Author Topic: சிரிங்க  (Read 780 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
சிரிங்க
« on: December 14, 2011, 07:30:16 AM »
ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். "ஏன் சார் அடிக்கீறிங்க?"

" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை " என்றார்.

" அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே?" என்றாராம் அவர் டென்ஷனாக.

ஒரு ஓவியக் கண்காட்சியில் ஒரு அழகான ஜமீந்தாரை ஒவியம் வரைந்து வைத்திருந்தார்கள்.
ஒருவன் சென்று விலை கேட்டான். 5000 ரூபாய் என்றார்கள். இவனிடம் 20 ரூபாய் விலை குறைந்தது.

எவ்வளவோ பேரம் பேசியும் விலையைக் குறைக்க மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் 20 ரூபாயைச் சேர்த்து முழுத்தொகையை எடுத்துக் கொண்டு போனான்.
ஆனால் அதற்குள் ஒவியம் விற்றுப் போயிருந்தது. இவன் சோகமாக வீட்டுக்கு வந்தான்.
அடுத்த வாரம் ஒரு நண்பன் வீட்டுக்குப் போனான் , அங்கே அந்த ஒவியம் மாட்டியிருந்தது!

"இது யாருடைய படம்?" என்று இவன் கேட்டான்.

"என் தாத்தா...ஜமீன்தாராய் இருந்தவர்" என்றான் நண்பன்.

" ம்...அன்னைக்கு என் கையில் மட்டும் 20 ரூபாய் இருந்திருந்தால் இவர் என் தாத்தாவாகி இருப்பார்" என்றான் இவன்.

ஒரு கல்லூரியில் புரொபஸர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்ட இவ்வாறு பேசினார்."மாணவர்களே... இந்த கல்லுரியில் படித்து... பாஸ் செய்து... இந்த கல்லுரியிலேயே ஆசிரியராகச் சேர்ந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்"

ஒரு மாணவன் கேட்டான்."இங்கே படிச்சா வேற எங்கேயும் வேலை கிடைக்காதா சார்?"

ஒரு சர்தார்ஜி விமானத்தில் போய்க்கொண்டிருந்தார். திடீரென விமான இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக அறிவிப்பு வந்தது. எல்லா பயணிகளும் பயத்தோடு கடவுளைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

சர்தார்ஜி மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமல் ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்த பயணி சர்தார்ஜியைப் பார்த்து, “ஏங்க... எல்லோரும் சாகப் போகிறோமே... உங்களுக்கு உயிர் மேல பயமே இல்லையா?” என்று கேட்டார்.

“நான் சாகப் போறதில்லே... பல்வீர்சிங்தான் சாகப்போகிறார்...” என்றார் சர்தார்ஜி

பக்கத்து சீட்காரருக்குப் புரியவில்லை. “எப்படி?” என்றார்.

“உண்மையில் இது பல்வீர்சிங்கோட டிக்கெட்... அதில் நான் பயணம் செய்கிறேன்... அவ்வளவுதான்!” என்று சிரித்தார் சர்தார்ஜி.

“நாளைக்கு என்னைத் தேடாதே... சினிமா பார்க்கப் போறேன்!” என்றார் நண்பர்.

“அப்படின்னா, என்னை சில வருடங்களுக்குத் தேடாதே...” என்றார் சர்தார்ஜி.

“ஏன்?” என்றார் நண்பர்.

“நான்... மெகா சீ¡ரியல் பார்க்கப் போகிறேன்” என்றார் சர்தார்ஜி!

சர்தார்ஜி வாரப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது ஏதாவது எழுதி அனுப்புவதுண்டு. அதில் ஏதாவது அபூர்வமாகப் பிரசுரமாகி, அந்த வாரப் பத்திரிகையின் காம்ப்ளிமெண்ட்ரி காப்பியும், சன்மானமும் அவருக்கு வருவதுண்டு.

ஒரு முறை சர்தார்ஜியின் நாடகம் ஒன்று டெலிவிஷனில் ஒளிப்பரப்பானது. அதற்கான சன்மானம் மட்டும் சர்தார்ஜிக்கு வந்து சேர்ந்தது. கடுப்பாகிப் போனார் சர்தார்ஜி. “ஏன்... இன்னும் காம்ப்ளிமெண்ட்ரி டி.வி. செட்டை அனுப்பவில்லை?” எனக் காரசாரமாக அந்த டி.வி. நிலையத்துக்குக் கடிதம் எழுதினார் சர்தார்ஜி.

சர்தார்ஜி டூ வீலாரில் ஒரு லாரியை பின்தொடர்ந்து கொண்டிருந்தார். திருப்பங்களில் எல்லாம் அவர் மிகவும் அபாயகரமான முறையில் கைகள் இரண்டையும் தூக்கி, ஒரு கையில் இரண்டு விரல்களையும், இன்னொரு கையில் ஒரு விரலையும் காட்டி, ஏதோ சைகை செய்துகொண்டே போனார்.

அவரின் வினோதமான ஆக்ஷனைப் பார்த்த டிராபிக் போலீஸார் அவரை நிறுத்தி, “ஏன்... இப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்க, லாரியின் பின்புறம் எழுதப் பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார் சர்தார்ஜி. அதில், “பெண்ணின் திருமண வயது 21 திரும்புமுன் சைகை செய்யவும்” என்று எழுதியிருந்தது!

சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடியேய்... நானும், நீயும் அமொரிக்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.

அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.

அதற்கு சர்தார்ஜி, “என்னடி தெரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: சிரிங்க
« Reply #1 on: December 14, 2011, 09:03:03 AM »
last one super :D :D :D

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: சிரிங்க
« Reply #2 on: December 17, 2011, 07:42:46 PM »
ஒருவர் (காரில் அடிப்பட்டவரிடம்) : நீ அதிர்ஷ்டசாலிப்பா.. அடிப்பட்டாலும் டாக்டர் வீட்டின் முன்னாலேதான் அடிபட்டிருக்கே..

அடிப்பட்டவர் : நாசமாய் போச்சி... அந்த டாக்டரே நான்தான்யா?



“தலைவலி, வயிற்றுவலி, அஜீரணம், ஜுரம்..”


“யாருக்கு உங்களுக்கா?”


“ஊஹும். இப்படி ஏதாவது வருகிற மாதிரி மருந்து தாங்க டாக்டர். என் மாப்பிள்ளைக்குத் தர வேண்டி இருக்கு”



பிச்சைக்காரன் :- டாக்டரையா..! டாக்டரையா..! நம்ப வாடிக்கை வீட்டிலெயெல்லாம் தீபாவளி ஸ்வீட் வாங்கி சாப்பிட்டு வயித்தை என்னமோ செய்யுதே...!

டாக்டர் : - என்ன வேணும்

பிச்சைக்காரன் :- ஏதாச்சும் மாத்திரை தர்மம் பண்ணுங்க டாக்டர்...!



ஒருவர்: வணக்கம் டாக்டர்! உங்க வைத்தியத்தால் எனக்கு பெரிய நன்மை.

டாக்டர் : உங்களுக்கு நான் வைத்தியம் பார்க்கவில்லையே?

ஒருவர் : என் மாமாவிற்குப் பார்த்தீர்கள். பலன், அவர் சொத்து முழுவதும் எனக்குக் கிடைத்துவிட்டது.


டாக்டர் :- தம்பி.! உங்களுக்கு இருக்கும் நோய் பரம்பரையா வர்றது. ஏதோ குணப்படுத்தியாச்சு. இந்தாங்க “பில்”


நோயாளி:- அப்ப இந்தப் பில்லை எங்க அப்பாவுக்கு அப்படி இல்லன்னா எங்க தாத்தாவுக்கு அனுப்புங்க.



“டாக்டர்..! டாக்டர்.. சீக்கிரம் வாங்க..! என் கணவருக்கு உடம்பு நெருப்பாக் கொதிக்குது...?

“எத்தனை டிகிரி”

“140*F”

“அப்ப... நீங்க கூப்பிடவேண்டியது தீயணைப்பு என்ஜினை”



நண்பர்:- என்ன டாக்டர்..! ஏன் டல்லா இருக்கீங்க?

டாக்டர் : ஒண்ணுமில்லே. வயதாயிடுத்து, என் ஒடம்ப “செக் அப்” பண்ணணும்..!

நண்பர் :- நீங்களே டாக்டர் தானே..!

டாக்டர் :- தெரியும்..! ஆனால் என்னுடைய பீஸ் அதிகம்...!


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்