="http://2.bp.blogspot.com/-dvv0LCzqfq4/T-RQkVL6ggI/AAAAAAAAAFA/QMEVtWsl7i4/s640/pain.jpg" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://2.bp.blogspot.com/-dvv0LCzqfq4/T-RQkVL6ggI/AAAAAAAAAFA/QMEVtWsl7i4/s640/pain.jpg</a>

இன்று அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் பல நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் வலி சம்பந்தப்பட்ட அறிகுறிகளை கொண்டுள்ளனர், எடுத்துகாட்டாக : தலைவலி, இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி, கழுத்துவலி, தசை இறுக்கம், ..... என்று பல வலிகளை கூறலாம். இவர்கள் அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் முன்னர் ஆங்கில மருத்துவத்தில் சிகிச்சை எடுத்தவர்களே பெரும்பாலனவர்கள்.

முதலில் வலி என்றால் என்ன என்பதனை அறியும் முன்னர் இதற்கு ஆங்கில மருத்துவம் சொல்லும் காரணங்களும் அவை தரும் சிகிச்சையும் என்ன என்பது பற்றி பார்ப்போம்.

நமக்கே நன்றாக தெரியும், அதிகம் வெய்யிலில் போவதால், அதிகம் பசிக்கும் போது சாப்பிடாமல் இருப்பது அல்லது அளவுக்கு அதிகம் சாப்பிடுவது, ஒன்று இரண்டு நாட்கள் மலம் கழிக்காத போது இப்படி பல சூழல்களில் தலைவலி எற்படுகிறது. ஆனால் தலைவலிக்கு தலை மட்டுமே காரணம் என்று நினைத்து அதனை மட்டுமே சுற்றி சுற்றி வருவது எந்த காலத்திலும் நோயை குணப்படுத்த உதவாது.

இதே போல மூட்டு வலி. இன்று பலர் இந்த நோயால் அவதிப்படுவதை நாம் கண்கூட பார்கிறோம், இதற்கு ஆங்கில மருத்துவம் ஆரம்ப காலங்களில் வலி மாத்திரையை கொடுக்கிறது [வலி மாத்திரைகள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றி பின்பு பார்க்கலாம்..]. சில நாட்கள் குணம் அடைந்தது போல தெரிந்தாலும் பின்பு மீண்டும் நோய் தீவிரம் அதிகரிக்கிறது. இப்போது X-Ray, Scan மற்றும் அனைத்து டெஸ்ட்டும் செய்து பார்த்துவிட்டு [ஏன் இந்த டெஸ்ட்கள் செய்வதற்கு முன்பு தெரியாதா நம்மால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது என்று – என்ன செய்ய பல லட்சம் செலவு செஞ்சு வாங்கியத என்ன பண்ண], உங்க மூட்டு தேய்ந்து விட்டது இனி அதை சரி செய்ய முடியாது என்று கூறி, இதற்கு ஒரே தீர்வு “மூட்டு மாற்று அறுவை சிகிச்சை” என்று இருந்த மூட்டையும் மாற்றி விடுவது எப்படி ஒரு சிறந்த சிகிச்சை ஆகும் என்றுதான் புரியவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் பலருக்கும் மூட்டு மாற்றிய பின்னும் வலி தொடர்வதும், படி ஏறக் கூடாது, காலை மடித்து உட்காரக்கூடாது என்று கூறுவதும் வேதனைக்கு உரியது.

சரி இப்போது மருந்துகளின் கொடூரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...

<a href="http://1.bp.blogspot.com/-MJHOKChZ-PU/T-RTGO_OROI/AAAAAAAAAFQ/3bnI9Fm_Eu8/s400/prescription-pills-death.png" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://1.bp.blogspot.com/-MJHOKChZ-PU/T-RTGO_OROI/AAAAAAAAAFQ/3bnI9Fm_Eu8/s400/prescription-pills-death.png</a>

ஒரு நோயை [வலியை] சரி செய்ய இரண்டு முறைகள் உள்ளது. ஒன்று அந்த நோய் ஏன் ஏற்படுகிறது, அதற்கு காரணம் என்ன, என்பது பற்றிய தெளிவு இருந்தால் அந்த காரணத்தை [நோய் என்பது ஒன்றே ஒன்றுதான் அதுதான் இந்த மூலகாரணம்] சரி செய்வதன் மூலம் நோய் அறிகுறிகளான வலிகள் மற்றும் பல அறிகுறிகளை சரி செய்து விடலாம் [இந்த அறிகுறிகளைத்தான் ஆங்கில மருத்துவம் நோய் என்று நினைக்கிறது]. ஆனால் எந்த ஒரு மருத்துவ இயந்திரமும் நோயின் மூலகாரணத்தை கண்டறிய முடியாது [என்றாவது மனிதனின் அடிப்படை தேவைகளான/உணர்வுகளான பசி-தாகம்-தூக்கம்-சோர்வு-வலிகள் இவற்றை அளவிட மருத்துவ உபகரணங்கள் உள்ளதாக நாம் கேள்விப்பட்டு இருக்கிறோமா..?]. எனவே ஆங்கில மருத்துவம் இரண்டாவது முறையை கையில் எடுக்கிறது, நோயாளிகளின் உடலை/உயிரை பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல்..!

அது தான் வலி மாத்திரைகள். வலி மாத்திரைகள் அவ்வளவு கொடுமையானதா என்றால், நிச்சயம் ஆம் என்றுதான் கூற வேண்டும். ஏன் என்றால் நாம் சாப்பிடும் மாத்திரைகள் எப்படி வலியை சரி செய்கிறது என்பதே இதற்கு பதில்...!


<a href="http://2.bp.blogspot.com/-hW-Fm7n2uTQ/T-RTfjLEVgI/AAAAAAAAAFY/tirpaT1Hqto/s400/adam_hypothalamus_pituitary_17135.jpg.jpg" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://2.bp.blogspot.com/-hW-Fm7n2uTQ/T-RTfjLEVgI/AAAAAAAAAFY/tirpaT1Hqto/s400/adam_hypothalamus_pituitary_17135.jpg.jpg</a>

நம் தலையில் Pituitary Gland என்ற சுரப்பிக்கு அருகில் Hypothalamus என்ற ஒரு பகுதி உள்ளது. இது நம் உடலில் ஏற்படும் உணர்வுகளில் ஒன்றான வலிகளை மூளைக்கு தெரிவிக்கிறது. எனவே மருந்துகளை கொடுத்து இந்த Hypothalamus இன் செயல்பாட்டை நிறுத்தி வைத்தால் வலிகள் மூளைக்கு எட்டுவது நிறுத்தப்படும் [என்ன ஒரு வில்லத்தனம்]. ஆகமொத்தம் வலி உடலில் இருக்கும், வலிக்கான காரணிகளும் உடலிலேயே இருக்கும் ஆனால் வலியை மட்டும் உணராமல் வைக்கபடுகிறது.

அப்படி என்றால் உடல் எவ்வளவு நேரம் வலி இல்லாத இந்த நிலையிலேயே இருக்கும்..?

நம் உடல் ஒரு அற்புதமான கட்டமைப்புடன் செயல்படுகிறது, எனவே அது நல்ல நிலையில் உள்ள போது எந்த ஒருரசாயணங்களுக்கும் கட்டுப்படுவது இல்லை. எனவே தான் தினம் தினம் மாத்திரைகள் எடுக்கும் தேவை அதிகரிக்கப்படுகிறது. தொடர்ந்து மாத்திரைகள் எடுக்கும் போது உடலின் இந்த கட்டமைப்பு சின்னாபின்னம் செய்யப்படுகிறது. இப்போது பலருக்கு உடலில் ஏற்படும் பல உணர்வுகள் குறைபடுகிறது, காலில் ஒரு முள் குத்தினாலோ அல்லது ஒரு கல் பட்டு காயம் ஏற்பட்டாலோ கூட தெரிவது இல்லை. இரத்தம் வெளியேறிய பின்பு யாராவது சுட்டிக்காட்டினால் மட்டுமே அவர்கள் சுதாரிப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம்.

இது மட்டும் அல்ல, தொடர்ச்சியாக மருந்துகள் எடுப்பவர்களுக்கு சில நாட்களுக்கு பின்னர் அதிக கோபம், பயம், கண் எரிச்சல், தெளிவற்ற சிந்தனை, ஆண்மை குறைவு, கர்ப்பப்பை பிரச்சனைகள், தூக்கமின்மை, பசியின்மை, இடுப்புவலி, புதிய இடங்களில் வலிகள் என்று பல புதிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு காரணம் நம் உடலில் உள்ள பிரதான உறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் குறைய தொடங்குவதே ஆகும். காரணம் உடல் ஒருபோதும் ரசாயனங்களை நோய் தீர்க்கும் சக்திகளாக எற்றுகொள்வது இல்லை. இதற்கு ஒரு உதாரணம் அக்குபங்சர் சிகிச்சை மேற்கொள்ளும் பல நோயாளிகள் அவர்களின் உடல் கழிவுகள் வெளியேறும் போது சிறுநீர் மஞ்சள் நிறமுடனோ அல்லது மருந்துகளின் நாற்றமுடனோ வெளியேறுவதாக கூறும்போது நாம் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. அது.., உடல் நோயெதிர்ப்பு சக்தி பெறும்போது மருந்துகளை சக்திகளாக நினைத்து இருந்தால் அவற்றை ஜீரணித்து தன் தேவைக்கு உபயோகம் செய்திருக்கும். ஆனால் நடந்ததோ நேர் மாறானது, உடல் சக்தி பெறும்போது தனக்குள் தேங்கிய ரசாயண மருந்துகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவது, உடல் ரசாயண மருந்துகளை புறக்கணிக்கிறது என்பதை ஆதாரமாக காட்டுகிறது.

சரி இப்போது மீண்டும் மேல் உள்ள கேள்விகளுக்கே வருவோம்...


வலிகள் என்றால் என்ன, அவை ஏன் ஏற்படுகின்றன...?

முதலில் ஏன் வலிகள் ஏற்பட வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும், உடலில் கழிவுகள் தேக்கம் அடையும்போதும், உடலில் உள்ள சக்தியோட்ட பாதைகளில் தடைஎற்பட்டு உடலின் சமநிலை [பஞ்சபூத உறுப்புகளின் இயக்கம்] மாறுபடும்போதும் உடல் அதனை பல அறிகுறிகளாக வெளிப்படுத்தும் அவற்றில் ஒன்றுதான் வலிகள். அதுவும் நமக்கு பிற்க்காலத்தில் ஏற்படும் பெரிய நோயை தடுக்கும் ஒரு முன் அறிவிப்பே..! முனறிவிப்பு எப்படி நோயாகும். எனவேதான் அதனை, வலி நல்லது... என்று மேலே குறிபிட்டுள்ளேன்.

அப்படியென்றால், மேலே உள்ள அனைத்து வியாதிகளையும் நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா..?

தலைவலிக்கு அடிப்படை கல்லிரலின் இயக்க குறைபாடாக இருக்க பெரும்பகுதி வாய்ப்பாக உள்ளது. இதனை சரியாக உணர அக்குபங்சர் நாடியரிதல் முறையோ அல்லது கேட்டறிதல் முறையோ உதவியாக இருக்கிறது. [கீழ் உள்ள வீட்டுகொரு மருத்துவர் புத்தகத்தில் உள்ள தகவல்களை வைத்து, இந்த கேட்டறிதல் முறையில் உங்களுக்கு நீங்களே சுய சிகிச்சை செய்துகொள்ள முடியும். இந்த புத்தகத்தை இலவச டவுன்லோட் செய்ய இந்த லிங்கில் செல்லவும் : http://rkacu.blogspot.in/p/free-e-books-download.html

<a href="http://2.bp.blogspot.com/-HR97TlZP3-Q/T-RY09iBgJI/AAAAAAAAAFs/7DdjCWkCzGo/s400/vm.jpg" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://2.bp.blogspot.com/-HR97TlZP3-Q/T-RY09iBgJI/AAAAAAAAAFs/7DdjCWkCzGo/s400/vm.jpg</a>

மூட்டு வலிக்கு காரணம், மூட்டு தேய்வது இல்லை மாறாக, மூட்டுகளை சுற்றி உள்ள தசைநார்கள் பலம் இழப்பதும், மூட்டுகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு பகுதியில் நீர் தன்மை குறைவதால் அவை சுருங்கி விரியும் தன்மையை இழந்து இரு எலும்புகளும் உறைவதால் வலி ஏற்படுகிறது. இதற்கு உதவியாக உள்ள உள்ளுறுப்புகளை சரியான சிகிச்சை மூலம் பலப்படுத்துவதால், இன்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இருந்த பல நோயாளிகள் அதனை தவிர்த்து, முழு குணம் பெறுவதனை அக்குபங்சர் மருத்துவர்களான நாங்கள் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். இது போன்ற அடிபடையில் தான் அனைத்து வலிகளும் ஏற்படுகின்றன. அதனை புரியாமல் நோய் அறிகுறிகளை மட்டும் தடுப்பதால், உடலினுள்ளே கழிவுகள் மேலும் மேலும் அதிகரிக்கும்போதுதான் உள்ளுறுப்புகள் செயல் இழக்கின்றன. இப்போதுதான் மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்ற ஒன்று தேவை என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது.


<a href="http://3.bp.blogspot.com/-TgPNB-dz-B0/T-RRGqSJjDI/AAAAAAAAAFI/a_YadsSOXcI/s640/Painkillers-3.jpg" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://3.bp.blogspot.com/-TgPNB-dz-B0/T-RRGqSJjDI/AAAAAAAAAFI/a_YadsSOXcI/s640/Painkillers-3.jpg</a>

எங்களிடம் அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் முதலில் நாங்கள் செய்யச் சொல்லும் விஷயம் மருந்துகளை [ரசாயண விஷங்களை] நிறுத்துங்கள் என்றுதான்...! இப்போது உடல் சக்தி பெறப்பெற தனக்குள் தேங்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றும், இப்போது மருந்துகளின் கட்டுப்பாட்டில் இருந்த Hypothalamus மீண்டும் புத்துணர்வு பெரும். இந்த நிலையில்தான் நோயாளிகள் மீண்டும் வலி அதிகரிப்பதனை உணர்வார்கள். ஏன் வலி அதிகரிக்க வேண்டும் என்றால், உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் இப்போது தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளித்தள்ள முயற்சி செய்யும்.. இந்த நிலையில் வலி அதிகரிக்கும், பசி குறையும், சிலர் இரவு நேரங்களில் தான் அதிகம் வலிகளை உணர்வார்கள். காரணம் உடல், இயக்கம் இல்லாத இந்த நிலையில் தான் தன்னுடைய முழு சக்தியையும் நோயை எதிர்த்து போராட உபயோகிக்கும். ஒரு சிலருக்கு இடுப்பிலும் வலிகள் அதிகரிக்கும், காரணம் இதுவரை சாப்பிட்ட மருந்துகள் சிறுநீரகத்தை பளுதுபடுத்தி இருக்கும் இதனை உடல் சரி செய்யும் முயற்சிதான் இந்த வலி. இந்த வலிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இப்போது வலிகள் மட்டும் அல்லாமல், உடலில் இருந்த நோய்கள் என்று நாம் நினைக்கும் பல அறிகுறிகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பிக்கும். கடைசியில் மிஞ்சுவது முழுமையான ஆரோக்கியம் மட்டுமே. காரணம் உடல் என்றுமே தவறு செய்வது இல்லை...! உயிரின் வேலை, உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றி அந்த உடலை என்றுமே ஆரோக்யமாக வைத்துகொள்வது மட்டுமே கடமையாக நினைக்கிறது.

எங்களிடம் அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் முதலில் நாங்கள் செய்யச் சொல்லும் விஷயம் மருந்துகளை [ரசாயண விஷங்களை] நிறுத்துங்கள் என்றுதான்...! இப்போது உடல் சக்தி பெறப்பெற தனக்குள் தேங்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றும், இப்போது மருந்துகளின் கட்டுப்பாட்டில் இருந்த Hypothalamus மீண்டும் புத்துணர்வு பெரும். இந்த நிலையில்தான் நோயாளிகள் மீண்டும் வலி அதிகரிப்பதனை உணர்வார்கள். ஏன் வலி அதிகரிக்க வேண்டும் என்றால், உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும் இப்போது தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளித்தள்ள முயற்சி செய்யும்.. இந்த நிலையில் வலி அதிகரிக்கும், பசி குறையும், சிலர் இரவு நேரங்களில் தான் அதிகம் வலிகளை உணர்வார்கள். காரணம் உடல், இயக்கம் இல்லாத இந்த நிலையில் தான் தன்னுடைய முழு சக்தியையும் நோயை எதிர்த்து போராட உபயோகிக்கும். ஒரு சிலருக்கு இடுப்பிலும் வலிகள் அதிகரிக்கும், காரணம் இதுவரை சாப்பிட்ட மருந்துகள் சிறுநீரகத்தை பளுதுபடுத்தி இருக்கும் இதனை உடல் சரி செய்யும் முயற்சிதான் இந்த வலி. இந்த வலிகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இப்போது வலிகள் மட்டும் அல்லாமல், உடலில் இருந்த நோய்கள் என்று நாம் நினைக்கும் பல அறிகுறிகள் ஒவ்வொன்றாக மறைய ஆரம்பிக்கும். கடைசியில் மிஞ்சுவது முழுமையான ஆரோக்கியம் மட்டுமே. காரணம் உடல் என்றுமே தவறு செய்வது இல்லை...! உயிரின் வேலை, உடலில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்றி அந்த உடலை என்றுமே ஆரோக்யமாக வைத்துகொள்வது மட்டுமே கடமையாக நினைக்கிறது.

இன்னொரு உண்மை என்னவென்றால், உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகாரம் செய்யப்பட 112 வகையான மருத்துவ முறைகளில் [அக்குபங்சர், ஆங்கில மருத்துவம் உட்பட] ஒன்றுகூட எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது. உடல் தன்னை தானே குணப்படுதிக்கொள்ளும், மருத்துவத்தின் வேலை உடலின் இயக்கங்களை முழுமையாக புரிந்துகொண்டு பக்கத்துணை நிற்பதுமட்டுமே.
அதனை விட்டுவிட்டு, உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நினைக்கும் எந்த மருத்துவத்தாலும், எந்த ஒரு நோயையும் கட்டுப்படுத்தவோ அல்லது குணப்படுதவோ எள்ளளவும் சாத்தியக்கூறு இல்லை.

பசி – தாகம் – தூக்கம் – சோர்வு போன்ற உடலின் அடிப்படை தேவைகளை உடல் நம்மிடம் எதிர்பார்க்கும்போது, அதனை முறையாக கவனித்து அந்த தேவைகளை பூர்த்திசெய்து வந்தால், நிச்சயம் அக்குபங்சர் உட்பட எந்த ஒரு மருத்துவமும் மனித உடலுக்கு தேவையே இருக்காது. காரணம் நம் உடலில் உள்ள உயிரின் வேலை, எப்போதும் தான் அந்த உடலில் உள்ளவரை அதில் உள்ள நோய்களை களைந்து அந்த உடலுக்கு நலனை கொடுபதுமட்டுமே....! இதனை கவனிக்க தவறியவர்களுக்கு மட்டுமே மருத்துவம் தேவைப்படுகிறது...

வீட்டுகொரு மருத்துவர் புத்தகத்தின் ஆசிரியர் -ஹீலர்.உமர் பாரூக் அவர்களின் மற்ற புத்தகங்களை இந்த லிங்கில் http://www.rkacu.blogspot.in/p/free-e-books-download.html சென்று இலவச டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
« Last Edit: January 30, 2013, 01:28:59 PM by blackguard »

Offline blackguard

Re: மாற்றை நோக்கிய பயணம்
« Reply #4 on: January 31, 2013, 04:03:48 PM »
உண்மையில் நோய் என்றால் என்ன...?

- ஹீலர்.R.கார்த்திகேயன்.,M.Acu.

உடலில் கழிவுகள் தேக்கமே நோய், அதனை உடலே வெளியேற்ற எடுக்கும் முயற்சியே நோய் அறிகுறிகள், நோய் ஒன்றே ஒன்றுதான் ஆனால் அது வெளியேறும் முறைகளை பொருத்து அதன் அறிகுறிகள் பல தோன்றும், அந்த அறிகுறிகளை நோய் என்று நினைக்கும் ஆங்கில மருத்துவம் முதலில் மருந்துகளை கொடுத்து அந்த அறிகுறிகளை மறைக்க பார்க்கின்றது. ஆனால் இந்த ஆங்கில மருந்துகள் அனைத்தும் வியாதியை [அறிகுறியை] அப்போதைக்கு மறைத்து மட்டுமே வைக்கும் குணபடுத்த முடியாது.

<a href="http://4.bp.blogspot.com/-NUHp937n8Mk/T-RMpl4oVMI/AAAAAAAAAE0/f8Bb6Lz0zEw/s640/disease.jpg" target="_blank" rel="noopener noreferrer" class="bbc_link bbc_flash_disabled new_win">http://4.bp.blogspot.com/-NUHp937n8Mk/T-RMpl4oVMI/AAAAAAAAAE0/f8Bb6Lz0zEw/s640/disease.jpg</a>

[இதனால்தான் ஆங்கில மருத்துவம் எந்த ஒரு நோயையும் குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்று கூறுகிறது. - உண்மையில் ஒரு நோயை கட்டுப்படுத்த முடிந்தால் அதனை குணபடுத்தவும் முடியும் அல்லவா...? எனவேதான் இந்த மருத்துவத்தில் வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்கவேண்டி உள்ளது.]

இதனால் உடலில் மேலும் மேலும் கழிவுகள் தேங்கும், இத்துடன் உடல் ஏற்றுக்கொள்ளவே முடியாத ரசாயன மருந்துகளை கொடுப்பதால், உடலில் ஏற்கனவே இருந்த கழிவுகளுடன் இப்போது இந்த புதிய ரசாயன கழிவுகளும் சேர்ந்துகொள்ளும். இப்போதும் உடல் தனக்குள் தேக்கப்பட்ட கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது, ஆனால் இந்த முறை சற்று கடினமாக வெளியேறுகிறது. முன்பை விட சில புதிய அறிகுறிகள் வெளிப்படுகிறது. இதனை உணராமல் இப்போது மருத்துவம் அதற்கு வேறு ஒரு பெயர் வைத்து அதற்கும் அதே ரசாயனங்களை தான் கொடுக்கிறது, [எடுத்துகாட்டாக: ஒவ்வாமை [Allergy], மற்றும் வேறு சில புதிய பெயர்களை கூறி அதற்கும் ஒரு புதிய மருந்தை கொடுக்கிறது.]

இந்த நிலை மேலும் தொடரும்போது கழிவுகளை உடலை விட்டு நீக்க வேண்டிய உறுப்புகளின் [கல்லீரல், சிறுநீரகம்] இயக்கம் குறையும் இதனையும் மருந்துகளை கொடுத்து சரிசெய்ய முயற்சிக்கும் மருத்துவம் தோற்று, அந்த உறுப்பு கெட்டு போய்விட்டது என்று கூறி அந்த உறுப்பையே வெட்டி எறிந்துவிட்டு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை என்னும் பெயரில் மற்றவரின் உறுப்புகளை வெட்டி வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது, ஆனால் இதனையும் தன்னுடையது அல்ல என்று அடையாளம் கண்டுகொண்ட உடல் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் போது அதனையும் நிராகரிக்கும். [மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தொடர்ந்து மருந்து எடுப்பது இந்த நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கி வைக்கவே என்பதை இங்கு கவனிக்க வேண்டும் – மேலும் : https://www.facebook.com/photo.php?fbid=138366736293734&set=a.109234725873602.10012.100003612254243&type=1


[இந்த கட்டுரையை எழுதும் போது என்னை பார்க்க வந்த ஒரு நோயாளியை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகிறேன்: சுமார் 60 வயது மதிக்க அவர், ஒரு நுரையீரல் புற்றுநோயாளி, அவருக்கு ஆங்கில மருத்துவத்தில் கொடுத்த சிகிச்சை, ஸ்கேன் செய்து விட்டு Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியின் ஒரு பகுதியை வெட்டி உள்ளனர். பின்பு இதனை சரிசெய்ய முடியாது என்று கூறி அனுப்பி விட்டனர். ஏன், இந்த நோயை ஆங்கில மருத்துவம் குணபடுத்த முடியாது என்பது அந்த Test செய்யும் முன்பே தெரியாதா..? இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், உண்மையில் புற்றுநோய் என்றால் என்ன என்பதனை உணரவேண்டும் – மேலே கூறியபடி உடலில் தொடர்ந்து கழிவுகள் தேக்கப்படும்போது உடல் அதனை வெளியேற்ற போதுமான சக்தி இல்லாவிட்டால், அந்த கழிவுகள் உள்ளுறுப்புகளை பாதித்துவிடும் என்று அறிந்த உடல் அதனை ஒரு கட்டியாக ஒன்று திரட்டி, அதன் மேலே ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கி ஒரு பகுதியில் ஒட்டவைக்கிறது. இந்த நிலையில் அந்த உடலுக்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தால் நிச்சயம் அந்த கட்டியை கரைத்து அந்த கழிவை வெளியேற்றும் தகுதியுடன் இருக்கிறது. ஆனால் இந்த நிலையில் ஆங்கில மருத்துவம் Biopsy test என்னும் பெயரில் அந்த கான்சர் கட்டியை வெட்டி துளை இடுவது அந்த கழிவுகள் உடல் முழுமைக்கும் பரவ ஏதுவாக இருக்கும். பின்பு எப்படி அதனை குணப்படுத்த முடியும்]

இப்படிதான் உடலின் [உயிரின்] எந்த ஒரு உணர்வையும் புரிந்து கொள்ளாத மருத்துவத்திடம் சிக்கி நோயுடன் போராடும் காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறதே தவிர. ஆரோக்கியம் என்றும் நிலைபடுவது இல்லை. இந்த மருத்துவம் தன் போக்கை மாற்றாத வரை பல உயிர்கள் பலி ஆவதை யாராலும் மறுக்க முடியாது...

# ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை என்பதையும், அந்த நோய்களைக் குணப்படுத்துவோம் என்று சொல்லக்கூடாது என்றும் இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்தைப் பற்றியும் இந்த லிங்கில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் :http://rkacu.blogspot.in/2012/04/51.html

# செல்கள் எவ்விதம் இயங்குகின்றன? என்ற கேள்விக்கு இன்றைய நவீன விஞ்ஞானம் ஜீன்களை காரணமாகக் கூறுகிறது. ஆனால் மனிதனைக் கட்டுப்படுத்துவதாக நம்பப்படும் ஜீன்கள் மனித சிந்தனைகளால், நம்பிக்கையால் எவ்வாறு மாற்றம் பெறுகின்றன? என்பதை அமெரிக்க ஆய்வாளர் டாக்டர்.புரூஸ் லிப்டன் தன் கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபித்து வருகிறார். இந்த உரைகளை தெளிவாக புரிந்துகொள்வதன் மூலம் உண்மையான உடல் இயக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடியும்
.



Offline blackguard

Re: மாற்றை நோக்கிய பயணம்
« Reply #5 on: February 01, 2013, 03:54:57 PM »
மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா?

ஹீலர். அ. உமர் பாரூக்

(தற்போது அக்குபங்சர் மருத்துவராக இருக்கும் ஹீலர்.அ.உமர் பாரூக் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பவியலில் பட்டயம் பெற்றவர்.
சார்பு மருத்துவக் கல்வி நிறுவனத்தில் ரத்தவியல் துறையில் பணியாற்றியவர்.)



மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா என்ற கேள்வியே நம்மை அச்சுறுத்தும் தன்மையில் அமைந்துள்ளது. ஏனென்றால் அந்த மருத்துவ ஆய்வுக்கூடங்களின் முடிவுகளை நம்பியே நம் சிகிச்சைகள் அனைத்தும் அமைந்துள்ளன. இப்படி அடிப்படையிலேயே சந்தேகம் எழுப்பினால் அச்சம் வருவது இயல்புதான்.

நம் உடலின் ஆரோக்கியம் சரியாக இருக்கிறதா, இல்லையா என்பதில் துவங்கி, என்னென்ன நோய்கள் நம் உடலில் குடியிருந்து கொண்டிருக்கின்றன, எந்தெந்த உறுப்புகளை அறுவை சிகிச்சையில் நீக்கலாம் என்பது வரை தீர்மானிக்கும் சக்தியாக நாம் நம்புவது இந்த மருத்துவ ஆய்வுகளைத்தான். கடவுளை நம்பாத மனிதர்கள் கூட உண்டு. ஆனால் டெஸ்டுகளை நம்பாத மனிதர்களே இல்லை என்று கூறுமளவிற்கு நம் நம்பிக்கை பெற்ற ஒன்றாக இந்த நூற்றாண்டில் ஆய்வுக்கூடங்கள் விளங்குகின்றன.

நாம் ஆய்வுக்கூடங்களின் முடிவுகளை ஆய்வு செய்வதற்கு முன்னால் மருத்துவத் துறையின் அறிவுசார் நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்வோம். ஒரு கண்டுபிடிப்பு நிரூபிக்கப்பட்ட பின்னால் பல வருடங்கள் கழித்து அது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அடிப்படை அறிவியலின் வழியில் தவறான ஆய்வுகள் திருத்திக் கொள்ளப்படும். இது அறிவியல் துறைகளுக்கான பொது விதியாகும். ஆனால் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள் .. மருத்துவத்துறையில் இன்று இது நிகழ்கிறதா? போன நூற்றாண்டு வரை மாற்றங்களுக்கு உட்பட்ட மருத்துவ அறிவியல் இன்று எதிர்க்குரலற்று ஒற்றைப் பாதையில் கேள்விகளில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

நுண்ணியிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் பாஸ்டியர் ரத்த வெள்ளை அணுக்கள் உயிரற்றவை என்று கண்டுபிடித்தார். இன்று நாம் அதை நம்புகிறோமா? மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்டிஸ் மனித மூளை சளியால் ஆனது என்று அறிவித்தார். இன்றும் அப்படியேதான் நாம் கூறிக் கொண்டிருக்கிறோமா? வெள்ளை அணுக்கள் உயிருள்ளவை என்பது மட்டுமல்ல அவை எதிப்பு சக்தியின் அடிப்படை என்பதையும், மூளை நரம்பு மண்டலத்தின் தொகுப்பு என்பதையும் நவீன மருத்துவ அறிவியலாளர்கள் இப்போது கண்டுபிடித்துவிட்டார்களல்லவா? அப்படி எதிர் கேள்விகளில் இருந்துதான் மருத்துவ அறிவியல் தன்னை தகவமைத்து வந்திருக்கிறது என்பது வரலாறு. ஆனால் இன்றைய மருத்துவ அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மாற்றான குரல்களை அறிவியலுக்கு எதிராகப் புரிந்து கொள்வதால் அப்படியான குரல்கள் அங்கீகாரம் பெறவில்லை. மாற்று ஆய்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன.

சரி. மறுபடியும் நாம் துவங்கிய இடத்திற்கே வருவோம். மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா? இதற்கு நேரடியாக பதில் கூறுவதாக இருந்தால் - மருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லாது. ஆனால் அவை கூறுவது சிகிச்சைக்குப் பயன்படாது. உடலின் முழுமைத் தன்மையை ஆய்வு முடிவுகளால் தரவே முடியாது.

நாம் இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்வோம். கழிவுகளில் செய்யப்படும் டெஸ்டுகள். அதாவது உடலில் இருந்து வெளியேறும் பொருட்களில் சிறுநீர், மலம், சளி போன்றவற்றில் செய்யப்படும் டெஸ்ட்டுகளைப் பார்ப்போம்.

நம் உடலில் கழிவு உறுப்புகளின் வேலை என்ன? இந்த கழிவு உறுப்புகள் உடலுக்குத் தேவையில்லாத பொருட்களை வெளியில் அனுப்புகின்றன. அதாவது சிறுநீரகத்தின் வழியாக சிறுநீரும், மலக்குடலின் வழியாக மலமும், நுரையீரலின் வழியாக சளியும் உடலின் கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன. உடலால் வெளியேற்றப் பட்ட கழிவுகள் உடலிற்குப் பயன்படாதவைகள். அது மட்டுமல்ல அவை உடலில் தங்கினால் நோய்களையும் தோற்றுவிக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் உடல் அவற்றை வெளியேற்றுகிறது.

உதாரணமாக நம் ரத்தத்தில் பத்து புழுக்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். (பயப்பட வேண்டாம் அப்படியெல்லாம் இருக்காது. சும்மா புரிவதற்காக). ரத்தத்தில் இருக்கும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்ற வேண்டிய வேலை சிறுநீரகத்திற்கும், கல்லீரலுக்கும் இருக்கிறது. நம் ரத்தத்தில் இருக்கும் இந்தப் புழுக்களை வெளியேற்றுவதுதானே உடலிற்கு நல்லது? நம் கழிவு நீக்க உறுப்புக்கள் இந்தப் புழுக்களை அடையாளம் கண்டு கழிவுகளாக வெளியேற்றுகிறது. அப்படி சிறுநீரின் வழியாக இரண்டு புழுக்கள் வெளியேறுகிறது என்று வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு உடலில் இருந்து புழுக்கள் வெளியேற்றப்படுவது நன்மையானது என்பதில் எதுவும் சந்தேகம் இல்லையே? அல்லது புழுக்களை உள்ளேயே வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறதா? கழிவு நீக்க உறுப்புக்களால் கழிவுகள் அடையாளம் காணப்பட்டு அவைகள் வெளியேற்றப்படுகின்றன. உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றவை அனைத்தும் கழிவுகளே.

இப்போது இரண்டு புழுக்கள் சிறுநீரின் வழியாக வெளியேறுகிறது. ஒரு ஆய்வுக்கூட நிபுணர் இதைப் பார்த்து விட்டு கூறுகிறார் – உங்கள் சிறுநீரில் இரண்டு புழுக்கள் இருக்கின்றன. எனவே உங்கள் ரத்தத்தில் இரண்டு புழுக்கள் இருக்கும்” என்று. இது சரியாக இருக்கிறதா? இல்லை. ஏனென்றால் ரத்தத்தில் எவ்வளவு புழுக்கள் இருக்கும் என்பதை சிறுநீரில் வெளிவந்த புழுக்களை வைத்துச் சொல்ல முடியுமா? இப்படித்தான் நம்முடைய ஆய்வுக்கூடங்கள் நம் சிறுநீரைப் பரிசோதித்து கருத்துச் சொல்கின்றன. உங்கள் சிறுநீரில் இரண்டு ப்ளஸ் சர்க்கரை இருக்கிறது. அதனால் அதே அளவு சர்க்கரை உங்கள் ரத்தத்தில் இருக்கும் என்று. இவ்வாறு மலம், சிறுநீர், சளி என்று கழிவுகளில் செய்யப்படும் பரிசோதனைகள் அனைத்தும் இவ்விதமாகவே முடிவுகளை வெளியிடுகின்றன.

ஒருவருக்கு ரத்தத்தில் உப்பு மூன்று ப்ளஸ்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவருடைய சிறுநீரகங்களின் வேலை என்ன? ரத்தத்தில் கழிவாக உள்ள அளவுக்கு அதிகமான உப்பை பிரித்து சிறுநீரில் வெளியேற்றுவது. அப்படி வெளியேற்றப்படும் சிறுநீரில் மூன்று ப்ளஸ் உப்பு இருந்தால் அவர் ரத்தத்தில் எவ்வளவு இருக்கும்? ஆய்வுக்கூடங்கள் கூறுகின்றன மூன்று ப்ளஸ் அப்படியே இருக்கும் என்று. உள்ளிருந்து கழிவுகள் வெளியேற்றப்படும் போது உடலில் கழிவுகள் குறையும் என்பது தானே உடலியல். அதற்கு மாறாக வெளியேற்றப்பட்ட கழிவுகளைக் கொண்டு உடலில் இருக்கும் கழிவுகளை அளவிட முடியுமா?

சரி. அப்படியானால் இந்தக் கழிவுகளை டெஸ்ட் செய்து முடிவுகளை எப்படி சொல்லலாம்? ஒருவருக்கு சிறுநீரில் மஞ்சள் காமாலை கண்டுபிடிக்கப்படுகிறது. அப்படி என்றால் சிறுநீரில் பித்தம் வெளியேற்றப்பட்டு இருக்கிறது என்று பொருள். எங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது? ரத்தத்தில் அளவிற்கு அதிகமாக கலந்து விட்ட பித்தத்தை சிறுநீரகம் அடையாளம் கண்டு வெளியேற்றுகிறது. அப்படி சிறுநீரில் பித்தம் வெளியாகிற போது நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:

1. நம் சிறுநீரகம் மிகச்சரியாக இருக்கிறது. அது சரியாக இருப்பதால் தான் கழிவுகளை உள்ளிருந்து பிரித்து அனுப்புகிறது.

2. ரத்தத்தில் இருக்கும் பித்தம் சிறுநீர் வழியாக வெளியேறத்துவங்கி விட்டது. அதாவது உடல் தன் கழிவு நீக்க வேலையைத் துவங்கி விட்டது. அது விரைவில் முழுமையாக வெளியேற்றிவிடும்.

3. அப்படி சிறுநீரின் மூலம் வெளியேறினால் தான் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

4. எந்த அளவு சிறுநீரில் உள்ள பித்தம் அதிகமாகிறதோ அவ்வளவு நல்லது. ஏனென்றால் ரத்தத்தில் உள்ள பித்தம்தான் நீரின் வழியாக வெளியேறுகிறது. அது விரைவில் வெளியேறினால் ரத்தம் சுத்திகரிப்படையும்.

5. இவ்வாறு நம் கழிவு நீக்க உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றத் துவங்கி விட்டால் நாம் குணமாகி வருகிறோம் என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உடல் கழிவுகளை வெளியேற்றும் அளவிற்கு எதிர்ப்பு சக்தியைப்பெற்று இருக்கிறது என்று மகிழ்ச்சி அடைய வேண்டும்.

மேற்கண்ட உதாரணம் மஞ்சள் காமாலை டெஸ்ட்டிற்கு மட்டுமல்ல. கழிவுகளில் செய்யப்படும் அனைத்து டெஸ்ட்டுகளுக்கும் பொருந்தும். உலகில் இதுவரை எந்த ஆய்வுக்கூடமாவது ஆய்வு முடிவுகளைப் பார்த்து உங்கள் உடல் நன்மை செய்துகொண்டு இருக்கிறது என்றோ, அல்லது எவ்வளவு கழிவு வெளியேறுகிறதோ அவ்வளவு நல்லது என்றோ சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? அப்படி சொன்னால் நமக்கு சிகிச்சை தேவையில்லை. உடலிற்கு துணை நிற்கும் எளிய உணவுகளே போதும் என்று நாம் தெரிந்து கொண்டுவிட்டால் எப்படி வியாபாரம் செய்வது? உலகின் மிகப்பெரிய வியாபாரச் சந்தையாக மருத்துவம் மாற முடியாதே?

நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் செய்யப்படும் எல்லா டெஸ்ட்டுகளும் நம்மை பயமுறுத்தவே உதவி செய்யும். மாறாக உடல்நலனை திரும்பப் பெற உதவாது. கடைசியாக ஒரு தகவல்.

நாம் ஒரு நுகர்வோர் என்ற முறையில் எந்த பொருளாவது, எந்த சேவையாவது குறைபாடாக இருந்தால் வழக்கு தொடுக்க முடியும். இது அடிப்படை மனித உரிமை. ஆனால் உலகில் எங்காவது ஒரு மருத்துவ ஆய்வுக்கூடத்தின் மேல் வழக்குத் தொடரப்பட்டதாகக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அப்படி வழக்குத் தொடர முடியாது. ஏனென்றால் உயிரோடு உள்ள ஒவ்வொரு மனித உடலும் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டே இருக்கும். காலையில் நீங்கள் செய்த டெஸ்ட்டுகள் மாலையில் மாறிவிடலாம். அதுதான் உடலின் இயல்பு என்பது எல்லா மருத்துவ அறிஞர்களுக்கும், மருத்துவ சட்டங்களுக்கும் தெரியும். உங்களையும், என்னையும் போன்ற சராசரி மனிதர்களுக்கு மட்டும்தான் தெரியாது.

விஞ்ஞானிகள் தங்கள் பரிசோதனைக்குப் பயன்படுத்தும் எலிகளிடம் உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தானே?


Offline blackguard

Re: மாற்றை நோக்கிய பயணம்
« Reply #6 on: February 15, 2013, 06:24:18 PM »
பன்றிக்காய்ச்சல் பீதியும் பன்னாட்டு வியாபாரமும்!




மருத்துவர்.அ.உமர் பாருக்

பறவைக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ்... இப்போது பன்றிக் காய்ச்சல்! இப்படி ஒவ்வொருவிதமான பெயர் தாங்கிய நோய்களைப் பற்றி பீதியை கிளப்பு வதும், அதன் மூலம் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலக சுகாதார அமைப்பு (றாடி) மற்றும் அரசாங்கங்களின் தெளிவற்ற நடவடிக்கைகள் மக்களை மேலும் பயமுறுத்துவதாக உள்ளது.
பன்றிக்காய்ச்சல் என்பது இன்று புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட விஷயமல்ல. 1918ல் தோன்றிய ப்ளூ காய்ச்சலில் எச்1என்1 வைரஸின் சாயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1977ல் எச்1என்1, எச்3என்2 போன்ற வைரஸ் கள் காணப்பட்டன. அப்போதிருந்து இது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வரு கின்றன. இன்னும் எவ்விதமான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போது பரிந் துரைக்கப்படும் தமிஃப்ளூ மாத்திரை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகளாக கூறப்படும் சோர்வு, தசைவலி, சளி, இருமல், வாந்தி அல்லது பேதி போன்றவற்றில் ஒன்றிரண்டை போக்கும் என்று கூறப்படுகிறதே தவிர அது குணப்படுத்தும் மருந்தோ, தடுப்பு மருந்தோ அல்ல. ஆனால் மருந்துக் கம்பெனிகள் தங் களுடைய சந்தையை துவங்கிவிட்டன. ஒரு தமிஃப்ளூ மாத்திரையின் விலை 300 ரூபாய். பீதியையும் தேவையையும் பொறுத்து இன்னும் விலை கூடினாலும் ஆச்சரியமில்லை
பன்றிக்காய்ச்சல் பற்றிய ஆய்வுகளின் முடிவுகளும், நடைமுறையும் குழப்பமானவையாக உள்ளன.

* வைரஸ் என்பது உலகிலேயே மிகவும் நுண்ணிய உயிர் என்று ஆங்கில மருத்துவம் கூறுகிறது. இது துணி, முகமூடி போன்றவற்றின் நுண்துளைகளை விடச் சிறியது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பிற்காக எந்தவித பயனுமற்ற முகமூடி களை சந்தையில் உலவவிட்டது யார்?

* பன்றிக்காய்ச்சலுக்கு காரணமான எச்1என்1 வைரஸ் காற்றில் பரவுவதாகக் கூறப்படுகிறது. அப்படி காற்றில் அதி வேகமாகப் பரவும் வைரஸ் ஒரு குடும்பத்தில் ஒரு நபரை மட்டும் தாக்குகிறது. ஒரு ஊரில் 5, 10 பேர்களை மட்டும் தாக்கு கிறது. இன்னும், இலங்கை அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மூன்று லட்சம் சுகாதார வசதியற்றவர்களிடம் ஏன் பரவவில்லை? காய்ச்சல் பற்றிய பீதியும், மருந்து வியாபாரமும் மட்டுமே பரவுகிறது.

* அவ்வப்போது ஏற்படும் பறவைக்காய்ச்சல், டெங்குக்காய்ச்சல், சிக்குன் குன்யா, சார்ஸ் போன்றவற்றிற்கு காரணமாக கூறப்படும் கிருமிகள் எங்கிருந்து வருகின்றன என்பதும், குறிப்பிட்ட காலத்திற்குப்பின் எங்கு செல்கின்றன என்பதும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

* அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மைய அறிக்கைகளின்படி 2005ம் ஆண்டு முதல் 2009 பிப்ரவரி வரை பன்றிக்காய்ச் சலால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமே 12 பேர்தான்! நான்கு ஆண்டுகளில் இல்லாத புதிய வேகம் கிருமிகளுக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது புரியாத புதிர்தான்.

இப்போது கண்டறியப்பட்டுள்ள எச்1என்1 வைரசில் - வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய பன்றிகளின் மரபணுக்களும், பறவைகள் மற்றும் மனித மரபணுக்களும் இணைந்து காணப்படுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் கூறியிருக்கிறது.

மரபணு மாற்ற தொழில்நுட்ப ஆய்வுகளே எச்1என்1 வைரசின் தோற்றத்திற்கும், பெருக் கத்திற்கும் காரணம் என்று கூறுகிறார் தமிஃப்ளூ ஆய்வுக்குழுவின் உறுப்பினர் டாக்டர் ஆஸ்ட்ரோ அட்ரியன் கிப்ஸ்.

இவ்வளவு ஆய்வுகளும் அதன் குழப்பங் களும் ஆங்கில மருத்துவ அடிப்படையிலானவை. மாற்று மருத்துவங்களான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபங்சர் போன்ற மருத்துவங்களை அரசு எப்போதும் போல் இப்போதும் கண்டுகொள்வதில்லை.

காய்ச்சல் என்பது உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்க்கூறுகளை உடலே வெளியேற் றும் முயற்சியாகும். உடலின் எதிர்ப்பு சக்திக் கும் - நோய்க்கூறுகளுக்குமான போராட்டம் தான் வெப்பமாக வெளிப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் என்பதும் நோய்க்கெதிரான உடலின் போராட்டம்தான். உடலிற்கு துணை செய்யும்படியான இயற்கையான சிகிச்சை முறைகளை அரசுகள் பரிந்துரைப்பதுதான் மக்களையும், பொருளாதாரத்தையும் காக்கும் ஒரே வழி! ரசாயனத் தடுப்பு மருந்துகளின் பின்னால் ஓடுவது பன்னாட்டுக்கம்பெனி களை ஊக்குவிப்பதற்கும், பொருளாதார சீரழி விற்கும் வழிவகுக்கும்!



Offline blackguard

Re: மாற்றை நோக்கிய பயணம்
« Reply #7 on: February 19, 2013, 04:13:24 PM »
மருந்துகளிலிருந்து விடுதலை

மருத்துவர்.அ.உமர் பாரூக்


மருந்தில்லா மக்கள் இயக்கம் – பெயரைக் கேட்கவே புதுமையாக இருக்கிறது. மருந்தில்லாத, மருந்துகளைப் பயன்படுத்தாத மக்கள் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இருக்கிறார்களா? அவர்களெல்லாம் நோய் வந்தால் என்ன செய்வார்கள்? உயிர்காக்கும் என்று நம்பப்படுகிற மருந்துகளை ஏன் புறக்கணிக்கிறார்கள்? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு மத்தியில் தமிழகத்தின் பன்னிரண்டு மாவட்டங்களில் மருந்தில்லா மக்கள் இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

1890 களில் இங்கிலாந்தில் ஒரு மக்கள் அமைப்பு உதயமானது. அதன் பெயர் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம் ( Anti Vaccination League) இது எதற்காக தோன்றியது என்பதை அறிந்தால் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். தடுப்பூசி போட்டுக் கொள்ளமாட்டோம் என்றுதான். அப்படியானால் அவர்கள் எல்லாம் எதாவது தீவிர மதநம்பிக்கையாளர்களோ? என்று கேட்க நினைப்போம். 1880 களில் இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளின் காரணமாக ஏராளமான குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் மரணமடைந்தனர். இத்தடுப்பூசி மரணங்கள் குறித்து விசாரிக்க ராயல் கமிஷன் ( நம்மூர் கமிஷன் மாதிரி இல்லை) நிறுவப்பட்டது. விரிவான விசாரணைக்குப் பின்பு பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நஷ்ட ஈடும், தடுப்பூசியின் மீதான தடையும் அங்கு கொண்டுவரப்பட்டது.

தடுப்பூசி வழக்குகளை விசாரிப்பதற்கான தனி நீதி மன்றமும் ( Vaccination Court) ஏற்படுத்தப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் துவக்கியதுதான் தடுப்பூசி எதிர்ப்பு இயக்கம். இது இப்போது 112 நாடுகளில் அமைந்துள்ளது. தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மேலை நாடுகளில் விரிவடைந்துள்ளது. நம் நாட்டில் எந்தவிதமான மருந்துகள் பற்றியும் விழிப்புணர்வின்றி இருக்கிறோம். ரசாயன மருந்துகள் பற்றிய புரிதலை ஏற்படுத்த அமைக்கப்பட்ட இயக்கம் தான் மருந்தில்லா மக்கள் இயக்கம்.

தமிழகத்தின் பசுமைப்புரட்சிக்குப் பின்னால் விவசாயம் குறித்து நமக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாம் வேளாண்மையில் பயன்படுத்திய ரசாயன உரங்கள் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. நம்முடைய பாரம்பரிய நெல் ரகங்களை இழந்தது மட்டுமல்லாமல், நம்முடைய வளமிக்க மண் தன் சுயத்தை இழந்து ரசாயன உரங்களால் சாகத்துவங்கியுள்ளது. பசுமைப்புரட்சிக்கு 40 ஆண்டுகள் கழித்து ரசாயன உரங்கள் நம் மண்ணிற்கு செய்த தீமையை உணர்ந்துள்ளோம். உலகம் முழுவதுமே ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. கேரளா, தமிழகத்தில் எண்டோசல்பான் தடை கோரிய இடதுசாரிகளின் போராட்டங்களும் இக்காலத்தில் குறிப்பிடத்தக்கது. ரசாயன விழிப்புணர்வின் ஒரு மைல் கல்.

எந்த ரசாயனங்களைப் போட்டால் நிலம் கெட்டு அதன் சத்துக்கள் நாசமடைந்ததோ அதே ரசாயனங்களை மருந்து என்ற பெயரில் நம் வயிற்றில் போடுவது குறித்து இப்போதும் நாம் பிரக்ஞையற்று இருக்கிறோம். தினசரி தொலைக்காட்சியிலும், பிற ஊடகங்களிலும் நம் உயிர் வாழ்தல் பற்றிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி சில சத்துக்களை, சில மருந்துகளை நமக்கு பரிந்துரைக்கின்றன மருந்து நிறுவனங்கள். நாமும் எவ்விதமான கேள்வி கணக்குமின்றி வாங்கி, வாங்கி ரசாயனங்களை நாமும் சாப்பிட்டு நம் குழந்தைகளுக்கும் கொடுக்கின்றோம்.

நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மருந்துகள் சத்துக்களின் பெயராலேயே நம் தலையில் கட்டப்படுகின்றன. குறைந்த பட்சம் சத்துக்கள் குறித்த அறிவியல் புரிதல் இருந்தாலே அவற்றைத் தவிர்த்துவிட முடியும்.

ஒரு மனிதனுக்கு அவனுடைய இயக்கத்திற்காக அன்றாடம் சில சத்துக்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றன என்று நவீன விஞ்ஞானம் ஒரு பட்டியலை நம்மிடம் நீட்டுகிறது. அந்தப் பட்டியல் என்ன கூறுகிறது?

கால்சியம் 200 மி.கி.

குரோமியம் 120 மி.கி.

மாங்கனிஸ் 2 மி.கி.

போலிக் அமிலம் 400 மி.கி.

அயர்ன் 7 மி.கி

பாஸ்பரஸ் 45 மி.கி

ஜிங்க் 70 மி.கி.

விட்டமின்களில் 2 மி.கி. முதல் தனித்தனியான அளவுகளில். இன்னும் பல சத்துக்கள் நம் உணவில் அல்லது மருந்துகளில் தினசரி இருந்தே ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

சரி. இச்சத்துக்களை தனித்தனியாக தயார் செய்து ஒரு பொடியை வைத்துக் கொள்ளலாம் அல்லவா? அப்படி தயார் செய்த அந்த ரசாயனப் பொடியை மாத்திரம் தினசரி விஞ்ஞானப் பூர்வமாக உண்டு வந்தால் போதுமல்லவா? உணவு தனியாக தேவைப்படாது தானே? நாம் சாப்பிடுகிற உணவு செரித்து கடைசியில் இவ்வகை சத்துக்களாக மாற்றப்படுவதாக நம் விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால் இந்த சத்துக்களை மட்டும் உண்டு உணவில்லாமல் நம்மால் உயிர்வாழ முடியாது என்பதை நாம் அறிவோம்.

உணவிலிருந்து உடலே தயாரித்து நமக்கு அளிக்கும் இயற்கையான சத்துக்களுக்கும், வேதி வினைகள் மூலமாக ஆய்வுக்கூடங்களில் தயாரிக்கப்படும் செயற்கை ரசாயனச் சத்துக்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. இவ்விதமான ரசாயனங்கள் நம் உடலிற்கு தேவையற்றது; ஊறு விளைவிப்பது.

அதிலும் இந்த ரசாயனச் சத்துக்களை சந்தையில் கூவி விற்கும் மருந்து நிறுவனங்கள் ஒரே பொய்யை மீண்டும் மீண்டும் கூறி வருகின்றன. அதாவது நம் உடலில் சத்துக்கள் குறையுமாம்; ஆனால் கூடாதாம். உதாரணமாக கால்சியம் இருக்கிறது என்றால் கால்சியம் குறைவு பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். கால்சியம் கூடிவிட்டது என்று எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? “மிகினும் குறையினும் நோய்” என்கிறது வள்ளுவம். ஒரு பொருள் குறையும் என்றால் அதிகமாகவும் செய்யும் தானே? ஆனால் கால்சியம் மட்டும் ஏன் அதிகமாவதில்லை? அதெல்லாம் ஒன்றுமில்லை. குறைவு என்று நிறுவனம் சொன்னால் மருந்து விற்பனையாகும். கூடுதல் என்று சொன்னால் என்ன லாபம்?

சமீபத்தில் வெளியான அமெரிக்க புள்ளி விபரம் கூறுகிறது. தேவையற்ற ஊட்டச்சத்து மருந்துகளால் இறந்தவர்கள் பத்து ஆண்டுகளில் பத்து லட்சத்து ஒன்பதாயிரம் பேர். இது யாரோ வெளியிட்ட விபரம் அல்ல. அமெரிக்க முதுநிலை ஆங்கில மருத்துவர்கள் ஐந்து பேர் இணைந்து செய்த ஆய்வில் வெளியான அறிக்கை.

நம் உடல்நலத்திற்காக என்று சொல்லி யாரோ விற்கும் ரசாயனங்களை நம்புவதை விட நம் உடலை நம்புவது நம் தலைமுறைகளைக் காப்பாற்றும். உடலின் இயற்கையான தேவைகளை உணர்ந்து பசி, தூக்கம், தாகம், ஓய்வு போன்றவற்றை தேவைக்கேற்ப உடலிற்கு அளித்து வந்தோமானால் ரசாயன மருந்துகளின் தேவையின்றி முழுமையான உடல்நலம் பெற முடியும்.

Offline blackguard

Alternative therapy - Prayer healing still engrained in Swiss culture
« Reply #8 on: March 22, 2013, 10:49:19 PM »
In some Swiss regions, a patient visiting a doctor with an ailment may be told to consult a prayer healer to speed recovery or ease pain. Such centuries-old healing traditions remain quite strong, but some observers warn of possible misuse.

Olivier Pochon, who lives in canton Fribourg, says he went to a hospital in canton Valais several years ago with a severe second-degree burn on his leg.
 
The burn was painful, and the nurse at the hospital gave his father the phone number of a prayer healer who she said could help ease the pain with a technique called “the secret”. Pochon isn’t sure whether the healer’s influence worked, but he says it couldn’t have done any harm. The burn eventually healed and the pain, he says, went away within days.
 
“They asked my father where it hurt, didn’t ask for many details and then said, okay, I will do what’s necessary,” Pochon says. “It’s something like a prayer, I don’t know. It’s bizarre. They administer the secret for the pain, they say, to ‘put out the fire’.”
 
The secret is widely practised across the French-speaking region of Switzerland, primarily in the cantons of Fribourg, Jura and Valais. Growing up, Pochon says his father had the contact information for a prayer healer in case of illness or injury.
 
Bernard Zurcher, an artist and active prayer healer from canton Vaud who uses the secret, says he had to prove himself worthy before having the ability to heal handed down to him more than 20 years ago.
 
“I learned it from a healer who was very well known in the Jura who has since passed away,” Zurcher says. “I had asked her to teach it to me but she didn’t do so right away, she called me several times over the course of three weeks, and one day she told me to come to her and she would explain to me how the secret works.”
 
Zurcher adds that every healer has a specialty; his are burns, asthma attacks and gout. Every healer also has a preferred technique for administering the secret, and Zurcher uses handwriting analysis. If the case is not too urgent, he asks the patient to write the request on paper and send it to him through the mail. Using that sample, Zurcher administers his healing technique – the details of which are, as its name suggests, kept secret – without ever having seen the patient in person.
Ancient prayers

 Prayer healers are also particularly active in the eastern region of Appenzell.
 
Roland Inauen, director of the cultural office in canton Appenzell Inner Rhodes, says the tradition dates back centuries and spans across borders, as many of the prayers that prayer healers in Appenzell use today can be found in varying forms from Sicily to northern Germany as well as in texts dating back to the year 1000. Those prayers continue to be passed down to new generations of healers, as each healer is responsible for finding someone to carry on his work.
 
By tradition, the afflicted party or a relative calls a healer on the phone and describes the ailment. The healer then begins praying for a recovery. Often, healers are also called upon to treat animals, a practice with deep roots in Swiss farming traditions.
 
Accepting the role of prayer healer is a major responsibility that doesn’t yield monetary compensation, since healers are traditionally not allowed to accept payment for their work. However, Inauen says the tradition is in no danger of dying out in Appenzell.
 
“We know that at least 20 people in canton Appenzell Inner Rhodes are very busy working as prayer healers today,” he says. “It’s amazing how the young generation is really embracing these practices again, they consider it a given that it’s part of our culture, our health care system, and a very good part of it.”
A fine line

 Although he recognizes prayer healing’s cultural value and believes it can benefit patients, Dieter Sträuli, president of the non-profit Infosekta advice centre and a former senior scientist of psychology at Zurich University, says there is often a fine line between the traditional practice and something more sinister.
 
infosekta seeks to educate and help those affected by the influence of cults or sects, and Sträuli says that the team sometimes comes across groups with dangerous dynamics born out of practices associated with prayer healing.
 
“More and more frequently, we have cases of healers, or gurus, who operate in the country in small villages and who suddenly acquire a large following,” Sträuli says.
 
“At the beginning all is well, they have seminars, they have meditation sessions, but after some time, the people get more dependent and the gurus ask for more and more of their freedom.”
 
Sträuli cites a recent case in a small Swiss town where a healer degraded and abused her followers into doing household chores for her until someone called infosekta and reported the situation. According to Sträuli, in such cases some followers may need counselling.
Ties to modern medicine

 Though he admits many traditional doctors tend to laugh off prayer healing as an ineffective treatment method, Inauen says that many use it as a companion to their own medical recommendations and that it can have “wonderful complementary effects to traditional medicine”.
 
“There are certain ailments, such as warts, that ordinary doctors treat with prayer healers. They tell their patients, go to them first, before I operate or do any interventions. That is done more often today than ever before,” he says, adding that prayer healing has been documented to be very effective against warts in particular.
 
Sträuli also warns that prayer healing can become dangerous and even illegal if healers intervene and tell patients not to seek attention from conventional doctors.
 
“Modern medicine is too much outside of language – it’s just bodies, corpses, dissection, anatomy, metabolism and chemistry. And the idea that you can work a change with talking is something which is accepted, for example in the domain of psychoanalysis. The significance of language is much greater than we imagine.”
 
“This is where healers come in. Much of their success, or apparent success, can be explained with the placebo effect or the effect of suggestion. Sometimes this helps.”


Veronica DeVore, swissinfo.ch