Author Topic: வேப்பம்பூ தேன் பச்சடி  (Read 482 times)

Offline kanmani

வேப்பம்பூ தேன் பச்சடி
« on: November 28, 2012, 11:58:05 AM »
வேப்பம்பூ - ஒரு கொத்து (சுத்தம் செய்தது),
சுத்தமான வெல்லம் - அரை கப்,
துருவிய மாங்காய் - அரை கப்,
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
தேன் - ஒரு டேபிள் ஸ்பூன்.

வேப்பம்பூவை சுத்தம் செய்து, காயவிட்டு பின் நெய்யில் பொன்னிறமாக வறுத்து தூள் செய்யவும். சுத்தமான வெல்லத்தை கொதிக்கவிட்டு பாகு தயாரிக்கவும். துருவிய மாங்காயை சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும்.

அது நன்கு வெந்ததும் அத்துடன் வெல்லப்பாகு, உப்பு, வேப்பம்பூ பொடி (தூள்) சேர்த்து கொதிக்க விட்டு அல்வா பதம் வந்ததும் இறக்கி அதன்மேல் தேனை ஊற்றி பரிமாறவும். இனிப்பு, புளிப்பு, கசப்பு என்னும் மூன்று வகை சுவையோடு சாப்பிடலாம்.

குறிப்பு: குழந்தைகளுக்கு நல்லது. தேன் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது மேலும் சிறிது தேன் சேர்த்து கொடுக்கலாம்.