Author Topic: தேடல்  (Read 169 times)

Offline Mr.BeaN

  • Full Member
  • *
  • Posts: 181
  • Total likes: 550
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நான் நானே நிகர் ஏதுமில்லை..
தேடல்
« on: November 27, 2023, 11:53:38 AM »
பெற்றெடுத்த அன்னை,
பேர் கொடுத்த தந்தை,
சுற்றமென சொந்தம்,
பற்றுடனே வாழும்,
இத்தகைய வாழ்க்கை,
மத்தியிலே கொஞ்சம் ,
சிந்தனையில் ஒன்றும் ,
தோன்றிடுதே இன்றும் ..

தேடல் என்னும் ஒரு சொல்லின்,
பொருளை நான் நித்தம் தேட ..
யாவும் இங்கே பொதுவாய் ,
ஒன்றை தேடி இருக்கும் ,,

வானின் தேடல் வெளிச்சத்தை..
மண்ணின் தேடல் விருச்சத்தை ..
நீரின் தேடல் தாகத்தை ..
தீயின் தேடல் மோகத்தை ..
காற்றின் தேடல் வெற்றிடத்தை ..
கூற்றின் தேடல் சிந்தனையை ..
பாட்டின் தேடல் சங்கீதத்தை ..
பழக்கத்தின் தேடல் இங்கிதத்தை ..
மொழியின் தேடல் புரிதலை ..
விழியின் தேடல் வெளிச்சத்தை ..

எப்படியாயினும் எல்லாம் ஒன்றினை ,
நித்தமும் இங்கே தேடிடுமே..

பற்பல தேடலின் அர்த்தங்கள் யாவுமே ,
சிந்தனை செய்தால் புறிந்திடுமே ..

என்னிடம் ஒரு கவி தெடிடும் பூவிழி,
மங்கையின் தேடலை புறிந்ததினால்..

சந்தமும் கொண்டு நான், சிந்தையில் தோன்றிடும் ,
என்னத்தை இங்கே எழுதுகிறேன் ..

சொற்பல கொண்டு நான், சுவைமிகு கவிதையை
அற்பணித்திடவே தேடுகிறேன் ..

தேடிய கவிதையும் கிடைக்கிற வரையினில் ,
எந்தன் தேடலை தொடருகிறேன்!!

(ஒரு தோழி கொடுத்த தலைப்பிற்கு எந்தன் சிந்தனைக்கு எட்டிய இதை எழுதுகிறேன்.பிடித்திருந்தால் உங்கள் விருப்பங்களை அளிக்கவும். ஏதேனும் பிழை அல்லது கருத்துக்களை தெரிய படுத்தவும் நன்றி)
« Last Edit: November 27, 2023, 01:49:18 PM by Mr.BeaN »
intha post sutathu ila en manasai thottathu..... bean