Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 315  (Read 1934 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 315

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline ShaLu

மழையே !
இயற்கையின் எழுதப்படாத கவிதை நீ..!!
ஓராயிரம் வார்த்தைகள் போததேன்பேன்
உன் பெருமைதனைச் சொல்லிட !!!

விண்ணிலே மேளச் சத்தமாய் இடி முழங்கிட
புவியிலே மயிலினங்கள் தோகை விரித்தாடிட
ஓர் கண்கவர் காணொளியே அரங்கேறுகிறது
கண்களுக்கு விருந்தாய்
ஓ மழையே - இவையெல்லாம் நிகழ்வது
இப்பூவுலகிற்கு உனை வரவேற்கத் தானோ !!!

கடவுளின் அன்பாய் ஆசீர்வாதமாய்
மானிடர்க் கெல்லாம் மழையாய் பொழிந்து
விவசாயிகளின் வரப் பிரசாதமாய்அமைந்து
உயிர் காக்க நீர் கொடுக்கும் ஒப்பற்ற வள்ளல் நீ !!

வண்ணமிகு மலர்மேல் மென் துளிகளாய் படர்ந்து
மணமிக்க மலராய் அதனை மணந்திடச் செய்து
கார்மேகம் தனை உடைத்து சிறு சிறு முத்துகளாய்
இப்புவி வந்து பஞ்சம் என்ற சொல்லை
இப்பாரில் உள்ளோர் பாராமல் செய்தாய்!!

அடர்ந்த கார்மேகம் இருள் நிறை வானம்
மழையின் இனிய சத்தம்
மரங்களில் தஞ்ச மடைந்து பறவைகள் எழுப்பும் ஒலி
நனைந்த பூமியின்  மண்மணம்
மேனியை வருடிச் செல்லும் தூறல் எனும் சாரல்
ஏழ்வண்ண வானவில்லால் எழிலுறும் அவ்வானம்
இவை எல்லாம் ரசிப்பதற்கு
இந்த ஒரு யுகம் போதாது !!!

சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவர்க்கும்
அவ்வளவு பிடிக்கிறது உனை -எங்கே கற்றாய்
அனைவரையும் உன் அன்புச் சாரலில்
வீழ்விக்கும் வித்தையை !!

விவசாயி முகத்தில் மலர்ச்சியையும்  வறண்ட
பூமியில் வளத்தையும் பெருக்க
வெண்ணிற முத்து துளிகளாய் மண்ணிற்கு வரும் நீ -
அவசரமாய் சாலைகளில் ஓடுவது
அந்த அழகிய சமுத்திரத்தை
அணைத்து முத்தமிடுவதற்க்கா ?

கொஞ்சித் திரியும் மழலைகள்
உனை கண்ட  அந்நொடி
மழையில் நனைந்தும் விளையாடியும்
காகிதக் கப்பல் விட்டும் இன்புறச் செய்தாய்
மாசற்ற சுற்றுச்சூழலை உருவாகி மானிடற்கு
மண்ணுலகம் தழைக்க செய்தாய்
தாய்மையுடன் வருடும் தாய்போல் அணைத்து
தரணியில் வாழச் செய்தாய் !!

மழையே - நீர் இன்றி அமையாது உலகு
நீயின்றி இயலாது வாழ்வு !!
« Last Edit: July 12, 2023, 04:50:24 PM by ShaLu »

Offline Minaaz

  • Newbie
  • *
  • Posts: 40
  • Total likes: 247
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
கவலைகளால் கண்ணோரம் உரசிப் பார்த்த கண்ணீர்த் துளியை கண்ட மேகமது கார் மேகமென உருவெடுத்து அதன் ஒற்றைத் துளியைக் கொண்டு தடவிக் கொண்டது மேனி எங்கும்,,,

 மண்வாசணைகள் எங்கும் மங்காமல் பரவிச் செல்லும் விதத்தினை புலனங்கமான மூக்கு நுகர தரையில் கிடந்த பாதமது துள்ளிக் குதித்தன பேரானந்தமாய்,,,

 தவளைகள் தாலாட்டுப் பாட தூரமாய் கூக்குரல்களோடு கைகோர்த்து களிப்பின் உச்சத்தில் கல கல வென்ற சிரிப்போடு குத்தாட்டமிடும் சிறுவர்கள்,,
ஓரப் பார்வையால் ஓரமாய் கண்காணித்த போது கலங்கிப் போயின என் இரு விழிகளும்,,..

 மழலையாய் இருக்கையில் மாரி மழையில் தேங்கிய நீரில் மணிக்கணக்காய் பேப்பர் படகு இட்டு மகிழ்ந்த காட்சியும், மழையில் நனைந்தால் சளிப்பிடிக்கும் என்று அலரி அடித்துக் கொண்டு துரத்தி வந்த அம்மாவின் குரல்களும் இன்னும் நெஞ்சோரமாய் கனத்துக் கொண்டுதான் இருக்கின்றன..

சிறு குளிக்குள் கால் புதைத்து என்னை காப்பாற்று நான் மூழ்கிவிட்டேன் என நண்பன் கூறுகையில் மீட்புப் படையில் வேலை பார்க்கும் மீட்பாளர்கள் என அணி வகுத்து செல்லும் அட்டகாசங்களும்...,

ஓடையில் ஓரமாய் தவளை முட்டையில் பொறிந்த குஞ்சுகளை மீன் குஞ்சு என வெள்ளெமன வாசலில் பரவிய நீரில் இட்டு தவளைக்கு காவலிருக்கிறோம் என்று அறியாமல் இளைத்த குறும்புகளும் நினைக்கையில் இதல் குவிய மறுக்கிறது

 சற்று தலை கவிழ்ந்து நிமிருகையில் அனைத்தும் விம்பமென கண் முன் அரங்கேறுவது அந்த வாழ்க்கை மீண்டும் வராதா என்ற ஏக்கத்தை விதைத்து விடுகிறது..

Offline தமிழினி

நினைக்கும் போதெல்லாம் நல்ல நினைவலைகளை கொடுத்துச் செல்வது நீ மட்டுமே..
எப்போது வருவாய் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பொழுது
கானல் நீர் அகற்றி காதல் மழையாய் பொழிந்திடுவாய்
சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பும் இயற்கையின் வரப்பிரசாதமே
விவசாயிகளின் நல்ல நண்பனே
நீரின்றி அமையாது உலகு
நீ இன்றி அமையாது நல்ல நினைவலைகள்
உன் வருகை கண்டு அழகான வண்ண மயில்கள் தோகை விரித்து ஆடிடும்
நீ வந்தால் மட்டுமே தோன்றும் ஏலுநிற வண்ண காட்சிகளை காண கண்கள் இரண்டு பத்தாது..
அந்த வண்ணக் காட்சியின் நினைவலைகள் நீ சென்ற பிறகும் பேசப்படும்
மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உரசும் போது உருவாகும் அந்த ஒளி,
 இடி மின்னல் என அழைக்கப்பட்ட போதும் ..
 கண்ணுக்குதெரியா அந்த சத்தத்தினை...
ஆழம் பத்து அர்ஜுனன் பெயர் பத்து என்று சொல்வதன் மூலம் ,அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று எண்ணிய நாட்களும் உண்டு..
என்றாவது ஒருநாள் பனிக்கட்டி மழையாக பொழிந்து விட மாட்டாயா என்று ஏங்கி நின்று ரசித்த காலங்களும் உண்டு
மழை தன் மகப்பேறு மண் வளம் சொல்லிடும்
பொருளாதாரத்தில் வளர்ந்த நிலையில் உள்ளவர்கள் எல்லாம் எதை எதையோ வாங்கி ரசித்திடும் வேளையில்
வீதியோரம் நிற்கும் ஏழைகள் ரசித்திட முடியாத  நிலை...
குப்பை குளங்களாய் கிடக்கும் மக்களின் நடுவே ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒருசேர ரசித்திடும் விலைமதிப்பில்லா வைரக்கல்லாய் எப்போதும் அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி கொடுத்தது நீ மட்டுமே
மழை........!

« Last Edit: July 12, 2023, 04:31:01 PM by தமிழினி »
என்றும் அன்புடன்...❤

    தமிழினி..❤

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 446
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum

வறண்ட நிலத்தின் மண் வாசனையை கிளப்பி விடும்
ஒற்றை மழைத்துளி போல ..
மனதோடு கிளப்பி விடுகிறது சிறு பிராய நினைவுகளை
சில மழை தருணங்கள்..

கார்மேகம் பொழியும் மழையை போல..
அன்பயும் பேரிரைச்சலோடு
பொழிந்து தள்ளும் உறவுகள் சூழ்
மழழை காலமது...

காற்றும் மழையும் இடி மின்னலுடன்
கானம் இசைக்கும் பின்னணியில்
தாளமின்றி , சந்தமின்றி
நடனமாடினோம்..

மழையில் ஆடி அலுத்த சிரிப்புகளின்
சந்தோச சுவடுகளை
சிறிதும் அழித்ததில்லை
அம்மாவின் வசவுகளும் அடிகளும்..

சில்லென மேனி நனைத்த மழை துளிகளின்
இரைச்சலோடு போட்டி போடும்
உற்சாக கோஷங்களை இன்றும்
ஆவி கரைய தேடிக்கொண்டிருக்கிறேன்..

மழைக்கு ஏங்கும் பாலைவன பட்சியாய் மனம்
இன்னும் ஏங்குகிறது பிடித்தங்களை
தயக்கமின்றி ரசித்து வாழ்ந்த
மழழை பருவத்திற்காக..

மேகதூதர்களின் ஆசிர்வாதங்களான மழை
இன்றும் பொழிகின்றது..
நனையாதிருப்பது நம் மனதின் பிரச்சனையன்றி
மழையின் பிரச்சினையன்று..


Offline MK

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 46
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
இவ்வார ஓவியம் உயிராகிறதற்கு முதன்முறையாக உயிர் ஊட்ட வந்திருக்கும் நான் உங்கள் Habibi எனும் Mk .

மழையில் நனையும் சிறார்களின் உற்சாகம்
பார்க்கையிலே..

என்னுள்ளும் ஒட்டிக்கொண்டது அளவிடமுடியாத பூரிப்பு
மனதினிலே..

பள்ளிக்காலத்தின் ஓர் மாலைப்பொழுதில் இல்லம் செல்ல
காத்திருக்கையிலே..

மனம் மயங்க இயற்கையின் மாற்றத்தை ரசித்திருந்தேன்
வானில் நிறமாற்றம் தொடங்கையிலே..

செந்நிறமேகம் கறுப்பாடை அணியவே துணுக்குற்றேன்
சிறிது பயத்தினிலே..

வருணபகவானின் மகத்தான கொடை நீ என்பதை அறியாமலே உதாசீனப்படுத்தினேன்
உன்னை என் அறியாமையினிலே..

நிழல்குடை அடியினில், கட்டிடங்களின் நிழல்களில் , அம்மாவின் முந்தானையில் உன்னை
தவிர்க்கவே முயன்றேன் நனையாமலே..

இன்று பாலைவன தேசத்தில் தொழிலுக்காக வாழ்கையில் உன் வரவுக்காக
ஏங்குகிறேன் நித்தமுமே..

மழையில் நனையும் சிறுவர்களின் அகமும் உடலும் ஒன்றே குளிர
மகிழ்ந்திருக்கையிலே..

உச்சி முதல் பாதம் வரை உன் சில்லென்ற ஸ்பரிசம் உணர தவிக்கின்றேன்
ஏக்கத்தினிலே..

நிதமும் உன் வரவுக்கும் , ஸ்பரிசத்துக்கும் ஏங்க வைக்கும் நீயும் பெண்பால் தானோ என்னும் எண்ணம் உதித்தது என் கருத்தினிலே..
« Last Edit: July 13, 2023, 11:27:00 AM by MK »

Offline SweeTie

ஆனந்த  ராகம்  பாடும் குழந்தைகள்
கதகளி  ஆடும்   மாரி மழை   
கனமழையின் வேகமும்
பிள்ளளைகளின்   கூச்சலும் 
வர்ணனுக்கு  எட்டியதோ 

கருமேக கூட்டம் காற்றோடு கலக்க
பயிர்பச்சை  அனைத்தும் சலசலக்க
வாடி வதங்கிய நெற் பயிரும் 
தலை தூக்கி  நிமிர்ந்து நிற்க
ஆனந்த  யாழ் மீட்கிறது  மழை

கோடையில்  வாடிடும்  பயிர்கள் 
அவை நிலைகண்டு  வாடுவான்  உழவன் 
வாடை கொண்டுவரும்  கோடை  மழை   
கண்டு  பெருமிதம் கொள்வான் 
உயிர்கள்அனைத்துமே  இவை கண்டு மகிழும்

சித்திரைப்  புழுக்கம்   தீர்க்க  வராதா
மழை என்று  ஏங்குவார்  பலரும் 
யாகங்கள்   வேண்டுதல்   என பலவும்
தவறாது   செய்யும்கால்    வந்ததே 
அடைமழை   இடியுடன் கூடியே

மழையே மழையே மெத்தப் பெய்
மண்ணில்  ஈரம்  நிக்கப்  பெய்
ஊருக்கெல்லாம்  உழைக்கும்  உழவர்
சஞ்சலம் தீர்க்க   விடாமல்   பெய்
பிள்ளைகள் இவர்கள் மனங்கள்  மகிழ
பெய்  பெய்  மழையே பேய்  மழையே !