இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
பிறந்தநாள்... பூமி பந்து மகிழ்ந்தநாள்
நீ இன்று பிறந்ததால்...
இனிமை மிகு நல்ல நாள்... நீ பிறந்த நாள்...
வாழ்த்துகின்றேன் நெடு நாள் வாழ்கவென்று...
இவ்வுலக வாழ்வில் இளமைதனை
மறந்து... எழிமையினை பூண்டு...
இறைவன் வழி நடத்தலே இன்பெனும்
உண்மை உணர்ந்த நின் இதயம் பெரிது.....
விண்ணுலக வாழ்வு வேண்டி.....
பூவுலகில் ஆசைதனை வெறுத்து
யேசுவழி செல்பவளே...
செல்லும் வழி பிறரும் செல்ல
தாயாய் நின்செய் செபங்களும்.....
சொல்லும் ஆறுதலும் பலரும் பெற்ற வரமல்லோ.....
தோழர்க்கும் வலிமைதரும் உன் நட்பு
தோழியரை தேற்றும் உன் பாசம்
உடன் பிறந்தோர்மேல் காட்டும் நேசம்
தந்தைக்கும் தாயாய் நின்றிடும் உன் அன்பு...
அரட்டையில் வரையறை
நட்பினில் தெளிவு
வலித்தோரிடம் பரிவு
அழுவோருக்கு தேற்றரவு
பசித்தோருக்கு உணவு
நேயாளிக்கு செபம்
ஆனாதைக்கு சகோதரி
சோர்வில் தைரியம்
மருத்துவ மனையில் இருப்பவர்கள்
நோயாளிகளா இல்லை சகோதரரா உனக்கு.....
இன்னமும் எத்தனை நல் இயல்புகள்
பெண்மைக்கு நீயோர் நல் இலக்கணம்
பிறந்தநாள்... பூமி பந்து மகிழ்ந்தநாள்
நீ இன்று பிறந்ததால்...
நோயற்ற மேனிகொண்டு.....
வறுமை அற்ற வாழ்வு கண்டு.....
நெடு நாள் வாழ்கவென்று.....
இனிமை மிகு நல்ல நாள்... நீ பிறந்த நாள்...
வாழ்த்துகின்றேன் யேசுபிள்ளையாய் நீ.....
நெடு நாள் வாழ்கவென்று...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.....
உன்மேல் பெருமைகொண்டு
இதயமதில் மகிழ்ச்சி பொங்க
அன்போடு வாழ்த்துகின்றேன் - என்
தாய் வயிற்றில் பிறவாதவளை.....
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்மா.....
"யேசுவே துணை" ஆமென்! அல்லேலூயா!