Author Topic: ~ அவரை காயின் மருத்துவ குணங்கள்:- ~  (Read 140 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
அவரை காயின் மருத்துவ குணங்கள்:-




கொடிக்காய்களில் சிறந்தது அவரைக்காய். மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினைத் தருவது அவரை. புரதம், சுண்ணாம்புச்சத்து. இரும்பு. வைட்டமின் சத்துக்கள் இதில் ஒருங்கே உள்ளன.

மிக எளிதில் செரிமானமாகக் கூடியது அவரை. பலவீனமான குடல் உடையவர்கள் இரவு நேரத்தில் பத்திய உணவாக இது உண்பதற்கு ஏற்றது. முற்றிய அவரைக்காயை விட அவரைப் பிஞ்சே நல்லது

வெண்ணிற அவரைக்காய் வாயு, பித்தம் இவற்றைக் குணப்படுத்தும். உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும். எரிச்சலை அடக்கும். நீரிழிவு நோய், பேதித்தொல்லை, அடிக்கடி தலை நோய் வருதல், ஜீரணக்கோளாறு, சீதபேதி இவற்றிற்கு அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் பலனுண்டு. இரத்தக் கொதிப்பைத் தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு