FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 15, 2014, 03:46:24 PM

Title: ~ இயற்க்கை மருத்துவ குறிப்புகள்:- ~
Post by: MysteRy on January 15, 2014, 03:46:24 PM
இயற்க்கை மருத்துவ குறிப்புகள்:-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/1545738_669645239724461_484264485_n.jpg)


மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி 5 கிராம் அளவு ஒரு வருடம் தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பொன்நிறமாக மாறும்.

ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டாலும் தேகம் பொன்னிறமாகும்.

நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் எண்ணெயில் பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக ஆகும்.

முட்டைக்கோஸ் சாறை முகத்தில் தடவி வர முகச் சுருருக்கம் மறையும்.

இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மினுமினுப்பாகும்.

அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்பாக இருக்கும்.

முருங்கை பிசின் பொடி செய்து அரை ஸ்பூன் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும்.

சந்தனக் கட்டையை எலுமிச்சை சாறில் உரைத்து பூசி வந்தால் முகம் வசீகரத் தோற்றத்தைப் பெறும்.

கானாவாழை, மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமடையும்.

ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாக மாறும்.

மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு நிறம் மாறி வழவழப்பாகும்.

வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி பின்னர் குளித்து வந்தால் உடல் சிவப்பாக மாறும்.

கோரைக் கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வர உடல் பொலிவு உண்டாகும்.

அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகி வர உடல் அழகும், முக அழகும் கூடும்
Title: Re: ~ இயற்க்கை மருத்துவ குறிப்புகள்:- ~
Post by: MysteRy on January 29, 2014, 07:54:25 PM
இயற்க்கை மருத்துவ குறிப்புகள்:-

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/1509223_678915858797399_211023590_n.jpg)


அஜீரணம் அகல:
1. ஓம வாட்டரும், தேனும் கலந்து குடிக்கலாம்.
2. ஓமத்தை வாணலியில் பொரித்து, தண்ணீரில் வேகவிட்டு அந்த தண்ணீரையும் வடிகட்டிக் குடிக்கலாம்.
3. சோடா, எலுமிச்சம்பழம் உப்பு போட்டு அருந்தினாலும் வயிற்றுவலி குறைந்து ஜீரணம் ஏற்படும்

உடல் வலி தீர:
துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகவும்.

சளியை விரட்ட:
சாம்பிராணி, மஞ்சள், சீனி கொண்டு புகைப்பிடிக்கவும்.

இருமலுக்கு:
மிளகு, அதிமதுரம், சித்தரத்தை, திப்பிலி (ஒரு சிறிது மட்டுமே). துளசியிலை இவற்றை அவித்து சாறு எடுத்து பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தலாம்.

குப்பைமேனி:
குப்பைமேனி இலையைச் சாறு எடுத்து அத்துடன் சிறிது வேப்பெண்ணெய் கலந்து சிறு குழந்தைகளுக்குத் தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவ வயிற்றில் தங்கியிருக்கும் கோழைக்கட்டு, வாந்தியினால் வெளியேறும். இதையே தலைவலிக்கும் தடவி வர குணமாகும்

குப்பைமேனி இலையை அரைத்து மேகப் புண்களுக்கு வைத்துக் கட்டிவர குணமாகும்.

குப்பைமேனி வேரை கைப்பிடியளவு எடுத்து 500 மில்லி நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க மலச்சிக்கல் நீங்கும்.

நெல்லி:-
நெல்லியை அரைத்து சிறிதளவு குங்குமப்பூ கலந்து ரோஜா நீருடன் கலந்து குடிக்க தலைவலி, மூலநோய் நீங்கும்.

நாள்தோறும் ஒரு நெல்லிக்கனி தின்றால் இதயக் கோளாறுகள் நீங்கும். நரம்புத் தளர்ச்சி, இளநரை, தோல் சுருக்கம் போன்றவை குணமாகும்.

உலர் நெல்லியை நீரில் போட்டு ஊறவைத்து இந்நீரில் கண்களைக் கழுவி வர கண்நோய்கள் குணமாகும்.

மிளகு:-
ஒரு தேக்கரண்டி மிளகை லேசாக வறுத்து ஒன்றிரண்டாய் தட்டி நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து சாப்பிட பசியின்மை தீரும்.

தலைவலி அதிகமாக இருப்பின் உப்பையும், மிளகையும் நன்கு அரைத்து தலையில் பற்றிட குணமாகும்.

சந்தனம், மிளகு, கற்பூரம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு எளிதில் குணமாகும்.

அஜீரணம்:

சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் மருந்து, மாத்திரை தேட வேண்டாம். ஏலரிசியுடன், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அஜீரணக் கோளாறு விலகிவிடும்