Author Topic: நெல்சன் மண்டேலா  (Read 3089 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நெல்சன் மண்டேலா
« on: January 26, 2012, 02:18:29 AM »
நெல்சன் மண்டேலா
 Nelson Mandela



தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர்



பதவியில்

 10 மே 1994 – 14 ஜூன் 1999
 

முன்னவர்
 
பிரெடெரிக் வில்லியம் டி கிளார்க்
 


பின்வந்தவர்
 
தாபோ உம்பெக்கி


அணி சேரா இயக்கப் பொதுச் செயலாளர்
 


பதவியில்

 3 செப்டம்பர் 1998 – 14 ஜூன் 1999
 


முன்னவர்
 
அண்டிரெஸ் பாஸ்திரானா அராங்கோ
 


பின்வந்தவர்

 
தாபோ உம்பெக்கி
 


அரசியல் கட்சி
 
ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ்
 

பிறப்பு
 
18 சூலை 1918 (அகவை 93)
 முவெசோ, தென்னாப்பிரிக்கா
 


வாழ்க்கைத்
 துணை

 
எவெலின் மாசே (1944–1957)
 வின்னி மண்டேலா (1957–1996)
 கிராசா மாச்செல் (1998–இன்று)
 


இருப்பிடம்
 
ஹூஸ்டன் எஸ்டேட், தென்னாப்பிரிக்கா
 


சமயம்
 
மெதடிசம்
 
கையொப்பம்



இணையதளம்

Mandela Foundation


நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, பிறப்பு: ஜூலை 18, 1918), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அகிம்சை வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆயுதமேந்திப் போராடும் கெரில்லா (போர்முறை) தலைவராக மாறினார். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், (இதில் பெரும்பாலான காலம் அவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் அடைப்பட்டிருந்தார்) நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. 1990ல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்க குடியரசு மலர்ந்தது. மண்டேலா, இன்றைய உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.
 
நெல்சன் மண்டேலா... இன்று இவருக்கு தொண்ணூற்றொரு வயது. தென்னாபிரிக்க சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக வரலாற்றுப் பக்கங்களை புரட்டி பார்க்கின்ற போது தரித்து நின்று தரிசிக்க வேண்டியவர். இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை ஜனநாயக ஆட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். சாத்வீக போராளியாக, ஆயுதப் போராட்ட தலைவனாக, தேசத்துரோகம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி, ஜனாதிபதியாக, சமாதான நோபல் பரிசின் சொந்தக்காரராக இவரின் அரசியல் பயணம் தொடர்கின்றது.
 
இவரின் சிறுபராயம் குத்துச் சண்டை வீரராகவே அடையாளம் காணப்பட்டது. அந்தக் குடும்பம் பெரியது. இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாக 1918 இல் பிறந்தவர் தான் மண்டேலா. அந்தக் குடும்பத்திலிருந்து மண்டேலாவின் பாதங்கள் தான் முதன் முதலில் பள்ளிப்படிகளை மிதித்தது. இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பாடசாலை ஆசிரியரினால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியறிவைப் பெறுவதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்டேலா, லண்டன் மற்றும் தென்னாபிரிக்கா பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார்.
 
1948 ஆம் ஆண்டு... தென்னாபிரிக்காவின் ஆட்சி் அதிகாரங்களைப் பொறுபேற்ற அரசு அராஜக நடவடிக்கைகளை கட்டவிழ்க்கத் தொடங்கியது. இனவாதமும் ஒடுக்குமுறையும் அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை அறிந்து கொண்ட மண்டேலா சீற்றம் கொண்டவராக அரசியலுக்குள் குதித்தார். இவரின் தலைமையில் அரசின் இனவாத கொள்கைகளுக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்கள் முளையெடுக்க ஆரம்பித்தன
 
மண்டேலாவும் பல்கலைக்கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் இணைந்து இன ஒதுக்கலுக்குள்ளாகிய கறுப்பின மக்களுக்காக சட்ட ஆலோசனைகளை வழங்கினர். பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எங்கும் மண்டேலா ஒலித்தார். விளைவு...? 1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு மண்டேலாவும் அவரின் 150 வரையான தோழர்களும் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர
 
ஆண்டாண்டு காலமாக தொடர்கின்ற ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கும் வன்முறைகளுக்கும் முன்னால் சாத்வீகம் தோற்கின்ற போது, ஆயுதப் போராட்டமே இறுதி வழியென்பதை உணர்ந்தார். வேறுவழியின்றி காலம் அவர் கையில் ஆயுதத்தை பரிசளிக்கின்றது.
 
1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் படைத் தலைவனாக மண்டேலா உருவெடுத்தார். வெளிநாட்டு நட்பு சக்திகளிடமிருந்து பணம் மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்ற வண்ணம் அரச, இராணுவ கேந்திர நிலையங்கள் மீது கெரில்லா பாணியிலான தாக்குதல்களை ஒருங்கிணைத்து நடாத்தினார
 
1961 டிசம்பர் 16 ஆம் திகதி இனவெறி அரச பயங்கரவாதத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் நடாத்தப்பட்டது. அத்தாக்குதலில் பங்கு கொண்ட போராளி ஒருத்தன் இவ்வாறு அத்தாக்குதலை ஆவணப்படுத்தினான். "அன்று 1961 டிசெம்பர் 16... தாக்குதலுக்கான இலக்குகளாக அரச, இராணுவ அடையாளங்களாக கருதப்பட்ட பாஸ் அலுவலகம், நீதி மன்றங்கள், தபால் அலுவலகங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகி கடைசி நேர சரிபார்ப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்போது தான் மண்டேலாவிடமிருந்து கடுமையான கட்டளை ஒன்று கிடைக்கப்பெற்றது. எக்காரணம் கொண்டும்எந்தவொரு பொது மகனும் மரணிக்கவோ அல்லது காயமடையவோ கூடாது "
 
ஆனால், பின்னாளில் இவர் தலைமை வகித்த அமைப்பினரின் துப்பாக்கியிலிருந்து உமிழப்பட்ட சன்னங்கள் சிவில் மக்களை அடையாளம் காணத் தவறியிருந்தன. இனவெறிக்கு எதிரான இவரது யுத்த நடவடிக்கைகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைச் சாட்டாக வைத்து அமெரிக்க அரசும் இவர் மீது பயங்கரவாத முத்திரை குத்தியது. மண்டேலா அமெரிக்க நாட்டுக்குள் உள்நுழைவதற்கான தடை ஜூலை 2008 வரை அமுலில் இருந்தது.
 
1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மறு வேடமணிந்து புகுந்த பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாக தொடர்ந்தது



                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நெல்சன் மண்டேலா
« Reply #1 on: January 26, 2012, 02:20:07 AM »
நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்

நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.
 
இதற்காக 2009 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் நாள் 192 நாடுகள் உறுப்புரிமையுள்ள ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது[1]. அந்தத் தீர்மானத்தில் இனங்களுக்கு இடையே நல்லுறவு ஏற்படவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும் ஆண்-பெண் சமம் என்ற நிலை ஏற்படவும் மண்டேலா பாடுபட்டார் என்றும், அவர் உழைப்பை நினைவு கூரும் வகையில் அவர் பிறந்த நாளை ஆண்டுதோறும் மண்டேலா சர்வதேச நாளாக கடைப்பிடிப்பது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
இந்தத் தீர்மானத்துக்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க அது நிறைவேற்றப்பட்டது.
 
இதன் படி 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் நாள் முதன்முறையாக மண்டேலா பன்னாட்டு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது அவருக்கு வயது 92வது பிறந்த நாளாகும்