FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 19, 2017, 12:39:49 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 139
Post by: Forum on March 19, 2017, 12:39:49 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 139
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/139.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 139
Post by: SarithaN on March 19, 2017, 09:28:53 AM
மனிதா மரங்கள் சொல்கிறது
நான் இன்றி நீ இல்லை.....
உன் சுவாசத்தின் ஆதாரம் நான் என்று.....


நீலமே நிலமதாயான வானமே.....
நிலவின் வீதியே வானவெளியே..... 
வண்ணக் கோலமே.....

சாம்பல் நிற படலமே.....
வந்து கலையும்
வானவெளியின் மாயமே.....

நீல வண்ணமே.....
சாம்பல் உன் தோழியா..... இல்லை காதலியா.....
நாழிகைகள் பிரிவதில்லை எப்போதும்.....
கொஞ்சுவதும் பிணைந்து கலப்பதும்
அன்பின் வெளிப்பாடோ.....
மனிதகுலம் கற்றிட வேண்டுமோ உன்னிடத்தில்.....

வான வெளியில் வளைந்து தோன்றும்
ஏழுவர்ண வளைவே
உன் பெயர்தான் வானவில்லோ
எங்கிருந்து வருகிறாய்
வந்தபின் எங்கே போகிறாய்

வந்து மறையும் நீயே மறுபடி வருவாயா
இல்லை ஒருமுறைதான் உன் வாழ்வா?
ஐயோ ஆயுள் அற்பமா உனக்கு.....

ஒற்றையாய் ஒருமரம் மொட்டையாய்
ஏங்கிப் பட்டுப்போய் பாழாகி நிற்குதே.....
மழை செய்த வஞ்சனையா..... இல்லை
மானுடன் செய்த கொலையது.....

மழைசெய் துரோகமென்றால் சுற்றியெங்கும்
பச்சையேது..... உயிருடன் மரங்களேது.....

கதிர் முற்றி அறுவடையான பயிரின் தண்டுகள்
உண்டே வயலில் மஞ்சளாய்.....
அப்படியானால் மரத்தை கொன்றது மனிதந்தான்
வறட்சியல்ல.....

மனிதா மரங்கள் சொல்கிறது
நான் இன்றி நீ இல்லை.....
உன் சுவாசத்தின் ஆதாரம் நான் என்று.....


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 139
Post by: thamilan on March 19, 2017, 12:01:33 PM
வானவீதியில்  ஒரு மேம்பாலம்
வானவில்
யார் நடப்பதற்கு??......
வர்ணங்களின் வண்ணஜாலம்
வானவில்
ராமன் வளைத்திட்ட வில்லைபோலவே
இறைவன் வளைத்திட்ட வில்லோ
வானவில்

வானவில்
இயற்றுகை வரைந்திட்ட வர்ண ஓவியம் 
வானவில் தோன்றும் போது
வானம் அழகாகிறது
ரசனை கூடும் போது
வாழ்க்கை அழகாகிறது

வாழ்க்கையும் வானவில் போலே
வந்து கலைந்திடும் ஒரு
வண்ண ஓவியம்
வாழ்க்கையும் வானவில்லும்  சொல்கின்றன
போகும் போதே ரசித்துக் கொண்டே போ 
திரும்பி வரமாட்டேன் உனக்காக .....

வானம் அவள்
மழையால் நீர் தெளித்து
வரைந்திட்ட அழகுக்கு கோலம்
வானவில்

வான் மீது கொண்ட காதலை
வர்ண ஓவியமாய்  வரைந்து காட்டிடும்
காதல் மங்கை வானவில்

என் கடந்த கால காதல்களும்
வந்து போகின்றன சில நேரம்
வண்ண வயமாய் வானவில் போலே

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 139
Post by: VipurThi on March 20, 2017, 11:45:30 AM

கார்முகிலும் வெண் முகிலும் கொண்ட
காதலெனும் பார்வையிலே
இந்த வான்வெளியில் தோன்றினாய் நீ
வானவில் எனும் அழகிய பேரினிலே

எங்கு தொடங்கி எங்கு முடிகிறாய் என்று
தேடித்தான் பார்க்கின்றேன்
என் தேடலோ ஏக்கத்தில் முடிந்திடவே
தோற்றுத்தான் போகின்றேன்

மாரி மழைக்கா கோடை வெயிலுக்கா
நீ என்றும் சொந்தம்
இரு காலங்களின் ஆசையினாலே
தொடங்கியதே உந்தன் பந்தம்

பகலவனின் பார்வையிலே தஞ்சம் கொண்டாய்
அவன் வர்ணங்கள் ஏழு கொண்டு
எம் நெஞ்சம் வென்றாய்

ஆசைகள் தான் முடிந்திடவே மாறிடுதே காலம்
ஆனால் அழியாதே மனதில் என்றும்
நீ கொண்ட வண்ணக்கோலம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 139
Post by: ChuMMa on March 20, 2017, 12:29:55 PM
யார் வரைந்ததோ இந்த அழகான
 ஓவியம் வானில் ..?!!
என் பிரமிப்பு நீங்க நெடும் நேரம் ஆனது
ஒரு நாள் பால்ய வயதில் அதிசயமாய்
வானில் கண்ட வானவில் ....

ஏழு வண்ணம் எப்படி கிடைத்தது தேவர்கள்
கையில் வானில் வானவில் வரைந்திட....

தேவர்கள் நடக்கும் பாதை அது என
என் வீட்டு  பாட்டி சொல்ல வாய் பிளந்து கேட்டிருக்கிறேன்

வாலிப வயதில் யோசிக்கையில் அது
யார் யாருக்கோ அனுப்பிய காதல் மடல்
என தோன்றியது ....

காதல் நிராகரிக்கையில் மறைந்திடும் போலும் !?

இல்லை அது வான மங்கையர்
இட்ட வண்ண கோலமோ ?!


விஞ்ஞானம்  நீ தோன்ற பல காரணம்
சொன்னாலும் இன்றும் என்றும்
உன்னை அதிசயமாய் தான் காண்கிறேன் ...

------------சும்மா -----

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 139
Post by: SweeTie on March 20, 2017, 08:14:59 PM
மழை  வந்துபோக  அவள் வந்தாள்
வண்ண பட்டாடையில் வரிவரியாய்  வர்ணம்
ரவிவர்மன்  வரைந்த ஓவியம் போல் அவள் அங்கம்
இத்தனை  அழகையும்  ஒருங்கே படைத்தானா?
அற்புதம் கண்டு  பிரமித்துப் போனேன்!.   
 
மயிலின்  கழுத்தில் குடிகொண்ட   நீல வர்ணம் 
அவள் காதோரம் நீண்ட  நயனங்களின் கோலம்   
மழை முத்துக்கள்  சிந்தியதால்  சிறு கண்மடல்கள்
மூடித்   திறந்தன மின்மினிப்  பூச்சிகளாய்.

இச்சை மூட்டும்   பச்சை பசும் புல்  என்பேனா?
காற்றில் அசையும் இளம் குருத்து   என்பேனா ?
நெஞ்சில் குடிகொண்டாள் வஞ்சியவள் 
கெஞ்சலும்  கொஞ்சலும் வழக்கென்றாள்

கோவை  பழத்தை   உண்டு   வாய் சிவந்தாளோ ?   
கொஞ்சிப்  பேசியே  கொலையும் செய்தாளோ?
ரோஜாவின் செவ்விதழ்களை   வென்றவளோ ?
முட் குத்தியதால் இதழ்   செவ்விதழானதுவோ?     

மஞ்சள் வெயிலில்  தங்கமுலாம்   பதித்தவளோ ?
தக தகவென  ஜொலிக்கும் தேவியிவள்  யாரோ ?
சந்தனக்  கலவையிலே நீராடி வந்தவளோ ?
வெந்தளிர் நெருப்பிலே பிறந்து வந்தவளோ ? 

செருக்குடையாள்   செம்மஞ்சள் நிறத்துடையாள் 
மாலை கதிரவனில்  மையல் கொண்டாள்
சோலைக்குயிலெனவே  கானமிசைத்திட்டாள்
சுந்தரனும் மதி மயங்கி மோகத்தில் மிதந்திட்டான்


ஒற்றைச் சடையில்  ஒருக்கணித்து   ஊதாப்பூ
கற்றைக் குழலி  கவர்ந்தாள்  என் இதயமதை
சற்றே நிமிர்ந்து  தலை  சுற்றிப்  பார்த்தேன்     
இயற்கையின் படைப்பில்  வானவில் எத்தனை அழகு.. 

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 139
Post by: இணையத்தமிழன் on March 20, 2017, 08:39:39 PM

ஆதவனின் அழகினிலே
காதல்கொண்ட வான்மகளோ
எட்டிப்பிடிக்க ஆசைப்பட்டு
ஏங்கி தவித்திடவே
எதிராய்த்தான் இருந்தாலும்
ஏமாற்றமே என்றுமுண்டு   

கார்மேகம் சூழ்ந்தாலும்
கண்ணைப்பறிக்கும் கதிரவனோ
வானந்தனின் கண்ணீராய்
மழைத்துளிகள் பொழிந்தாலும்
கைகூடா காதலிலும்
கண்துடைக்க கதிரவன்தான்
தீட்டிய வண்ணஓவியமே
காற்றிலும் மழையிலும்
கரைந்திடாத கலைந்திடாத
கைப்படாத  ஓவியமே

வானில்பூத்த வண்ணமலர்களே
தொடுவானில் துவங்கிதான்
நடுவானையும் தொட்டிடுமே
வான்மகளின் வர்ணஜாலமே

கதிரவனின் எதிர்திசையில்
கவின்காட்சி தந்திடும்
ஏழுவண்ண வானவில்லே
 
இயற்கைதனின் ஓவியமே
காண்போரின் கண்பறிக்கும்
இயற்கைதனின் காவியமே 

                                     -இணையத்தமிழன்
                                        ( மணிகண்டன் )
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 139
Post by: SwarNa on March 20, 2017, 11:17:09 PM

எனக்காய் விண்ணை வில்லாய் வளைப்பேன்
என்ற என்னவன் வளைத்தான்  வானவில்லை
வளைந்தது விலலே அன்றி நானோ நாணாகவே
அவன் கரங்களில்
அவனுடன் அவனியில் ஒன்றாகிட

வான்மகளின் அங்கமதில்
செங்கதிரோனின் தூரிகைத்
தீற்றல்கள் நினைவூட்டியது
மங்கையவள் வதனமும் சிவந்திட்ட
அதரமும் தான் என்றான்

நிலமகளாம்  இக்குலமகளின்  அழகை
எழு வர்ணம் காட்டி சிணுங்களாய் மழைநீரில்
நர்த்தனமாடி  முத்துக்களை முகத்தில் 
சுமந்தே வருகையில் ஏனோ
தத்தையின் தாக்கம் தாக்கிற்றே
என்றான்  ஏக்கமாய் அவனுள்

மேகத்தில் தூளியும் சங்கில் தாலியும்
சுற்றம் நட்பு சூழ
அக்னிசாட்சியாய் இல்லையில்லை
வானவில் சாட்சியாக
இருவரும் இரு கரம் பற்றியே
வாழும் காலம்வரை வாழ்ந்திட ஆசை <3 <3 <3
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 139
Post by: சக்திராகவா on March 23, 2017, 12:47:08 AM
ஆசையாய் அண்ணார்ந்தபோது
ஆகாயமாளிகையில் அழகழகாய்
அடிவளைந்த நிறப்பிரிகை
நீண்டதொரு வானவில்லாய்


நிறங்கள் படித்தேன் நீ வந்தபோது
நிறையவே சந்தேகம் உனைக்கண்டபின்பு
வண்ணத்துப்பூச்சி உன் வாடகை வீடோ
பறவைகள் யாவும் உன் பக்கத்து தெருவோ

மயில்தோகை நீ குடியேறும் மழைக்கால உறவோ
மலைத்தொடர்கள் நீ தீண்ட நிறம் நீராடுமோ?
கடலுக்கும் கவலையில்லை உன்காலடியிலே
காருக்கும் கவலையில்லை நீ அதன் மடியிலே

மலர்களும் கூட நீ தந்த நிறம் பூசி ஆடிட
நீ மட்டும் ஏன் வந்ததும் போகிறாய்?
வண்ணமில்லாத என் என்னதைக்கூட
உன் ஏழிலே ஏதொ தந்து மாற்றிடகூடதா?

சக்தி ராகவா