Author Topic: கொத்தமல்லி வடை  (Read 428 times)

Offline kanmani

கொத்தமல்லி வடை
« on: November 28, 2012, 12:19:12 PM »
கடலை மாவு & 2 கப், புளிப்பு இல்லாத கெட்டி தயிர் & 1 கப், பச்சை மிளகாய் விழுது & 2 டீஸ்பூன், ஓமம், சீரகம் & தலா லு   டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி & லு  கப், உப்பு தேவைக்கேற்ப, மஞ்சள் தூள் சிறிது, பெருங்காயம் சிறிது, எண்ணெய் & பொரிப்பதற்கேற்ப.


அடி கனமான வாணலியில் எண்ணெயைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கை விடாமல் சுருண்டு வரும் வரை மிதமான தீயில் கிளறவும்.

பிறகு எண்ணெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறவிடவும். பின் சதுரமான துண்டுகள் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இதுதான் கொத்தமல்லி வடை. தயிர் சாதம், சாம்பார் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம் இவைகள் அனைத்திற்கும் சைடு&டிஷ்ஷாக சேர்த்துக் கொள்ளலாம்.