FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on April 26, 2018, 05:30:46 PM

Title: ஆண் பெண் நட்பு !
Post by: joker on April 26, 2018, 05:30:46 PM
முதல் சந்திப்பு
புன்முறுவலுடன்
தான் தொடங்கியது

தேவைக்கு மட்டும்
பேசுவதில் ஆரம்பித்து
பின் தேவையே உன்னுடன்
பேசுவது என
வளர்ந்தது

எந்த நிமிடம் நமக்குள்
நட்பு
நுழைந்தது தெரியவில்லை

தாயிடம் பகிராததும்
நமக்குள் பகிர்ந்தோம்

சில நாள்
செல்ல சண்டைகளிட்டோம்
சில நாள்
செல்லமாய் கோபித்துகொண்டோம்

தாயிக்கு  பின்
நான் சொல்லாமலும்
என் உணர்வறிந்தவள் நீ

எனக்கு காய்ச்சலென்றால்
சொல்லாமல் மருந்தோடு
என் முன் நிற்பாய்
உனக்கு வலி என்றால்
அதிகம் வலிப்பதென்னவோ
எனக்கு தான்

ஆண் பெண் நட்பிற்கு
ஊர் சொல்லியது
ஆயிரம் கதைகள்
தப்பவில்லை நம் நட்பும்

தெளிந்த நீரோடை போல்
சென்ற நம் நட்பில் கல்லெறிந்து
கொண்டிருந்தது நம் சுற்றம்

அக்கா என்றோ தங்கை என்றோ
அழைத்தால் ஏற்கும் இச்சமூகம்
தோழி என்றால் மூன்றாம் கண்
கொண்டு பார்ப்பது ஏனோ ?

வீரநடை போடும் நம் நட்பில்
விரசம் விதைத்து விரிசல்
ஏற்படுத்த நினைக்கும் சிலர்

தோழி
எனக்கொரு ஆசை

காலன் 
நெருங்கும் வரை
நம்மை சுற்றி உறவுகள்
பல இருந்தாலும்,
இன்பங்களையும்
துன்பங்களையும்
பகிர தோள் கொடுக்கும்
தோழன் தோழியாய்
நம் நட்பு  என்றும்
இருக்க ஆசை
Title: Re: ஆண் பெண் நட்பு !
Post by: NiYa on April 26, 2018, 09:03:12 PM
அருமையான கவிதை

நட்பில் ஆண் பெண் இல்லை
என்பதை புரியாத சமுதாயம்



""தெளிந்த நீரோடை போல்
சென்ற நம் நட்பில் கல்லெறிந்து
கொண்டிருந்தது நம் சுற்றம் ""

நான் நல்ல சகோதரனை , வழிகாட்டியை , நலன் விரும்பிய  பார்த்தது என் நண்பனில் தான்.

நன்றி நண்பா இந்த கவிதைக்கு