FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on May 27, 2017, 11:40:26 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 149
Post by: Forum on May 27, 2017, 11:40:26 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 149
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/149..png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 149
Post by: SwarNa on May 28, 2017, 12:54:07 AM
மண்ணின் மணம்

 மண்ணின் மைந்தர்கள் மனதில் தான்
ஈரமில்லை என்றிருந்தேன்
மண்ணில் ஈரம் காண
 விழியோரம் கசியும் நீருடன்
காத்திருக்கும் விவசாயியும்,நிலங்களும்

பொய்த்துப்போன மழையும்
காய்த்துப்போன கையும்
வறண்ட நிலங்களும்
வறண்டுவிட்ட மனிதமும்
இலைகளற்ற கிளைகளும்

பசுமையும்,வளமையும்
 வழமையான  எம்மண்ணில்
வறட்சியே துணையாயிற்று

எப்படியும் வாழலாம்
எண்ணியவனின் செயலால்
வாழ தகுதியற்று போயிற்று

நீரின்றி அமையாது உலகு
                  இன்று
நீரே இல்லாது போயிற்று
 
தசம அடிகளில் ஊறிய நீர்
           இன்று
நான்கு நூறு அடிகளை எட்டியும்
    கிட்டியபாடில்லை

பொருள் தேடுவதன் பொருளே
ஒரு சாண் வயிறு நிறையத்தான்
என்று அவன் ஆசைகள் வெள்ளமிட்டதோ
அன்றே பிடித்தது கேடு
திரைகடலோடி திரவியம் தேடியவன் வாழ்வில்
நீரின்றி வசந்தம்தான் வீசுமா?
இலக்கின்றி வாழத்தொடங்கி
இலக்காகிப் போகிறோம் வறட்சிக்கு
 

ஊருக்கு ஊறு செய்தவன்
ஊருணியைச் செப்பனிட்டு
நீர் ஆதாரத்தைப் பெருக்கலாம்
மரங்கள் நட்டு
மழையைப் பெறலாம்

 இப்படியும் வாழலாம்
   உயிர்ப்புடன்
இயற்கையோடு இயைந்து ....
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 149
Post by: thamilan on May 28, 2017, 06:13:31 AM
வீழும் தண்ணீரில்
குளித்து உடல் சிலிர்க்கும் மரங்ககள்
மழைப் பெண் தழுவியதால்
நாணத்தால் தலைகுனிந்த இலைகள்
அருவியாய் கொட்டி
ஆறாக ஓடிடும் மழைநீர்
வெள்ளிக் கம்பிகளாக
வானில் இருந்து தரையைத் தொடும்
நீர்த் தாரைகள்
மனதை கொள்ளை கொள்ளும்   இறைவன் வரைந்திட்ட
இயற்கை ஓவியம் மழை



நீருக்குத் தான்
எத்தனை வடிவங்கள்
மலையில் தெளிந்த அருவிநீராய்
கடலில் உப்புநீராய்
குருதியில் செந்நீராய்
விழிகளில் கண்ணீராய்
வாயில் உமிழ்நீராய்
மேனியில்  வியர்வைநீராய்
உடலில் சிறுநீராய்
சாம்பலில் திருநீராய் .........

 நல்லோர் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு உலகெங்கும்
பெய்யும் மழை -  இது
நல்லோர் சொன்ன வாக்கு
இன்று  பொய் பொய் என பொய்யர்களின் 
பொய்கள் வான்முட்ட உயர்ந்ததால்
பொய்கள் முட்டி வானும்
மழை பெய்ய மறுக்கிறதே ........

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 149
Post by: VipurThi on May 28, 2017, 08:29:43 AM
வீசும் அனல் காற்றிலே
உனக்காக ஆயிரம் மடல்
எழுதினேன் என் உதிரும்
இலைகள் கொண்டு

கதிரவனின் கொடும் வீச்சுக்களின்
தடம் அழிக்கவே நனைத்தாயே
என்னை உன் அன்பில்
பல மாதங்கள் முன்பு

இன்று மீண்டும் என்னை
சுட்டெரிக்கும் அவன் ஏளனப்
பார்வையில் இருந்து
எனை மீட்பாய் என
காத்திருக்கிறேன் உயிரோடு

காலங்கள் நகரும் போதிலும்
எட்டவில்லையே உன்
கடைக்கண் பார்வை கூட
ஒர் துளி நீராய்

பூமி பார்த்து கீழ் உழுதவன்
இன்று வான் மேல் பார்த்து
பசியால் கண்ணீர் வடிக்கிறான்
அவன் யாரென்று நீ
அறிவாயானால் அவனே என்னை
மண்ணில் விதைத்தவன்

உன்னை காணவே தவம்
இருக்கும் ஜீவன்கள் நாம்
உலகில் பல்லாயிரமாய் இருந்தாலும்
எங்களை வெட்டி
வீழ்த்துபவன் பழி தீர்க்க
பூமிக்கு வராத  உன் சத்யாகிரகத்தின்
முடிவு தான் என்னவோ??


"முடிவொன்று உள்ளதெனில்
அதுவே  உலகின் பசி தீர்க்க
என்னை விதைத்தவன்
உடல் எரிக்கும் கட்டையாய்
மாறிடும் சாபம் ஒன்றே"


                         **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 149
Post by: NiYa on May 28, 2017, 02:50:15 PM
கார்முகில்களின் முன்னறிவிப்பாய்
விண்ணில் இருந்து மண்ணை நனைக்கும்
தேனமுதம் நீ தான்
உன்னை பற்றிய ஒரு சந்தேகம் எனக்கு

சூரியனை தழுவி ஏழு வண்ணங்களாய்
வானவில்லை  ஈன்றெடுத்த  பெண்ணோ ? - இல்லை
மண்ணுடன் கலந்து புதுவாசத்தை
வசமாக்கியதால் நீ  ஆணோ ?

கடல் ஆழத்தில் சிப்பியின் வித்தாகி
நல் முத்தானதால் நீ ஆணோ ? - இல்லை
மென் தென்றலுடன் சேர்ந்து
குளிர் காற்றாய் வருவதால் நீ பெண்ணோ ?

ஆண் என்றாலும்  பெண் என்றாலும்
எம் உயிர் துடிப்பு ஆனாய்

எத்தனை உதாரணம்   சொன்னாலும்
மண்ணில் உள்ள உயிர்க்கெல்லாம்
பசி தாகம் தீர்ப்பதால் நீ பெண் தான்
குலம் தழைக்க செய்யும் தாய் நீ தான்

மரம் இன்றி நீ பூமிக்கு வருவது
சந்தேகமே என அறிந்திருந்தும்
மரத்தை  வெட்டி பெருந்தப்பை மக்கள் செய்ய
பொய்த்து போய் கொடும் பாடம் கற்பித்தாய்

புகை கக்கி உன்னை மாசாக்கியதால்
கனல் எறிய அமிலமுமானாய்
உன் வழிகளை தடுத்து நகரமயமாகியதால்
எம்மை வெள்ளத்தினால் உட்கொண்டாய்

உன் வாழ்கை சுழற்சியில் சிறு மாற்றம்
தந்தாலும் பலமாய், பெரும் புயலை
சுழலும் சூறாவளியும்
பெரும் தாக்கம் தந்தாய்

எம் தவறை உணர்ந்து  திருத்தம்
செய்ய விழைகின்றோம் - தாயே
சேயாய் எம் தவறை பொறுத்து
என்றும் பொய்க்காமல் நீ பொழிந்து

விதையை பயிராய்
பூவை காயாய்
காயை கனியாய்
மாற்றி எங்களுக்கு நீயே அருள்வாய்
என்றும் மழையாய் பொழிவாய் 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 149
Post by: SunRisE on May 28, 2017, 03:21:31 PM
ஈரக் காற்று இதயம் வருட
வான் மழையே
நீ வரும் முன்னே
யானை வரும் முன்னே
மணி ஓசை வரும் பின்னே
என்பதுபோல்
நீ வரும் முன்
வரும் மண்வாசனை
முகர மறுக்கும்
மாந்தர் உண்டோ

சூரியனும் போதை கொண்டான
உனதழகில்
மயங்கி போய்விட்டான்
அதனால் தான்
ஏழு வண்ணங்களில்
காதல் கடிதம் வரைந்து
இடி எனும்
இசை முழங்கி
உன்னைக் காதல்
கொண்டான் போலும்

பாடும்  பறவை ஒன்று
சூரியன் மறைந்து விட்டான்
மரங்கள் மழையில் நனைந்து
நாணி நின்றன
பூ மொட்டுக்கள்
மெட்டவிழ்ப்பதா
வேண்டாமா என
மழை துளியில்
நனைந்து நாணி
கூனி நின்றன
என பார்த்த பறவை
இனிய மாலை என எண்ணி
காதல் கீதம் பாட
காத்திருந்த
ஜோடிப் பறவை
சேர்ந்து ஊடல் கொண்டு
தேனிசை பாடியது

வீட்டை விட்டு
வெளியே வராத
வரத்தை தந்த சூரியன்
அவனே காதல் கொண்டு
மகிழ்ந்து போய்
தணிந்தது வெப்பம்
மறைந்தது தாகம்
நானும் நனைந்து
கொண்டேன்
உன் ஊசிச் சாரலில்

கிளை விடும் மரம்
மொட்டுக்கள் தரும் பூக்கள்
தாகம் தணிக்கும் குளங்கள்
சூடு தனித்து
சுகபோகம் தந்த
வான் மழையே
உனக்கு நன்றிகள் பல.

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 149
Post by: JeSiNa on May 28, 2017, 09:13:02 PM
மழை... ☔
வானங்கள்  சத்தமிட..
மேகங்கள் கறுத்திட..
காற்று  வீசிட ...
மரங்கள் அசைந்திட...
இன்பமாய் 
சல சல  வென்று பொழியும்  மழை... 🌧

நீ  ஆகாயத்தில்  பிறக்கிறாய்
பூமியில்  விழுகிறாய் ...
வானவில்லாய் காட்சி அளிக்கிறாய்...
எங்கள்  மனதை  கொள்ளையிடுகிறாய்...
தொலை தூரத்தில்  இருந்தாலும்...
என்  இன்பத்தை  வெளிப்படுத்தும் 
அழகான  மழைத்துளியே ..

உன்னை  தொட்டு  விளையாடி 
சின்ன  சின்ன  குழந்தை 
ஆசையில்  மகிழ...
அம்மாவின்  அன்பை  பெற 
அரிய  வாய்ப்பு  தந்த  மழையே...


வறண்ட  நிலத்திற்கு  ஊற்றை 
பொலிவை வரமாய் தரும்...🌾
உன்னை  கண்டு  முதலில் 
மகிழும்  ஒருவர்  உழவர் ...
பல்லாயிரம் நெஞ்சங்களை
ஆனந்தத்தில் ஆழ்த்தும்
ஆனந்த நீர் நீ ...
மண்ணை செழிமை படுத்தும் 
வலிமை நீர் நீ ...
தாவரங்களுக்கு உயிர் கொடுக்கும்
அன்னை நீ ...
வறண்ட குளம் குட்டைகளுக்கு
பெயர் சூட்டுகின்ற தந்தை நீ ...
பூமியால் கொடுக்க முடியாத
வானத்தில் தோன்றுகின்ற
அன்பின் பொக்கிஷம் நீ ...🌨

தலையாட்டி  புன்னகைக்கிறது ..
எல்லோர்  மனதும் 
மழையில்  நனையவே 
மன்றாடி  கெஞ்சுகிறது ...

பல  மைல்  தூரம்  கடந்துவரும் 
இந்த  நீர்த்துளிகள் 
இறைவனின்  கண்ணீர்  துளிகள் 
என்று  என்  தாய்  சொல்வாள்...

உன்னால்  மட்டுமே  உலகத்தை 
காக்கவும்  முடியும்  அழிக்கவும்  முடியும் ... 🌊
உன்னால்  மட்டுமே  என்  வீட்டில் 
பவர்  கட் பண்ணவும் முடியும் ... :'(
[/i]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 149
Post by: DeepaLi on May 29, 2017, 03:58:18 AM
என் இனிய மழையே..
உன் அழகை வர்ணிக்க..
வார்த்தைகள் இல்லை என்னிடம்..
எப்போதும் நீ கானல் நீர் போல..
காட்சி அளிக்கிறாய்..
முப்பொழுதும் உன் நினைவாக..
நான் வாடுகிறேன்..
உன் வருகை தான் என் வாழ்வின் தொடக்கம்..

நீ வந்தாலே என் வாழ்வில் பொன் வசந்தம்..
மேகங்கள் கருமையாக  மாறுகிறதே..
உன்னை பிரிவதால் வருத்தமோ..
அவர்களிடம் கூறி விட்டு வா..
நாங்கள் உன்னை..
அன்பாக பார்த்து கொள்வோம் என்று..

என்னால் உணர முடிகிறது உன் வருகையை..
எங்களின் தூதுவர்களான..
மரம் செடி கொடிகளை..
நன்றிகளால்  நினைத்து விட்டு வருகிறாய்..
விவசாயிகளிடம் நன்றிகளையும்..
நம்பிக்கையும் கூறி விட்டு வருகிறாய்..

குழந்தைகளுடன் குதூகலித்து விட்டு வருகிறாய்..
மண்ணின் கண்ணான மழையே..
இயற்கையின் தேவதையே..
உன்னை என் இரு கரம் ஏந்தி..
வாரி கட்டியணைக்கிறேன்..

அளவாய் வரும்போது அமுத துளியாய்..
அளவின்றி வரும்போது விஷத்துளியாய்..
அறவே வராத  போது கண்ணீர் துளியாய்..
மொத்தத்தில் உயிர் துளியாய்..
இருக்கும் மழை துளியே..

இரவுகள் விடிந்து போகலாம்..
நிமிடங்கள் கடந்து போகலாம்..
இருப்பிடம் மாறி போகலாம்
ஆனால் விவசாயி மட்டும் உனக்காக..
என்றும் காத்து கொண்டு இருக்கிறான்..
வானம் பார்த்த பூமியாய்..


deepali:)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 149
Post by: தாமரை on May 29, 2017, 12:19:33 PM
காத்திருக்கிறேன் உனக்காக நான் என் வீட்டு மொட்டைமாடியில்

பார்வைகள் முழுதும் கருமேகங்களை நோக்கி

மின்னல்கள் நடத்திய வானவேடிக்கையும் 

இடி ஓசைகளின் இன்னிசை கச்சேரியும்

மழையே உன்னை வரவேற்க தயாராயின



சில்காற்றில் நான் உறைய முகத்தில் இட்டாய் முதல்  முத்தம்

சாரல் துளியாய் என்னிடம் வந்தாய்   

 மழை துளியாய் என் மீது பொழிந்தாய்


ஸ்பரிசத்தை முழுதாய் நனைய செய்தாய்

உடலையும் உள்ளத்தையும் குளிர்த்து விட்டாய்

காத்திருக்கிறேன் உனக்காக நான்  என் வீட்டு மொட்டை மாடியில்

நான் உன்னை நினைத்ததும் வருவாயே

ஆனால் இப்போதெல்லாம்  உன்னை அழைத்தாலும்  நீ வருவதில்லையே

மழையே கதிரவன் சிறையில் நீ சிக்கி தவிக்கின்றாயோ

 உன்னை காணாமல் நான் தவிப்பது போல்

என்று வருவாயோ கதிரவனை வெற்றிகொண்டு

காத்திருக்கிறேன் உனக்காக நான் என் வீட்டு மொட்டைமாடியில்........