Author Topic: அவல் தக்காளி  (Read 475 times)

Offline kanmani

அவல் தக்காளி
« on: November 28, 2012, 12:12:51 PM »
அவல் - 1 கப்
*தக்காளி - 1
*பச்சைப் பட்டாணி - 1/2 கப் (வேகவைத்தது)
*கேரட் - 1 சிறியது
*பெரிய வெங்காயம் - 1
*கறிவேப்பிலை - சிறிதளவு
*கொத்தமல்லி - சிறிதளவு
*மிளகாய் வத்தல் - 3
*பெருங்காயம் - 1 சிட்டிகை
*மஞ்சள் - 1/2 டீ ஸ்பூன்
*உப்பு - தேவையான அளவு
*எண்ணெய் - 4 ஸ்பூன்
*கடலைப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
*உளுத்தப்பருப்பு - 1 டீ ஸ்பூன்
*கடுகு - 1 டீ ஸ்பூன்
*எலுமிச்சைச் சாறு - 1 மூடி
*அவலுடன் மஞ்சள், எலுமிச்சைச் சாறு, உப்பு, சிறிது நீர் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.பச்சைப் பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும்.

*பெரிய வெங்காயம், தக்காளி, கேரட், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.

*எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு, கடலை, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.பிறகு பட்டாணி, நறுக்கி வைத்த அனைத்தையும் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். அதனுடன் பருப்பு, ஊறவைத்த அவலை சேர்த்து நன்கு கிளறவும். பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.