Author Topic: டைட்டானிக்  (Read 3500 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
டைட்டானிக்
« on: January 20, 2012, 02:12:30 PM »
டைட்டானிக்



இங்கிலாந்து, சௌதாம்ப்டன் துறைமுகத்தில் ஆர்எம்எஸ் டைட்டானிக்
 
கப்பல்
 

பெயர்:
 
ஆர்எம்எஸ் டைட்டானிக்
 RMS Titanic
 
உரிமையாளர்:
 
வைட் ஸ்டார் லைன்
 

பதியப்பட்ட துறைமுகம்:
 
லிவர்பூல், இங்கிலாந்து  ஐக்கிய இராச்சியம்
 

கட்டியோர்:
 
ஹார்லண்ட் மற்றும் வூல்ஃப், பெல்பாஸ்ட், வட அயர்லாந்து
 

துறையெண்:
 
401
 
துவக்கம்:
 
மார்ச் 31, 1909
 

வெளியீடு:
 
மே 31, 1911
 

பெயரிடப்பட்டது:
 
Not christened
 

கன்னிப்பயணம்:
 
ஏப்ரல் 10, 1912
 

விதி:
 
ஏப்ரல் 15, 1912 இல் பனிப்பாறை ஒன்றில் மோதி மூழ்கியது
 

பொது இயல்புகள்
 

வகுப்பும் வகையும்:
 
ocean liner
 

நிறை:
 
வார்ப்புரு:GRT
 

பெயர்வு:
 
52,310 தொன்
 

நீளம்:
 
882 அடி
 

வளை:
 
92 அடி
 

Draught:
 
34 அடி
 

விரைவு:
 
21kn
 

கொள்ளளவு:
 
3,547 பயணிகளும், சிப்பந்திகளும், முழுமையாக நிரம்பியது


ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic) என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14, 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் முற்றாக மூழ்கியது.
 
டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக்காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது. கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்கிலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது. இவ்வாழத்தின் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்கூலத்திற்கு 6000 இறாத்தல் (2700 கிகி) ஆக உள்ளது



கன்னிப் பயணம்



டைட்டானிக் பாதுகாப்பாக தனது வழியில் சென்றது



டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது. புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்க்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ்டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயோர்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது,
 
டைட்டானிக் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீசுவரர்கள் சென்றனர்



பேரழிவு



விபத்தில் டைட்டானிக்41° 46′ N, 50° 14′ W இல் இருப்பதாக அறிவித்தாலும். அதன் சிதைவுகளை 41° 43′ N, 49° 56′ W இல் காணப்பட்டது
..

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 இல் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்க்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கை அடையவில்லை.
 
இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது, ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்க்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது.
 
மொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர்[3]. இவர்களில் பெரும்பாலானோர் கடலில் 28 °F (-2 °C) குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்.




வில்லி ஸ்டோவரின் கைவண்ணத்தில் டைட்டானிக் மூழ்கும் நிகழ்வு

« Last Edit: January 20, 2012, 02:14:56 PM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: டைட்டானிக்
« Reply #1 on: January 20, 2012, 02:26:39 PM »
டைட்டானிக் கப்பல் மூழ்கியது எப்படி என உயிர் தப்பிய கப்பல் அதிகாரியின் பேத்தி விளக்கம்



டைட்டானிக் கப்பலின் இரண்டாம் நிலை அதிகாரி சார்ல்ஸ் லைட்டொலர்

கப்பல் எப்பக்கமாகத் திருப்பப்பட வேண்டும் என்ற குழப்பமே டைட்டானிக் கப்பல் மூழ்கியமைக்குக் காரணம் என மூழ்கிய கப்பலின் அதிகாரி ஒருவரின் உறவினர் தெரிவித்துள்ளார்.
 
டைட்டானிக்கின் இரண்டாம் நிலை அதிகாரியான சார்ல்ஸ் லைட்டொலர் என்பவரின் பேத்தி புதின எழுத்தாளர் லூயிஸ் பேட்டன் இது குறித்து தெரிவிக்கையில், ”டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டி மிதப்பதைக் கண்டுபிடித்து, கப்பலை இடது பக்கமாக திருப்பச் சொன்னார்கள். ஆனால் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பி விட்டார்கள்,” என சார்ல்ஸ் லைட்டோலர் தன்னிடம் தெரிவித்ததாக அண்மையில் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
 

பெல்பாஸ்டில் தயாரிக்கப்பட்ட சொகுசுக் கப்பலான டைட்டானிக் 1912 ஆம் ஆண்டு ஏப்ரலில் அத்திலாந்திக் பெருங்கடலில் முழ்கியதில் 1,500 பேர் உயிரிழந்தனர்.
 

கடல் போக்குவரத்து பாய்மரக் கப்பல்களில் இருந்து நீராவிக் கப்பல்களுக்கு மாற்றம் பெற்ற காலகட்டத்திலேயே இந்த அனர்த்தம் விளைந்ததாக அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
 

அக்காலகட்டத்தில் இரண்டு வெவ்வேறான ஒழுங்கமைப்புகள் நடைமுறையில் இருந்தன. ஒன்று நீராவிக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட ரடர் கட்டளை (Rudder Orders), மற்றையது பாய்மரக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட டில்லர் கட்டளை (Tiller Orders). இவையிரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரெதிரானவை. ஒரு முறையில் வலது பக்கம் திருப்பு என்ற கட்டளை மற்றைய முறையில் இடது பக்கத்துக்காகும்.
 

சார்லஸ் லைட்டோலர் இதனை வெளியில் சொல்லாமல் இரகசியமாகவே வைத்திருந்ததாக லூயிஸ் பேட்டன் தனது குட் அச் கோல்ட் (Good As Gold) என்ற தனது கடைசிப் புதின நூல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 

உயிர் தப்பியவர்களில் லைட்டோலர் மட்டுமே இதனைத் தெரிந்து வைத்துள்ளார். டைட்டானிக் கப்பலின் உரிமையாளர் புரூஸ் இஸ்மே இவ்விரகசியத்தை வெளியிட வேண்டாமென்று அவரிடம் கேட்டுள்ளார். அதிகாரபூர்வ விசாரணைகளில் கூட லைட்டோலர் இதனைத் தெரிவிக்கவில்லை என லூயிஸ் பேட்டன் எழுதியுள்ளார். தான் பணியாற்றிய வைட் ஸ்டார் லைனர் கம்பனியைக் காட்டிக் கொடுக்க அவர் விரும்பாததே அதற்குக் காரணம் என பேட்டன் எழுதியுள்ளார்




The Titantic's bow railing filmed by remote control cameras

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: டைட்டானிக்
« Reply #2 on: January 20, 2012, 02:37:59 PM »
மில்வினா டீன்




பிறப்பு
 
எலிசபெத் கிளாடிஸ் மில்வினா டீன்
 2 பெப்ரவரி 1912
 இலண்டன், ஐக்கிய இராச்சியம்
 

இறப்பு
 
மே 31 2009 (அகவை 97)
 ஹாம்ப்சயர், ஐக்கிய இராச்சியம்
 

பெற்றோர்
 
பேர்ட்ரம் பிரான்க் டீன்
 ஜியோர்ஜெட்
 

உறவினர்கள்

 
பேர்ட்ரம் டீன் (தமையன்)


மில்வினா டீன் (Millvina Dean, பெப்ரவரி 2, 1912 - மே 31, 2009) என்பவர் 1915, ஏப்ரல் 15 ஆம் நாளில் அத்திலாந்திக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்தவர்களில் உயிருடன் இருந்த கடைசி பயணியாவார். அத்துடன் ஒன்பது மாதக் குழந்தையாக இக்கப்பலில் பயணித்த வயதில் குறைந்த பயணியும் இவராவார்

வாழ்க்கைக் குறிப்பு
 
மில்வினா டீன் இலண்டனில் பிறந்தவர். டீனின் பெற்றோர் இங்கிலாந்தை விட்டு ஐக்கிய அமெரிக்காவின் கான்சசில் குடியேறத் தீர்மானித்து குடும்பத்துடன் புறப்பட்டனர்[2]. முதலில் வேறொரு கப்பலில் பயணத்தை ஆரம்பித்த டீன் குடும்பம் நிலக்கரித் தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக டைட்டானிக் கப்பலில் பயணத்தைத் தொடர்ந்தனர். அங்கு அவர்கள் மூன்றாம் வகுப்பில் பயணித்தனர். மில்வினாவிற்கு அப்போது வயது இரண்டு மாதங்களே. 1912 ஏப்ரல் 14 ஆம் நாளில் கப்பல் பனிப்பாறை ஒன்றுடன் மோதியதை அடுத்து டீன் குடும்பம் அவசரகாலப் படகு மூலம் வேறு சிலருடன் வெளியேற்றப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது தந்தை இறந்து விட்டார். அவரது உடலும் அடையாளம் காணப்படவில்லை.





மில்வினா டீன், (வலது பக்கத்தில்), தமையன் பேட்ரம் உடன்

தந்தை இறந்து விடவே இரண்டு பிள்ளைகளுடன் தனித்து அமெரிக்கா செல்ல விரும்பாமல் தாயார் இங்கிலாந்து திரும்ப முடிவு செய்து ஏட்ரியாட்டிக் என்ற கப்பலில் இங்கிலாந்து திரும்பினர்.
 
திருமண பந்தத்தில் இணையாமல் தனிமையில் வாழ்ந்து வந்த மில்வினா கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். இதையடுத்து இவர் தனது வீட்டு பொருட்களை ஏலத்துக்கு விட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.
 
இதை கேள்விப்பட்ட டைட்டானிக் திரைப்பட நாயகன் டீ கேப்ரியோ, நாயகி கேட் வின்ஸ்லெட் மற்றும் இயக்குனர் ஜேம்ஸ் காம்ரூன் ஆகியோர் அவருக்கு ரூ. 17 லட்சம் உதவி செய்தனர். மேலும் அவர் வறுமை காரணமாக ஏலத்தில் விட்ட அவரது பொருட்கள் அனைத்தும் அவரிடமே மீண்டும் ஒப்படைக்கப்பட்டது



மறைவு

 
இந்நிலையில் 97 வயதான மில்வினா 2009 மே 31 இல் வயது முதிர்வு மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் இறந்தார்

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: டைட்டானிக்
« Reply #3 on: January 20, 2012, 02:56:30 PM »
டைட்டானிக் (திரைப்படம்)




இயக்குனர்
 
ஜேம்ஸ் கேமரூன்
 

தயாரிப்பாளர்
 
ஜேம்ஸ் கேமரூன்
 ஜோன் லண்டௌ
 
கதை
 
ஜேம்ஸ் கேமரூன்
 
நடிப்பு
 
லியானார்டோ டிகாப்ரியோ
 கேட் வின்ஸ்லெட்
 பில்லி சேன்
 குளோரியா ஸ்டுவர்ட்
 பிராண்செஸ் பிஸர்


இசையமைப்பு
 
ஜேம்ஸ் ஹோர்னெர்
 

ஒளிப்பதிவு
 
ரசல் கார்பெண்டர்
 
படத்தொகுப்பு
 
கோன்ராட் பஃவ் IV
 ஜேம்ஸ் கேமரூன்
 

விநியோகம்
 
20த் செஞ்சுரி ஃபோக்ஸ்
 
வெளியீடு
 
நவம்பர் 1, 1997 - ஜப்பான்


கால நீளம்
 
194 நிமிடங்கள்
 

நாடு
 
அமெரிக்கா


மொழி
 
ஆங்கிலம்
 

ஆக்கச்செலவு
 
200 மில்லியன் அமெரிக்க டாலர்கள்
 

மொத்த வருவாய்
 
$1,843,201,268


டைட்டானிக் (Titanic) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 

பாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான டைட்டானிக், அதன் முதற் பயணத்தின் போதே பனிப்பாறையுடன் மோதிக் கடலுள் அமிழ்ந்தது. ஆயிரக் கணக்கில் பயணிகள் இறந்து போன அந்த உண்மைச் சோகக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்ததே இதன் கதையாகும்.
 

1995 ஆம் ஆண்டில் அமிழ்ந்த ஆர்எம்எஸ் டைட்டானிக்கின் உண்மையான உடைந்த பகுதிகளைப் படம் எடுத்ததுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கின. இந்த உண்மைத் துன்பியல் கதையில் மக்களை ஊன்ற வைப்பதற்கு, ஒரு காதல் கதையை இயக்குனர் கேமரூன் உருவாக்கியிருந்தார். தற்காலக் காட்சிகள் அனைத்தும் அக்கடமிக் ம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ் (Akademik Mstislav Keldysh) என்னும் ரஷ்ய ஆய்வுக் கப்பலில் எடுக்கப்பட்டன. அமிழ்ந்த கப்பலின் மீளமைப்பு ஒன்று மெக்சிக்கோவில் உள்ள பிலேயாஸ் டி ரொசாரிட்டோ (Playas de Rosarito) என்னும் இடத்தில் கட்டப்பட்டது. கேமரூன், பல அளவுத்திட்ட மாதிரிகளையும், கணினியில் உருவாக்கப்பட்ட மாதிரியுருக்களையும் கப்பல் கடலுள் ஆழ்வதைக் காட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளார். இத்திரைப்படமே அதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதி கூடிய செலவு பிடித்த படம் ஆகும். இதற்கு நிதி வழங்கிய பராமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் 20த் செஞ்சுரி ஃபோக்ஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதற்காகச் செலவு செய்துள்ளன.
 

தொடக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம் தயாரிப்புக்குப் பிந்திய தாமதங்கள் காரணமாக அவ்வாண்டு டிசம்பர் 19 ஆம் தேதியே வெளியிட முடிந்தது. இத் தாமதம் அறிவிக்கப்பட்டபோது, இப்படம் தோல்வி அடையப் போவதாகப் பத்திரிகைகள் நம்பின. எனினும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விமர்சன அடிப்படையிலும், வணிக அடிப்படையிலும் படம் பெரு வெற்றி பெற்றது. மிகக் கூடிய 14 அக்கடமி விருதுகளுக்கு நியமனம் செய்யப்பட்ட இப் படம், சிறந்த படத்துக்கான விருது உட்பட 11 விருதுகளை வென்றது. அத்துடன் உலகளாவிய அளவில், இதுவரை இல்லாதபடி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது.

 
வகை
 
காதல்படம்

                    

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
டைடானிக் கப்பல் பற்றிய தகவல் !!!




டைடானிக் என்று சொன்னாலே டைடானிக் படம் தான் நமக்கு எல்லாம் நியபகதிர்க்கு வரும் .ஆனால் அந்த கப்பல் பற்றிய தகவல் அவளவாக நமக்கு தெரியாது . அதை பற்றிய சில தகவல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில் டைடானிக் மூழ்காத (Unsinkable) ஒரு கப்பலாக மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. டைடானிக் கப்பல் விபத்து முதலும் கடைசியுமாக மூழ்கிய கடல் பயணத்தின் சோகமான பதிவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. டைடானிக் கப்பல் விபத்து நடைபெற்று நூறு ஆண்டுகளை 2012 ம் ஆண்டு கடக்கவுள்ளது.

டைடானிக் விபத்தின் பதிவுகள் இன்றுவரை பசுமையுடன் நினைவு கொள்ளப்படுகின்றது , இதனால் இது தொடர்பாக வெளியான புத்தகங்கள் , திரைப்படங்கள் எண்ணிக்கை வரலாற்றில் மிகப்பெரியது. இந்தவகையில் டைடானிக் கப்பல் விபத்தினை வெகு நேர்த்தியுடன் நிஜமாக மக்கள் கண்முன் 1997ம் வருடத்தில் வெளிவந்த "டைடானிக்" திரைப்படம் கொண்டுவந்தது. திரைப்படம் சொல்லிய காதல் கதை தவிர அனைத்து காட்சிகளும் சம்பவ தின நிகழ்வின் சாட்சியங்களின் அடிப்படையில் படமாக்கப்பட்டதாகும்.

பல நூறு பக்கங்களில் சொல்லமுடியாத சோக சம்பவத்தினை 194 நிமிடத்தில் தத்ரூபமாக காண்பித்து 11 ஆஸ்கார் விருதுகளை 1997 இல் மிகப்பெரிய சாதனை திரைப்படம் டைடானிக் பெற்றது . 200 மில்லியன் டாலர் செலவில் தயாரான டைடானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை பெற்ற சாதனை மட்டுமல்ல வசூலிலும் 1.85 பில்லியன் (1850 மில்லியன்) டாலர் மேலாக இதுவரை குவித்துள்ளது . மேலும் டைடானிக் கப்பல் விபத்து பற்றியதான 14 திரைப்படங்களும் , சின்ன திரைகளும் இதுவரை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் சோகம் நிறைந்த டைடானிக் கப்பல் விபத்து தொடர்பான முக்கிய தகவல்கள் கீழ்வருமாறு.

டைடானிக்கின் முழு பெயர் RMS Titanic (Royal Mail Steamer Titanic).
அயர்லாந்து (Ireland) நாட்டின் பெல்பாஸ்ட் (Belfast) நகரில் கட்டப்பட்டது.

டைடானிக் கப்பல் கட்டுமானம் 1909 மார்ச் 31 ம் திகதி தொடங்கி 1911 மே 31ம் திகதி முடிவுற்றது.

3,000 வேலையாட்கள் 3 மில்லியன் தறையாணி (கடாவி) களை பாவித்து கப்பலை கட்டிமுடித்தனர்.

அன்றய காலத்தில் டைடானிக்கை கட்டிமுடிக்க 7.5 மில்லியன் டொலர் பணம் செலவிட்டனர், அதன் இன்றய பெறுமதி 4,000 மில்லியன் டொலர் என கணக்கிடப்படுகின்றது.

முதலாவது பயணம் (கன்னி) 1912 ஏப்பிரல் 10 ம் திகதி தொடங்கப்பட்டது.

கப்பலின் நீளம் 882 அடி (269.1 மீற்றர்) , உயரம் 175 அடி (53.3 மீற்றர்) , மொத்த எடை 46,328 தொன் , வேகம் 21 நொட் (39 கிலோமீற்றர்/மணி) இதன் அதிகவேகம் 23 நொட் (43 கிலோமீற்றர்/மணி).
டைடானிக் கப்பல் அதிகபட்சம் 3,547 பயணியளையும் சிப்பந்திகளையும் கொள்ளக்கூடியது.

டைடானிக் கப்பல் கட்டுமானத்தில் அன்று இருக்கக்கூடிய அனைத்து தொழில்நுட்பமும் அதிகபட்சம் பாவித்து கட்டப்பட்டது.
ஒருநாளைக்கு 825 தொன் நிலக்கரியை டைடானிக் இயந்திரம் இயக்க பயன்படுத்தப்பட்டது.

டைடானிகில் மொத்தம் 9 தட்டுக்கள் (மாடிகள்) , அத்துடன் ஆழம் 59.5 அடி எனவும் உயரம் 60.5 அடி எனவும் சொல்லப்படுகின்றது.
மொத்தமாக 4 புகை போக்கிகள் , இவற்றின் மொத்த உயரம் 175 அடி , இதில் 3 புகை போக்கவும் 1 காற்று போக்கியாகவும் பயன்பட்டது.
ஒருநாளைக்கு கப்பலுக்கு தேவைப்படும் சுத்தமான தண்ணீர் 14,000 கலன் கொள் அளவு.

டைடானிக்11 மாடி உயரமான கட்டிடதிற்கு சமமாக ஒப்பிடப்படுகின்றது , இந்த கப்பலை வர்ணமூட்ட பெருமளவில் கறுப்பு மையுடன் வெண் வர்ணமும் பாவிக்கப்பட்டது.
முதலாவது நீச்சல் தடாகம் உள்ள கப்பலாக டைடானிக் வடிவமைக்கப்பட்டது.
விபத்து நடந்த தினம்....................................

1912 ஏப்ரல் 10 ம் திகதி அயர்லாந்தில் இருந்து பிரான்ஸ் வழியாக2,228 பேருடன் (1,343 பயணிகள் , 885 மாலுமிகள்) மறுநாள் (1912 ஏப்பிரல் 13 ம் நாள்) நியூயோர்க் நோக்கி டைடானிக் புறப்பட்டது.

அமைதியான கடலில் கரும் இருட்டில் (அமாவாசை) 5 நொட்டுக்கள் வேகத்தில் டைடானிக் பயணித்துக் கொண்டிருந்தது.

அன்றய தினம் (1912 ஏப்பிரல் 14 ம் நாள்) பயணிகள் தகவல் பரிமாறும் வானொலி தொடர்பில் பனிப்பாறை பற்றிய முன் எச்சரிக்கை இரு முறை ஒலிக்கப்பட்டது

220 அடியிலிருந்து 240 அடி நீளமான பனிப்பாறையுடன் இரவு 11.40 மணிக்கு டைடானிக் மோதல் நடைபெற்றது.

டைடானிக் கப்பலின் கீழ் பகுதியில் உத்தேசமாக12 சதுர அடி துளை (வெடிப்பு) மோதல் காரணத்தினால் உண்டாகின்றது.
அன்றிரவு 12 மணி இலிருந்து மூழ்க ஆரம்பித்த கப்பல் காலை 2.20 மணி (15ம் ஏப்பிரல்) முழுமையாக மூழ்கியது.

அன்றய பனிப்பாறை விபத்தில் மாட்டிய டைடானிக் கப்பலில் இருந்த 20 உயிர்காப்பு படகுகளில் 705 சிறுவர்கள் , பெண்கள் மட்டும் உயிர் தப்பியதுடன் மிகுதி 1,523 பேர் கடலில் மாண்டனர்.

டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பெரிய பகுதிகளாக உடைந்து மூழ்கியது உயிர் தப்பிய பயணிகளால் அவதானிக்கப்பட்டது.
அன்று கடல் விபத்தில் பலியான 1,523 பேரில் (பயணிகள், மாலுமிகள்) 300 பேரின் உடல்கள் மட்டும் பின்னர் மீட்கப்பட்டது.
74 வருடங்களின் பின்................

அத்திலாந்திக் சமுத்திரத்தின் அடியில் (12,600 அடி அல்லது 3,925 மீற்றர் அல்லது இரண்டரை மைல் ஆழத்தில் ) இயந்திர நீர்மூழ்கி (Alvin,robot) உதவியுடன் டைடானிக் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது.
டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பகுதிகளாக உடைந்த பாகங்கள் சமுத்திர அடியில் 1,970 அடி தூரத்தில் இருக்க காணப்பட்டது.

மேலும் சில தகவல்...

அன்றய பயணத்தில் முதல் வகுப்பில் மட்டும் 870 பயணிகள் பயணம் செய்தனர். முதல் வகுப்பிற்கு ஒவ்வொருவரும் 4,350 டொலர்களை அன்று செலுத்தினர் எனவும் இது இன்றய பெறுமதியில் 80,000 டொலருக்கு சமமானது எனவும் சொல்லப்படுகின்றது