Author Topic: ஜார்ஜ் புஷ்ஷின் கேள்வி நேரம்!  (Read 734 times)

Offline Yousuf

ஜார்ஜ் புஷ் ஒரு பள்ளிக்குச் சென்றார். அங்கு மாணவர்கள் முன்பு உரையாற்றியதும், ‘கேள்விகள் கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம்’ என்றார். ஒரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் கேட்டார்.

“உன் பெயர் என்ன?”

“டேவிட்”

“கேள், டேவிட். உன் கேள்விகள் என்ன?’

“3 கேள்விகள் கேட்கப்போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே?”

அப்போது இடைவேளைக்கான மணி ஒலித்தது. இடைவேளைக்குப் பின் கேள்வி நேரம் தொடரும் என்று புஷ் அறிவித்தார். இடைவேளை முடிந்தது. புஷ் மீண்டும் வகுப்புக்கு வந்தார். “கேள்விகள் கேட்கலாம்” என்றார்.

வேறொரு மாணவன் எழுந்தான். புஷ் அவனிடம் பெயர் கேட்டார்.

“ராபர்ட்”

“உன் கேள்விகள் என்ன?”

“5 கேள்விகள் கேட்கப் போகிறேன். ஐ.நா. சபையின் ஆதரவு இல்லாமல் ஈராக் மீது ஏன் போர் தொடுத்தீர்கள்? கெர்ரி அதிக வோட்டுகள் வாங்கிய நிலையில் நீங்கள் ஏன் அதிபரானீர்கள்? பின் லேடன் இப்போது எங்கே? வழக்கத்துக்கு மாறாக 20 நிமிடங்களுக்கு முன்னதாக இடைவேளை மணி ஏன் அடித்தது? முதலில் கேள்வி கேட்ட டேவிட் இப்போது எங்கே?”

Offline RemO

bush mela ethuku intha kolai veri
india la kuda apadi than nadakum

Offline Yousuf

இந்தியாவில் மட்டும் இல்லை மாம்ஸ் உலகம் முழுவதும் இதே நிலை தான்! ;D ;D ;D