Author Topic: ~ வலிப்பு பிரச்சனையால் அவதியா? இதோ தீர்வு தரும் மூலிகை மருத்துவம் ~  (Read 265 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218438
  • Total likes: 23099
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
வலிப்பு பிரச்சனையால் அவதியா? இதோ தீர்வு தரும் மூலிகை மருத்துவம்



சடா மாஞ்சில் எனும் மூலிகை மாதவிலக்கு பிரச்சனையை சீராக்கி, வலிப்புக்கு தீர்வு தருகிறது.

ஸ்பைக்னால்(Spikenard Plant) ஆங்கில பெயர், மாதவிலக்கு கோளாறு போக்கும். மாத விலக்கை தூண்டக் கூடியது. இதற்கு சடா மாஞ்சில் தேனீர் குடிக்கலாம்.

செய்முறை

சடா மாஞ்சில் வேர் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு சடா மாஞ்சில் 1 கிராம் முதல் 2 கிராம் வரை சேர்த்து அரை ஸ்பூன் கருஞ்சீரகம், பனைவெல்லம் 1 ஸ்பூன் போட்டு கொதிக்க விட்டு தேனீர் தயாரித்து வடிகட்டி குடிக்க வேண்டும். தடைபட்ட மாதவிடாய் சீர்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் நேரம் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன் பயன்படுத்த தொடங்கினால் ஒருவாரத்துக்குள்ளாகவே குணம் தெரியும்.

குறைவான ரத்த போக்கு உள்ளவர்கள் சடா மாஞ்சில் எடுத்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மாத விலக்கு காலங்களில் ஏற்படும் வயிற்று வலி குறையும்.

சடா மாஞ்சில் மூளைக்கு இதமான நிலை தரும். நரம்புக்கு பலம் தரக்கூடியது. 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாதாரணமாக எடுத்துக்கொள்வதை இந்திய மருத்துவம் பரிந்துரைக்கிறது. அதிகம் எடுத்தால் தூக்கம் அதிகரிக்கும்.

ஞாபக சக்தி தூண்டக்கூடியது. வயது ஆவதினால் ஏற்படும் மறதி போக்கும், சோர்வு நிலை மாறும்.

காக்காய் வலிப்பு வராத வண்ணம் தடுக்கக் கூடியது. குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். சடா மாஞ்சில் தனிப்பட்ட முறையில் கருப்பை கோளாறு போக்கக்கூடியது.