Author Topic: கொத்துமுந்திரி  (Read 439 times)

Offline kanmani

கொத்துமுந்திரி
« on: November 28, 2012, 12:01:40 PM »
பாசிப்பருப்பு - அரைகிலோ
வெல்லம் - முக்கால் கிலோ
தேங்காய் - 1
எள் - 50கிராம்
பச்சரிசி - கால்கிலோ
ஏலக்காய் - தேவையான அளவு
எண்ணெய் - அரைலிட்டர்


தேங்காயைத் துருவிக்கொள்ளுங்கள். பாசிப்பருப்பு, எள், தேங்காய் மூன்றையும் தனித்தனியாக நிறம்மாறும் பதத்துக்கு வறுத்துக் கொள்ளுங்கள். தேங்காய்ப்பூவுக்கு தேவையானால் சிறிது எண்ணெய் விட்டுக் கொள்ளலாம். வெல்லத்தில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கையில் ஒட்டும் பதத்துக்கு கெட்டியாக பாகு காய்ச்சுங்கள்.

வறுத்த பாசிப்பறுப்பை மிதமாக அரைத்து, அதில் ஏலக்காய்த்தூள், எள், தேங்காய் துருவலைக் கொட்டி வெல்லப் பாகை ஊற்றி கெட்டியாக பிசைந்து சிறு, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளுங்கள்.

பச்சரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, லேசாக மஞ்சள் தூள் கலந்து நீர் பதத்துக்கு கரைத்துக் கொள்ளுங்கள். உருட்டி வைத்துள்ள உருண்டைகளை இந்த மாவில் நனைத்து எண்ணையில் போட்டு பொறித்தெடுத்தால் முந்திரிக்கொத்து ரெடி.