Author Topic: எதற்கு இந்த ரெட்டை வேஷம் ?????  (Read 645 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
எதற்கு இந்த ரெட்டை வேஷம் ?????


" வெள்ளைகாரனை கண்டாலே பிடிக்கல ", " அதவிட அவன் தின்ற மாடு பன்னி இதுகள நெனைச்சாலே கொமட்டிக்கிட்டு வருது " இப்படி பல விதமான "பிடிக்காத " பட்டியலை வச்சி இருக்கிற நம்ம ஊர் ஆளுங்க எதுக்கு அமெரிக்காவுக்கு போகணும் ஆஸ்ட்ரேலியாவுக்கு போகணும் இன்னும் வெள்ளைகாரங்க இருக்கிற ஊர்களுக்கு ஒண்ணு விடாம போகனும்னு எல்லா தூதரக வாசலையும், விட்டு வைக்காம, வெயிலு மழைன்னு கூட பார்க்காம வரிசையில நின்னு விசா வாங்கி " எப்படியாவது போயே தீருவேன்னு " பிடிவாதமா இருக்காங்கன்னு தெரியலையே ????

ஒரு சமயம் வெள்ளகாரனோட டாலருக்கா ????? இல்ல அங்க கெடைக்கிற வசதிகளுக்கா !!!! எதுக்கு ஏங்குறாஙகளோ புரியலையே.......?!?!?!

நம்ம அன்றாடம் பயன் படுத்துற பொருளுக நம்ம இந்திய ஆளுக கண்டு பிடிச்சு நமக்கு கொடுத்தது தானா? உடுத்துற பான்ட் shirtla இருந்து பேனா பென்சில் டீ காப்பீன்னு ஏதாவது ஒண்ணாவது இந்தியாவுல கண்டு பிடிச்சி பயன் படுத்துறோம்னு சொல்லுங்க பார்க்கலாம்????? அப்பறம் அவன மட்டும் " பிடிக்காது "ன்னு வாய் கிழிய சொல்லிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? இதுக்கு பெயர் தான் வறட்டு கெளரவம் என்பது, இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல !!!!!!


அதனாலதான் அந்த வெள்ளகாரனுங்க, இவங்க அங்க வர வேண்டாம்னு நினைகிறாங்க போல இருக்கு !!!!!!!!!!

வெள்ளைகாரன " ஊரைவிட்டு போடான்னு " தொரத்தீட்டு அவன் ஊருக்கு இங்க இருந்து குடியும் குடித்தனமுமா எவ்வளவு பேருதான் போவாங்களோ , போனா அவன் எப்படி சும்மா இருப்பான்???????

வெள்ளக்காரன் கடைபிடிக்கிற "காதலர் தினம்", " பெண்கள் தினம் " இன்னும் என்னன்னவோ தினங்களஎல்லாம் வேண்டாம்ன்னு சொல்லறது, அவங்க என்ன "நீங்களாம் கொண்டாடித்தான் ஆகணம்ன்னா " கட்டளை போட்டிருக்காங்க ??

நம்ம ஊரு கணினி இணையத்தளம் சாட்டிலைட்ன்னு பல ஊடகங்கள் மூலமா வெளிநாட்டு தகவல்கள தெரிஞ்சுகிட்டு இங்க இருக்கிற இளம் சமுகம் கொண்டாடுது, இதை போய் பெரிசு படுத்துறவங்க, நம்ம ஊர்ல இருந்து வெள்ளக்காரன் ஊருக்கு போற கூட்டத்தை கட்டு படுத்த வேண்டியது தானே ?????

பொழைக்க ஒரு ஊருன்னு போனா அங்கிருக்கிற நடை உடை கொண்டாட்டம்ன்னு எல்லாத்தையும் கத்துக்கதானே வேணும்?

வெள்ளைகாரன நான் ஒண்ணும் தூக்கி வச்சு பேசல........நம்ம ஊர்ல ரொம்ப பேருக்கு வெள்ளைக்காரன பிடிக்கல ஆனா அவன் ஊர்ல போய் உட்கார்ந்துகிட்டு அவனோட டாலர சம்பாதிக்கிறாங்க, அந்த ஊர்ல இருக்கிற சுகம் நம்ம ஊர்ல இல்லைன்னு வேற சொல்லறாங்களே, இந்த கொடுமைய பத்தி தான் இங்க நான் குறிப்பிட்டு சொல்லறேன்......

இது எப்பிடி இருக்குன்னா, " ஆடு பகை, குட்டி உறவு" ன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே, அது மாதிரி இல்ல இருக்கு இவங்க போடுற ரெட்ட வேஷம் ??????? ச்சா .... இது எல்லாம் ஒரு பொழப்பு !!!!!!!