Author Topic: மாம்பழ ஐஸ் க்ரீம் ஸ்மூத்தி  (Read 315 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

மாம்பழம் - 5-6
குளிர்ந்த பால் - 1 1/2 கப்
சர்க்கரை - 6-7 டேபிள் ஸ்பூன் (தேவையான அளவு)
வென்னிலா ஐஸ் க்ரீம் - 2 ஸ்கூப்
தண்ணீர் - சிறிது (வேண்டுமென்றால்)

செய்முறை:

முதலில் மாம்பழத்தின் தோலை உரித்து விட்டு, நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை மிக்ஸியில் போட்டு, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் சர்க்கரை சேர்த்து 1 நிமிடம் அடிக்க வேண்டும்.

அடுத்து, அத்துடன் பால் மற்றும் ஐஸ் க்ரீம் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

 பின் அதனை வடிகட்டி பரிமாறினால், மாம்பழ ஐஸ் க்ரீம் ஸ்மூத்தி ரெடி!!!