Author Topic: அவள்  (Read 5913 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அவள்
« on: August 30, 2012, 06:03:54 PM »

வேகமாக ஓடிகொண்டிருந்தது அந்த அதி வேக ரயில் .... அருகருகே அமர்ந்து அன்றைய நாளிதழ்களில் மூள்கியவர்களையும். mp3  கேட்ட வண்ணம் தலை சாய்த்து கண் மூடி இருந்தவர்களையும் பார்வை வட்டத்துக்குள் பதித்து கொண்டிருந்தான் கௌதம்...ரயில் தன அடுத்த இலக்கை நோக்கி பயணமாகிகொண்டிருன்தது.... அவன் எண்ண ஓட்டமும் அவன் தனிமையின் கொடுமகைளை அலசி ஆராய்ந்தவண்ணம் இருந்தது ..

அடுத்த தரிபிடத்துக்கான அறிவித்தல் ஒலிபரப்பகிகொண்டிருன்தது... சுவிஸ் நாட்டின் சுற்று சூழலை தின்னும் கண்ணாடி கதவுகளினூடு ரசித்த வண்ணம்  அவன் எண்ண கிடக்கைகள் அவனை சுற்றி சுழண்டு கொண்டிருந்தது ...

நின்றுவிட்ட ரெயின் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது ... மெலிதாய் மூச்சு ஒன்றை உள் இழுத்து வெளிவிட்டவாறு .. அந்த எதிரும் புதிருமாய் நான்கு பேர் கொண்ட தன இருக்கையை நோட்டம் விட்டான் ...

முதல் இருந்தவர்கள் சென்றிருக்க புதிதாய் இரு பெண்கள் ..ஒருத்தி வெள்ளைகாரி .. அடுத்தவள் இவளும் வெள்ளைகாறியோ .. அப்டி எண்ணும் வகையில் வெள்ளையாய் கண்ணை மறைத்து வெயில்கால கண்ணாடி ஒன்று அணிந்திருந்தாள் ... அவள் தந்த நிறம் மனதை கவருவதாய் இருந்தது ... அடிகடி தன கை விரல்களில் உள்ள நகங்களை பார்ப்பதும் .. வெளியே பார்வையை உலவ விடுவதுமாய் இருந்தாள்....

ஏதோ சிந்தனை போலும் ... நினைத்த வண்ணம் மீண்டும் வெளியே பார்வையை திருப்பினான் ... அனால் சிறுது வினாடிகளிலேயே மனம் அவள் பக்கம் கண்களை திருப்புவதை தடுக்க முடியாமல் பார்வையை செலுத்தினான் ...

தலை முடி கலைந்து வலிந்து கிடந்தது அதை அள்ளி முடிந்திருந்தாள்... நம்ம ஊரில் ஆயாக்கள் முடிவது போன்று ... நீளமாய் இருக்குமா .. இல்லை குட்டையாய் இருக்குமா ..வாதம் செய்ய நேரமின்றி அவள் காதுகளில் நிலைத்து கண் ...

சிவந்து மலர்ந்த தாமரை போன்று ஒரு அழகு .. ஆனால் அதில் எந்த  வளையலும் தொங்கவிடபடவில்லை ..மறந்திருப்பாளோ ...? இல்லை எங்காவது ஒன்று தொலைந்திருக்குமோ ...? அவசரமாய் அடுத்த காதை பார்த்தன் அங்கும் ஒன்றையும் காணவில்லை ..அணியவில்லை போல் இருகிறது ... இருந்தும் அழகாய்தான் இருக்கிறது என்று மனதுள் சிலாகித்தவண்ணம்  முகத்தினில் பார்வையை பதித்தான் ...

சற்றே அகன்ற நெற்றி  வில் போன்ற புருவம் ... நீளமாய் மூக்கு .. அதில் மெல்லியதாய் அப்பப்போ ஆள் திரும்பும் போதெல்லாம் மினுக் மினுகென்று ஒளியை இறைத்து .. உதடு ... சிறிதாய் அழகாய் வெட்டிய ஆப்பிள் போல இருந்தது ... லிப்ஸ்டிக் அடிதிருபாள் போலும் ... காலையில் அடித்தது இபொழுது அதன் வண்ணம் கலைந்து சிறிது ஒட்டிக்கொண்டு  இயற்க்கை வண்ணமாய் காட்டியது ...

அயோ மற்ற எதையுமே பார்க்க முடியவில்லை .... குளிர் காலத்தின் கொடுமைக்குள்  அவள் அழகு அனைத்தும் மூடபட்டு  முக்காடு இடப்படிருன்தது ... மார்கழி மாத பணியை சபித்த வண்ணம் மீண்டும் அவள் முகத்தை உற்று நோக்கியவன் திகைத்தான் ... அவள் விழிகள் அந்த கருத்த கண்ணாடி வழியே இவனை பார்த்துகொண்டிருந்தது ... இவள் கண்ணாடியை கழட்டினால் கண்ணை நன்றாக பார்க்கலாமே .. எண்ண சிறகை தடுக்க முடியவில்லை ... திட்ட போகிறாளோ ... பயம் மனதை கவ்விக் கொண்டது ...

அவளிடமிருந்து கேள்வியாய் ஒரு புருவம் மட்டுமே உயர்ந்து தாழ்ந்தது ...?

மெலிதாய் புன்னகை ஒன்றை சிந்தி சமாளித்து விட்டு வெளியே பார்வையை திருப்பினான் .. முனு முணுத்த மனதை அடக்கிய வண்ணம்  பார்வையை வெளியே செலுத்தியவன் ... அதன் இயற்க்கை அழகில் தன்னை மறந்திருந்தான் ....

திடுக்கிட்டு திரும்பியவன் கண்களில் அந்த பெண் தென்படவில்லை ... இறங்கி போயிருப்பாளோ ... ??அப்படிதான் இருக்க வேண்டும் ... நாளை இதே ரெயிலை பிடிக்க வேண்டும் என்ற எண்ண ஓட்டத்தை அவனால் தடுக்க முடியவில்லை ...


தொடரும்....
« Last Edit: August 30, 2012, 06:35:57 PM by Global Angel »
                    

Offline Gotham

Re: அவள்
« Reply #1 on: August 30, 2012, 06:49:52 PM »
Openinge asathala varnanaiyoda iruku. antha pen varnanai azhagu.
aduthu ennanu aavalai kilapi viduthu.

aduththa pagaththirkaga waiting.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அவள்
« Reply #2 on: August 30, 2012, 11:31:53 PM »

கஸ்தூரிக்கு அன்று தூக்கம் வரவில்லை ... பால்கனி யில் நின்று இருளை வெறித்துக் கொண்டிருந்தாள் ....

 மார்கழி மாதத்து குளிர் எலும்புவரை நடுங்க வைத்துகொண்டிருந்தது ... பனி பெய்து சிறு தூறலாக தூறிகொண்டிருன்தது ... தெருவோர மின்கம்பங்களில் பொருத்தப்பட மின் விளகுகளில் இருந்து மஞ்சளாக ஒழி உமிழ்ந்துகொண்டிருன்தது ...  அந்த ஒளியில் பட்ட பணித் தூறல்கள் பளபள த்துக்கொண்டு  இருந்தது  ..

சாலையோரம் அங்கொன்றும் இங்கொன்றுமாய்  சென்றுகொண்டிருந்த வாகனம் இரவின் நிசப்தத்தை கிளித்துகொண்டிருன்தது ...

கடிகாரத்தில் இருந்த குயில் 3  தடவை கூவி ஓய்ந்தது ... மணி மூன்று ...

 இவை ஒன்றுக்குமே கஸ்தூரியின் எண்ணவோட்டத்தை கலைக்கும் சக்தி இருக்கவில்லை ... 4 வருடங்கள் கடந்தபின்னும்  ஏற்பட்ட வலிகளும் வேதனைகளும், இன்றும் ரணமாய் ...


அக்கா.. அக்கா ...

 ஆரூரனின் அதட்டல் கஸ்தூரியை நினைவுலகுக்கு கொண்டு வந்தது ...

என்னக்கா.. கூப்பிடுறது கூட காதில விழுத்தாம  என்ன பண்ணிட்டு இருக்கே இந்த குளிர்ல விடிய காலைல ....


தமக்கையை தொட்டு திருப்பியவனின் விழிகளில்,அவளின் கண்களின் பளபபளப்பு காட்டி கொடுத்துவிட


அழுதியா ... ? உஷ்ணமாய் வெளிவந்தது கேள்வி..

........

அவள் மௌனமே அவளை காட்டி கொடுத்துவிட .....


நீ திருந்த மாட்டே ..... எத்தன தடவ சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்குறே ஹ்ம்ம்ம் ..


உனக்கு நான் சொல்லி தெரியனும்னு இல்லை ... என் அக்கா அறிவாளி , தைரியசாலின்னு பெருமையா நினசுபேன் ... எல்லார்கிட்டயும் சொல்லிப்பேன் .. ஆனா நீ இப்டி மனச போட்டு வருதிகிட்டா எப்டி ...   

 அவன் குரலில் கோபம் ஆதங்கம் ஆற்றாமை  எல்லாமே கலந்து ஒலித்தது ..


ஹ்ம்மம்ம்ம்ம்  ..... நீளமான மூச்சு ஒன்றை விட்டு .. சரி ஆரு.. டைம் ஆச்சு நீ போய்தூங்கு என்றாள்...,


ஹிஹி ... உனக்கு மட்டும் டைம் ஆகல போல ....

வழக்கமான கிண்டல் பேச்சில் அவளை சிரிக்க வைத்து படுக்க அனுப்பிய ஆரூரன் மனதில் ...மீண்டும் ஒரு கொலைவெறி தாண்டவம் ஆடிகொண்டிருந்தது விடியும் வரை ...

தொடரும்....
« Last Edit: August 31, 2012, 01:12:32 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அவள்
« Reply #3 on: August 31, 2012, 01:57:33 AM »


காலை எழுந்ததில் இருந்து கௌதம் நிலை கொள்ளாமல் மனதை அலை பாய விட்டிருந்தான் ... இன்றும் அவள் வருவாளா .. மாட்டாளா.. யாரவள் .. என்ன பேரு ... என்ன ஊரு .. எதுவும் தெரியாது ... ஒருவேளை வராவிட்டால் .. இல்லை வருவாள் ....

நிலை கொள்ளாத மனதை இழுத்து பிடித்து வேலையில் நுழைத்து மணித்தியாலங்களை நெட்டி தள்ளிகொண்டிருந்தான் ... யாரோ ஒருத்தி .. ரெயிலில் பார்த்த பெண் ஒரு ஐந்து நிமிடம் கூட முழுமையாய் பார்க்காத ஒரு பெண்ணை ஏன் இப்படி நினைத்துகொண்டிருகிறோம் .... சிந்தனை சரியான வழியில் சென்றாலும் .. மனது அவள் தரிசனத்துக்கு எங்க ஆரம்பித்தது ... அடிகடி மணி பார்த்து கொண்டான் ... மணி ஐந்தை நெருங்கவும் விழுந்தடித்துகொண்டு ஓட்டமும் நடையுமாய் புகையிரத நிலையத்திற்கு விரைந்தான் ....

ரெயில் வழக்கம் போல் இலக்கை நோக்கி இயங்கிகொண்டிருன்தது ... ரம்மியமான இயற்க்கை காட்சிகளில் கௌதமின் மனம் பொருந்தவில்லை ... அடுத்த தரிப்பிடம் எப்போது வரும் என்ற ஏக்கத்திலும்  எதிர் பார்ப்பிலும் இருக்கையில் நிலை கொள்ளது தவித்தான் ...

2  நிமிடம் எப்படி கரைந்தது தெரியவில்லை ... தரிப்பிடத்தில் அவளை தேடி தேடி கண்கள் ஓய்ந்து போனது .... ஏமாற்றத்தின் இறுக்கத்தை அவனால் தாங்க முடியவில்லை ... ஏதோ ஒன்று இருதயத்தை பற்றி பிடிக்கும் உணர்வு .... கண்களை இறுக மூடி திறந்தான் ... என்ன அதிசயம் ... ரயில் கிளம்ப ஆயதம் ஆகிகொண்டிருந்தது ... அதை பிடிதிடும் நோக்கில் ஓடி வந்து கொண்டிருந்தாள் ... அவள் .... அவள் .... ஜிவேன்று வானத்தில் பறக்கும் உணர்ச்சி ....

அவனால் கதவுகளை திறக்கும் விசையை அழுத்த முடியாது .. ரயில் கிளம்பிவிட போகிறதே ... என்ன பண்ணலாம் ... அவசரமாக அவன் யோசிக்கும் தருவாயில் கதவு மூட ஆரம்பித்து விட்டது .. தன்னை அறியாமல் ப்லீஸ் ஓபன் தி டோர் ... சம் பொடிஇஸ் கம்மிங் ... என்று கூவியே விட்டான் ...எல்லோரும் அவனை திரும்பி பார்த்தார்கள் .. அந்த தேசத்தில் அப்படி சத்தமிட்டு பேசுவது அதிசயம் போலும் .... கப்பென்று அடங்கிவிட்டான் ..

இருந்தும் அவனது குரலால் உந்தப்பட்டு யாரோ விசையை அழுத்தி பிடிக்க கதவு மூடுவதை பாதியில் நிறுத்தி திறந்து கொண்டது ...ஓடி வந்து அவளும் தோற்றி கொண்டாள்...

தங்கே (தேங்க்ஸ்)....  யாருக்கோ அவள் நன்றி சொல்வது கேட்டது ... ஆஹா கிளி பேசிவிட்டது ... இனிமையான குரல்தான் ...சிலாகித்துகொண்டான் ..

அவளது நன்றி அறிவித்தலை அடுத்து  யாரோ என்னவோ சொன்னார்கள் ... பட்டென்று அவள் அவனை திரும்பி பார்த்தாள்.. கவுதம் க்கு புரிந்துவிட்டது  போட்டு கொடுதுட்டங்கயா ... மனசுக்குள்ளே சபித்து கொண்டான் ....

அவள் அவனை பார்த்து மெலிதாய் ஒரு புன்னகை பூத்து தேங்க்ஸ் எனறாள்.....

அஹா எதிர்பார்க்காமல் அதிச்டப் பரிசு கிடைத்தவன் போல் அவன் மனது வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது ... என்ன அழகான புன்சிரிப்பு ... நிச்சயமாய் நிறைய தூரத்தை ஓடியே வந்திருப்பாள் ... அது நிச்சயம் அவளது அவசரமான மூசுகளும் ... ஏறி இறங்கும் மார்பும் அதை பறை சாற்றின .. இருந்தும் இயற்கையாய் இப்படி ஒரு புன்னகை பூத்து நன்றி சொல்வதென்பது ... அதிசயம் ... மனதுக்குள் புகழாரம் சூட்டிகொண்டான் ...

அடிகடி அவளை மேய்ந்து கொண்டிருந்தது அவன் பார்வை ... இன்றும் அவள் கண்ணாடி அணிந்திருந்தாள் ... வழக்கம் போல அதே தலை ...  குளிருக்கு போர்த்திய கோணி துணி (மாந்தல்) .. இன்றும் சபிக்க தவறவில்லை ...

வித்தியாசமாய் அவள் அரிசி பற்கள் அடிகடி உதட்டின் திண்மையை
பரிசீலித்துகொண்டிருன்தது....

அழகு ...

 எந்த தேசத்து அழகி இவள் .... சிந்தனையில் பல கேள்விகனைகள் தாக்கி கொண்டே இருந்தது .... அடுத்த தரிப்பிடம் வந்தது ... திரும்பி பார்ப்பாளோ ...? என்ற எதிர்பார்ப்பை கலைத்த வண்ணம் அவள் போக்கில் இறங்கி போய்கொண்டே இருந்தாள்...

சாரி மேடம் ...

திரும்பியவள் விழிகளில் தீக்கங்கு ... அந்த கருத்த கண்ணாடி இழையையும் மீறி தக தகத்தது ....


தொடரும்....

                    

Offline Gotham

Re: அவள்
« Reply #4 on: August 31, 2012, 06:54:06 AM »
suvarasyamaa poguthu. adutha part-ai podungo.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அவள்
« Reply #5 on: August 31, 2012, 12:41:46 PM »
type pananum gautham .... pannitu podurene... ;D

thanks  ;)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அவள்
« Reply #6 on: August 31, 2012, 01:43:52 PM »

கண்டது மாயமோ என்னும் வகையில் கருத்த கண்ணாடியை மீறி தகதகத்த அந்த விழிகள் ... சந்தம் அடைந்திருந்தது ....


எஸ் ... டெல் மீ ...


ஒரு கோபத்தை இவளவு சீக்கிரம் அடக்குபவள் என்றால் ... மனக் கட்டுபாடு அதிகம் இவளுக்கு என்று மனதுள் நினைத்த வண்ணம் ... அவளுக்கு ஆங்கிலம் புரிகின்ற சந்தோசத்தில் ....


"மன்னித்து கொள்ளுங்கள் ... நான் இந்த பகுதிக்கு புதிது மாற்றலாகி வந்துள்ளேன் .. சரியான அறிமுகம் இல்லை இந்த நாடு எனக்கு ... வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றது .... இது வரை வேற பகுதியில் வேலை செய்தேன் ... இங்கு மாற்றலாகி இரண்டு நாட்கள்தான் ஆகின்றது ... இங்கு குடிவர வீடு பார்த்து கொடுப்பதாக என் நண்பன் ஒருவன் சொல்லி இருந்தான் ...அவன் வர சொன்ன இடம் இந்த தரிப்பிடத்தில் இறங்கி அருகில் உள்ள கோப் (coop ) என்ற கடை அருகில் ... எனக்கு எங்கே என்று தெரியவில்லை  தயவு செய்து எங்கே என்று சொல்லுவீர்களா ...? "


மட மடவென்று எங்கே அவள் தப்பாக நினைக்க போகின்றாளோ என்ற எண்ணத்தில் தன தேவையை அவசரமாக சொல்லி முடித்தான் கௌதம்....


"ஒஹ்... இப்டியே லெப்ட்ல திரும்பி நேராக போனால் ஒரு காப்பி ஷாப் வரும் ... அதுக்கு ரைட் சைட்ல திரும்பினால் கோப் ... "


"ஒஹ்ஹ... தேங்க்ஸ் ... ஹவே நைஸ் இவினிங் மேடம் ... bye ...."


சொல்லிவிட்டு அவசரமாக திரும்பி நடந்தான் ... எங்கே நின்று பேசினால் தன்கூட பேசுவதற்காக இவன் பெய் சொல்லுவதாக நினைக்க தோன்றி விட்டால் .....


"ஓகே bye .."


அவளது விடைபெறல்  காற்றோடு அவன் காதுகளை துளைத்தது ... திரும்பி பார்க்க எண்ணிய மனதை அடக்கி விரைந்தான் அவன் நண்பனை தேடி ...


*****

தூரத்திலேயே கௌதம் வருவதை கண்ட அவன் நண்பன்  விரைந்து அருகில் வந்தான் ...


"ஹாய் மச்சான் .. ஏனடா லேட் பண்ணிட்டே ... வா சீக்ரம் .... வீடு எங்க வீட்டுக்கு அடுத்த தெரு தாண்டா ... ஆனா எங்க வீட்டு பால்கனி ல இருந்து பார்த்தா இந்த வீட்டு பல்கனி தெரியும் ... ஏன் வீடே தெரியும் ... வாடகை கூட அதிகம் இல்ல 700  தாண்டா ... ஒரு ரூம், ஹால்,கிட்சன் , பாத்ரூம் , ஓகே தானே உனக்கு ...  தெரிஞ்சவங்க மூலமா கதைசிருகேன் .. கிடைச்சிடும் ... நீ லேட் பண்ணி வந்திருக்கே ... இங்கெல்லாம் டைம் முக்கியம் .. சீக்ரம் வா போகலாம் "

கௌதமை பேச விடாது பட படவென பேசி இழுக்கத குறையாய் அவனை இழுத்து காரில் ஏற்றிக்கொண்டு விரைந்தான் நண்பன் ....

கௌதம் மென்மையாய் சிரித்து கொண்டான் ... வெறும் இடண்டு நாள் பழகிய நண்பன் இவன் ஆனால் என்னமோ ஆண்டு கணக்கில் பழகிய சிநேகம் போல் பேசுகின்றான் ... கௌதம் மனதிலும் அதே பீலிங் தான் ... வேலை இடத்தில இரண்டு நாள் பயிற்சிக்காக இவன் இடதில்தான் அனுப்பி வைத்தார்கள் ... அப்போது பழகிய பழக்கம் ... அவப்போது போனில் பேசி கொண்டாலும் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்றுதான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது ... தன தேவையை கூறிய போது அவனே எல்லாம் ஏற்பாடு செய்வதாக கூறி .. ஏற்பாடும் செய்து விட்டான் ...

யாழ்ப்பாணம் என்று சொல்லி இருந்தான் .. இலங்கை தமிழர்கள் ... ரொம்பவே நல்லவர்களாக இருகின்றார்கள்... ஆனால் நல்லவர்களுக்குதனே சோதனை .. என்று எண்ணிய வண்ணம் ....

எப்டி இருக்கிறே மச்சான் .. சொறிடா... லேட் ஆச்சு ...ஒரு சூப்பர் பிகூர் ஒண்ண பார்த்தேண்டா ... எந்த நாடுன்னு தெரில .. ரெண்டு நாளா பாக்குறேன் ... அவகிட்டத்தான் இடம் கேட்டு வந்தேன் ...   என்று இவன் சொல்லி முடிக்கு முன் ...

டேய்  நீ வந்ததும் ஆரம்பிச்சுட்டியா இருக்க போறது ரெண்டு வருஷம் ... என்ஜோய் பண்ணு ... ஆனா பார்த்து மச்சான் .. எந்த பொண்ணையும் காதலிக்குறதா சொல்லி பழக்கம் வைக்காதே ... முக்கியம் நம்ம ஊரு பொண்ணுங்க ... பாவம் .

இந்தியர்கள்னாலே ஒரு மயக்கம் நம்ம ஸ்ரீலங்கா பொண்ணுககிட்ட இருக்கு ... அத பல பேர் தவறா பயன்படுத்துறாங்க ...நீ அப்டி நடக்க மாட்டேண்டு நம்புறேன் ..

 என்று சொன்னவன் முகத்தில் ஒரு இருள் தெரிந்து மறைந்தது ....



ஹேய் நா அப்டி எல்லாம் இல்லைடா பார்த்தேன் சொன்னேன் அவ்ளோதான் ...அவ எந்த நாட்டு பொண்ணு .. அதுவே தெரியல்ல ... நீ வேற ...

நீ சொல்றதும் உண்மைதான் ... நம்ம ஊரு பசங்க சில பேரு இங்க வேலைக்கு வந்து பல தவறுகளை செய்திருக்காங்க கேள்விபட்டிருக்கேன் .. ஆனா நான் அப்டி ஏதும் பண்ண மாட்டேன்  நம்பலாம் நீ என்றான் கௌதம் .

உடன்பாடாய் புன்னகை ஒன்றை சிந்தி விட்டு ... வீட்டுக்கு குடி வாறது பற்றி பேசினார்கள்

......

கௌதம் இற்கு வீடு பிடித்து போய்விட்டது , அதுவும் நண்பன் வீடு அடுத்த தெரு ... ரெட்டிப்பு மகிழ்ச்சி ...

அடுத்து வந்த இரு நாட்களும் அவன் விடுமுறை எடுத்திருந்தான் வீடு குடி வருவதற்காக ..  அந்த வாரத்துக்கான வேலை நாட்கள் முடிவடைந்திருந்தது ... வார விடுமுறை ... என்ன பண்ணலாம் ..

ஆமாம் அந்த அழகி இங்கு எங்கயோ தான் இருக்கிறாள் ... எங்கே என்று தெரியலையே ... மனதுக்குள் அவளின் சிந்தனையை புரள விட்ட படி புதிதாய் குடி வந்த வீட்டு சோபாவில் படுத்த வண்ணம் தூங்கினான் ... கனவில் அவள் கோப விழிகள் முறைத்து பார்த்தது ....


தொடரும்....
« Last Edit: August 31, 2012, 01:48:53 PM by Global Angel »
                    

Offline Gotham

Re: அவள்
« Reply #7 on: August 31, 2012, 03:27:27 PM »
Nalla poguthu. Santhadi saakil india pasangala oru idi idichitinga?  :-[


Antha ponnu yaaru? pathana?

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அவள்
« Reply #8 on: August 31, 2012, 04:07:30 PM »
yethukku avasara padurenga ... thodarnthu padinga varum ...

gautham intha kathai unmai chambavam ... en tholi oruthoyoda kathai athai naan sila meruketral moolam suvarshyamaga kondu sella eththanikkiren ...  peyar ellam punaippeyarthaan  kathai iruthiyil  vibaram kiripidiven ...

thodarnthu padinga

nanrikal .
                    

Offline Gotham

Re: அவள்
« Reply #9 on: August 31, 2012, 04:24:11 PM »
ippadi solli innum suvarasyatha kootitinga.


mudiyum pothu pathiyunga. padika kaathirukiren

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அவள்
« Reply #10 on: August 31, 2012, 06:16:19 PM »

கஸ்தூரிக்கு ஏனோ மனது குழப்பமாகவே இருந்தது .... என்ன சிந்திகின்றோம் .. என்ன நடக்க போகிறது ... என்ன இது .. என்று ஒரே குழப்பம் மனதுள் ..நான்கு வருடங்களாக பூட்டப்பட்ட கதவை யாரோ மெல்ல தடவுவது போல் உணர்வு ... இது எதற்கு ... ஏற்கனவே பட்டதெல்லாம் போதாதா ..நான் மட்டுமா ... என் குடும்பமே பட்ட அவமனாம் போதாதா .. எதற்கு மீண்டும் சலனம் தொற்றி கொள்கிறது ... வயது வேட்கையா .. இல்லை வாலிபத்தின் தேவையா .. இல்லை என் மனசுக்கு ஒரு ஆறுதல் வடிகால் தேவையா எதுவும் புரிபடாது குழப்பமாகவே இருந்தது ...

அவள் சிந்தனையை  குலைத்தபடி ... அம்மா .... என்று அழைத்தவண்ணம் அவள் செல்ல பிள்ளை சர்மி .. ஓடி வந்து கட்டிகொண்டாள் ... நான்கு வயதை நெருங்கி கொண்டிருந்தாள் அவள் .. படு சுட்டி .. எப்போவாவது எதாவது கேள்வி கணைகளை தொடுத்தவண்ணமே வலம் வருவாள் ... குட்டி குரங்கென்று அவள் மாமனாலே செல்லமாய் கூபிடபடுவாள் ... அவள் கேள்விக்கெல்லாம் சளைக்காமல் பதில் சொல்லும் கஸ்தூரிக்கு .. அவள் ஒரே கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல வருவதில்லை ... அதற்க்கு பதில் தெரியாதா .. இல்லை சொல்ல விருப்பம் இல்லையா ...

அம்மா ...... அழுத்தமான அவள் குரல் ஓசையில் நினைவுக்கு வந்த கஸ்தூரி ...

என்னடா செல்லம் .. என்ன வேணும் பிள்ளைக்கு ... அவள் குரலில் நெகிழ்ந்த குழந்தை

அம்மா ... அமம்ம்மா சீக்ரம் வெளிக்கிட சொல்றாங்க ... பூஜா அண்டிண்ட கல்யாண வேடு போனும் சொல்றங்க ......கெதியா வெளிகிடுங்கோ ...

அட இன்னிக்கு பூஜாவோட கல்யாணம் ..  அந்த நிகழ்வுக்கு பிறகு எந்த பொது நிகழ்விலும் அவள் கலந்துகொண்டதில்லை .. ஆனால் பூஜா அவளோட நெருங்கிய தோழி ... இந்தியாவை சேர்ந்த பெண் .. நல்லவள் .. கஸ்தூரி என்றால் எப்பவுமே ஆவலும் அக்கறையும் மகிழ்வையும் காட்டுபவள் ... கட்டாயம் வரவேண்டும் என்று கேட்டிருந்தாள்....சரி போய்வரலாம் .. மனது இருக்கும் குழப்பத்துக்கு போனால் மாறுதல் கிடைக்கும் என்று நம்பினாள்...

சரிம்மா நீங்க என்ன டிரஸ் போடா போறீங்க ... அம்மா எடுத்து தரவா  என்று கேட்டவண்ணம் அலுமாரியை திறந்து அவளுகென்று ஒதுக்கபட்ட இடத்தில வரிசையாக தொங்க விடபட்ட சோளி கிட் ஒன்றை எடுத்து அவளுக்கு மாட்டி தலை  வாரியபோது ..


கஸ்தூரி நீ இன்னுமா கிளம்பெல .... போ பொய் குளிச்சு வெளிக்கிடு நான் இவளுக்கு காப்பு எல்லாம் போடுறேன் ... நீ வெளிக்கிடு . .. எல்லாரும் வெளிகிட்டாச்சு .. ஆரு அப்பவே போய்ட்டான் அவன் ப்ரிண்ட கூடிக்கொண்டு போறானாம்... எங்கள மெதுவா வர சொன்னான் ... நீ இன்னும் வெளிகிடல...? அம்மா ராஜேஸ்வரி கேட்டுக்கொண்டு வந்து நின்றாள்...


இல்லம்மா இனிதான் குளிச்சு வெளிகிடோனும் ... நான் இவள ரெடி பண்ணி தாரேன் .. கொண்டு போங்கோ .. நான் லேட்டர் வாறன் ... எனக்கு ஹால் அட்றஸ் தெரியும் ... என் கார்லயே வந்திடுறேன் என்றாள் கஸ்தூரி ...


மகள் ஒரு விழாவுக்கு அதுவும் நான்கு வருடத்துக்கு அப்புறம் கிளம்பும் அழகை பார்க்க ராஜேஸ்வரிக்கு ஆசைதான் .. நின்று அதை போடு இதை போடு என்று சொன்னால் எங்கே வரலை நீங்க போய்ட்டு வாங்கோ என்று சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில்

"சரிடி சீக்ரம் வெளிகிடுத்து .." என்று பேர்த்தியும் மகளும் கதைதவண்ணம் அலங்காரம் பண்ணிகொள்ளும் அழகை  பார்த்து ரசித்தாள் நீர் திரையூடு .....



மகளை தாய் தந்தையுடன் அனுப்பிவிட்டு ... குளித்து உடுத்திக்கொள்ள புடவை ஒன்றை எடுத்தாள் கஸ்தூரி ... நினைவுகள் எங்கோ செல்ல .. வலுகட்டாயமாய் இழுத்து பிடித்து பரபரவென ஆயத்தமாகி கிளம்பி சென்றாள்...


***********


நண்பனின் வற்புறுத்தலின் பேரில் கிளம்பி வந்துவிட்ட கௌதம்... மனது நிலை கொள்ளது தவித்தது ... அவளை கடந்த ரெண்டு நாட்களாக பார்க்கவில்லை .. வெளியில் எங்காவது நடந்து போனாலாவது அவளை பார்க்கலாம் சந்தர்ப்பம் கிடைக்க கூடும் .. கெடுத்துட்டானே ... மனதுள் திட்டியவண்ணம் .. அங்கே சல சலத்த இளைங்கர்களை பார்த்தான் ..

அங்கும் இங்கும் திரியும் பெண்களை கிண்டல் பண்ணுவதும் .. மார்க் போடுவதுமாய் அவர்கள் பேசி சிரிப்பதை பார்த்தவனுக்கு .. அவனது நண்பர்கள் ஞாபகத்துக்கு வந்து போயினர் ..

சலசலத்த  சத்தம் ... டேய் பாருங்கடா.. அந்த சிவப்பு சாரி .... செம பிகூர்டா... என்று கத்த ... அடங்கியது ...

அவர்கள் பேச்சில் காதை கொடுத்து திரும்பியவனுக்கு ..." வாவ்....." என்று வாயை திறந்து சொல்லாமல் இருக்க முடியவில்லை ...

அவனின் கனவு தேவதை ... தேவதை போலவே வந்து கொண்டிருந்தாள் ..அதிகமாய் அலங்காரம் செய்யாமலும் நகை மாளிகை போல் அடுக்கி கொள்ளாமலும் அளவோடு  அணிந்து .. அகல் விளக்கு போல் காரை விட்டு இறங்கி கொண்டிருந்தாள் ...

தொடரும்....

                    

Offline Gotham

Re: அவள்
« Reply #11 on: August 31, 2012, 08:07:10 PM »
oru velai kasturiya irukumo? vivaram ariya aduththa baagaththirukaga kathirukiren.

Kathai suvarasyam kuraiyamal pokirathu. nalla iruku

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அவள்
« Reply #12 on: August 31, 2012, 10:23:13 PM »
theriyalaiye yaarnu .... paarkkalaam yaaraa irukumnu ... gautham ... hehe
                    

Offline Anu

Re: அவள்
« Reply #13 on: September 01, 2012, 08:20:51 PM »
rose dear superb <3
kadhai la adikadi nalla twist vachi thodara kondu poringa.
interesting ah iruku dear...
sl tamil  innum azhaga iruku ..
next paru ku waiting dear <3


Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அவள்
« Reply #14 on: September 02, 2012, 12:27:01 AM »
thanks anumma... ya sure eluthuren ....  :-*