Author Topic: கெட்டிக் குழம்பு  (Read 482 times)

Offline kanmani

கெட்டிக் குழம்பு
« on: November 27, 2012, 10:02:20 AM »
உரித்த சின்ன வெங்காயம் - 1 கப்,
உரித்த பூண்டு - அரை கப்,
தக்காளி - 4, பிஞ்சு கத்தரிக்காய்  அல்லது வெண்டைக்காய் - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 10 முதல் 12,
தனியா - 1 டேபிள்ஸ்பூன்,
சோம்பு - அரை டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
மிளகு - அரை டீஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
புளி - 1 சிறு உருண்டை,
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்,
உளுந்து - அரை டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது.


பூண்டு, வெங்காயத்தை இரண்டாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கத்தரிக்காயை பாதிக் காம்பு நறுக்கி, நன்றாக வகிர்ந்து, முழுதாக வைக்கவும். (வெண்டைக்காயானால் அங்குலத் துண்டுகளாக்கவும்). புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயை சிறு தீயில் காய வைத்து, மிளகாய், தனியா, சீரகம், சோம்பு, மிளகு, கசகசா, தேங்காய் துருவல் சேர்த்து வாசனை வந்து பொன்னிறமாகும் வரை வதக்கி, நைசாக அரைக்கவும்.

கடாயில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுந்து, வெந்தயம் தாளித்து, பூண்டு, வெங்காயம், கத்தரி அல்லது வெண்டை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து, குழம்புக்குத் தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி கரையும் வரை வதக்கி, கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரையும், அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, இறக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து, மூடி வைக்கவும்.