Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 27/04/2014 (April 27th)  (Read 728 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


மேஷம் :

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
 
 

ரிஷபம் :

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வாகன வசதிப் பெருகும். மனைவிவழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்
 
 

மிதுனம் :

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்
 
 

கடகம் :

குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். திடீர் பணவரவு உண்டு. புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை
 
 

சிம்மம் :

சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். சிறுசிறு அவமானம் வந்துச் செல்லும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே
 
 

கன்னி :

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்
 
 

துலாம் :

பணப்புழக்கம் அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா
 
 

விருச்சிகம் :

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு-. கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்
 
 

தனுசு :

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
 
 

மகரம் :

குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
 
 

கும்பம் :

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை
 
 

மீனம் :

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா