FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: SarithaN on February 28, 2017, 12:38:16 AM

Title: தோழியுடன் தொலைபேசியில் 03
Post by: SarithaN on February 28, 2017, 12:38:16 AM
தோழியுடன் தொலைபேசியில் 03


அன்பே ஊற்றான செவ்வந்திக்கு வணக்கம்.

கடிதம் கண்டேன் அன்பில் மகிழ்ச்சி.....
பெருமிதம் கொண்டேன்.....

உன் உத்தம தனத்தை உணர்ந்தவன். ஒருபோதும்
காமுகியாக ஒழுக்கம் கெட்டவளாக கண்டிடேன்.....

பெண்ணும் பெண்ணினமுமே தயங்கி மறையும்
செயலை தியாகிக்க துணிவு கொண்டாய்.....

பெருமையும் மகிழ்வும் எனக்குத்தான் ஏராளம்..... 
வலிகளும் சுமைகளும் உனக்கென வேண்டுகிறாய்
என்பதில் எனக்கு எஞ்சியது கவலையும் துயரமுமே.....

கடந்தோடிய ஐந்தாண்டில் இன்றுதான் உன்குரல் கேளாத
முதல்நாள்.....

வலிக்கிறது ஆனாலும் பேசவில்லை உனது
அர்ப்பணிப்புக்கான பதிலைச் சொல்லாமல்.....

காட்டியுள்ள சினேகிதத்தின் ஆணிவேரை எவராலும்
ஆராய்ந்து அறிந்துவிட முடியாது என்பதை.....
என் இதயம் உணர்ந்திடாவிடில்.....
எனக்குள் இதயம் இருப்பது பொய்த்திடும்.....

அன்புள்ள செவ்வந்தி கடந்து வந்த காலமதில்
இரகசியம் காப்பதில் தலைசிறந்து நிற்கின்றாய்..... என்முன்.   
எப்போதாகிலும் உனது மௌனத்தை கலைப்பாயென
காத்திருந்தேன் நிகழவே இல்லை....
மௌனத்தின் மோகமானாய்.

ஊரிலுள்ள எனது உறவுகள் நண்பர்கள் குடும்பத்தார்க்கு
வேண்டியதை என்னால் முடிந்தவரை செய்துவிட்டேன்..... 
இன்னமும் வாழ எஞ்சியுள்ள நாட்களில் தேடமுடிந்ததை
தேடி அனுப்பிடுவேன்.....

என்னிடம் வெளிப்படுத்தாமல் உன்னுள்ளே
நீ மௌனமாய் காத்துக்கொள்ளும்...
என் வாழ்க்கை இரகசியம் பழகத் தொடங்கிய
முதல் நாளே நானறிவேன் நீயறிவாயென.....
உன்னைப்போலே நானும்.....
மௌனமானேன்.....

நமது நட்புறவுக்கும்.....
எனது மரணசடங்குக்காக நானே முற்பணம்
கட்டி வந்தமைக்கும் ஒரே வயதுதான்...
அறுபது மாதங்கள் இருநூறு யூரோக்கள் விகிதம்
அடக்கச் சடங்கு செய்யும் நிறுவனத்துக்கு..... செலுத்திவிட்டேன்.

அவர்களும் காத்திருக்கின்றனர் எப்போது காரியநாள்.....
கடமையை முடித்து விடலாமேயென.....
அவ்வப்போது அவர்களது தொலைபேசியும் வருகிறது
இருக்கின்றேனா இல்லையா என்பதை உறுதிப்படுத்த.....
ஒருபோதும் கோபம் இல்லை அவர்கள்மேல் எனக்கு....
சிரித்தபடியே பதில் சொல்கின்றேன்.....

கோவித்தால் பின்னர் பழிதீர்க்க காரியம் செய்கையில்
அடித்து விடுவரோ எனும் பயம்தான்.....
பணத்தை வாங்கியபின் ஏமாற்றி ஓடுவோர் இடையே
இவர்கள் எத்தகை மேன்மை உடையோர்
வாங்கிய பணத்துக்கு கடமைசெய்யும்...... நீதி.

ஐந்தாண்டுகளில் உன்னுடன் பேசாத முதல் நாள் இன்று
வலிக்கிறது மனது.....
சொல்லையில் கூட கரைகிறது கண்கள்.....
உன் நிலையும் இதுதானென என் இதயமும் அறியும்.....

நீயும் நானும் ஒருவரை ஒருவர் நம்நடுவே மறைத்த
கதைகள் எத்தனை எத்தனை.....
பலமுறை மருத்துவமனையில் இருக்கையில்
தூரதேசம் போனதாய் பொய்சொல்லி..... 
தொலைபேசியில் பேசியதுண்டு.
தூரம் போனாலென்ன் skype வாவெனும் போதெல்லாம்
முழித்துக் கொள்வேன்.....

பொய் சொல்லியல்ல... உண்மையை மறைத்து.
சில வாரங்களை..... நேரில் காண முடியாமைக்கான
கேள்விக்கு பதிலென வெற்றி கொண்டதாய் சிந்தையுற்றேன்.....

அதிலும் நான் உன் அன்புக்கு முன்னால் தோற்றுப் போனேனென
அப்போதே தெரிந்து கொண்டேன்.....

விழுங்கும் மாத்திரைகள் ஏறிக்கொண்டே இருக்கும் மருந்துகள்
இரவுதோறும் என்னை உறக்கத்தில் அல்ல மயக்கத்தில் ஆழ்த்தும்.....
மருத்துவ மனையில் மயங்கிய எனது இரவுகள் அனைத்துக்கும்
தாயென நீ..... தலைமாட்டில் மடிகொடுத்து...
வலித்தமேனி வருடியதை..... 
தாதிசொல்லி நானறிந்தேன்.....

இரவுகளில் குழந்தையுடன் கூடத் தங்க
தாய்க்கே அனுமதியில்லா தேசமதில்.....
உன் அன்பு வெற்றிகொண்டது.....

தூக்கம் தொலைத்து... உணவு மறுத்து... வேலைக்கு விடுப்பெடுத்து...
மருத்துவமனை இரவுகள் அனைத்துக்கும் தாயாகி... தெய்வமாகி...
நின்ற நின் கருணையும் இரக்கமும் தாதி சொல்வாள்...
அவளும் காலப்போக்கில் சோதரியாணாள் எனக்கு.....

ஐந்தாண்டுக்கு முன்னரும் நீ வேலைசெய்த ஆய்வுகூடத்தில்
மருத்துவரின் அறிக்கைக்கு எழுத்துரு கொடுக்கையில்தான்.....
தமிழச்சியாய் இருந்து எனது பெயர் கண்டு...
பதறினாய்..... திடுக்குற்றாய்..... வருந்தினாய் இரங்கினாய்.....
நிர்வாக நியதிக்கு முரனாய் எனது
தொலைபேசி இலக்கத்தை கையாடினாய்..... 

கருணையோடு உறவாட முயன்றாய்
ஆனாலும் நீ உண்மையை
சொல்லாமலே உறவானாய்
உயிரானாய் சினேகமாய்..... 

எது எப்படியாயினும் எனது வாழ்வில்
இன்னமும் எஞ்சியுள்ள
நாட்களின் எண்ணிக்கை நீ அறிவாய்.....
கடவுளுக்கு அடுத்து. 

இத்தனையும் தெரிந்த செவ்வந்தி
எப்போது இத்தகை அமிலமதை
உன்னுள்ளே ஊற்றினாயென
உணராது போனேன்.....

அனைந்தும் அறிந்த பாரதியின்
புமைப்பெண்ணென பெருமிதம்.....
கொண்டிருந்தேன்...

யாருடனும் நட்பை வளர்த்ததில்லை
மரணம் பிரிக்கையில்
தோழமைகள் அழவேண்டாமேயென.....

என் எல்லாமும் அறிந்த உணர்ந்த
நீ இன்று அழுவதும் உன் வலிகண்டு
நான் தேம்புவதும்.....
மரணத்துக்கு முன் நிகழுமென
நினைத்ததில்லையே தாயே.....

நீ காட்டிய அன்பின் புனிதமதை
யாரிடம் நான் சொல்லிட முடியும்.....
அன்பென்பதை அறியாத உலகில்
உனது தியாகம் யார் உணர்வார்.....

கடிதமாக எனது பதிலை அனுப்பி.....
அதை படிக்கையில் நீ.....
படப்போகும் வலியென்னவோ.....
பார்த்திடவே என்னால் இயலவில்லை..... 

துணை நில்லுங்களென.....
ஆறுதல் சொல்லுங்களென.....
யாரை நான் கேட்டிட முடியும்.....
நீ செய் அர்ப்பணத்தின் முன் என் தாயே.....

மரணநாளை எண்ணிய கொடுமையிலும்.....
கொடிய கொடுமை செய்தாயே.....
செவ்வந்தியே என் தோழியே
நண்பியே சினேகிதியே.....
வேண்டாமே இக்கொடுமை
என் உயிரிலும் உயர்ந்தவளே.....

உறுப்புக்கள் தானம் செய்ய என்னுள் ஏதுமே
ஆரோக்கியமாய் இல்லையாம்.....
இந்த உண்மை செய்தியாய் வீட்டு அஞ்சல்
பெட்டியில் நான் காணுமுன்.....
அதை ஆய்வுகூடத்தில் அச்சுகோத்தவளே.....
இத்தனையும் தெரிந்துமேன் உன்னையே
நீ அழித்திட சித்தம் கொண்டாய்......

நீ செய்திட துணிந்தது தியாகம்
நீ செய்திட துணிந்தது அர்பணம் என சொல்வது அற்பம்.....

நீ செய்திட துணிந்தது தற்கொலை.....
தயவு செய்து வேண்டாம்.

அடக்க சடங்குக்காக செலுத்திய
முற்பணத்தை மீளப்பெற்று
தானமிட சிந்தை கொண்டுள்ளேன்.....

எனது வீட்டுக்கு என் மரணம்
மூன்றாம் பிறையாக வேண்டுமென
தீர்மானித்துள்ளேன்.....

அடக்க சடங்கின் செலவை குறைக்க
மருத்துவ ஆலோசனை பெற்று
பிஞ்சு பட்டு... வீழும் நாள் நெருங்கையில்.....
ஆசியாவை அடைவேன்.....

மௌனங்கள் கலைகிறது உயிரே.....
ரகசியம் தகர்கிறது அன்பே.....
ஆடிய கண்ணாமூச்சி முடிவுக்கு வரும் வேளை.....
இருவரும் ஒரு நாள் கூடி அழலாம் அனைத்துக்கும் ஒன்றாய்.....

சீவன் போன என்முன் நீ எப்படி அழுவாயென....
ஒருமுறை..... சீவனோடு இருக்கையில் கண்டு மகிழ்வேன்..... 

அன்றும் இன்றும் உள்ளவரையிலும்
மாறாத மறவாத அன்புள்ள சினேகிதன்

நிதிலன்
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 03
Post by: ChuMMa on March 02, 2017, 04:57:25 PM
நீ காட்டிய அன்பின் புனிதமதை
யாரிடம் நான் சொல்லிட முடியும்.....
அன்பென்பதை அறியாத உலகில்
உனது தியாகம் யார் உணர்வார்.....

காதல் ...ம்ம்ம்ம் சகோ என்னையும் அழ வைத்துவிட்டது

வார்த்தை வரவில்லை

மௌனமாய் விடை பெறுகிறேன்
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 03
Post by: SarithaN on March 04, 2017, 04:05:08 PM
சகோதரா ஆண்கள் கண்ணீர்
அறிவார் அதிம்பேர் இல்லை..... உலகில்

அப்பாக்கள் கண்ணீர் என்பதே
குதிரை கொம்புதான்.....

ஆண்களின் கண்ணீர் அறிந்ததும்
ஆறுதல் தருவதும் தனிமையும் இருளும்..... தானே.

இங்கே உங்களை அழவைத்ததில்
எனக்கு ஆனந்தமே  :) :) :) .....

வேலைப் பழுக்களின் மத்தியிலும்.....
தொடர்ந்து படித்து கருத்துரைத்தமைக்கு
மகிழ்ச்சி சகோதரா.....
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 03
Post by: ChuMMa on March 09, 2017, 11:44:32 AM
ஆண்களின் கண்ணீர் அறிந்ததும்
ஆறுதல் தருவதும் தனிமையும் இருளும்..... தானே.

உண்மையான வரிகள்

நன்றி சகோ
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 03
Post by: MyNa on March 14, 2017, 11:23:02 AM
Romba arumaiya iruku sarithan..
adutha paguthiku aavala kathiruken..
sikirame varumnu ethir pakuren..
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 03
Post by: SarithaN on March 19, 2017, 11:53:13 PM
வணக்கம் மைனா.....

உங்கள் கருத்துக்கும்
கதைமேல் காட்டும்
அபிமானத்துக்கும்
மிக்க நன்றி.....

விரைவில் காணத்தருகின்றேன்
எஞ்சிய கதையை..... ஆனால்
வலிகள் நிறைந்திருக்கும்..... தோழி

விரைவாய் வருகின்றேன் நன்றி
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 03
Post by: VipurThi on April 07, 2017, 11:12:43 AM
Sari na:) anna kathai azhagana kadhalai solluthu na  :'( oru China vendukol na:) sogamaga intha kathayai mudichirathinga na:) ithu ennoda oru siru aasai na:) azhagana thooymayana kadhaluku nalla mudivugal nalla eduthukata irukanum nu virumburen na:)
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 03
Post by: MyNa on April 11, 2017, 11:10:13 AM
Vanakam sarithan..

Valigal ilatha vazhkai than ethu?
Valigalum vazhkaiku avasiyam than.. ilaina suvarasiyam ilama poidume vazhkaiye.. :)
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 03
Post by: SarithaN on April 13, 2017, 03:20:31 AM
விபூமா.....
தோழி மைனா.....

எனது கருத்தை பின்னதாக
பதிகின்றேன்..... நன்றி

வலிகளை சற்று மறைக்கும்
தோழியுடன் தொலைபேசியில் 04 தொடர்கிறது.....
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 03
Post by: SarithaN on April 14, 2017, 06:20:26 PM
விபூமா வணக்கம்.....

என்னால் ஆனவரை உயிருள்ள ஒரு
உன்னத உறவை காட்சிபடுத்துகின்றேன்.....

யாரும் வலித்திட வேண்டும் என்பது விருப்பம்
அல்ல.....

இன்னும் சில பகுதிகளை நீங்கள் வலிகளின்றி
நோக்கிட உத்தரவாதம் தருகின்றேன்.....

முடிவு எப்படி என்பது.....
என் கையில் இல்லவே இல்லை.....

இல்லையேல் எதையும் தாங்கிடும் இதயம் ஒன்று
போதுமானது.....