Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 336  (Read 420 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 336

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline விழியாள்

  • Newbie
  • *
  • Posts: 10
  • Total likes: 41
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
ஆக்குதலும் அழித்தலும் கடவுளின்
                 தொழில் என்பர்

                 இதோ!மனிதர்களும் கடவுள்தான்
                 நிரூபணம் ஆனது

                 மதங்களை வகுத்ததும் மனிதன்தான்

                அதனை நட்பு பாலத்தால் இணைப்பதும்
                 மனிதன்தான்

               2024 இன் புதிய பாடம்
               கற்றுக்கொண்டேன்

               வேறுபாடுகள் வேறுபடுத்த இல்லை
               என்று

             இத்தனை வேறுபாடுகள் இருந்தும்
             ஏதும் வேறு வேறு இல்லை என்று
              உணர்ததத்தான்

             மனிதத்திற்கு ஏது மதம்

           மதம் என்னும் மூன்று எழுத்துக்கு
            எத்தனை கோர முகங்கள்

            எத்தனை அன்பு முகங்கள்

            அன்பாகத்தான் இருந்தோம்

            அனைத்தையும் பகிர்ந்தோம்

            கை கோர்த்து நடை போட்டோம்

             திடீரென என்ன வகுப்பு என்ன பிரிவு என
         கேட்டுவிட்டேன்

              8 ஆம் வகுப்பு B பிரிவு என்றாள்
             தயக்கமே ஏதும் இன்றி நானும் மாறி
           விடவா என்றேன் 😅

             இவ்வளவுதான் மதமும்

           இனி மனமார உறுதி கூறுவோம்

         இந்தியர் அனைவரும் மன்னிக்கவும்

         என் கணவன்/மனைவி தவிர அனைவரும்
        என்னுடன் பிறந்தோர் என்று

        மதங்கள் பிரித்து பார்க்கத்தான்
       அவன் என் நண்பன் அவன் என் நெருங்கிய
          நண்பன் என்று.

        இனி புனித தல பயணம் எதற்கு

         இறைவன் அங்கு இல்லை

        இனிய நட்பு மனதில் இருந்தால்

        இறைவன் கண்ணாடியில் தெரிவான்

               

                 

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 652
  • Total likes: 1825
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


அடர்ந்த சோலை நடுவே, 
கரிய நிற நீண்ட பாதையில்..
சின்ன சின்னதாய் சிதறி கிடைக்கும்.. 
பழுப்பு நிற சருகுகள் நடுவில்..

முல்லை அரும்பென ஜொலிக்கும்.. 
வெண் முத்து பற்கள் மின்னிட ..
அவ்விருவர் கண்களிலும் பெரும் ..
மகிழ்ச்சி பொங்கி வழிந்திட.. 

ஒருவர் தோள் மீது ஒருவர்..
கைகளை போட்டு கொண்டே....
இந்த புண்ணிய பூமியே.. என்..
ஸ்வர்ணபுரி.. என இறுமாப்புடனே

அழகு நடைபோடும் குறும்தளிர்,
அதிகாலை சூரிய கீற்றொளி..
தன் உடையின் நிறம் அறியாது..
சிரிக்கும் சின்னசிறு  உள்ளங்கள்..

தான் எங்கு பிறந்தோம்...,
எங்கனம் எப்படி வளர்கிறோம் 
சிறிதும் யோசிக்காத..
வெள்ளை உள்ளங்கள்..

நண்பர்களாய் தோழமையோடு துள்ளி
நடைபோடும் பிஞ்சு மனங்களில் ..
நாம்... பிறப்பு, குலம், நாடு, மதங்கள்..
என நஞ்சினை கலந்திட வேண்டாமே..

மதங்கள்.. பெரிதாக ஏதுமில்லை..
நம் தமிழரின் நிலத்திணைகள் போலவே.., (குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல்)
நம் முப்பாட்டனும் நம் அப்பனும்..  நமக்கு
கற்றுக்கொடுத்த வாழ்வியலின் சூட்சமமே...

கடலோரம் இருப்பவன் கடலில்
வாழ்வை தேடுகிறான்...
மலையோரம் இருப்பவன்
மலைகளில் வாழ்வை தேடுகிறான்..
காடுகளில் இருப்பவர்கள்
காடுகளில் வாழ்வை தேடுகிறான்..
பாழ் நிலத்தில் இருப்பவன்
பாலையில் வாழ்வை தேடுகிறான்..
சமவெளியில் இருப்பவன்
வயலில் வாழ்வை தேடுகிறான்..

நம் தேடி செல்லும் செயல் ஒன்றே..
இவ்வுலகில் வாழ வழி தேடுகிறோம்.
இதில் மதங்கள் என்ற பெயரில்.. ஏன்?
மனித உள்ளங்களை பிரிக்கும் வேலி?..

நாமும்.. மொழி மறந்து.. குலம் மறந்து.. பிறந்த இடம் மறந்து..
அச்சிறார் போல்..  மனம் மட்டும் பார்த்து வாழ பழகலாமே..

     

« Last Edit: January 31, 2024, 09:11:35 PM by TiNu »

Offline Sun FloweR

  • Full Member
  • *
  • Posts: 131
  • Total likes: 804
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
எங்க தாத்தனும் பூட்டனும்
முட்டிக்கிட்டாக மோதிக்கிட்டாக ..
இவங்க கோயில அவங்க
இடிச்சாங்க..
அவங்க மசூதிய இவங்க இடிச்சாங்க..
மானிடராய் பிறந்த அருமை தெரியாமல்
மதத்தின் பெயரால் வேறுபட்டாங்க..
பேய்பிடித்த மனுச பயலுக
வெறியாட்டம் போட்டாங்க..

ராகவனும் ரகுமானும் ஒன்னு தான்..
அதை அறியாம இருப்பவங்க வாயிலே மண்ணு தான்..
கண்ணனும் காதர் பாஷாவும் ஒன்னு தான்..
இதை புரியாம போனவங்க
புதைஞ்சது இந்த மண்ணில் தான்...

தேக வண்ணங்கள் இங்கே வேறுபடலாம்..
அதனுள் ஓடும் குருதி வண்ணம் செம்மை தான்..
தேக உயரங்கள் இங்கே வேறுபடலாம்..
அதனுள் இருக்கும் மனதின் தன்மை தண்மை தான்..

நாங்க இப்ப விவரமாகிட்டோம்..
அனந்துவும் அப்துலும் அண்ணன் தம்பி ஆகிட்டோம்..
எங்க தாத்தன் செஞ்ச தவறை எல்லாம் திருத்திக்கவே நாங்க பிறந்தோம்..
வேறுபட்ட இந்தியாவை ஒற்றுமையாக்கவே நாங்க வளர்ந்தோம்..
ஒருமை கண்ட இந்தியாவை எங்கள் தோள்களில் நாங்க சுமப்போம்..

Offline Vijis

மொழியாலும் நிறத்தாலும் வேறுபட்டிருந்தாலும்

மனதால் ஒன்றுபட்டு நண்பர்கள் ஆனோம்


 மண்ணின் மேல் ஆசை கொண்டு

மரணத்தை தழுவி கொண்டுஇருக்கும் மனிதர்களே


 இப்பூமி மனிதன் மகிழ்ச்சியோடு அன்போடும் வாழ்வதற்கு

 இதை  உணர்ந்தால் புது புது நட்புகளோடு பயணிக்கலாம்


 சாகும் போது எல்லாருமே சாம்பல் ஆகத்தான் ஆகிறோம்

வாழும் போது மதத்தை எரித்து சந்தோசமாக வாழ்வோம்


மனிதனின் அன்பு போதும் இம்மண்ணில் உயிர் வாழ

உயிர் இருக்கும் வரை தான் உடம்பு

உயிர் பிரிந்த பின் பிணமே பிணமாக போகும்

உயிருக்கு மதம் எதற்கு


 மதத்திற்கு சண்டை போட்டு மதம் வெவ்வேறு என்று காட்டுகிற மனிதன்

அதில் சிந்துகின்ற ரத்தின் நிறமும் அதன் வலியும் வேறு இல்லை ஒன்றே என்பதை மறக்கிறான்


 மனிதன் உயிரை கொல்லும்  மதத்தை பார்க்காமல்

வாழ்கை நிரந்தரமற்றது என மனதில் கருதி

அனைவரும் அன்பாகவும் நட்பாகவும் பழகலாம்


மதத்தால் வேறுபட்டிருந்தாலும் மனதால் ஒன்றுபடுவோம்

ஒரேகுலம் மனிதகுலம் அன்பு என்பதே தெய்வம் என்பதை உணர்ந்தால் அனைவரும் இன்பமாய் வாழலாம்


 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 190
  • Total likes: 823
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


பிரசவம் பாத்தவர் மதமும் தெரியல
ரத்தம் குடுத்தவர் ஜாதியும் தெரியல
வலியில துடிச்ச அன்னைக்கு
சுகப்பிரசவம் ஆகணும்னு மட்டுமே பாத்தாங்க ..


ஆயிரம் ஜாதிகள் வந்தாலும்
அதை மிஞ்சும் அளவு மதங்கள் வாந்தாலும்
பொறந்தது ஆனா பெண்ணானு மட்டுமே கேப்பாங்க
உண்மையில் உலகில் இவ்விரண்டு மட்டும் தானே ஜாதி ..


பால்வாடி ஆயாவின் மதமும் பாக்கல
பட்டப்படிப்பு வரை வந்த ஆசானின் மதமும் தெரியல
நல்லா தானே படிச்சு வந்தோம்
பகை ஏதும் இல்லாம வாழ்ந்து வந்தோம் ..


எங்கிருந்து வந்ததடா இந்த ஜாதியும் மதமும்
ஐந்தறிவு மிருகத்திடம் இல்லாத ஒன்று
மார் தட்டிக்கொள்ளும் ஆறறிவு மனிதரிடம்
மதம் என்ற மதம் பிடித்த மிருகமாய் என்றும் ...


மச்சான் மச்சி என்றும் , அவனே இவனே என்றும்
வாடி போடி என்றும் நினைவு தெரிந்த நாள் முதல்
தொடங்கி தொடரும் நட்பு எதை கண்டு வந்ததடா?
வந்தபடியே தொடரட்டும் நம் காலம் முடியும் வரை ...

தோள் கொடுக்கும் தோழனாய் மட்டுமே
அரவணைக்கும் அன்புத்தோழியாய் மட்டுமே
ஊர் பேர் தெரியாத போதிலும்
உள்ளங்களின் உணர்வுகளை மதிப்பவர்களாய் ...


அனைத்து கடவுளின் ரூபமாய்
அன்பை மட்டுமே காண்போம்
அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்வோம்
மனிதம் கொண்ட மனிதராய் மட்டுமே வாழ்வோம் ....

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️



Offline SweeTie

நட்புக்கு   மதம் எதற்கு 
நட்புக்கு  ஜாதி எத்தற்கு
தோழ்   கொடுப்பான் தோழன்
கஷ்டத்தில் கைகொடுக்கும் கடவுளாவான்

மதம்கொண்ட யானை காட்டை அழிக்கும்
மதம்கொண்ட மனிதன் நாட்டை  அழிப்பான்
மதங்கள் அனைத்தும் சொல்வது ஒன்றே
மனிதனாய்  வாழ்  என்பது மட்டுமே

மதங்களை  வகுத்தான்    மனிதன்
மனிதருள்  வேற்றுமை படைத்தவனும் அவனே
நல்வழி  படுத்தவே  மதம் என்றான்
நடப்பது என்னவோ   எல்லாமே  வன்மம்

ஆலயம்  தோறும்   கடவுளின் வாசம்   
அதில் வேற்றுமை  காண்கிறான்   மனிதன்
சிவனும்  ஏசுவும்  அல்லாஹ்வும் புத்தரும்
ஓருவர்தான்   என்பது  தெரியாத மனிதன்

கிடைத்தற்கு அரியது  மானிடப்பிறவி
பிறக்கும்போது  ஜாதி மதம்  இல்லை
இறந்த பின்பும்    எல்லோரும்  பிணம் மட்டும்
பிறப்புக்கும் இறப்புக்கும்  நடுவே எதற்கு வீண் வேற்றுமை

அன்பென்ற  மழையிலே  அனைவரும் ஒன்றாய்
ஒரு அன்னையின்  வயிற்றில் பிறந்தவர் ஆவோம்
வேற்றுமை நீக்கி    சகோதரர் ஆவோம் 
எம் மதமும்  சம்மதம்  எனக் கொள்வோம்.