FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on October 14, 2017, 11:37:37 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 162
Post by: MysteRy on October 14, 2017, 11:37:37 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 162
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Anoth  அவர்களால்     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/162.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 162
Post by: JeGaTisH on October 15, 2017, 03:02:58 PM
என் தாத்தாவை நான் பார்த்தது உண்டு ஆனால்
அவர் வாழ்ந்த வாழ்க்கையை என் அப்பாவோ  நானோ வாழவில்லை .
என் என்று சற்று சிந்தித்தேன்
காரணம்   தலைமுறைகளின் மாற்றம் என புரிந்தது.

அன்று என் தாத்தா ஏர் உழுதார்
இன்று என் அப்பா இருசக்கரவண்டி ஓட்டுகிறார்  .
இதன் மாற்றம் என்னவோ
அன்று என் தாத்தா  ஓட்டுவதற்கு   இருசக்கரவண்டி இல்லை
இன்று என் அப்பா உழுவதற்கு  ஏர்  இல்லை .

அன்று எல்லாம் கதை மயமாக  இருத்தது
இன்று எல்லாம் கணனி மயமாக இருக்கிறது
தலைமுறைகள் மாற மாற தலைவிதியும் மாறுகிறது.

அன்று என் சொந்தங்களோ ஒரே வீட்டில்
ஒன்றோடு ஓன்று சந்தோஷமாக வாழ்ந்தார்கள் 
இன்று என் சொந்தகளோ எங்கே என்று கேக்கும் படி வாழ்கிறார்கள் .

அன்று என் பாட்டனோ வயலில் வேர்வை சிந்தி ஏர்  உழுதார்
என் பாட்டியோ சமைத்து கொண்டு வருவாள்.
இருவரும் ஓர் மரத்தில் கீழ் அமர்ந்து உணவு சுவைப்பார்கள்.
அனால்  இன்று  தேசங்கள் கடந்து சென்று உழைக்கிறான்
உறவுகளை மறந்து உணவை மறந்து  நேரம் இல்லாமல் வேலை பாக்கிறான்.

அன்றைக்கு உலக சேதிகளை அறிய மறுநாள் காலையில் வரும் பத்திரிகைக்காக காத்திருதோம்.
ஆனால் இன்றோ அடுத்த நொடி என்ன நடக்கிறதோ அதை  எல்லாருக்கும் தெரியும் படி
தொலைக்காட்சிகள்  l  கணனிகள் தொலைபேசிகளில் வந்து விடுகிறது .

அன்று ஒருவரின் கனவு
நான் நல்லவனாக வளர வேண்டும் என்பது
ஆனால் இன்றோ  ஒருவரில் கனவு
நான் சிறந்த விமான ஓட்டுநராக  வேண்டும் என்பது.
காலங்கள் மாறும்போ கனவுகளும் மாறும்  கற்பனைகளும்  மாறும் .


                                                              நன்றி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 162
Post by: JeSiNa on October 16, 2017, 10:12:26 AM
அன்றைய காலகட்டத்தில் அதிகாலை எழுந்தார்கள் ...
இன்றைய காலகட்டத்தில் சூரியன் சுள்ளென்று
முகத்தில் அடிக்கும்வரை  தூக்கம்...

ஆடைகளை கைகளால் துவைக்கும் காலம் மாறி
துணி துவைப்பதற்கென இயந்திரம் ..

விறகு அடுப்பில் ஊதி ஊதி சமைத்த காலம் மாறி
மின்னடுப்பில் ஒய்யாரமாய் சமைக்கும் காலம் இது..

மண்பாண்டங்கள் உபயோகித்த காலம் மலையேறி
குளிர்சாதன பெட்டியின் பயன் மிகுந்த காலம் இன்று ..

இயற்கையில் கிணற்றுநீர் அருந்திய காலம் போய்
செயற்கை கனிமநீர் அருந்துகிறோம்..

அடுப்பில் வெந்நீர் இட்ட காலம் கடந்து
மின்சூடேற்றும் கருவியின் துணையில் இன்று..

இயற்கையான தென்றலை அனுபவித்த நாம்
ஏசி காற்று இல்லாமல் இருக்க முடியாதவராக மாறுகிறோம்..

வானொலிப்பெட்டியில் பாடல் கேட்ட காலம் மாறி
காதினுள் கருவியை சொருகி பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் ..

உடல் மறைக்க ஆடை உடுத்திய காலம் மாறி
கிழிந்து போன ஆடைகளை நாகரிகம் என்ற பெயரில்
உடுத்தி வருகிறோம் ..

செய்தித்தாளில் நாட்டுநடப்பை படித்து தெரிந்த காலம் மாறி
இணையதளத்தில் இணைந்து  செய்தி படிக்கும் காலம் இது

செயற்கைகளை தேவைக்காய்  உருவாக்கி
இயற்கை முறைகளை மறந்து விட்டோம்..

மனிதன் மரணித்தால் மட்டும் மீள முடியாது..
மற்ற  எல்லாவற்றிக்கும் இயந்திரம் கண்டு விட்டான்..

பெரியவர்கள் வாழ்ந்த கதைகளை சொல்வார்கள்..
அவர்கள் சொல்வதை கேட்டு கேலி செய்து
நக்கலாக சிரித்ததுண்டு ...
நான் சோம்பேறியாய் மாறிக்கொண்டு இருப்பதை அறியாமல்..

இவை காலத்தின் மாற்றங்களா ?
இல்லை நாம்தான் காலத்தை மாற்றி வருகிறோம்...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 162
Post by: joker on October 21, 2017, 06:57:33 PM
தாத்தாவுக்கும் பேரனுக்கும் உள்ள
பந்தம் என்றும் தெவிட்டாத இன்பம்

பிறந்து வளர்ந்து படித்து மணமுடித்து
தந்தையாகி,
பிள்ளையை வளர்த்து மணமுடித்து கொடுத்து
பேரனோ பேத்தியோ பிறக்கும் வேளையில்
மீண்டும் பிறக்கிறேன் குழந்தையாய்

பிறந்த குழந்தையை வளர்த்திடும் பொறுப்பு
என்றும்  பாட்டிக்கும், தாத்தாவுக்குமானது

கொஞ்சி மழலை மொழி பேசி விளையாடி
கால்ஊன்றி யானையாகி சுமந்து  நடந்து
வளர்த்தோம்

பள்ளி செல்லும் வேளை ,
காலை பள்ளியில் விட்டு வருவதும்
மாலை அழைத்து வருவதும்
தாத்தாவிற்கான எழுதாத வேலை

அழைத்து வருகையில் பேரனுடன் கதை பேசி
நடந்து வருவது வார்த்தையில் விவரிக்க முடியா ஆனந்தம்

வளர்ந்து விட்டான் அவன் ,
கீச்சுகளையும் , முகபுத்தகத்தையும்
பார்த்து பார்த்து
இன்று தாத்தாவின் முகம் மறந்திட்டான் போலும்

இதுதான் தலைமுறையின் இடைவெளியோ
இல்லை வயதானவர்களின் தலைவிதியோ
காலமோ, காலனோ  பதில் சொல்ல
காத்திருக்கிறேன்!!

*****ஜோக்கர்****

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 162
Post by: AnoTH on October 29, 2017, 03:14:38 PM
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
உலக நியதியன்றோ

மாற்றமதை ஏற்றுக்கொள்ளும்
மானிடர்தம் வாழ்வும்
இன்று மாறியதோ?

தென்னை மரத்தடியில்
மண்ணை உலுப்பி
அயலோடு விளையாடினோர்

விண்ணில் பறந்து
மண்ணை விட்டு
அயல் நாட்டில் வாழ்வதேனோ?

தென்றல் காற்றை சுவாசித்து
தேகம் செழிக்க வாழ்ந்தோர்
தேன் பண்டங்கள் உண்டு
வேகம் இழப்ப ஓடுவதேனோ?

உடலை அசைத்து
உயிரை காத்து வந்தோர்
உயர்வை பெற்றும்
வியர்வை தேடி அலைவதேனோ?

இளைஞர்களாய் போராடி
நாட்டை மீட்ட காலம் போய்
இணையத்தோடு போராடி
சேட்டை நிரம்ப வாழ்வதேனோ? 

சுய மதியால் உலகைப்படித்து
அனுபவத்தால் உயர்ந்த காலம்
செய் மதியின்றி  ஏது
இனி மனிதரின்  நாளும்?

வாழ்வை எளிதாக்கும் நவீன முறை
உலக மாற்றத்தை எதிர்நோக்கும் பலமுறை
இதையே இனி நாடும்
இன்றைய தலைமுறை
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 162
Post by: NiYa on November 01, 2017, 09:26:46 PM
மாற்றம் ஒன்றுதான்
மாறாதது என்கிறார்கள்
ஆனால்  எல்லா மாற்றங்களும்
மனிதகுலத்தை வளப்படுத்துவது இல்லை

காலையில் சூரியனுக்கு முதல்
விழித்து வயலுக்கு சென்ற காலம் போய்
கண் விழிக்காமல் தட்டி தடவி
கைதொலைபேசியை பார்க்கும் காலம் ஆயிற்று

தலைமுறைகள் மாற மாற எம்
பழக்கங்களும் மாற்றம் காண்கின்றன
ஆனால் எல்லாம் நன்மையாக அல்ல
என்பது தான் வருத்தப்படும் உண்மை

ஏர் உழுத காலத்தில் எவருக்கும்
சக்கரை நோய் இல்லை
மண்ணை கொத்தி விளைச்சலை
பெற்ற காலத்தில் எவருக்கும்
இரத்த அழுத்தம் இல்லை

அன்று தாத்தா தான் வம்சத்துக்கு
தென்னை நட்டுவைத்தார்
இன்று நமக்காக ஒரு மரம் வளர்க்க
நேரம் இல்லை

இன்று கணணியை கண்டுபிடித்து
கருணையை மறந்தும்
அறிவை வளர்த்து
அன்பை மறுத்தும் வாழ்வது தான் கொடுமை
 

ஓடி ஓடி உழைத்து
செல்வம் சேர்த்து
பல பல பட்டம்
வாங்கி எதை கண்டாய்
கடைசியில் அன்பாக வளர்த்த
பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள்

இதுதானா மாற்றம்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 162
Post by: பொய்கை on November 02, 2017, 12:22:22 AM
வால்மீகி எழுதியதை வழி வழியாய்
படிக்கிறாங்க பேராண்டி
வள்ளுவன் எழுதியதை பார் முழுதும்
வியக்குறாங்க பேராண்டி
 
கம்பனும் எழுதி வைத்தான் கவியாக
பாடி வச்சான் பேராண்டி
அவ்வையும் வந்து  தமிழ்
அமுதம் தந்தாளே பேராண்டி

தொல்காப்பியன் தந்த தொல்தமிழ்
என்தமிழ் பேராண்டி
பாரதியும் பாட்டாலே கவி சாரதியும்
ஆனானே அருமை பேராண்டி

கவியரசர் கண்ணதாசன் , கவிஞர் வாலி
கவி ஞானம் கேட்கலையா பேராண்டி
முன்னோர்கள் முதியோர்கள் அப்படி என்ன
சொன்னார்கள் என நினைக்கும் பேராண்டி

ஆயிரம் சொன்னாலும் விஞ்ஞானம் உன்னை
அஞ்ஞானம் ஆக்குதடா பேராண்டி
கணினி திரை தினமும் உன் விழி திரையை
கிழிக்குதடா பேராண்டி

காற்றில் ஒலித்த கீதமெல்லாம் உன் செவியில்
கருவியால்  துளைக்குதுடா பேராண்டி
உன்னை கண்டு மனம்  கனக்குது பேராண்டி
உன்னை காண மீண்டும் வெறுக்குது  பேராண்டி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 162
Post by: thamilan on November 02, 2017, 09:24:36 AM
பழமையா புதுமையா
புதுமையில் பழமையும்
பழமையில் புதுமையும்
கலந்திருப்பது அறியாயோ நீ

 விஞ்ஞான  யுகம்
தோன்றுவதத்திற்கு முன்னமே
உலக நியதிகளை ஒன்றாக சேர்த்து
திருமறையாம்  திருக்குறளை
உலகுக்குத் தந்தானே வள்ளுவன்
அது பழமையிலும் புதுமை தானே

எந்த நவீன இயந்திரங்களும் இல்லாத
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே 
800 டன் எடையுள்ள ஒத்தை கல்லை
கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு சென்று
கலசத்தை உருவாக்கினான் ராஜ ராஜ சோழன்
இது பழமையிலும் புதுமை அல்லவா

ஸ்வரங்கள்  ஏழு
அது பழமை
பாடல்கள் புதிது
புதுமையிலும் பழமை தானே கலந்திருக்கிறது

சமைக்கும் உணவுகள் புதிது தான்
ஆனால் நெருப்பு ஒன்று தான்
சமையல் புதிது 
நெருப்பு பழமை
புதுமையிலும் பழமை கலந்திருக்கிறது


காலம் ஓடும் வேகத்தில்
மனிதர்களும் ஓடவேண்டிய நிலை இன்று
நிற்க கூட நேரமில்லாத
நவீன யுகம் இது

பக்கம் பக்கமாக
பத்திரிக்கைகளை புரட்டி
பலமணி நேரம் வீணான காலம்
மலைஏறிப் போய் விட்டன
உலகமே கணணிக்குள்
கை விரல் நுனியில்

என்ன இயந்திரமாக ஓடினாலும்
எத்தனை நவீன யுகங்கள்  வந்தாலும்
சாய்நாற்காலியில் அமர்ந்து
தேநீர் அருந்தியபடி
பத்திரிகை படிக்கும் சுகம்
எதிலும் வராது
   
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 162
Post by: SweeTie on November 02, 2017, 09:22:19 PM

சோலைக் குயில் கூவும் விடிகாலைப்  பொழுது
காலைக்கடன்  முடித்து  கதிரொளியில்  இறை வணங்கிi
முதல்நாளில்  ஊறவைத்த  நீராகாரம்  உண்டு
பகல் முழுதும் ஏர்  உழுத உழவர் எங்கே போனாரோ !!

வியர்த்து  வயல்வேலை  செய்யும்  மாமனுக்கு   ...உணவூட்ட
சும்மாடு தனில் சோற்றுக் கலசம் ஏந்தி   
மாராப்பு வழுகாமல்   வரம்பில்   நடந்து வந்த
நம்ம  ஊரு  பெண்கள்   எங்கே போனாரோ!!

காட்டாறு கொண்டுசென்ற  காலங்கள் .. இப்போ 
வீட்டொடு   பெண்கள் இல்லாமல்  போனாரோ!
பணம்  தேடும்  பாமரனும்    வேற்று 
நாட்டோடு போய்  சேர்ந்தானோ!

மார்தட்டி  போர் செய்த வீரர் எல்லாம்  இன்று 
கைத்  தொலைபேசியில்  ஏவுகணை விடும் காலமாச்சு
கணினியைக்  கைப்பிடித்த யுவதிகளும்   
சேலையை  விட்டு ரொம்ப காலமாச்சு

பத்திரிகை படிச்ச பகல் எல்லாம் போயாச்சு
சாஞ்சிருந்த  திண்ணையும் மண்டபமா மாறிப்போச்சு
குப்பி விளக்கு வச்சு கும்மிருட்டு போன காலம்   இப்போ
மின்விளக்கு வந்தும்  சரியாக போகலேயே!
 
பாட்டன் என் காலம்  பத்திரிகையோட   ..
பேராண்டி காலம்  கைத்தொலைபேசியோட
வழக்குகளும்  மாறும் நடப்புகளும் மாறும்
மாறாததொன்று  மாற்றம் மட்டும்தான்.