Author Topic: நண்டு, முருங்கைக்காய் பிரட்டல்  (Read 550 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
நண்டு - ஒரு கிலோ
முருங்கைக்காய் - 2
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
அரைத்துக் கொள்ளவேண்டியவை
முழு மிளகு - 4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
பட்டை - 1/2 இன்ச் அளவு
தேங்காய் துருவல் - ஒரு கப்
தாளிக்க
எண்ணெய் - 7 ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
 

நண்டை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
முருங்கைக்காயை ஒரு விரல் அளவிற்கு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்த பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை நன்கு தட்டியோ அல்லது அரிந்தோ வைத்துக்கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்தட்டிய வெங்காயத்தையும், கறிவேப்பிலையும் போட்டு வதங்கியதும், அரைத்த தக்காளியை ஊற்றி சிறிது நேரம் வதக்கவும்.
பின்பு அதில் அரைத்த மசாலாவினை சேர்த்து மிதமான தீயில், பச்சைவாசனை போக வதக்கவும்.
வதங்கி எண்ணெய் மினு மினுவென்று இருக்கும்போது நண்டையும், முருங்கைக்காயையும் சேர்த்து
நன்கு கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.
இடையில் கிளறி விட்டு மூடி விடவும்.
நண்டும் வெந்து காயும் வெந்து மசாலாவுடன் பிரண்டு கொண்டு இருக்கும்.
அப்போது அடுப்பிலிருந்து இறக்கி விடவும்
Note:
சாம்பார், ரசம், தயிர் சாதம் இவைகளுடன் இந்த மசாலாவை சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். மூடி போட்டு வேக வைப்பதால், தண்ணீர் விடும். நண்டும் தண்ணீர் விடக்கூடியது. எனவே பார்த்து கொஞ்சமாக தண்ணீர் தெளிக்க வேண்டு
ம்.

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்