Author Topic: நண்டு ஃப்ரை  (Read 647 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
நண்டு ஃப்ரை
« on: April 16, 2012, 10:44:35 PM »

சதைப்பற்றுள்ள நண்டு - 4
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை- 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால்டீஸ்பூன்
கார்லிக் பவுடர் - கால் டீஸ்பூன்
அல்லது 4 பல் பூண்டு தட்டிக் கொள்ளவும்
எலுமிச்சை சாறு - பாதி பழம்
எண்ணெய் - 1-2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
 

நண்டை ஓடு கழட்டி மிகப் பெரியதாக இருந்தால் பாதியாக துண்டு போடலாம்,மீடியம் சைஸ் என்றால் நண்டை முழுதாக காலோடு அல்லது இல்லாமல் விருப்ப்ம் போல் சுத்தம் செய்து அலசி எடுக்கவும்.
சுத்தம் செய்த நண்டில் மிளகாய்த்தூள்,மிளகுத்தூள்,மஞ்சள் தூள்,தட்டிய பூண்டு,உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஊற வைக்கவும்.
நன்கு மசாலா சார்ந்து ஊறிய பின்பு நண்டை ஒரு நான்ஸ்டிக் தவாவில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மூடி போட்டு இரண்டு பக்கமும் வேகும் படி பொரித்து எடுக்கவும்.
சுவையான நண்டு ஃப்ரை ரெடி.நல்ல மணத்துடன் இருக்கும். சாப்பிடவும் இலகுவாக இருக்கும்.


புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்