Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 77901 times)

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #360 on: May 01, 2017, 12:24:50 PM »
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு

விளக்கம்
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன்
தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை
 நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ

...............  ஒட்ட ஒழுகல் ................
தீராமை ............ ................




Offline MyNa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #361 on: May 01, 2017, 05:25:47 PM »
குறள் 482:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.


விளக்கம் :
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

___________  அனையாரும் __________  ___________
குன்றி   _______________  செயின்

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #362 on: May 01, 2017, 11:13:34 PM »
குறள் 965

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்


பொருள்
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும்
தாழ்வுக்குக் காரணமான செயல்களை ஒரு
குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து விடுவர்


அடுத்த குறள்

--------------------- அறிந்தக் ----------------- -----------------
இயற்கை ------------------ செயல்

Offline MyNa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #363 on: May 02, 2017, 05:56:10 AM »
குறள் 637:
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.

விளக்கம் :

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

_________  _________ வாழ்பவன் __________
_________ வைக்கப் படும்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #364 on: May 02, 2017, 06:42:28 AM »
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.   

விளக்கம்:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.

...................... ....................  விருந்தொக்கல் .....................
ஐம்புலத்தா றோம்பல் ................




Offline MyNa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #365 on: May 02, 2017, 08:44:45 AM »
குறள் 43
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

விளக்கம் 1:

தென்புலத்தார், தெய்வம் விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.

விளக்கம் 2:
இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

_________ காணின் ________ பட்டடை
நேரா __________  ___________.

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #366 on: May 02, 2017, 12:18:42 PM »
குறள் 821

சீரிடம் காணின் எறிதற்கு பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு

பொருள்

மனதார இல்லாமல் வெளியுலகத்திற்கு நண்பரை போல்
நடிப்பவரின் நட்பானது ஒரு கேடு செய்ய சரியான
சந்தர்ப்பம் கிடைக்கும் போது இரும்பை துண்டாக்க
தாங்கு பலகை போல் இருக்கும் பட்டடை கல்லுக்கு
ஒப்பானதாகும்



----------------------- சார்பு ---------------- மற்றழித்துச்
சார்தரா ----------------- ----------------------

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #367 on: May 02, 2017, 12:52:37 PM »
சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய் 

குறள் விளக்கம்:
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

..................  நீத்தாருள் .............. கொலைஅஞ்சிக்
கொல்லாமை ................ ...............


Offline MyNa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #368 on: May 03, 2017, 10:12:30 AM »
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

விளக்கம் :
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

மருவுக __________  ___________  ___________
ஒருவுக ஒப்பிலார் __________

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #369 on: May 04, 2017, 06:37:43 AM »
   
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.

குறள் விளக்கம்
குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும், ஒத்தபண்பை இல்லாதவறுடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.


................... ................  ஒருவற்குப் பேதையார்
கேண்மை .............. ...................




Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #370 on: May 07, 2017, 09:09:16 PM »
குறள் 797

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்


பொருள்:

ஒருவருக்குக் கிடைத்த நற்பயன் என்பது அவர் அறிவில்லாத ஒருவருடன் கொண்டிருந்த நட்பைத் துறந்து விடுவதேயாகும்



------------------------  ---------------------   திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள ------------------  ----------------


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #371 on: May 08, 2017, 08:30:50 AM »
   
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.

குறள் விளக்கம்
ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.

................. பேணிக் ................ ......................
பொருத்தலும் வல்ல ...............




Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #372 on: June 25, 2017, 04:50:19 PM »
[highlight-text]பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.


NEXT >    கருவியும் ............   ..................செய்யும்
         ...........................   ...................அமைச்சு.[/highlight-text]
[/color]

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #373 on: June 26, 2017, 08:57:31 AM »
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

விளக்கம் : செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.


....................... சூழ்ந்தும் .................. செய்வர்
திறப்பாடு ......................... ..................


Offline JeGaTisH

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #374 on: June 26, 2017, 02:37:21 PM »
[highlight-text]முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
[/highlight-text]


குறள் விளக்கம்
(செயல்களைச் முடிக்கும்) திறன் இல்லாதவர், முன்னே எண்ணி வைத்திருந்தும் (செய்யும் போது) குறையானவைகளையேச் செய்வர்.


.............  ................ ............... தெவ்வோர்
........... ............... உறும்.