Author Topic: லெமன் சேமியா எப்படிச் செய்வது  (Read 385 times)

Offline kanmani

சேமியா - 1 கப்,
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய்,
இஞ்சி - தேவைக்கு ஏற்ப,
மஞ்சள் தூள் - சிறிது,
பெருங்காயம் - 1 சிட்டிகை,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப,
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை - தாளிக்க,
வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்.

சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். எண்ணெய் காய வைத்து, தாளிக்க வேண்டியவற்றைச் சேர்க்கவும். அவை பொன்னிறமானதும், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்துக் கிளறி, சேமியாவில் சேர்க்கவும். ஆறிய சேமியாவில் எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்து படைக்கவும்.