Author Topic: பருப்பு சிக்கன்  (Read 345 times)

Offline kanmani

பருப்பு சிக்கன்
« on: December 05, 2012, 01:09:01 PM »
சிக்கன் துண்டுகள் 1 கிலோ
*இஞ்சி 1 துண்டு
*பூண்டு 10 பல்
*வரமிளகாய் 10
*சீரகம் 1 டீஸ்பூன்
*முந்திரிப்பருப்பு1/2 கப்
*பெ.வெங்காயம் 2
*தக்காளி கெச்சப்  3 டேபிள் ஸ்பூன்
*சர்க்கரை 1/2 டீஸ்பூன்
*எண்ணெய்  2 டேபிள் ஸ்பூன்
*உப்பு தேவையான அளவு


*இஞ்சி, பூண்டை நைஸாக அரைத்து சிக்கன்கறியில் தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். மிளகாய், சீரகம் இவைகளை நைஸாக அரைத்துக்

கொள்ளவும்.

*முந்திரிப் பருப்பையும் நைஸாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். மிளகாய்

விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கி கோழிக்கறியை சேர்க்கவும்.

*இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். கறி வெந்ததும் முந்திரிப் பருப்பு விழுது, தக்காளி கெச்சப் சர்க்கரை இவற்றை சேர்த்துக் கிளறவும்.

இக்கலவை கெட்டியாகும் வரை தொடர்ந்து கிளறி இறக்கவும்