Author Topic: நிம்மதியா தூங்க என்ன செய்ய வேண்டும்.  (Read 653 times)

Offline kanmani

தூ‌க்க‌ம் எ‌ன்பது இரவானது‌ம் நமது உட‌ல் இளை‌ப்பாற‌க் ‌கிடை‌‌த்த ‌விஷய‌ம் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் எ‌‌ண்‌ணி‌‌க் கொ‌ண்டி‌ரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், தூ‌க்க‌த்‌தி‌ற்கு எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ள் உ‌ள்ளன.

தூ‌க்க‌ம் எ‌ன்பது ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் அமையு‌ம். ஒரு ‌சில‌ர் படு‌த்தது‌ம் தூ‌ங்‌கி ‌விடுவ‌ர். ‌சில‌ர் ம‌ணி 12ஐ தா‌ண்டினா‌ல் தா‌ன் தூ‌ங்கவே செ‌ல்வ‌ர். ‌சில‌ர் புர‌ண்டு புர‌ண்டு படு‌த்து தூ‌க்க‌த்துட‌ன் போராடி கடை‌சியாக தூ‌ங்குவ‌ர். தூ‌ங்குவ‌திலு‌ம் பல வகைக‌ள் உ‌ண்டு. ஆ‌ழ்‌ந்த உற‌க்க‌ம், லேசான உ‌ற‌க்க‌ம் போல பல உ‌ண்டு.

பொதுவாக கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌மே ‌சிற‌ந்த தூ‌க்கமாகு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாம‌ல் தூ‌ங்‌கி எழு‌ந்தா‌ல்தா‌ன் உ‌ண்மை‌யி‌ல் ஆ‌ழ்‌ந்த தூ‌க்க‌த்தை தூ‌ங்‌கி‌னீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ப்படு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌த்தை‌க் கான சுவாச‌ம் ‌சீராக இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌சீரான சுவாச‌ம் இரு‌ப்‌பி‌ன் ந‌ல்ல தூ‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். சுவாச‌த்‌தி‌ல் ‌சிதைவு ஏ‌ற்ப‌ட்டா‌ல் தூ‌க்க‌‌த்‌திலேயே மன‌ம் அ‌திக‌ம் வேலை செ‌ய்ய ஆர‌ம்‌பி‌த்து ‌விடு‌ம். மன‌ம் வேலை செ‌ய்வதுதா‌ன் கனவுக‌ளி‌ன் அடி‌ப்படையே நிம்மதியா தூங்க என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்

நிம்மதியா தூங்க...


மாத்திரைகள் இல்லாமலேயே நல்ல தூக்கம் கிடைக்க இந்த வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறது  நித்ரா இன்ஸ்டிட்யூட்.

* தினமும் காலையில் குறைந்தது 15 நிமிடமாவது வெளிச்சத்தில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.

* காபி, டீ முதலானவற்றை மாலை 4 மணிக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது.

* மாலை அலுவலகம் முடிந்து திரும்பியதும் ஒரு முறை குளிப்பது சிறந்தது.

* தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக இரவு உணவு இருக்க வேண்டும்.

* தூங்கும் முன் பால், பழம் ஏதாவது எடுத்துக் கொள்ளலாம்.

* தூங்கும் அறையில் வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தூ‌க்க‌ம் கெ‌ட்டு எ‌ந்த‌ப் ப‌ணியை செ‌ய்தாலு‌ம் அது வெ‌ற்‌றிகரமாக முடியாது. எனவே, தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான ‌விஷய‌ங்களை நா‌ம் ச‌ரியான முறை‌யி‌ல் ‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டு‌ம்.