FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on August 21, 2017, 02:31:39 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 157
Post by: MysteRy on August 21, 2017, 02:31:39 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 157
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org//newfiles/OVIYAM UYIRAAGIRATHU/157.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 157
Post by: KaBaLi on August 21, 2017, 04:21:16 PM
அன்று சாப்பிட பணமில்லை
பணமிருந்தும் கடை இல்லை
அம்மா தரும் ஒரு ரூபாய் தினம்தோறும்
சாப்பிட சத்துணவு , செருப்பு கூட இருக்காது போடுறதுக்கு

வேட்டு வெடிக்க பணம் இருக்காது வாங்கி தின்ன காசு இருக்காது
பணம் இல்லை என்று வருத்தப்பட்ட காலம் உண்டு

அன்று பணம் இருந்தும் கொடுக்க குணம் இல்லை 
இன்று நல்ல குணம் இருந்தும் கொடுக்க பணம் இல்லை !

மனிதனிடமிருந்து
பணத்தைப் பிரிப்பது குணம்
குணத்தைப் பிரிப்பது பணம்

பணம் பத்தும் செய்யும் என்று சொல்லும் பொது அறியவில்லை !
இன்று பணம் இல்லாத போது தான் தெரிந்தது .
பணத்தின் ஆசை இன்று மனிதனின் பேராசையாக  இருக்கின்றது

பணம் இருக்கும் போது நம்மிடையே இருக்கும் மனிதர்கள்
பணம் இல்லாதபோது எங்கே போனார்களோ !

உலகில் பல ஜாதிகள்
பல மாதங்கள் உலாவிக்கொண்டிருக்கும்
இந்த சமுதாயத்தில் மனிதன்
ஏழை பணக்காரன் எனும்
இருவகையில் தான்
பார்க்கப்படுகிறான் !!

பொதுநலவாதி கூட
சுயநலவியாதி பிடித்து அலைவார்
பணத்தை அவர் மணந்துகொன்டால் .

இன்றும் பணம் குணத்தை மாற்றுகிறதா !
இல்லை குணம் தான் பணமாக மாறுகிறதா -என்று
விடை தெரியாமல் உலவிக்கொண்டிருக்கும் நம் சமுதாயம் !

பணத்தை சம்பாதித்திடலாம் ஆனால்
நல்ல நட்பை சம்பாதிக்க முடியாது என்று எத்துணை பேருக்கு தெரியும்

பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்பது உண்மை தான்
பணம் மனிதரை தேடி போனது அக்காலம்
மனிதன் பணத்தை மட்டுமே தேடி போகின்றது இக்காலம்

பணம் குணத்தை வளர்க்க வேண்டும்.
பணத்தைத் தேவைக்கேற்ப வைத்திருத்தல் வேண்டும்.
நேரிய வழியிலேயே பணத்தை ஈட்ட வேண்டும்
அவ்வாறு ஈட்டிய பணத்தை நல்ல செயல்களுக்கே பயன்படுத்த வேண்டும்

பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னை தெரியாது !

 பணம் எல்லாருக்கும் சமமானது !  பணத்தை தேடுறதை விட்டு நல்ல குணத்தை தேடுவோம்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 157
Post by: SunRisE on August 21, 2017, 06:28:16 PM
பணம் மட்டுமே மணம் வீசும்
இல்லை என்றாலே
மனிதரின் பிணம் வீசும்

மணிதனின் கணம்
பணம் வேண்டும்
வாழும் போது இல்லையேல்
நாறிப் போன பிணம்
நனைந்து போகும்

கல்வி கூட வியாபாரம்
பணமிருந்தால்
சொகுசு வாகனம்
இல்லை என்றால்
நடை ராஜா வாகனம்

உண்டியல் இல்லாத
கோவில் இல்லை
பணமிருந்தால் பஞ்சாமிர்தம்
இல்லை என்றால்
பகவானை தரிசிக்க
பாதம் நோக
வேடிக்கை காண வேண்டும்

கை கட்டி நிற்பான் ஏழை
காசு உள்ள கோமாலியிடம்
பணமிருக்கும் பாக்கியவான்
பதறிப்போவான்
சாக்கடை முற்றத்தில்
பாதாள சாக்கடை அல்ல
பணயம் வைப்பான்
தன்னுயிரை
அஞ்சுக்கும் பத்துக்கும்
அவனிடம் நியாயம் பேசுவான்
அந்த பண மேதை

கோட்டையை பிடிக்க
இன்று கோடிகள் வேண்டும்
கேடிகளின் கைகளில்
கோட்டையின் சிம்மாசணம்
ஆம்!
பணத்தாசை கொண்ட ஏழை
பணத்தாசை கொண்ட
கயவர்களிடம்
அடிமையாகிப் போவான்
தன் நாட்டை மீண்டும்
அடிமையாக்கி

பணம் பாதாளம் வரை பாயும்
உண்மை தானோ?


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 157
Post by: VidhYa on August 21, 2017, 06:52:14 PM

வாழ்க்கை வாழ்வதற்கு
பணம் தேவை ஆனால்
வாழக்கையே பணமல்ல

பணம் உன்னிடத்தில் இருந்தால்
வழிப்போக்கனும் உனக்கு சொந்தம் ...
அது உன்னிடத்தில் இல்லையெனில்
சொந்தத்திற்கு நீ ஒரு வழிப்போக்கன்...

வாழ்க்கையை வாழ
பணம் மட்டும் தேவை இல்லை
பணமும் ஒரு வகையில் தேவை

பார்வைகளின் பரிமாற்றம்
பாசங்களின் இடமாட்டாராம்
அத்தனையும் இன்று பணம்
என்ற உறவு பரிமாறும் வரை


கடுமையான கஞ்சத்தனம் ,
தகுதியற்ற தற்பெருமை
எல்லையற்ற பேராசை
இம்மூன்றும் மனிதனை நாசமாகி விடும்

ஆயிரம்  சொந்தங்கள்
நம்மை தேடி வரும் எப்பொழுது ?
நம்மிடம்  பணமிருந்தால் மற்றும் வரும்
ஆனால்  பணத்தால் கூட வாங்க முடியாத
பல விஷயங்கள் உண்டு

சேர்த்து வைப்பது கடினம்  ஆனால்
அதை செலவு செய்வது எளிது
ஆதலால் மழலைகளுக்கு
சிறு வயதிலிருந்து சேமிக்க கத்துகுடுங்கள்...




                 
                                                                                                      காதல் கவிக்குட்டி வித்யா


[/size]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 157
Post by: JeSiNa on August 21, 2017, 08:23:04 PM
கட்டு கட்டாய் பல தலைமுறைக்கு
பணம் சேமிக்கும் மானிடா
இடுகாட்டில் பிணமாய் போகையில்
நீ கொண்டு செல்வது எதுவென உணரடா

முப்பாட்டன் காலத்தை சற்றே எண்ணிப்பார்
அன்பிற்கு விலை கொடுக்க முடியா பொற்காலம் அது
நாம் வாழும் காலத்தில் விலை கொடுத்தால் மட்டுமே
 அன்பை வாங்க முடியுதடா

பணம் இருந்தால் மட்டுமே உன் பெயர் உலகத்தில் பேசப்படும்
 என்று நினைக்காதே மனிதா
ஓவியா போல் நல்ல மனம் இருந்தாலும்
உன் பெயர் உலகத்தில் பேசப்படும்  மனிதா

இன்று உன்னிடம் இருக்கும் பணம் நாளை வேறு ஒருவனுக்கு
இன்று உன்னை சுற்றிய உறவுகள் நாளை வேறு ஒருவனுக்கு
பூமி சுற்றுகிறது என அறிவாயா மனிதா

உன்னிடம் பணம் இருந்தால் பகிர்ந்து கொடு மனிதா
நீ பணத்தின் பின்னல் ஓட வேண்டாம்
உன்னை தேடி பணம் வரும் மனிதா

வாழ்க்கைக்கு பணம் தேவைதான் மனிதா
பணமே வாழ்க்கை இல்லை மனிதா.
உன்கையில் இருப்பது உன் வாழ்க்கைக்கு போதும்
என்று நினைத்து விடு
உன் வாழ்க்கை இன்பமாய் அமைந்திடும் மனிதா
       


JesiNa...
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 157
Post by: VipurThi on August 22, 2017, 12:36:21 PM
மூன்றெழுத்து தந்திரம் என் பெயர்
நான் யார் ?

நான் இருப்பவனிடம் வருவது
தற்பெருமை
நான் இல்லாதவனிடம் வருவது
பெரும் வறுமை

என்னை அள்ளிக்கொடுப்பவன்
வள்ளல்
என்னை கிள்ளிக்கொடுப்பவன்
கஞ்சன்
என்னை முற்றும் துறந்தவன்
துறவி
என்னை கேட்டு பெறுபவன்
யாசகன்
மூன்றெழுத்து தந்திரம் நான் யார்?

என் மீது நீ கொண்ட ஆசை உனக்கு
தருவது இன்பம்
உன் ஆசைகளின் பேராசையினால்
உனக்கு விளைவது துன்பம்

உழைக்க துடிப்பவனுக்கு  என்
மடி பஞ்சணை
உழைக்க மறந்தவனுக்கு என்
மடி கல்லறை
மூன்றெழுத்து தந்திரம் நான் யார்?

பிணத்தின் வாயை திறக்கும்

"பணம்" என்ற பெயர் கொண்ட
நானே அந்த மூன்றெழுத்து தந்திரம்

ஆனால் என்னை கூட
அடக்கி ஆளும் வல்லமை கொண்ட

"அன்பு"எனும் மூன்றெழுத்து மந்திரம்
இருப்பது உன்னிடமே அதை நீ மறவாதே

                                   **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 157
Post by: joker on August 22, 2017, 01:44:47 PM
பகல் இரவு நேரம் பாராமல்
பசி பட்டினி மறந்திருக்க
ஒவ்வொரு நாளும் உழைத்து
அந்த முப்பது நாளும் கடந்து
கையில் சம்பளம் கிடைக்கும் நாள்
விவரிக்க வார்த்தை இல்லை என்
ஆனந்தத்திற்கு ..

வீட்டில் காத்திருப்பாள் என் மனைவி
வீட்டுக்கு தேவையான பொருள்களின்
பட்டியிலிட்டு

பிள்ளை விரும்பி தினமும் நச்சரித்து கேட்டு
சம்பள நாள் வரை காத்திரு என்று சொன்ன
அவனுக்கு பிடித்த அந்த மிட்டாய் வாங்க வேண்டும்

அந்த இரவு சுகமான இரவு
சட்டைப்பையில் பணம்
கனவுகள் கூட வண்ணங்களில் வர கூடும்

பகல் விடிந்தது சேவல் கூவியது
உன் கனவு முடிந்தது என்று,
விழித்து எழுகையில் வாசலில்
ஓர் குரல் அது பால்காரனுடையது

அவனுக்கு கொடுக்க வேண்டிய பணம்
கொடுத்தாயிற்று , பின்னால் நின்றிந்தனர்
செய்தித்தாள் இடுபவன் , மளிகை கடைக்காரர் ,
அவசரத்துக்கு உதவிய பக்கத்துக்கு வீட்டு மாமி

மனைவி  சொன்னாள் மறந்துடாதீங்க பிள்ளையின்
இந்த மாத பள்ளி  தவணையை

சட்டைப்பையில் கை  நுழைத்து பார்க்கையில்
காற்று கூட அகப்படவில்லை

இன்னும் முப்பது நாள் கடத்த வேண்டும்
யாரிடமேனும் கடன் வாங்கி ....

"விடியாமல் இருந்திருக்கலாம் நேற்றிரவு" !!

  *****ஜோக்கர் *****