Author Topic: திருவாதிரை களி  (Read 569 times)

Offline kanmani

திருவாதிரை களி
« on: November 28, 2012, 11:59:56 AM »
ச்சரிசி - 1 கப்,
பாசிப்பருப்பு - கால் கப்,
பல் பல்லாகக் கீறிய தேங்காய் -கால் கப்,
வெல்லம் - ஒன்றரை கப்,
ஏலக்காய் தூள் -கால் டீஸ்பூன்,
நெய் - கால் கப், முந்திரி - 10.
அரிசியை சுத்தம் செய்து, ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, நிழலில் உலர்த்தி, சற்று சன்னமான ரவையாக பொடித்து, வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும்.

பாசிப்பருப்பையும் வறுத்து, மலர வேக வைக்கவும். வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கிக் கரைத்து, இறக்கி வடிகட்டவும். ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, தேங்காய், முந்திரியை வறுத்து, அதில் இரண்டு கப் தண்ணீர் மற்றும் வெந்த பாசிப்பருப்பைச் சேர்க்கவும்.

இந்தக் கலவை கொதிக்கும் போது, அரிசி ரவையை சேர்த்துக் கிளறி, தீயை மிதமாக்கி, வேக வைக்கவும். நன்கு வெந்ததும், வெல்லக் கரைசலையும், ஏலக்காய் தூளையும் சேர்த்து, மீதி நெய் விட்டு சுருளக் கிளறி இறக்கவும்.