FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on September 02, 2017, 06:11:14 PM

Title: அனிதா !
Post by: joker on September 02, 2017, 06:11:14 PM
இரவில்  என்னை தூங்க விடாமல் செய்த பெயர்
"அனிதா "

பெண் பிள்ளை என்றாலே கள்ளிப்பால் கொடுக்க
நினைக்கும் இச்சமூகத்தில்
கல்வி பால் கொடுத்து  வளர்த்தனர் உன் பெற்றோர்கள்

இன்னல்கள் பல கண்டும் தன் உடல் நலிந்தாலும்
நீ பிறர் உடல் நலம் காக்கும் மருத்துவராக வேண்டும்
என கனவு கண்டனர் உன் பெற்றோர்கள்

வசதி இல்லை வறுமையுண்டு துணை, இருந்தும்
கல்வியின்பால் கொண்ட உன் ஆர்வம் உயர்கல்வி
படிக்க தூண்டியது

மருத்துவர் படிப்பில் சேர வேண்டும் பணம் இல்லையேல்
மேல்நிலை பள்ளியில் நல்ல மதிப்பெண்கள்

இரண்டாவது எட்டுவது சாத்தியம்  என்று  1176/1200 எடுத்தாயிற்று
(நீட்) தடை (NEET ) உனக்கு புதியதல்ல இருந்தும் இது உன் உயிரை
குடிக்கும் என நீ அறியவில்லை

இத்தனை மதிப்பெண் எடுத்தும் நீ தேர்வாகவில்லை எனில் எத்தனை
உயரத்தில் இருக்கிறது நம் கல்வியின் தரம் ?

லட்சியம் மேல் கொண்ட உன் காதல் நீதியின் படியேற வைத்தது போராட
போராடி போராடி வாழ்க்கையே போராட்டமாய் போனதாலோ
உன்னை நீயே மாய்த்துக்கொண்டாய்

இறந்த பின்னும் சாதி பெயர் சொல்லி சண்டையிட அலைகிறது
ஒரு கூட்டம் உயிரோடிருக்கும் போது தண்ணீர் கொடுக்க கூட
முயலாத கூட்டம்

இனி ஒரு  உயிர் இழக்கும் முன் விழித்திடுமோ இச்சமூகம் ?

*** அனிதா மறைவு 01/09/2017***


Title: Re: அனிதா !
Post by: NiYa on September 03, 2017, 08:54:17 PM
அனிதா தற்கொலை செய்யவில்லை அது கொலை தான்

 இந்த செய்தி இன்னும் ஒருவாரம் இல்ல ஒரு மாதம் தான்
ஆனால் அந்த தந்தை என்ன செய்தார் கூலி வேலை செய்து தான் மகளை
படிக்கவைத்தார் .. இன்று அவரின் நிலை தான் சொல்ல முடியாத துயரம்

 கண்ணீர் வரும் கவி