Author Topic: சர்க்கரை வரட்டி  (Read 483 times)

Offline kanmani

சர்க்கரை வரட்டி
« on: November 28, 2012, 12:11:08 PM »

*நன்கு விளைந்த நேந்திரம் வாழைக்காய் & 2
*வெல்லம் & 400கிராம்
*சுக்கு & 75 கிராம்
*ஏலக்காய் & 25 கிராம்
*தேங்காய் எண்ணெய் & பொரிக்கத் தேவையான அளவு.


*வாழைக்காயின் தோலை சீவிவிட்டு, நான்கு துண்டுகளாகக் கீறி டைமன் ஷேப்பில் வெட்டிக் கொள்ளுங்கள். ஏலம், சுக்கை பொடித்துப் போட்டு வெல்லத்தை பாகுகாய்ச்சி, அடியில் தங்கிய துகள்களை அரித்து எடுத்து விடுங்கள்.

*தேங்காய் எண்ணெயில் வாழைக்காய்துண்டுகளை சிவக்கப் பொரித்து ஒரு அகன்ற பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது, சிறிதாக வெல்லப் பாகை ஊற்றி ஒன்றுடன் ஒன்று ஒட்டாதவாறு நன்கு கிளறுங்கள்.

*பின்னர் சிறிது நேரம் நிழலில் உலரவிட்டுச் சாப்பிடலாம். 6 மாதம் வரை கெடாது.